Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:33:03 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6586
#KOTW6586
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 28, 2011
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011: பரிசளிப்பு விழா நிகழ்ச்சித் தொகுப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4003 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளிணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011” என்ற தலைப்பில் பரிசளிப்பு விழா மற்றும் மாநில சாதனை மாணவியுடன் நகர பள்ளி மாணவ-மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகிய விழாக்களை, ஜூன் 24, 25 தேதிகளில் நடத்தின.

துவக்க நாளான 24.06.2011 அன்று மாலை 05.00 மணிக்கு பரிசளிப்பு விழா, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார்.

அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ,

தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ,

தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) துணைத்தலைவர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத்,

ஜித்தா காயல் நற்பணி மன்ற துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.அப்துல் காதிர்,

சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத்,

இக்ராஃ கல்விச் சங்க செயற்குழு உறுப்பினரும், அதனை உருவாக்கியவர்களுள் ஒருவருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்,

எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா,

முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன்,

அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை,

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை எம்.ஜெஸீமா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், 1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தின் முதன்மாணவியாகத் திகழும் ஓசூரைச் சார்ந்த கே.ரேகா தன் பெற்றோருடன் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அதுபோல, 1200க்கு 1177 மதிப்பெண்கள் பெற்று, தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவரும், நகர சாதனை மதிப்பெண் பெற்றவருமான காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ்வும் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் கலந்துகொண்டார்.

இந்திய வணிகத்துறை அமைச்சகத்தின் தேயிலைத் துறை தென்னிந்திய முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆர்.டி.நஸீம் ஐ.ஏ.எஸ். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



பின்னர், விழா தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையுரையாற்றினார். மாநில சாதனை மாணவி, மாவட்ட - நகர சாதனையாளர்களான காயல்பட்டினம் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியருக்கு தனதுரையில் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், இவ்விழாவை நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் குறித்து, இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் செயலருமான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் அறிமுகவுரையாற்றினார்.

அடுத்து, சிறப்பு விருந்தினர் குறித்து இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலருமான பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி அறிமுகவுரையாற்றினார்.

பின்னர், மாநிலத்தின் முதன்மாணவி கே.ரேகா குறித்து, இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுநிலை பட்டதாரி ஆசிரியருமான எம்.ஏ.புகாரீ அறிமுகவுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் முதன்மாணவரும், நகர சாதனை மதிப்பெண்ணைப் பெற்றவருமான மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் குறித்து, இக்ராஃ செயற்குழு உறுப்பினர் கவிஞர் ஹாஜி ஏ.ஆர்.தாஹா அறிமுகவுரையாற்றியதோடு, இக்ராஃ தலைவரும், தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவருமான ஹாஜி டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் அனுப்பிய வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசித்தார்.



பின்னர், சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார். கல்வி கற்பதன் அவசியம், கற்பதால் விளையும் பலன்கள் குறித்து விளக்கமாக உரையாற்றிய அவர், மாநில சாதனை மாணவி கே.ரேகாவை பெரிதும் பாராட்டினார்.



பின்னர், அவரது பணிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு உருக்கமான நிகழ்வுகளை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீண்ட நேரம் அறிவுரை வழங்கினார்.

அவரது உரையைத் தொடர்ந்து மஃரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. ஆண்கள், அருகிலுள்ள செய்கு ஹுஸைன் பள்ளியிலும், பெண்கள் மேடை வளாகத்திலும் தொழுகையை நிறைவேற்றி முடித்ததையடுத்து மீண்டும் விழா நிகழ்வுகள் தொடர்ந்தன.

அடுத்து, மாநில சாதனை மாணவி கே.ரேகா, மாவட்ட முதன்மாணவரும், நகர சாதனை மதிப்பெண் பெற்றவருமான ஏ.எச்.அமானுல்லாஹ், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் அரசுப் பொதுத் தேர்வுகளில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர், தனிப்பாடங்களில் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவியர், 1200 மொத்த மதிப்பெண்களில் 1000க்கும் மேல் மதிப்பெண் பெற்ற 73 மாணவ-மாணவியருக்கு பல்வேறு பணப்பரிசுகளும், கேடயம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருது, பணப்பரிசுகளும் இவ்விழாவில் வழங்கப்பட்டது.

இறுதியாக, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் பி.ஏ.புகாரீ நன்றி கூற, துஆவுக்குப் பின் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. விழா நிகழ்ச்சிகளை இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் தொகுத்தளித்தார். விழாவில், நகரின் அனைத்துப்பள்ளி மாணவ-மாணவியர், அவர்களது பெற்றோர், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

விழா ஏற்பாடுகளை, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் தலைமையில், அதன் செயற்குழு உறுப்பினர்களும், காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் ஒருங்கிணைப்பில் அம்மன்றத்தின் உறுப்பினர்களும் செய்திருந்தனர்.



பரிசளிப்பு நிகழ்வுகள் தனித்தனி செய்திகளாக வெளியிடப்படும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கல்வி வளர்ச்சிக்காக பல நல்ல சேவைகள்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [28 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5633

மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக பல நல்ல சேவைகள் செய்து வரும் THE KAYAL FIRST TRUST மற்றும் இக்ரா அமைப்புக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்... அவர்களின் சேவைகள் தொடர வல்ல இறைவனிடம் பிராத்திப்போமாக... ஆமீன்

முத்து இஸ்மாயில்

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கத்தரி
posted by சாளை நவாஸ் (singapore) [28 June 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 5636

என்னா முத்து இஸ்மாயில் மச்சான், திடீர்னு administrator கத்தரி போட்டு இருக்காரே.. ஏதும் எக்கு தப்பா எழுதிடீரா? நானும் எழுதும் போது 2 தடவை படிச்சிட்டுதான் எழுதுவேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. My Best Wishses
posted by Mohamed Salih (Bangalore) [28 June 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 5638

Masha allah...

Very nice arrangement with good guest.. Its very motivated programm to our kayalpatnam students and also to the school teachers..

By the garce of almighty we will achive State level 1st rank , I.A.S, etc., soon.. I thank to Almighty, IQRA, The kayla first trust, Chief Guest, All kayal welfare association, our native scholars, welfare socitiy, Finaciers & volunters etc., to make this function to be good success..

Once again My best wishses to all out going students and also upcoming students to sucess in her / his career... insha allah..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஏதும் எக்கு தப்பா எழுதிடீரா? என்று சாலை நவாஸ் மச்சான் கேக்கிறார்...
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [28 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5646

administrator கத்தரி போட்டு இருக்காரே.. ஏதும் எக்கு தப்பா எழுதிடீரா? என்று சாலை நவாஸ் மச்சான் கேக்கிறார்... நான் தப்பா எழுதவில்லை காயல் First டிரஸ்ட் நிறுவனரின் பெயர் போட்டு பாராட்டு தெரிவித்து இருந்தேன் அதை அவர் விரும்பவில்லை போல் தெரிகிறது. ஆகையால் அதை (பெயர் விரும்பாத நிறுவனர்) கத்தரி போட்டு இருக்கார்... இதான் உண்மை... உண்மை.. இதையும் (இந்த விளக்கத்தையும்) கத்தரி போட்டால் இனி நான் டென்ஷன் ஆகிவிடுவேன்

அன்புடன்... முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2011
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [28 June 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5650

THE KAYAL FIRST TRUST மற்றும் இக்ரா அமைப்பின் சேவைகள் தொடர இறைவனை பிராத்திக்கின்றோம்.

மாநில முதல் மாணவி சகோதரி ரேகா அவர்கள் உரை நிகழ்த்தினார? இந்நிகழ்ச்சி பற்றி அவர் கூறிய கருத்துகளை முடிந்தால் பிரசுரிக்கலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. DISAPPOINTED
posted by NIZAR AL (KAYALPATNAM) [28 June 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5656

DISAPPOINTED DUE TO NO PHOTOS OF THIS TOPPERS AWARD FUNTION. HOPE SALIH KAKA GETTING TIERD AND BUSY, THATSWHY HE DID, NT UPDATE THE PHOTOS OF THIS FUCNTION, INSHALLAH AFTER MY REQUEST HE WILL PUT THIS FUNCTION PICS. WE SHOULD APPRICIATE FOR HIS SOCIAL WORKS.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Edit Comments
posted by vsm ali (kangxi , Jiangmen, China) [29 June 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 5658

மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக பல நல்ல சேவைகள் செய்து வரும் THE KAYAL FIRST TRUST மற்றும் இக்ரா அமைப்புக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

MUTHU ISMAIL காக்கா , comments பகுதி , நம்முடைய எண்ணங்களை சொல்வதற்குத்தான். இப்படி அடிக்கடி " கத்திரி " போட்டால் , Salih காக்காவை , இனிமேல் , " கத்திரி salih காக்கா " னு கூப்பிடனும் போல தோனுது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved