Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:31:19 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6590
#KOTW6590
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுன் 29, 2011
காஸ் சிலிண்டர் விலையில் ரூ.15 குறைப்பு! "வாட்' வரியை நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2576 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமையல் காஸ் மீது, தமிழக அரசு விதிக்கும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை முற்றிலும் நீக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில், 14 ரூபாய், 73 காசு குறையும். இனி வருங்காலங்களிலும் சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சமையல் காஸ் விலையை குறைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் மற்றும் மூத்த அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். அதன்பின், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமை, மத்திய அரசால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதால், பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில், கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல், டீசலுக்கான விலையை, லிட்டருக்கு, 3 ரூபாயும், சமையல் காஸ் விலையை, சிலிண்டர் ஒன்றுக்கு, 50 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை, லிட்டருக்கு, 2 ரூபாயும் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்தது.

பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட, அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு, அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும்.இதிலும், சமையல் காஸ் விலை, சிலிண்டருக்கு, 50 ரூபாய் உயர்த்தப்பட்டதால், தாய்மார்கள் விரக்தியில் உறைந்து போயுள்ளனர். உலகளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகக் கூறி, பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திவிட்டு, மாநில அரசுகள், பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டுமென அறிவுரை வழங்குவது வேடிக்கையானது.

நம் நாட்டு தேவைக்கான பெட்ரோலியப் பொருட்கள் அனைத்துமே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மூலம் மட்டும் தயாரிக்கப்படுவது அல்ல. உள்நாட்டில் பெறப்படும் கச்சா எண்ணெய் மூலமும் தயாரிக்கப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களின் லாப நோக்கு, நிர்வாகத் திறமை, நிர்வாகச் செலவுகளும் பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவற்றை கருத்தில் கொள்ளாமல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையை மட்டும் சுட்டிக்காட்டி மத்திய அரசு தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. எனவே தான், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்ததோடு, இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டுமென கேட்டேன்.

முந்தைய தி.மு.க., ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழகத்தில், கடன் சுமை, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துவிட்டது. இதுதவிர, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் உட்பட, பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.ஒப்பந்ததாரர்கள், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கிய விவசாயிகளுக்கு எல்லாம், பல மாதங்களாக நிலுவைத் தொகையை வழங்காமல், முந்தைய அரசு விட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு, பெட்ரோலியப் பெருட்களின் விலை உயர்வை திரும்பப் பெறுவதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சமையல் காஸ் விலை உயர்வில் இருந்து அவர்களைப் பாதுகாக்க, தமிழக அரசால் வழங்கக் கூடிய நிவாரணம் அனைத்தையும் வழங்க முடிவு செய்துள்ளேன். அதனடிப்படையில், மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டு, இனிமேல் குறைப்பதற்கு ஏதுமில்லை என்ற அளவில், சமையல் காஸ் விலையை குறைக்க முடிவு எடுத்துள்ளேன். அதன்படி, சமையல் காஸ் மீது தற்போது விதிக்கப்படும், 4 சதவீத மதிப்புக் கூட்டு வரியை, வரும் ஜூலை 1ம் தேதி முதல், அறவே நீக்க உத்தரவிட்டுள்ளேன்.

இதையடுத்து, தமிழகத்தில் தற்போது விற்கப்படும் ஒரு சிலிண்டர் காஸ் விலை, 404 ரூபாய், 40 பைசா என்ற அளவில் இருந்து, 389 ரூபாய், 67 பைசா என்ற அளவுக்கு குறையும். அதாவது, ஒரு சிலிண்டர் விலை, 14 ரூபாய், 73 காசு அளவுக்கு குறையும். இனி வருங்காலங்களிலும், சமையல் காஸ் மீது மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படாது.

சமீபத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்ட, 50 ரூபாய் விலை உயர்வுக்கு தற்போதுள்ள மதிப்புக் கூட்டு வரியின்படி, மாநில அரசுக்கு, ஆண்டுக்கு, 16 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்ற நிலையில், ஏற்கனவே சமையல் காஸ் மீதான மதிப்புக் கூட்டு வரி மூலம் ஆண்டுக்கு கிடைத்து வந்த, 104 கோடி ரூபாய் வருவாயையும் சேர்த்து, மொத்தம், 120 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.


இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

நன்றி:
தினமலர் (28.06.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பாராட்டின் முதல் படி
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [29 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5662

முதல்வரின் முடிவு அணைத்து மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் மகத்தான முடிவு. இதுவே பாராட்டின் முதல் படி. தொடரட்டும் மக்கள் பணி. மலரட்டும் மக்களின் மலர்ச்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. appreciated.
posted by syedahmed (GZ, China) [29 June 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 5668

We express our profound gratitude to our honourable chief minister for decreased VAT tax of gas cylinder. Hope our CM opt all other benefits like this from various dept. soon by her good administrative skill.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved