Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:18:31 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7067
#KOTW7067
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 25, 2011
ரமழான் 1432: அஹ்மத் நெய்னார் பள்ளியில், ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதும் நிகழ்ச்சி! இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6157 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 10)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஒரே நிலைத்தொழுகையில், திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி நிறைவு செய்யும் நிகழ்ச்சி காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியில் இன்றிரவு 08.10 மணிக்கு நடைபெறுகிறது.

காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த, ‘முத்துச்சுடர்‘ மர்ஹூம் எஸ்.கே.எம்.நூகுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களின் பேரனும், ‘முத்துச்சுடர்‘ ஹாஜி என்.டி.ஜமால் முஹம்மத் என்பவரின் மகனுமான ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் இத்தொழுகையை வழிநடத்துகிறார்.

காயல்பட்டினம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று ஹாஃபிழ் பட்டம் பெற்றுள்ள இவர், அண்மையில், நாகர்கோவில் கோட்டாரில் நடைபெற்ற மும்மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) போட்டியில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓரே நிலைத் தொழுகைக்கான ஏற்பாடுகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் ஒருங்கிணைப்பில், அஹ்மத் நெய்னார் பள்ளி நிர்வாகம் செய்துள்ளது.

இந்நிகழ்வு உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் தொலைக்காட்சியிலும், முஹ்யித்தீன் டிவி இணையதளம் www.muhieddeentv.com இலும் - இரவு 11:30 மணி முதல் - நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நேரடி ஒளிபரப்பை www.kayal.tv இணையதளத்தின் முஹ்யித்தீன் தொலைக்காட்சி பக்கத்திலும் காணலாம்.

தகவல்:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.


செய்தியில் சில வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [25 August 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7219

"அஸ்ஸலாமு அலைக்கும்."

நண்பர் ந.த. ஜமால் ஹாஜியார் புதல்வர் நல்ல முறையில் ஓதி தொளுஹையை நிறைவேற்ற துஆ செய்வோம் யாவர்ஹளும். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நம் யாவர்களின் நாட்டங்கள் நீறைவேற்றி தருவனஹா ஆமீன்!!

வாழ்த்தும் உள்ளம்,

சூப்பர் இப்ராகிம் ச.ஹ. + குடும்பத்தினர்
ரியாத். சவுதி அரேபியா,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by izzadeen (chennai) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7221

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by M.S.K. SULTHAN (dubai) [25 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7223

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எனது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்....
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7226

ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் அவர்களுக்கும் அவரின் பெற்றோர்களுக்கும் மற்றும் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மதரசா முதல்வருக்கும் எனது நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்.... மற்றும் ரமலான் முபாரக்...

நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்துகள்...
posted by வெள்ளி முஹியதீண் (காயல்பட்டணம்) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7228

அல்-ஹாஃபிழ் ஷைகு அப்துல் காதர் அவர்கள் ஏற்று கொண்ட இந்த பொறுபினை நல்ல முரயில் நிரைவெற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு பூரண உதவி புரிவானக. ..............ஆமீண்...... மேலும் அவருக்கு நெஞ்ஞம் கணிந்த வாழ்துகலை தெரிவித்து கொல்கிரேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore.) [25 August 2011]
IP: 27.*.*.* Singapore | Comment Reference Number: 7234

மாசாஅல்லாஹ். எனது அருமை நண்பன் ஹாஜி ஜமாலின் அன்பு இளவல் ஹாபில் ஷைக் அப்துல் காதிர் இறைவனருளால் ஆரம்பம் முதல் இறுதி வரை இறைமறையை இனிதே ஓதி ,இம்மை,மறுமை சிறப்பு திருமறை சாதனை புரிய எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக ! ஆமீன்.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [25 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7242

மாஷா அல்லாஹு. வல்ல நாயன் இந்த இளம் ஹாபில் மீது கடைசி வரை அவனது அருளை வழங்க வாழ்த்துக்கள். அவருடைய பாடங்கள் நல்ல முறையில் நிலைத்து நிற்க நாம் அனைவர்களும் துவா செய்வோம். அவருக்கு ஹிபிழு கற்று கொடுத்த அணைத்து உஸ்தாதுமார்கலுகும் நாம் இந்த நேரத்தில் நிறைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். எல்லா புகழும் வல்ல நாயன் ஒருவனுக்கே உரியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by NAHVI (SINGAPORE) [25 August 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7243

மாஷா அல்லாஹ். நல்ல முறையில் தம்பி இந்த பெரும் பொறுப்பை நிறைவேற்றி முடிக்க அல்லாஹ் அருள் புரிய நாம் யாவரும் துவா செய்வோமாக . அல்லாஹ் ஹாபில் அவர்களை கண்ணை விட்டும் பாது காத்து பெற்றோர்களுக்கும் உற்றார்களுக்கும் உஸ்தாத் மார்களுக்கும் உதவியான குழந்தையாக ஆக்கி வைப்பானாக . அமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by அபு முனவ்வர் சாஜித் (சதுக்கைதெரு) [25 August 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 7244

அந்த இளம் ஹாஃபீழின் திறமைக்கு வாழ்த்துக்கள். இம்மாதிரி சாதனை நிகழ்ச்சிகளுக்கு எந்த அளவிற்க்கு ஷரியத்தில் இடம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும். மூன்று நாள்களுக்கு குறைவாக குர் ஆனை ஓதி முடிக்க நபிதிருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் இசைவு தெரிவிக்கவில்லை. மேலும் அந்த இளம் ஹாஃபிழ் பட பட வென ஓதும்போது ஒரு அட்சரமும் விளங்க முடியவில்லை. மேலும் மிக நீண்ட நிற்றல் சோர்வையும் ஏற்படுத்தும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by Umar Rizwan Jamali (Singapore) [25 August 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 7247

மாஷா அல்லாஹ்,

மிக விரைவாக ஓதவேண்டிய நிர்பந்தமான (ஸஹருக்கு முந்தி முடிக்கவேண்டிய) நிலையிலும் வார்த்தைகள் தெளிவாக வெளிவர, சரளமாக ஓதுவது இறை அருளில் நின்றுமுள்ளாதே.

துரிதமாக துவங்கியதை தொய்வின்றி நிறைவுபடுத்த தூயவன் அல்லாஹ் துணைபுரிவதோடு,

இந்த ஹாஃபிழுக்கு மனதில் சாந்தியை கொடுத்து, இறுதிவரை உறுதியான பாடத்தை நிளைக்கச்செய்து,

عن النبي صلى الله عليه وسلم قال يقال لصاحب القرآن أقرا وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها قال أبو عيسى الترمذى هذا حديث حسن صحيح

பொருள்: "ஓதக்கூடிய (வழமையுடைய) வர்களுக்கு (நாளை மறுமையில் சுவனில்) உலகில் ஓதியதைப்போன்று ஓதுவீர்! உயருவீர்!! என்று சொல்லப்படும். நிச்சயமாக உமது இறுதி அந்தஸ்து நீர் ஓதும் இறுதி வசன(த்தின் தூர)ம். (நபி மொழி) (அதாரம்: திர்மிதீ)

இந்த ஹாபிழுக்கும் நமக்கும், நாளை மறுமையில் சுவனில் "ஓதுவீர் உயருவீர்" என அசரீரி கேட்கும் சமயமும் இதேபோன்று அங்கும் 30 ஜூஸ்வை பூரணமாக ஓதி உயர்ந்த அந்தஸ்தை பெறவும்,

இவரின் மூலம் பெற்றோருக்கும் உற்றோருக்கும் கண்குழிர்சியை வழங்குவானாக. ஆமீன்.

வெள்ளி இரவில் ஓதவேண்டிய ஸூரா கஹ்ஃபுடன், 17 -ஆவது ஜூஸ்வு சூரா ஹஜ் வரை, இந்த ஹாஃபிழின் வாயிலிருந்து மடை திறந்த வெள்ளம்போல் வெளிவந்த வான்மறையை செவிமடுத்தவனாக தட்டச்சு செய்கிறேன்.

அன்புடன்:
இப்னு ஸாலிஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by காதர் (சென்னை) [25 August 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 7248

மாஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by M.E.L.NUSKI (Riyadh -KSA) [25 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7265

அன்பு சகோதரர் N .T .ஜமால் முஹம்மத் அவரர்களின் மகன் அன்பு இளவல் ஹாமிதிய்யாவில் புடம் போட்ட தங்கம் ஷைக் அப்துல் காதர் அஹ்மத் நெய்னார் பள்ளியில் திருமறை திருக்குரானை முழுவதுமாக ஓதி முடித்ததை முஹைதீன் நெட் வொர்க் மூலமாக பார்த்து பரவசம் அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்விளம் ஹாபிளின் மனனத்தை மென்மேலும் சீராக்கி இம்மை மறுமை நற்பேற்றினை தந்தருள் வானாக .

அத்துடன் இவரின் பெற்றோர், ஹாமிதிய்யா முதல்வர், ஹஜ்ரத் மார்கள், அனைவருக்கும் எல்லா நல வளனையும் கொடுப்பானாக ஆமீன்

நுஸ்கி முஹம்மது ஈஸா லெப்பை
ரியாத் - சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. மாஷா அல்லாஹ்!
posted by MOHIDEEN ABDUL KADER (abudhabi) [25 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7266

அஸ்ஸலாமு அழைக்கும்.

மிக இளவயதில் இறைமறை முழுவதையும் இதயத்தில்ஏந்தி ஏக இறைவனின் ஆசியுடன் அழகாக ஓதி ஈருலக பாக்கியத்தை பெற்ற மற்றும் அவருடன் சேர்ந்து தொழுத அனைவர்களுக்கும், இதை கண்குளிர காண வசதி செய்த ஜமாத்தார்கள்,காயல் நகரமன்ற தலைவர் அனைவர்களுக்கும் அல்லாஹ் ஈருலக பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்.

அன்பு ஹாபிலீன் மற்றும் அவரை பெற்றெடுத்த பெற்றோர்களே இந்த அடிமைக்கும், குடும்பத்திற்கும்,குழந்தைகளுக்கும் தங்களை போன்ற ஹாபிழ்கள் பெறவும்,இன்ஷால்லாஹ் நாளை மறுமையில் தங்களுடன் எங்களையும் ஜன்னத்துல் பிர்தௌசான சுவர்கத்திற்கு அழைத்து செல்லுங்கள்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by N.T.JAMAL MOHAMED (BURAIDAH QASSIM SAUDI ARABIA) [25 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7267

எல்லாம் வல்ல திருவருளாலும் ஏந்தல் கண்மணி நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைய்ஹி வசல்லம் அவர்களின் துவா பாரக்கதாலும் என் அன்பு மகன் ஷைக் அப்துல் காதர் இவ்வருடம் நமதூர் அஹ்மத் நைனார் பள்ளி இல் ஒரே நிலையில் திருமறையாம் திருக்குரானை முழுவதுமாக ஓதி முடித்ததை எண்ணி எல்லாம் வல்ல அல்லாஹ் விற்கு முதன் முறையாக நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்து ஹாமிதியாவின் முதல்வர் நஹ்வி நூருல் ஹக் நுஸ்கி அவர்கள் தன் பிள்ளையை போன்று அவனை ஆளாக்கி என் தந்தை மறைந்த முத்துச்சுடர் நூஹு தம்பி ஆலிம் மற்றும் எனது மாமா ஷைக் அப்துல் காதர் சூபி ஆலிம் ஆகியோரின் பேர்சொல்லும் பிள்ளையாக தந்ததற்கும் , மற்றும் உஸ்தாது மார்கள் ஹாமிதிய்யவின் நிருவாகிகள், இந்த ஏற்பாட்டினை சிறப்பாக செய்து உற்சாகம் ஊட்டிய காயல் நகர் மன்ற தலைவர் ஹாஜி வாவு செய்து அப்துல் ரஹ்மான், மற்றும் அஹ்மத் நைனார் பள்ளி நிருவாகிகள், நேரடியாக ஒளிபரப்பிய மொஹிதீன் தொலைகாட்சி நிறுவனத்தார் நேரிலும் தொலைபேசி மின் அஞ்சல் மூலமும் வாழ்த்தி துவா செய்த அன்பு உள்ளங்களுக்கும் என் மன பூர்வமான நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.

என்றும் அன்புடன்
N T .ஜமால் முஹம்மது S /O மர்ஹூம் முத்துச்சுடர் நூஹுதம்பி ஆலிம்
புரைதாஹ் அல்கசிம்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by sms mdlabbai (qatar) [26 August 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7273

பிஸ்மில்லா...என்தம்பி saikabdulkader இறைமரைகுரானை இனிதாய் முழுவதும் ஒரே சலாமில் முடித்த நிகழ்வினைகண்டு பேரானந்தம் அடைந்தேன்.இவர் மூலம் எம்மக்களும் எம்குடும்பமும் சந்தோசம் அடைகிறது.yallamvallaalla இவருக்கு ஈருலகிலும் இன்ப பாக்கியத்தை கொடுக்க அவனிடமே இறைஞ்சுகிறேன்.வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by Siddiq (Chennai) [26 August 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 7278

போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு அல்லது அதை விட சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதை விட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. மாஷாஅல்லாஹ்...
posted by B.S அஹ்மது ஸாலிஹ் (Kowloon) [26 August 2011]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 7287

அல்ஹம்துலில்லாஹ், இந்த இனிய இளவலின் (திருத்தமான) ஓதுதலை இறுதி வரை செவி சாய்க்கும் பாக்கியம் பெற்றோம். மாஷாஅல்லாஹ்...

வல்ல ரஹ்மான் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டால் இவருக்கும், இவரை ஈன்றெடுத்த பெற்றோருக்கும், இவருக்கு இறை மறையை போதித்த மத்ரஸா ஹாமிதிய்யாவின் முதல்வர் மற்றும் உஸ்தாதுமார்கள் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயிளையும் நிறைவான செல்வத்தையும் வழங்குவானாக, ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. ஹாபிழ் காதர்
posted by K.A.FAIZAL (madurai) [26 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7300

அஸ்ஸலாமு அலைக்கும்.இவ்வுலகிலேயே மிகப்பெரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட இளவலுக்கு நன்றி.அருள்மறையை நன்கு பார்த்து ஓத தெரிந்தவர்களுக்கு அனைத்து அட்சரங்களும் நன்கு விளங்கியது.விளங்கியும் இருக்கும் என்று நம்புகிறேன்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by MAC.Mujahith (MUMBAI) [26 August 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 7301

மாஷா அல்லாஹ்...மிக்க மகிழ்ச்சி.. BAARA KALLAHU FEE QIRATHIKA WA HIFLIKA...”


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by hasan (khobar) [26 August 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7305

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த வலைதளத்தின் ஊடாக அடிக்கடி அழகிய முறையில் கருத்து தெரிவிக்கும் ஆலிம், ஹாபிஸ்கள் விளக்கம் தரலாமே. இது உங்கள் கடமை. ஏது எதற்கோ கருத்து எழுதும் நீங்கள் இதில் மௌனம் சாதிப்பது ஏன்?
--------------------------------------------------------------------------------------------
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
(அல்குர்ஆன் 33 ; 21)

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.
(அல்குர்ஆன் 33 : 6)

திருக்குர்ஆனை நாம் எவ்வாறு ஓதவேண்டும் என்று அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இரவில் நின்று தொழுகின்ற தொழுகையில் நாம் எவ்வாறு ஓதவேண்டும் என்று அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :

போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக! அதில் பாதியளவு அல்லது அதை விட சிறிதளவு குறைத்துக் கொள்வீராக! அல்லது அதை விட அதிகமாக்கிக் கொள்வீராக! குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73 : 1-4)
-------------------------------------------------------------------------------
நபியவர்கள் எப்படி குர்ஆனை ஓதினார்கள் என்பதை பாருங்கள். ''நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?'' என அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கவர்கள், ''நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் 'பிஸ்மில்லா...ஹ்' என நீட்டுவார்கள்; 'அர்ரஹ்மா...ன்' என்றும் நீட்டுவார்கள்; 'அர்ரஹீ...ம்' என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.(நூல் : புகாரி 5046)
--------------------------------------------------------------------------------
ஒரே இரவில் ஒரு குர்ஆனை ஓடி முடிக்கலாம?
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!'' என்று கூறினார்கள். அப்போது நான், ''(அதை விடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது'' என்று கூறினேன். ''அப்படியானால், ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே'' என்று சொன்னார்கள். நூல் : புகாரி ௫௦௫௪

''ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!'' என்றார்கள். ''இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது!'' என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக்கொண்டே வந்து முடிவில், ''மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக!'' என்று கூறினார்கள்.நூல் : புகாரி (1978)
-----------------------------------------------------------------------------------
தொழுதுகொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பதால் ஏற்படும் தீங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுதுகொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்)தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும். அறிவிப்பவர் : அபூஜுஹைம் (ரலி) நூல் : புகாரி (510)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலகிக் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன் தான் ஷைத்தான்.அறிவிப்பார் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 3274


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by omar abdullatheef (riyadh) [26 August 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7308

ஒவ்வொரு பித்அதும் வழிகேடு , ஒவ்வொரு வழிகேடும் நரகதிக்கு இட்டுசெல்லும் . சொகதரர் ஹசன் கோடிட்ட ஹதித் மேற்சொன்ன வாசகத்தை பள்ளி நிர்வஹி களுக்கு நினைவு படுத்தட்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by M.B.S.ABUBACKER (Tirunelveli) [26 August 2011]
IP: 112.*.*.* India | Comment Reference Number: 7316

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒரே நிலைத்தொழுகையில், திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி நிறைவு செய்யதா ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் எங்களது குடும்பத்தாரின் சார்பில் வாழ்த்துக்கள்.

Master A.S.baker sahib
Baby A.S.Rahma Fathima


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by N.T.BAAZUL ASHAB (Riyadh -KSA) [26 August 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7337

என் அன்பு தம்பி N .T . ஜமால் முஹம்மத்வின் மகன் ஷைக் அப்துல் காதர் நமதூர் அஹ்மத் நைனார் பள்ளியில் ஒரே நிலையில் திரு மறையாம் திருக்குரானை ஓதி முடித்ததை மொஹிதீன் தொலைகாட்சி மூலம் பார்த்து பூரிப்பு அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லா அருமை மகன் ஹாபிளுக்கு தரிபாடன படத்தை தந்து எல்லா நல வளங்களையும் தந்து அருள் புரிவானாக . ஹாபிளின் பெற்றோர், அவனை உருவாக்கிய ஹாமிதிய்யா முதல்வர் மாமா நூருல் ஹக் நுஸ்கி அவர்களுக்கும் , ஹாமிதிய்யா நிருவாகிகள், இதற்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்து தந்த கயல் நகர தலைவர் ஹாஜி வாவு செய்துஅப்துல்ரகுமான் மற்றும் அஹ்மத் நைனார் பள்ளி நிருவாகிகள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நீடித்த ஆயுளையும் நோயில்லா வாழ்வையும், என்றும் இதுபோன்ற நற்பணிகள் தொய்வின்றி நடைபெற அருள்புரிவானாக ஆமீன் .

வஸ்ஸலாம்
N .T .பாதுல்அஷாப்
டிசைன் பார்க்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by mohammed ikram (saudi arbaia) [27 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7338

எது செய்தாலும் அதில் ஏதாவது ஒரு சிறு குற்றம் குறை கண்டுபிடிக்க முடியுமா என்று கையில் ஒரு பூத கண்ணாடியை வைத்து கொண்டு தயவு செய்து அலையாதீர்கள். குழம்பம் விளைவிப்பதை அல்லாஹு விரும வில்லை. குறை இல்லாதவன் அல்லாஹு ஒருவனே.இந்த கூட்டம் எப்போது தான் திருந்துமோ ? வல்ல நாயனுக்கே வெளிச்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சாதனை இளவல்
posted by K.A.FAIZAL (madurai) [27 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7343

அஸ்ஸலாமு அலைக்கும்.சாதனை படைத்த இளவலுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்,துஆக்களும் ஒருபுறமிருக்க,பாராட்ட தெரியாத ஒரு கூட்டம் பழித்தும்,இழித்தும் பேசுகிறது.இந்த இளவல் அருள்மறையை ஓதுவதை டெலிபோன் மூலம் கேட்ட பாக்கியவான்களில் இந்த அடியானும் ஒருவன் என்பதை பெருமையோடு தெரிவிக்கிறேன்.இந்த அடியானும் இறைமறையை இதயத்தில் ஏந்தியவன் என்பதை அடக்கத்தோடு கூறுகிறேன்.ஒவ்வொரு அட்சரங்களும் தெளிவாக விளங்கியது.இறைமறையை நன்கு பார்த்து ஓத தெரிந்திருந்தால் விளங்கி இருக்கும். பழித்தும்,இழித்தும் பேசக்கூடிய கூட்டமே! நரகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட பத்து நபர்களை சுவனத்திற்கு அழைத்துசெல்லும் பாக்கியம் பெற்றவர்தான் இந்த சாதனை இளவல்.அந்த பாக்கியம் பேசக்கொடியவனுக்கு இருக்கிறதா? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். 'போற்றுவார் போற்றட்டும்' தூற்றுவார் அள்ளி தூற்றட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by syedAhmed (HK) [27 August 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7345

சகோதரர் இறைமறையை நெஞ்சில் ஏந்தியவர் முழுதும் ஓதி முடிக்கும் திறமை கொண்டவர் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் நமக்கு எல்லாம் இருக்கிறது.

ஒரு நிலையில் ஓதுவதில் நபிகளின் முன் உதாரணம் இருக்கிறதா? என்பது தான் கேள்வி? கேள்வியை சரியாக விளங்கி கொள்ளுங்கள். யாரும் சகோதரரை தூற்ற வில்லை. இல்லாத வணக்கத்தை உருவாக்கும் உரிமை நமக்கு இல்லை அது இறைவனின் உரிமையில் நாம் கை வைப்பது ஆகும் என்பதே ஆட்சேபனை செய்பவர்களின் கருத்து.

முன் உதாரணம் இருந்தால் எடுத்து சொல்லுங்கள் தங்கள் தவறை உணர்ந்து திருத்திக்கொள்வார்கள்.

அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம் ) [27 August 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7346

அன்பு தம்பி ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இறைமறையை தன் உள்ளத்தில் வைத்து இருக்கும் இந்த குழந்தை எல்லா வளமும் பெற்று வாழட்டும்.

இந்த குழந்தையை யாரும் குறைகூறி கருத்து பதியவில்லையே. சகோ. ஹசன் அவர்கள் கூற்றில் எந்த குறை கண்டீர்கள். அவர் ஏதும் தன் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்கவில்லை. வல்ல இறைவனும், அருமை நாயகம் ரசூல்(ஸல்) அவர்களின் கூற்றை தானே குறிப்பிட்டு கூறியுள்ளார்.

ஒரே நிலைத் தொழுகையில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதின இந்த நிகழ்வு சரிதானா? அவர் கூறிய ஆதாரங்கள் சரிதானா? இதற்க்கு பதில் இருந்தால் மார்க்க வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கலாமே?

ஹாஃபிழ்கள், ஆலிம்கள், மார்க்க வல்லுனர்கள், முஅதின்கள் இவர்களை நல்ல கவனியுங்க, பாராட்டுங்க. இன்ஷா அல்லாஹ் அவர்களின் வாழ்வு நன்றாக இருக்கட்டும்.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by siddiq (Chennai) [27 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7347

யாரும் இங்கு இழித்தும் பழித்தும் பேசவில்லை. அல்லாஹும் அவனுடைய ரசூலும் சொன்னதைதான் இங்கு மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறது. இழித்தும் பழித்தும் பேசுவதாக கருதுவ்ர்கள் யாரை நாம் குறை சொல்ஹிறோம் என்பதை சிந்திக்கவும்.

"ஹாபிழ்கள் 10 நபர்களை சொர்கத்துக்கு அழைத்து செல்வார்கள்." இந்த சொல் அல்லாஹும் அவனுடைய ரசூலும் சொன்ன செய்தியா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [27 August 2011]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7349

"பழித்தும்,இழித்தும் பேசக்கூடிய கூட்டமே! நரகத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட பத்து நபர்களை சுவனத்திற்கு அழைத்துசெல்லும் பாக்கியம் பெற்றவர்தான் இந்த சாதனை இளவல்.அந்த பாக்கியம் பேசக்கொடியவனுக்கு இருக்கிறதா? என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்."

ஒருவர் சுவர்க்கம்/நரகம் செல்வார் என்று எதை வைத்து கூறுகிறார் சகோ. கே.எ.பைசல். ஒருவருடைய மறுஉலக வாழ்க்கை பற்றி இம்மையிலேயே தெரிந்துகொள்ளலாமா?

அவ்வாறு அடையாளம் காணலாம் என்றால் விளக்கம் தாருங்கள், மக்கள் அனைவரும் தங்கள் நிலையை அறிந்து அதற்க்கேற்ப்ப நடந்துகொல்வார்களே?

இது விவாதிக்கும் எண்ணத்தில் கேட்கப்பட்ட கேள்வி அல்ல, தெரியாத ஒன்றை தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்க பட்ட கேள்வி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ரமழான் 1432: அஹ்மத் நெய்ன...
posted by Administrator (Chennai) [27 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7355

இது விவாதம் பக்கம் அல்ல; கருத்துக்கள் பக்கம். இச்செய்தி குறித்து புதிதாக எந்த கருத்துக்களும் அனுமதிக்கப்படாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved