Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:10:29 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7155
#KOTW7155
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 2, 2011
தஃவா சென்டரில் அனுமதியின்றி நுழைந்த காவல்துறை: ஜும்மாவில் கண்டனம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4580 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 27) காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை - நிர்வாக அனுமதியின்றி - அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து - இன்று நடந்த ஜும்மா தொழுகையின் போது, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் கத்தீப் மௌலவி, எம்.ஐ. அப்துல் மஜீத் மஹ்ழரி - காவல்துறையினரை வன்மையாக கண்டித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 27.08.2011 நள்ளிரவில் ஆறுமுகநேரி காவல்துறையினர் மகளிர் காவலர்களுடன் தஃவா சென்டரில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு 22 வயதைச் சேர்ந்த சிநேகா என்ற கிறித்தவ மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் தேடுவதாகவும், அவர் அங்கு இருப்பதாகவும் தங்களுக்கு கம்பளயின்ட் வந்திருப்பதாகவும் அதன்பேரில் அவரை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் கூறி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சென்னை, பொன்னேரியைச் சேர்ந்த சிநேகா என்ற கல்லூரி மாணவி தனது சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று தனது பெயரை ஆயிஷா சித்தீக்கா என மாற்றிக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது இஸ்லாமியக் கல்வியைப் பெறுவதற்காக தஃவா சென்டர் வந்துள்ளார். அவர் தாமாக விரும்பி இஸ்லாத்தை ஏற்றுள்ளார். இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் அடிப்படையில் அவர் 18 வயதைக் கடந்தவர். அவர் விரும்பிய கொள்கையை ஏற்றுச் செயல்பட அவருக்கு உரிமை உள்ளது. இதற்கான எல்லா ஆவணங்களையும் முறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரும் தான் விரும்பியே இஸ்லாத்தைத் தழுவியதாகவும், தன்னை யாரும் நிர்பந்திக்கவில்லை.

இதை முறையா விசாரிக்கச் சென்ற நிர்வாகிகளிடமும் காவல்துறையினர் தகாத முறையில் பேசியதுடன், அவர்களையும் நடவடிக்கை எடுத்து கைது செய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். ஒருவர் தனது மார்க்கத்தை பிறருக்குக் கற்றுக்கொடுப்பதும் போதிப்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை என்பதை உணர்ந்து தஃவா சென்டர் பன்னெடுங்காலமாக காயல்பட்டிணத்தில் செயல்பட்டுவருகிறது. இதன் எந்தவொரு செயல்பாடுகளும் வெளிப்படையானவை; சட்டத்திற்குட்பட்டவை. இவ்வாறு நாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்தில் காவல்துறையினர் இவ்வாறு அத்துமீறி செயல்பட்டதை இனி எப்போதும் பொறுத்துக்கொள்ள இயலாது. சட்டத்தை மதித்துச் செயல்படுவதால், நாங்கள் கோழைகள் அல்லர் என்பதை காவல்துறையினருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்றதொரு செயலை இன்னொரு முறை அனுமதிக்கமாட்டோம்.


இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார்.

இப்பிரச்சனை குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துவருவதாக தஃவா சென்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எவனாலும் அழிக்கவோ... தடை போட்டு நிறுத்தவோ முடியாத மார்க்கம்...!
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [02 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7590

எதிர்ப்புக்கு மத்தியில் வளர்வது தான் இஸ்லாம் மார்க்கம்.. இந்த மார்க்கத்தை எவனாலும் அழிக்கவோ... தடை போட்டு நிறுத்தவோ முடியாத மார்க்கம்...! அல்லாஹு அக்பர்.. தஃவா சென்டரில் அனுமதியின்றி நுழைந்த செயல்.. இது மிகவும் கண்டிக்க தக்க செயல்... இரவு நேரம் அதிகம் ஆண்கள் இல்லாததை பயன் படுத்தி தனது அதிகாரத்தை அங்குள்ள (இஸ்லாத்தை ஏற்று வந்துள்ள) சகோதரிகளிடம் காவல் துறையினர் நடந்து கொண்டது வன்மையாக (கண்டிக்கத்தக்க) வெறுக்கத்தக்க செயல்.

இனியும் இது போல் நடந்தால் ஊர் மக்களின் (இஸ்லாமிய) எதிர்ப்பை அரசாங்கத்திற்க்கும், காவல் துறைக்கும் நியாயமான போராட்டத்தை வீதியில் காட்டவேண்டி இருக்கும்..?

என்றும் நட்புடன்... தமிழர் - முத்து இஸ்மாயில் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டன்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. காவல் துறையின் அத்துமீரல் மிகவும் கண்டிககூடியவை.
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [02 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7591

அஸ்ஸலாமு அழைக்கும்

காவல் துறையின் இந்த அட்டகாசம் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் செயல். வன்மையாக கண்டிக்க வேண்டியவை.சட்டத்திற்கு உட்பட்டு செயல் படும் இதுபோன்ற இஸ்லாமிய பாடக சாலையில் பாசிச போக்குடன் நடந்தது காவல்துறைக்கே கேவலமான செயல்.

இதை இத்துடன் விடாமல் ஆரம்பத்திலே மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று காவல்துறைஇன் கருப்பாடுகளை களைய வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Attrocity
posted by ahamed mustafa (Dubai) [02 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7592

This is highly outrageous & should be condemened at the highest degree of restraint. Would suggest a people's movement in terms of Road agitations and the like would focus attention to get rid of the evil inspector. A massive turnout of the Public to come out against such atrocity may eventually lead to non-occurance of such happenings.

Will the public heed.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இந்த காட்டுமிராண்டி செயல் மிகவும் வன்மையாக கண்டிக்க கூடியது...
posted by KASIM (காயல்பட்டினம்) [02 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7594

காயல்பட்டணம் தஃவா சென்டரில் அனுமதியின்றி நுழைந்த காவல்துறை அங்குள்ள நிர்வாகிகளிடம் காவல்துறை தகாத முறையில் பேசியதுடன், அவர்களையும் நடவடிக்கை எடுத்து கைது செய்துவிடுவோம் என மிரட்டிய செய்தி படித்து நமக்கெல்லாம் ரெம்பவும் மனசு சங்கடமாக உள்ளது - மிகவும் அமைதியான வழியில் அவர்களின் தஃவா பணி நடந்து வருகிறது அவர்களுக்கு இதை பொறுக்க முடியலை போலும்.. !

அமைதி தரும் மார்க்கம் இதை யாராலும் அழிக்க முடியாது... அழிக்க நினைபவர்கள் அழிந்து போவார்கள்.. அப்படி எத்தனையோ கூட்டம் அழிந்தும் இருக்கிறார்கள்...!

இந்த காட்டுமிராண்டி செயல் மிகவும் வன்மையாக கண்டிக்க கூடியது...

ஆதங்கத்துடன் - M A K J முஹம்மது காசிம்.

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கறுப்பு ஆடுகள்!.
posted by kavimagan (dubai) [02 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7595

சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தாவா சென்ட்டர் சொல்வது சரியான அணுகுமுறைதான். அதேநேரத்தில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததை அறிந்ததும் நகர மக்கள் எப்படி தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்க வேண்டும்.? அணியணியாய், பல்லாயிரக்கணக்கில் திரண்டு,அதிகார அத்துமீறல் செய்த கறுப்பு ஆடுகளின் கூடாரம் காவல் நிலையத்தை முற்றுகை இட்டிருக்க வேண்டாமா? காயலின் இளைஞர்கள்,பெரியவர்கள் ஒன்றிணைந்து சாலை மறியல்,பட்டினிப்போராட்டம் என்று வெகுண்டு எழுந்திருக்கக வேண்டும்! ஏதோ இஷ்டத்திற்கு கருத்து சொல்கிறேன் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்! நான் ஊரில் இருந்திருந்தால் இறைவன் மீது ஆணையாக இதைத்தான் செய்திருப்பேன்,

தாவா சென்டர் என்பது, உலகின் ஒப்பற்ற வாழ்வியல் நெறியை போதிக்கும் நமது பெருமைமிகு சொத்து. அமைதி, மற்றும் சமாதானத்தை போதிக்கும்,தாவா சென்டரில் நுழைந்து, கேவலமாக நடந்து கொண்ட காவல்துறை கயவர்களை கண்டிக்கிறோம். இனிமேலும் ,இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட எங்கள் சகோதர, சகோதரிகள் மீது அக்கிரமங்கள் தொடர்ந்தால்,மதிப்பிற்குரிய மஜீத் மஹ்ழரி அவர்கள் குறிப்பிட்டதைப்போல நாங்கள் கோழைகள் அல்ல என்பதை நிரூபிப்போம். இறையருளால் இனவெறி பிடித்தவர்களை,பதவியினின்றும் ஜனநாயக முறையில் களையெடுப்போம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [02 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7597

தாவா சென்டரில் போலீஸ்அத்துமீறல் மிக வன்மையாக கண்டிக்க த்தக்கது. மனித நேயம் இல்லாத ஒரு காடுமிராண்டிக்கும்பல் என்றுதான் இவர்களை சொல்ல வேண்டும். சகோதரர் கவிமகன் அவர்களின் ஆதங்கம் நமக்கு புரிகிறது. அதே நேரம் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் நாம் செய்துவிட முடியாது, காவல் துறை எனபது மக்களை பாது காக்கும் துறை எனபது மாறி மக்களை அச்சுறுத்தும் துறையாக மாறிப்போனது நமது நாட்டில் சகஜமான ஒன்றாக ஆகிப்போனது. காவல்துறையில் நல்லவர்கள் வருவது குதிரைக்கொம்பாகி போய்விட்டது. இதற்க்கான முடிவை மக்களே எடுக்க வேண்டும் புரட்சியாளர் மாவோ சொனது போலே "நாம் என்ன ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதை நம் எதிரியே தீர்மானிக்கிறான்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by Shaik Dawood (Hong Kong) [02 September 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 7599

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ....

அந்த சகோதரியின் நிலை என்ன?

ஷைக் தாவூது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by சாளை ஷேக் சலீம் (Dubai) [02 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7602

காவல் துறையினரின் இந்த கண்மூடித்தனமான செயல் மிகவும் கண்டத்திற்குரியது. இறை மறையின் வழியில் புனித இஸ்லாத்தை போதிக்கும் ஒரு புண்ணிய ஸ்தலத்தில் அத்துமீறி நுழைந்தது மட்டும் இன்றி ஆண்கள் அதிகம் இல்லாத நேரம் பார்த்து புறக்கடை வழி புகுந்து அங்குள்ளவர்களை புண்படும்படி அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த காவல்துறை ஆய்வாளரையும் மகளிர் என்று சொல்லவே நாக்கூசும் காவலர்களையும் உடனேயே மன்னிப்பு கேட்க பணிய வைப்பதோடு தகுந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க உடனடி நடவடிக்கைகள் தேவை.

இஸ்லாம் இறைவனின் மார்க்கம் அதை அவனே பாதுகாத்துக்கொள்வான். ஆனால், இந்த அராஜக செயலை உடனடியாக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக போராட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். இதற்க்கு காயல் மா நகரமே திரண்டு எழுச்சி கொள்ளவேண்டும். கொள்கை கோட்பாடு என்று இல்லாமல் இன்று அவர்களுக்கு என்றல் நாளை நமக்கல்லவா என்ற ஒரு பொறுப்புணர்ச்சி எல்லோருக்கும் வர வேண்டும். ஜனாப் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கு தகவல் சென்று விட்டதா ?

தாவா சென்டர் நிவாகிகளே, இங்கிருந்து நாங்கள் உங்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் எங்களுக்கு அறியத்தாருங்கள். முடிந்தால் இங்கிருந்து நாங்கள் தமிழக அரசுக்கு இங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றால் அதற்க்கான விரிவான ஒரு கடிதம் நீங்கள் தயார் செய்து எல்லா நாட்டில் உள்ள காயலர்களுக்கும் அனுப்பி தாருங்கள். இன்ஷா அல்லாஹ் ஓன்று படுவோம் ஓங்கி நிற்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by Khaja (Chennai) [02 September 2011]
IP: 80.*.*.* Poland | Comment Reference Number: 7603

DAWA Centre (KPM) il,

27/8/11 antru Athumeeri nulaintha POLICE Dept., in ARÄJAGATHAI kandithu "MAAPERUM AARPPATTAM"

Insha allah,on Tomorrow @ 4.30 pm-

Opp to kayalpatnam Post Office. By Dawa centre (CESH). Kayalpatnam.

[Anaivarum kalanthu kondu namathu Oorin pathukäppai uvruthi seivom.]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by Shaik (Chennai) [02 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7606

அஸ்ஸலாமு அலைக்கும்,

சாளை சலீம் காக்கா, மற்றும் கவிஞர் கவிமகன் ஆகியோரின் கருத்தை தயவு செய்து பரிசீலனை செய்யுங்கள். அதை போல் ஒரு ப்ரெஸ் மீட் நடத்தி காவல் துறையின் அராஜகத்தை தமிழக மக்களுக்கு தெரிய படுத்துங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by Mohamed Ibrahim S.A (Dubai) [02 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7608

Assalamu Alaikum

We must be take action against for them bcoz without notice went DEWA center.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by Cnash (Makkah) (Kayalpatnam. ) [03 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7616

இன்று நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் விநாயகர் சதுர்தியால் 5 தேதிக்கு மாற்ற பட்டுள்ளது.....அனைவரும் கலந்து நம் மார்க்க உரிமையும் தனிமனித உரிமையும் நிலை நாட்ட போராடுவோம் இன்ஷா அல்லாஹ்...சலீம் காக்கா சொன்னது போல் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் தயாராக இருப்போம் தேவைபட்டால்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by Jahir Hussain VENA (manama) [03 September 2011]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 7620

Please organise for Press Meet.> Provide the Telephone/Fax/Email Id where we have to lodge the Complaint about concern police officer.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by M.சுல்தான் (Sudan) [03 September 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 7621

அஸ்ஸலாமு அலைக்கும்...

தஃவா செண்டரில் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்த சம்பவம் வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம் ஒன்று...

பெண்கள் தங்கி பயிலும் அமைதியான தஃவா செண்டரில் அனுமதியின்றி அதுவும் நள்ளிரவில் நுழைந்ததும் அல்லாமல் முறையா விசாரிக்கச் சென்ற நிர்வாகிகளிடமும் காவல்துறையினர் தகாத முறையில் பேசியதுடன், அவர்களையும் நடவடிக்கை எடுத்து கைது செய்துவிடுவோம் என மிரட்டிய சம்பவம் வன்மையாக கண்டிக்க கூடிய செயல்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by Muzammil (Dubai) [03 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7626

Assalamu Alaikkum

Dear Kayalites

We have to take severe step in order to avoid this type of police atrocity in our town. In this case we shold unite and do the needful action.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by N.A. Thymiah -9444202562 (Chennai) [03 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7628

பெண்கள் இஸ்லாமிய கல்விக்கூடத்திற்குள் (தஃவா சென்டரில்) அத்துமீறி உள்ளே நுழைந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளரை கண்டித்து நடைபெறும் ஆர்பாட்டத்தில் ஊர்மக்கள் அனைவரும் திரண்டு பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அதிகமானோர் கலந்து கொண்டால் தான், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

இந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளரை பதவி நீக்க வேண்டும் என்று தமிழக அரசை த மு மு க தலைவர் ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தி உள்ளார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:தஃவா சென்டரில் அனுமதியின்...
posted by kaderumma (kayalpatnam) [08 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7777

Assalamu alaikum...we must take decision immediately...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved