Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:10:45 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6630
#KOTW6630
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 3, 2011
புகாரிஷ் ஷரீஃப் 1432: இன்று அபூர்வ துஆ பிரார்த்தனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6650 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் 04.06.2011 முதல், 03.07.2011 (இன்று) வரை நடைபெறுகிறது.

இருபத்து ஒன்பதாம் நாளான நேற்று, (02.07.2011) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை இலங்கை - கண்டி மண்டல ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபழ்லுர்ரஹ்மான் மஹ்ழரீ வழங்கினார். அவரைத் தொடர்ந்து, சட்டமேதை இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாற்றுச் சுருக்க உரையை, அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்கினார்.

நேற்று மாலையில், இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பெயரில் அல்லாமா நஹ்வீ முஹம்மத் இஸ்மாயீல் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட மின்ஹதுல் பாரீ ஃபீ மித்ஹதில் புகாரீ என்ற மவ்லிதும், இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புகழ்பாடும் பைத்தும் ஓதப்பட்டது. இந்நிகழ்விற்கு, காயல்பட்டினம் மஸ்ஜித் அல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமை தாங்கினார். எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் துஆ ஓதி இரவு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இன்று புகாரிஷ் ஷரீஃப் நிகழ்ச்சிகளின் இறுதி நாளாகும். இன்று அதிகாலை 05.15 மணிக்கு, இறைமறை வசனங்களுடன் ஹாஃபிழ் நஹ்வீ எம்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் இறுதிநாள் நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்கிறார்.

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, குருவித்துறைப் பள்ளிவாசல் மற்றும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி ஆகியவற்றின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஜுமானீ புகாரிஷ் ஷரீஃப் நிறைவுப் பகுதியை துவக்கமாக ஓதுகிறார்.

இன்று ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, சென்னை மதீனத்துல் இல்ம் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ வழங்குகிறார்.

அவரைத் தொடர்ந்து, கூட்டு துஆவின் சிறப்புகள் என்ற தலைப்பில் திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் ம்வலவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ உரையாற்றுகிறார். பின்னர், மவ்லவீ பி.கே.முஹம்மத் பாதுஷா ஷக்காஃபீ மலையாளத்தில் உரையாற்றுகிறார். தொடர்ந்து, அபூர்வ துஆ நிகழ்ச்சி குறித்த அறிமுகத்தை நஹ்வீ எம்.எம்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா வழங்குகிறார்.

இறுதியாக, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ இமாம் மவ்லானா செய்யித் அஹ்மதிப்னு ஜெய்னீ தஹ்லான் அவர்களால் தொகுக்கப்பட்ட கத்முல் புகாரிஷ் ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஓதி நிகழ்ச்சிகளை நிறைவு செய்கிறார்.

இன்று மாலையிலும், இரவிலும் இறுதிநாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

இறுதிநாளை முன்னிட்டு, காலை - மாலை அனைத்து நிகழ்ச்சிகளும் வலைதளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி ஒலிபரப்பை, http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணைப்பில் சொடுக்கி செவியுறலாம்.

http://bukhari-shareef.com/eng/audio/1/detail.html என்ற இணைப்பை சொடுக்கி, இவ்வாண்டின் பதிவுசெய்யப்பட்ட உரைகளைச் செவியுறவும், பதிவிறக்கம் செய்திடவும் செய்யலாம்.

தகவல்:
M.N.செய்யித் அஹ்மத் புகாரீ
மற்றும்
M.H.ஜாஃபர் சுலைமான்
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆமீன்.
posted by syedahmed (Guangzhou, China) [03 July 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 5717

வல்ல அலலாஹ்வின் கிருபையினால் வாழ்வில் எல்லா நாட்டதேட்டங்கள் நிறைவேறி, நோய் நொடி இல்லாத வாழ்வும் , நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வங்களும் உண்டாக வேண்டி பெருந்தகை ஆலிம் அவர்களை துஆ கேட்க வேண்டுகிறேன். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அபூர்வ துஆ நேரடி ஒலிபரப்பு மிகவும் அருமை
posted by Moulavi.Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [03 July 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 5722

மாஷா அல்லாஹ். அபூர்வ துஆ நேரடி ஒலிபரப்பு மிகவும் அருமை. மிகவும் தெளிவாக இருந்தது. மஜ்ளிசிலேயே நேரடியாக இருந்து கேட்டது போன்ற உணர்வு இருந்தது. எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அல்லாஹ் து'ஆ ஓதிய ஆலிம் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும், இம்மை, மறுமையின் சகல சௌபாக்கியத்தையும் வழங்குவானாக!

அவர்கள் என்ன, என்ன து'ஆக்களை இந்த புனித மன்றிலே, யாருக்காக, எதற்காக, தனக்காக ,பிறருக்காக, நாட்டிற்காக, வீட்டிற்காக சமுதாயட்டிற்காக, கேட்டார்களோ அவைகள் அனைத்தையும் அல்லாஹ் அங்கீகரித்து அருள்புரிவானாக! சன்மார்க்க சேவைபுரிந்து வரும் மாநபியின் மாமன்றம் புனித மஜ்ளிசுள் புகாரிஸ் ஷரீப் சபையின் சன்மார்க்க தீனின் " தாவா" சேவை கியாமத் வரை தடையின்றி, தொய்வின்றி, தொடராக நடைபெற்று வர நாயன் நல்லருள் புரிவானாக!

இம்மஜ்ளிசிர்க்காக உடல், பொருள். ஆவி போன்ற சேவை செய்த, செய்கின்ற, செய்ய இருக்கின்ற சீதேவிகள் அனைவருக்கும் எலாம் வல்ல அல்லாஹ் ஈருலக நற்பாக்கியங்களையும் வழங்கி அவர்கள் அனைவரின் சகல ஹாஜத்களை நிறைவேற்றுவானாக ! வல்ல அல்லாஹ் நமது து'ஆக்களை வள்ளல் பெருமானார் (ஸல் ) அவர்கள். இமாம் புகாரி நாயகம். நபிமார்கள், சஹாபாக்கள், இமாம்கள், செய்குமார்கள். வலிமார்கள் நல்லோர்கள் நம் ஆபாக்கள் அனைவரின் பொருட்டால் நிறைவேற்றி அருள்வானாக! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!

அனைவருக்கும் சலாம்.அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. AL-HAMDOLILLAH.
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [03 July 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5723

" அஸ்ஸலாமு அலைக்கும்."

அல்லாஹ் நம் யாவர்ஹளுடைய நாட்ட தேட்டத்தை நிறைவேற்றி தருவனஹவும் ஆமீன்! DUA மக்பூல் இன்ஷா அல்லாஹ்!!!

குறித்த நேரத்தில் கேட்டு மகில்தோம். புஹாரி ஷரிப் கமிடியாருக்கு நெஞ்சம் நிறைத்த நன்றி.

வாழ்த்துகளுடன்,
சூப்பர் இப்ராகிம் ச.ஹ. மற்றும் குடும்பத்தினர்
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. துஆ துஆ துஆ
posted by T.M.RAHMATHULLAH (72) (kayalpatnam TEL. 043692808526) [04 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5740

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த இதே புனித புஃகாரி ஷரீஃப் துஆ மஜ்லிஸ் களில் ஓதப்பட்ட எத்தனையோ வருடங்களில், எத்தனையோ தடவை, எத்தெனையோ துஆக்களெல்லாம் நாம் கேட்ட்துபோல், எனக்கும் ஒப்பு கொண்டது போல எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வருஷமும் நான் எனக்காகவும், ஊர்மக்கள், உலக மக்கள் அணைவ்ருக்காகவும் நாம் கேட்கும் துஆ கபூல் செய்வானாக.

ஆமீன்,துஆ கேட்கும் ஆலிம் பாதுல் அஷ் ஹாப் அவர்களுக்கும் பூரணமாக ஒதி கத்ம் செய்ய தவ்ஃபீக் செய்வானாக. மேலும் இது போல் எல்லா தஃலீம் மஜ்லிஸ்களிலும் கேட்கும் பாக்கியத்தையும் அதிலும் கேட்கும் துஆ ஒப்புக்கொள்ளப்பட்டு வரும் அனுபவங்களை எங்களுக்கு தருவது போல் அனைவருக்கும் தந்தருள்வானாக. ஆமீன்.

T.M.RAHMATHULLAH, 04639280852


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நாணயம்: ஒரு பார்வை!  (3/7/2011) [Views - 12889; Comments - 15]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved