Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:55:12 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7652
#KOTW7652
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 5, 2011
கல்வி, மருத்துவம், சிறுதொழிலுக்காக சுமார் 1 லட்சம் ரூபாய் உதவி! ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் தீர்மானம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2827 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளியோரின் கல்வி, மருத்துவம், சிறுதொழில் தேவைகளுக்காக சுமார் 1 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக, அதன் செயற்குழுக் கூட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காவலன் அல்லலாஹ்வின் பெருங்கருணையினால் எமது காயல் நற்பணி மன்ற 27ஆவது செயற்குழுக் கூட்டம் கடந்த 25.11.2011 வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் எம் சங்க துணை தலைவர் ஹாஜி மின்ஹாஜ் முஹ்யித்தீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

மன்றஆலோசனை குழு உறுப்பினர் பிரபு ஷேய்க்னா ஆலிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் . அல்ஹாபிள் P .S .J .ஜைனுல் ஆபிதீன் அவர்களர்ல் இறைமறை துணை கொண்டு துவங்கியது.



செயற்குழு மற்றும் சிறப்பு அழைப்பாளர்களின் நமதூர் நகரின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு விசயங்கள் அலசி ஆலோசிக்கபட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - அடுத்த பொதுக்குழு கூட்டம்:
எதிர் வரும் 2012 பிப்ரவரி 10 வெள்ளிகிழமை மாலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 2 - நலத்திட்ட உதவிகள்:
நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்கள் பரிவுடன் பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிதி உதவிகள் செய்யப்பட்டது . சீரான நீடூழி கால நன்மை தரும் இவ்வுயர் பணிக்கு தாராளமாக உதவிய அன்பு உள்ளங்களுக்கு இம்மன்றம் மனபூர்வமான நன்றியை தெரிவிக்கிறது.

(அ) இரு கிட்னி இலும் கல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த சகோதரி ஒருவருக்கு ஆப்பரேசன் வகைக்கு ரூபாய் 8 ,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது.

(ஆ) மூதாட்டி ஒருவரின் நீரழிவு நோயிக்கு தொடர் மருத்துவ செலவுக்கு ரூபாய் 5000 வழங்க தீர்மானிக்கபட்டது.

(இ) சகோதரர் ஒருவரின் மூளை ஆபரேசன் வகைக்கு அவசர நிமித்தம் ரூபாய் 25,000 வழங்கியதை செயற்குழு அங்கீகரிக்கிறது.

(ஈ) வாடகை சாமான்கள் நிறுவனம் நடத்துவதற்கு சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 15,000 வழங்க தீர்மானிக்கப்பட்டது .

(உ ) தன் வியாபாரத்தை விரிவு படுத்த சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 10,000 வழங்க தீர்மானிக்கபட்டது

(ஊ ) பிஸ்கட் வகைகள் தயார் செய்து விற்பனை செய்ய சகோதரி ஒருவருக்கு ரூபாய் 5000 வழங்க தீர்மானிக்கபட்டது.

(எ) novel பவர் தையல் மெசின் வாங்க சகோதரி ஒருவருக்கு ரூபாய் 10,000 வழங்க தீர்மானிக்கபட்டது.

(ஏ) தையல் மெசின் வாங்க மற்றொரு சகோதரிக்கு ரூபாய் 8,000 வழங்க தீர்மானிக்கபட்டது.

(ஐ)இக்ரா கல்வி சங்க பணிக்கு அத்திய அவசியத்தை முன்னிட்டு மடிக்கணினி வாங்கி கொடுக்க தீர்மானிக்கபட்டது.

ஒ ) மூன்றாம் ஆண்டு பாலிடெக்னிக் படிக்கும் மாணவர் ஒருவருக்கு கடனுதவியாக ரூபாய் 10,000 வழங்க தீர்மானிக்கபட்டது .

தீர்மானம் 3 - அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்த வழிகாட்டுமாறு வேண்டுகோள்:
நமதூர் வறிய மக்களின் நோய் நிவாரணம் வேண்டியும் அதற்கு அதிகமான நிவாரண உதவி வேண்டியும் பல விண்ணபங்கள் அதிகமாக வருகிறது.

அரசு மருத்துவமனைகள் குறிப்பாக தூத்துக்குடி மெடிகல் கல்லூரி மருத்துவமனை , திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளை விட பல கஷ்டமான ஆபரேசன்களை மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக செய்கிறார்கள் என்று செய்திகள் மூலம் அறிகிறோம்.

மக்களுக்கு அரசியல் கட்சிகள், சமூக நல மன்றங்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் அம்மக்களுக்கு வழிகாட்டிடுமாறு எம்மன்ற செயற்குழு வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மன்றத் தலைவரின் நன்றியுரைக்குப் பின், பிரபு ஷேக்னா ஆலிம் அவர்களின் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதுற நிறைவுபெற்றது அல்ஹம்து லில்லாஹ்!

கூட்டத்தில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.




இவ்வாறு ரியாத் காயல் நற்பணி மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





தகவல்:
ஏ.எச்.முஹம்மத் நூஹ்,
செயலாளர்,
காயல் நற்பணி மன்றம்,
ரியாத், சஊதி அரபிய்யா.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:கல்வி, மருத்துவம், சிறுதொ...
posted by hasbullah (dubai) [05 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14152

ஊ ) பிஸ்கட் வகைகள் தயார் செய்து விற்பனை செய்ய சகோதரி ஒருவருக்கு ரூபாய் 5௦௦௦௦௦௦,000 /= வழங்க தீர்மானிக்கபட்டது.

பிஸ்கட் வகைக்கு இவ்வளவு தொகை கொடுக்கப்பட்டதா? மாஷா அல்லாஹ். பிரம்மித்து போயி விட்டேன்....

Administrator: Corrected. Thanks. Comment also edited to avoid confusion


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கல்வி, மருத்துவம், சிறுதொ...
posted by MS MOHAMMED LEBBAI (dxb) [05 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14153

நல்ல பல அறப்பணிகள் செய்துவரும் ரியாத்வால் காயல் நற்பணிமன்றத்தினர் அனைவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,,,,, அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:கல்வி, மருத்துவம், சிறுதொ...
posted by mackie noohuthambi (kaylpatnam) [05 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14156

CONGRATULATIONS. AS THE VICE PRESIDENT OF KAYAL ALLIANCE COMMITTE IN RIYADH DURING MY TENURE IN 1994-98, I APPRECIATE THE DONATIONS LISTED IN THE AGENDA.

REGARDING HOSPITALS, I WOULD LIKE TO SUGGEST THAT K.M.T. HAS ALL GROUND AREA PROVISIONS TO BUILD ANY NUMBER OF BUILDINGS AND YOU CAN START ANY DEPARTMENT AND RUN THEM SUCCESSFULLY. BUT THE INSUFFICIENT DOCTORS IN FIELD, INADEQUATE SUPPORT FROM THE PUBLIC THE HOSPITAL SEEMS TO BE DULL AND UNWORTHY. BUT THE IF YOU SET UP A COMMISSION OR A TEAM OF YOUR MEMBERS AND START NEGOTIATIONS WITH OUR ELDERS WHO ARE RUNNING THE SHOW, YOU CAN DO WONDERS TO OUR PEOPLE.

ROME IS NOT BUILT IN A DAY, BUT ONCE THE ROME IS BUILT YOU WILL SEE EVERYONE TELLING, "WHEN YOU ARE IN ROME,ACT AS A ROMAN DO". PLEASE TRY AND YOU WILL SUCCEED.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கல்வி, மருத்துவம், சிறுதொ...
posted by naleem (hong kong) [05 December 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 14157

டியர் அட்மின் தீர்மானம் 2 ல் பிஸ்கட் வியாபாரிக்குஉண்டான தொகை ரொம்ப கூடுதலா உள்ளது திருத்திக்கொள்ளவும் மற்றும் ரியாத் காயல் மக்களுக்கு வாழ்த்துக்கள்

Administrator: Thanks. Corrected


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கல்வி, மருத்துவம், சிறுதொ...
posted by MOHD IKRAM (RIYADH - S.ARABIA) [05 December 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14162

ரியாத் கா.ந.மன்றதினரின் இந்த நல்ல சேவைகள் மூலம் காயல் நகர ஏழை எளிய மக்கள் நல்ல வகையில் பயன் அடைய வல்ல நாயன் அருள் புரிவானாக.ஆமீன்.

உங்களது இந்த நல்ல சேவைகள் நம் மக்களுக்கு கடைசி வரை தொடர நாங்கள் துவா செய்கிறோம். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வளமான வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்கும் மன்றம் வாழ்க !
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [05 December 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14163

அன்புடையீர்

நீங்கள் எப்போவுமே போட்டி போட்டுக் கொண்டுதான் உதவிகள் செய்வீர்கள். நம் ஊரின் நோய்கள் குறைந்து , நல்ல பல நற்சேவைக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் உங்கள் அங்கத்தினர் அனைவருக்கும் அருள் பாளிப்பனாகவும் என்று மனம் உவப்போடு வாழ்த்துகிறேன்.

அன்பு நண்பர் A.S.L. சுலைமான் , அருமை மச்சான் ஷேயக்னா ஆலிம் உங்களை பாக்றதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... அதுக்காக வேண்டி மற்றவர்களை பாக்றதுல சந்தோஷம் இலன்னு நினசுடாதிகப்பா! உங்கள் எல்லோரையும் இங்கே பாக்றதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி!!

வாழ்த்துக்களுடன் உங்கள் அன்பின் சஹோதரர்கள்
கே.வி.ஏ.டி. கபீர் & ஹபீப்,
தோஹா - கத்தார்.
05 -12 -2011


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved