Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:33:22 AM
வெள்ளி | 17 மே 2024 | துல்ஹஜ் 1751, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4112:2003:4106:3507:47
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:48
மறைவு18:29மறைவு01:38
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4305:1005:36
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5219:1819:44
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5919
#KOTW5919
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 4, 2011
தேர்தல் 2011: திமுகவுக்கு வாக்களிப்பது காயல்பட்டினம் மக்களின் கடமை! முஸ்லிம் லீக் பரப்புரை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். உரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4937 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறவிருக்கிறது.

இத்தேர்தலில் காயல்பட்டினம் முஸ்லிம்கள் திமுக-வுக்கு வாக்களிக்க வேண்டியது கடமை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தெரிவித்தார். கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:-

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 13.04.2011 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் 03.04.2011 (நேற்று) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது.



முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மீராஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். நகர துணைச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மீராசா, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நகர துணைச் செயலாளர் என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், காங்கிரஸ் சார்பில் ஷாஜஹான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டாக்டர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் தமிழினியன் ஆகியோர் உரையாற்றினர்.

பின்னர், முஸ்லிம் லீக் மாநில பேச்சாளர் நெல்லை மஜீத் உரையாற்றினார்.

அதிமுகவில் இருந்தபோது, முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே இந்த வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவால் மிரட்டப்பட்டு, அதற்காகவே தான் வகித்து வந்த அமைச்சர் பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு, கட்சியை விட்டும் விலகி, திமுகவில் இணைந்தார். இந்த ஒரே காரணத்திற்காக வேண்டியே இத்தொகுதி முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.



மதச்சார்பற்ற கூட்டணி நிலைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கிடைத்த மூன்றிடங்களில் ஓரிடத்தை விட்டுக்கொடுத்தது முஸ்லிம் லீக். அதைக் கொச்சைப்படுத்த யாருக்கும் அருகதையில்லை.

கலைஞர் ஆட்சியில் அவர் செய்த எத்தனையோ சாதனைகளை சொல்லிச் சொல்லி வாக்கு கேட்கிறோம் நாம்... எதிர்க்கட்சிகள் அவ்வாறு ஏதேனும் சாதனைகளைச் சொல்லிக் காண்பிக்க முடியுமா...?

1952இல் பிச்சைக்காரர்களின் நிலையை எண்ணி கவலையுற்று திரைப்பாடல்களில் அக்கவலையை வெளிப்படுத்தினார். தன் கையில் முதல்வர் என்ற பொறுப்பு வந்ததும் அவர்களின் நலன் காக்கவென்றே ஒரு துறையை உருவாக்கியவர் கலைஞர். அப்பேர்ப்பட்டவரை ஒருமையில் இன்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

அண்ணாவை அறிஞர் அண்ணா என அனைவரும் சொல்லி மகிழ்ந்த அக்காலத்தில் “பேரறிஞர் அண்ணா” என்று அழைத்தார் நம் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத். அவரது பயிற்சிப் பாசறையில் வளர்ந்த நமக்கு இதுபோன்று அநாகரிகமாகவெல்லாம் பேசத் தெரியாது...

இட ஒதுக்கீடு எங்களால்தான் கிடைத்தது என்று அண்மையில் உருவான சில கட்சிகள் கொக்கரிக்கின்றன. இவர்கள் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே நம் முஸ்லிம் லீக் துவங்கிய காலந்தொட்டு அக்கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. அதன் பொன்விழா மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசிய நம் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் ஸாஹிப், “உங்களை விட்டுவிட்டு வேறு யாரிடம் கேட்போம் இட ஒதுக்கீட்டை....? நீங்கள்தான் தர வேண்டும் இட ஒதுக்கீட்டை....!!!” என்று கலைஞரை நேரடியாகப் பார்த்துக் கேட்டது இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...

முஸ்லிமை அமைச்சராக்குவதற்காக நான் முதலமைச்சராகவில்லை என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டும் வகையில், காயல்பட்டினத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவை விட்டும் வேறு கட்சிக்கு மாறி விழக்கூடாது என உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு நெல்லை மஜீத் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார்.

திமுக கூட்டணியை ஏன் நாம் ஆதரிக்க வேண்டும் என்ற தலைப்பின் கீழ் அவரது உரை பின்வருமாறு அமைந்திருந்தது:-

திமுக கூட்டணி அனைத்து பாட்டாளிகள், வன்னியர்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து சமுதாய பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அரிய கூட்டணி. இக்கூட்டணியின் எந்தவொரு கூட்டத்திலும் அனைத்து கூட்டணி கட்சிகளின் அங்கத்தினரும் ஒரே மேடையில் வீற்றிருக்கும் காட்சியை சாதாரணமாகக் காணலாம்.

ஆனால் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் எத்தனை சமுதாயங்கள் அங்கம் வகிக்கின்றன...? அவர்கள் என்றைக்காவது ஒரே மேடையில் அமர்ந்து பேசியதுண்டா...? அது முடியுமா....?

பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைத்து கல்வித்துறையிலும் சிறுபான்மை முஸ்லிம்கள் சிறந்தோங்கும் பொருட்டு நிதியொதுக்கீடு செய்து தந்தவர் கலைஞர்.

முஸ்லிம் மாணவியர் தங்குவதற்காகவென்றே தமிழகத்தில் ஐந்து முக்கிய நகரங்களில் மாணவியர் தங்கும் விடுதி அமைத்துத் தந்தவர் அவர்.



உலமாக்கள் - பணியாளர் நல வாரியம் அமைத்து, இன்று அவர்கள் வாழ்வில் தன்னிறைவு காண வழிவகுத்தவர்... அவர்களுக்கு மிதிவண்டியும் வழங்கியவர்.

வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வருவதையடுத்து, சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை இதுவரை கற்று வந்தோர் தமது கல்வி நிலை பாதிக்கப்படும் என அச்சப்பட்ட நேரத்தில், முஸ்லிம் லீக் கேட்டுக்கொண்டதற்கிணங்க அம்மொழிகளை சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழும் தொடர்ந்து கற்க வாய்ப்பேற்படுத்தித் தந்தவர்...

முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களான கபருஸ்தான்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, ஆண்டுக்கு 20 கபருஸ்தான்களைத் தேர்வு செய்து, ஒரு கபருஸ்தானுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சுற்றுச்சுவர் எழுப்பி பாதுகாத்துத் தந்துகொண்டிருப்பவர் கலைஞர்...

நடுவண் அரசு சிறுபான்மை மக்களுக்கென தனி அமைச்சகம் நிறுவியுள்ளதைப் போல, முதல்வர் கலைஞர் தலைமையிலான மாநில அரசு சிறுபான்மையினருக்கென தனிப்பிரிவை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் சமுதாயத்தை மகிழ்வடையச் செய்துகொண்டிருப்பவர்...

இன்று திமுக கூட்டணியில் பத்து முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அனைவருமே இலகுவாக வெற்றி பெறத்தக்க தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஆக, நம் சமுதாயத்தைச் சார்ந்த பத்து பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகச் செல்வதற்கு வாய்ப்பேற்படுத்தித் தந்தவர் கலைஞர்...

முஸ்லிம்கள் நன்றாகத்தான் உள்ளனர்... அவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன் தேவை? என்று கேள்வியெழுப்பிய, பாபரி மஸ்ஜித் இடிப்பதற்குக் காரணமான கரசேவைக் கும்பலுக்கு ஆதரவளித்த, ராமர் கோயிலை அயோத்தியிலன்றி எங்கு கட்டுவது? என்று ஆதங்கத்துடன் கேட்ட ஜெயலலிதாவை சமுதாயம் தோற்கடிக்க வேண்டும். அதற்கு உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட வேண்டும்...

குறிப்பாக, இந்த காயல்பட்டினம் நகர மக்கள் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டியது கட்டாயக் கடமையெனக் கருத வேண்டும்...


இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.

இறுதியாக தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.

கடந்த இடைத்தேர்தலில் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற பெருங்காரணமாக அமைந்த இந்த காயல்பட்டினம் மக்களை என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்...

இந்நகரின் முக்கிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இரண்டாவது கூட்டுக் குடிநீர்த் திட்டம் முப்பது கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. டெண்டர் விடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால் அதை செய்ய இயலவில்லை. நான் வெற்றிபெற்று, மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானதும் இம்மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தவனாகவே வருவேன்...



மதச்சார்பற்ற தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை நிலைக்கச் செய்திடுவதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனக்குக் கிடைத்த மூன்றில் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வந்தது வாழ்வில் யாரும் எளிதில் மறக்க முடியாத தியாகம்... அதற்கு கைமாறையும் தலைவர் கலைஞர் செய்து தந்துவிட்டார்... இனியும் கைமாறு செய்யக் காத்திருக்கிறார்.

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்களாட்சியை விரும்பாத ஒரு கூட்டம் திட்டமிட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவர்களின் கணிப்புகள் பொய்யென நிரூபிக்கும் வகையில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இந்நகர மக்களுக்கு மட்டுமின்றி, நம் தொகுதியிலுள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் நான் இன்றளவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்... என்னை எந்தச் சமுதாயத்திடமிருந்தும் எதிர்ப்பைப் பெறாதவன்... உங்களுக்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன்... உழைக்கக் காத்திருக்கிறேன்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் செலுத்த உங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.

பரப்புரை கூட்டத்தின் இறுதியாக முஸ்லிம் லீக் நகர துணைச் செயலாளர் எம்.எல்.ஷேக்னாலெப்பை நன்றி கூறினார். மாவட்ட துணைச் செயலாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

கூட்டத்தில் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் செய்திருந்தனர்.





முன்னதாக, நேற்று மாலையில் முகவை சீனி முஹம்மத் நடத்திய முஸ்லிம் லீக் கொள்கை விளக்கப் பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சாம்புராணி புகை எல்லாம் போடாதீர்கள்.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [04 April 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3752

என்னது.... "முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காகவே இந்த வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஜெயலலிதாவால் மிரட்டப்பட்டு, அதற்காகவே தான் வகித்து வந்த அமைச்சர் பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு, கட்சியை விட்டும் விலகி, திமுகவில் இணைந்தார்" சரிதான் .. இதுதான் காரணமா?. சும்மா சாம்புராணி புகை எல்லாம் போடாதீர்கள்.

இருக்கும் வேட்பாளர்களில் தெரிந்தவர், நல்லவர், பழக பண்பாளர், சேவை செய்பவர் என்ற தனிப்பட்ட காரணத்திற்காக அண்ணாச்சி அனிதாவிற்கு ஒட்டு போடுவோமே அல்லாமால்.. சும்மா தேவை இல்லாமல் குழப்பி விடாதீர்கள்.

கலைஞர் அவர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல பக்கங்கள் வந்து விடும், கூடவே அம்மையாரைப் பற்றியும் தான்.யாருமே ஒழுங்கு இல்லைதான்.

அதற்க்குதான் நம் ஒற்றுமை, ஒரே அணி, ஒரே குரல் என்று பாடுபடுகிறோம். இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் நடக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. DON'T MAKE FOOL
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [04 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3756

IUML don't try to make fool by providing wrong information about MR.ANITHA resign and MR.JIYAUDEEN u r 100% correct i fully support and accept ur comments


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மூழ்கும் கப்பல்!
posted by கவிமகன்.எம்.எஸ்.அப்துல் காதர் (துபாய் ) [04 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3757

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்ததனால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அனிதா என்று பேசியது வடிவேல் அல்ல. வெறும்பயல், உளறுகிறான் என்று விட்டு விட்டுப்போக. இப்படி ஒரு பச்சைப்பொய்யை காயல் மண்ணில் விதைத்திருப்பது தாய்ச்சபையின் மாநிலப் பேச்சாளர்.

அரசியல் சுய லாபத்திற்காக, எதையும் சொல்லத் தயங்காத திராவிட கட்சிகளின் வரிசையில் மு.லீக்கும் சேர்ந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. அடக்கஸ்தலங்களைப் பற்றி பேசி இருக்கின்ற மதிப்பிற்குரிய பொதுச்செயலாளர் அவர்கள், " நாய்களுக்கு இடுகாடு! எங்களுக்கு அதுவுமில்லை" என்று அண்மையில், சென்னை முஸ்லிம்களால் கருணாநிதியின் இஸ்லாமிய விரோத ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களை குறித்தும் பேசியிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. good jok
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [04 April 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 3758

Heloo... yankalavaju kamati kemati panalaya...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. IUML
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [04 April 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 3759

It is not the duty of all kayalites to vote for DMK blindly.. but in this election we should vote for providing exclusive reservation.. IUML becomes the minority wing of DMk


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பேச்சு, பேச்சாத்தான் இருக்கனும்.
posted by M.N.L.Mohamed Rafeeq.(Le-MERIDIEN Makkah) (Holy Makkah) [04 April 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3760

hello,,! Yar peasurathu? Mr.kavimagana? naan kaipullai Sanga Thalaivar vadivelu peasurean. aama, yennai paarthu yedho? verum payalnu sonningalame? yenna oru yedakku? yenna oru madakku? yaar kittea? nadakumaa? Tamil nadea thavichu poidumya? veanam, venam.. appuram nan azhuthuruvean. பேச்சு, பேச்சாத்தான் இருக்கனும். நீங்களும் இந்தக் கோட்டைத் தாண்டி வரப்புடாது...! நானும் வர்ர்ர்ரமாட்டேன்! ஆமா!

aang....beep...beep...beep... aahaa..summa oru peachuku thane sonnen udane line ne cut pannittanea.namakedhukku vampu? naame paattuku poiruvom.ஆங்... ஊம்ம்ம்!! அம்ம, அம்ம, யம்ம்மா!

Deai Machan M.S.! ipovum wappade kavithaiyai kalavu yedukiriya? illai suyama yosichu than ezhuthuriya?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அனிதாவை மட்டும் ஆதரிக்கலாம் ஆனால் திமுகவை அல்ல..
posted by shahul (London) [04 April 2011]
IP: 92.*.*.* United Kingdom | Comment Reference Number: 3763

முஸ்லிம்கள் ஏன் திமுக விற்கு ஏன் வாக்கு அளிக்க கூடாது?

கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம்.

குதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்களைக் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர்.

ஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர். காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து. ஆனால் காதியானிகளை விமர்சித்து ஜும்ஆவில் பேசினார்கள் என்பதற் காக மேலப்பாளையத்தைச் சேர்ந்த உலமாக்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தது கலைஞரின் காவல்துறை. இதுமட்டுமின்றி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து மேலப்பாளையத்தில் கடந்த மார்ச் 13 அன்று காதியானிகளின் பொய் முகத்தை கிழிக்க நடத்திய மாநாட்டிற்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைத் தந்ததும் கலைஞர் காவல்துறை தான்.

திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதி’ என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப். அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)

கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார். ‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார். கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.

அனிதாவை மட்டும் ஆதரிக்கலாம் ஆனால் திமுகவை அல்ல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. திமுகவுக்கு வாக்களிப்பது காயல்பட்டினம் மக்களின் கடமை!!!!!!
posted by Cnash (Makkah) [05 April 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3768

ஆமா!!! கண்டிப்பா காயல்பட்னம் முஸ்லிம் மட்டும் இல்லை, அகில உலக முஸ்லிம் மற்றும் சந்திர மண்டலம் வரை இனி வாழ இருக்கும் முஸ்லிம்கள் அனைவர் மீதும் கருணாநிதிக்கு ஓட்டு போடுவது தலையாய கடமை!! ஏன் என்றால் கலீபாக்கள் ஆட்சிக்கு பிறகு கலைஞர் ஆட்சி தானே!!! இஸ்லாத்தின் ஆறாவது கடமை என்று சொல்லாமல் விட்டடாரே !!!

இஸ்லாதை காப்பாத்த தான் நம்ம வேட்பாளர் ADMK லே இருந்து வந்துட்டாராம்!!!! எதோ ஒரு வடிவேல் தான் ஊருக்கு வந்தான் என்று பார்த்தா, வரவங்கலாம் வடிவேலை மிஞ்சி காமெடி பண்ணிட்டு இருக்காங்க !! மர்ஹூம் அப்துல்சமது சொன்னாராம் .....அப்போ ஏன் கடைசிலே ஜெயலலிதா கூட அவர் கூட்டணி வச்சார்?

அனிதா ஊருக்கு நல்லது செஞ்சி இருக்கார் இன்னும் செய்வார் நு நம்பி வோட்டு போடுறோம்!! நீங்க மேடை கெடச்ச உடன் எதை எதையோ பேசி அவருக்கு விழுற வோட்டையும் கெடுத்து விட்டுட்டு போயிடாதீங்க!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. 6வது கடமை
posted by MOOSA NAINA (MADINA) [05 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3770

காயல்பட்டினம் மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும், அரசியல் அறிவு இல்லாதவர்கள் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நினைத்து விட்டார்களா ???

அனிதா எதற்காக A.D.M.K. வை விட்டு போனார் என்று தமிழகம் முழுவதும் நன்கு அறிந்தது. அழகிரியின் மிரட்டலுக்கு பணிந்து தனது சொத்தை காப்பாத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அணி மாறினார். மேலும் தங்களுக்கு வேண்டுமானால் 6வது கடமையாக D.M.K. க்கு ஒட்டு போடுவது முக்கியமாக இருக்கலாம். அதனை அறிவார்ந்த மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லாதீர்கள். கலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த துரோகத்தை பற்றி www.tmmk.in WEB SITE – ல் கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு! -2வது பாகம் என்ற தலைப்பில் வந்துள்ளது. அதனை படித்து சிந்தித்து வாக்களிக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Jayavin Sevai to Kayal - Sent the RSS Police to beat us in 1993
posted by Mohamed Abdul Kader (Al Khobar) (Al Khobar) [05 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3778

Dears

I hope we are kayalites,

We (Muslims) are minority in India, We can not regime India lonely with our votes.

In our States think about the regime & opponent leader.

Who is better for our community?

Jayalalitha or Karunanithi.

Especially Jaya What did to our native?. In 1993 sent the Nagercovil RSS police Troops to beat & arrest our people in the communal problem.

At the same time analyse what Karunanithi did for our native. (Positive or negative).

Weight the both & vote to concern, who one can safe gurard to our native.

According my knowledge why we can not support completly to IUML. This IUML can decide the regime like near state. We have to be unity, integrity & obey the Ledership.

Wasalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழிய வளமுடன்!!
posted by எம்.எஸ்.அப்துல் காதர். (துபாய்) [05 April 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3786

அருமைத் தோழர் MNL ரபீக்! நலம்தானா?

பள்ளிக்கால இலக்கியமன்ற பேச்சுப்போட்டிகளில் உம்மோடு மோதி மோதி தோற்றுப்போன அந்த இனிமையான நினைவுகள் இன்றும் நெஞ்சத்தில் இனிக்கிறது.

சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கின்ற உமது பேச்சுக்களை, எழுத்து வடிவில் காணும்போதும் சந்தோஷம்! சந்தோஷமே!! எனது வாப்பா அவர்கள் சிறந்த கவிஞர் என்பதனால்தான், காயல்பிறைக்கொடியான் அவர்கள் என்னை கவிமகன் என்று அழைத்தார்கள். மற்றபடி, நான் ஒரு கவிஞனே அல்ல! கவிதை இயற்றுவதற்கு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம் அது மூளையினின்றும் முளைப்பதல்ல! இதயத்திலிருந்து எழுவது!!

தொடரட்டும் உமதெழுத்துப்பணி! வாழிய வளமுடன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. மேட்டர மட்டும் தெளிவா சொல்லுங்க
posted by Husain Noorudeen (Abu Dhabi) [05 April 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3790

காதுல பூ சுத்துரத பத்தி கேள்வி பட்டிருக்கோம். ஆனா இங்க என்னடான்னா ஒரு பூங்காட்டையே இல்ல எடுத்து சொருவப்பாக்குறாங்க. அண்ணாச்சி எதுக்கு கட்சி மாறுனாருன்னு எங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். சும்மா உங்க கதையெல்லாம் இங்க சொல்லி விழுற ஓட்டையும் கெடுத்துராதீங்க.

எங்க ஊருக்கு அண்ணாச்சி இது வரை என்ன செஞ்சிருக்காங்க, இப்ப எங்க ஊருல உள்ள பிரச்சினைகளுக்கு என்ன செய்யப்போறாங்க? அத மட்டும் தெளிவா சொல்லுங்க. இது மட்டும்தான் இப்ப இங்க மேட்டர். குவாட்டர் எடுபடாத ஊருல மேட்டர மட்டும் சொல்லுங்க. அது போதும் அண்ணாச்சி ஜெயிக்குரதுக்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Let Mr. Anitha know what we feel
posted by Husain Noorudeen (Abu Dhabi) [05 April 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3791

Dear Kayalpatnam.com administrator,

A humble request to you.

Please arrange to forward the comments that had been posted in various news related to the candidacy of Mr. Anitha Radhakrishnan and other issues related to this. Let him know what we - the people of Kayalpatnam are expecting from him. Let this happen, well ahead of the voting, so that he realizes what we expect from him as an elected MLA of the region.

I would even prefer that he knows about the issue between us - the people of Kayalpatnam standing alongside Kayalpatnam.com and KUMC.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நாய் நடு கடலில் நிண்றாலும் நக்கியே குடிக்கும்.
posted by zubair (riyadh) [06 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3792

அண்பு காயல் சகோதரர்கலே..... இன்கே அபிப்பிராயம் சொல்லி இருக்கும் பலரும் (விவரம் தெரிந்தவர்கள் கூட) நிலை தடுமாறுவதைப் பார்க்குறீர்கள். என்னமோ கருணாநிதி கலீஃபா உமர் (ரலி) என்ற நினைப்பில் பேசுகிறார்கள். இஸ்லாமிய ஆட்சி நடைப்படுத்தாதது ஏன் என்பார்கள் போலும்!!!

அரசியல் சாக்கடை என்பது எல்லோரும் அறிந்ததே. அந்த சாக்கடையில்...... சனியத்துடன் கூட்டு வைத்து இருக்கும் நம்ம ஆட்களின் ஆதரவாலர்களே நிலை தடுமாறி பேசுகிறார்கள். இதுக்கு அது (திமுக) எவ்வளவோ நன்று. முஸ்லீம்களுக்கு நல்லதும்.

ஜெவை பற்றி.... சில முஸ்லீம்கள் கொண்டிருக்கும் பற்று.... காக்கை கண்டறியும். கொக்கு கொண்டறியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. கவிமகனே! வருக..! வருக..!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [06 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3799

என் இனிய நண்பன் கவிமகனே!(எம்.எஸ்.எ) நம் பள்ளிப் பருவத்தில் பட்ட கஷ்ட்டங்களை (ஆசிரியர்கள்) சொல்லி மாளாது. இன்னும் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துள்ளது. உண்மையில் உன் எழுத்தில்(கருத்தில்)ஒர் வகை ஈர்ப்பு தென்பட்டது. ஏதோ நீண்டநாள் பரிச்சயம் தோன்றியது. கவிமகன் எனும் புனைப்பெயரில் வரும் அனைத்துக் கருத்துக்களையும் ஆர்வத்தோடு படித்து மகிழ்வேன். ஓர் முறை எம்.எஸ்.அப்துல் காதர் எனப் பார்த்தபின் கவிமகனைக் கண்டு கொண்டேன்!

உன் தந்தையாரின் சொல்லாற்றல், எழுத்து நடை, கவிதைகள், கட்டுரைகள் இவைகளுக்கு முன் நாமெல்லாம் (உன் பாஷையிலெ சொன்னால்) கைப்புள்ளைங்கதான், அதுலெயும் விரல் சப்பும் கைப்புள்ளைகளே! காயல்பட்டணம் டாட் கமின் மூலம் உன்னைக் கண்டுபிடித்தில் பெரும் மகிழ்ச்சி!!!

மச்சான் செய்தியைப் படிக்கிறாங்களோ? இல்லையோ? இதுலெ வர்ற கனெண்ட்ஸை படிக்கிறதுக்குன்ணு ஒரு கூட்டமே இருக்குடா! நிறைய பேர் நேர்லெயும், ஃபோன்லெயும் பாராட்டுறாங்க! ரெம்ப சந்தோஷமா இருக்கு!

விடைத்தாளில் வெறும் கேள்விகளை மட்டும் எழுதி இரண்டு மார்க் எடுக்குறெ நண்பன் ஐதுரூஸை ரெம்ப மிஸ் பண்ணுறேண்டா! ம்ம்ம் அது ஓர் இனிய கனாக் காலம்! இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பேசுவோம் கமெண்ட்ஸ் வடிவில்... வடிவேல் இல்லை! வடிவில் ஓக்கே! மாஃ ஸலாமா!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. நாம் ஏன் மற்றவர்களிடம் கை ஏந்த வேண்டும்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [06 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3808

நம் தொகுதியில் அனிதாவிற்கு எதிராக போட்டி இடுபவர்கள் மரியாதைக்குரிய காமராஜரோ, கக்கனோ, ஜீவாவோ அல்லது தோழர் நல்லகண்ணோ அல்ல. இப்படி யாராவது இருந்தால் நாம் கருத்து மோதல் பண்ணுவது நல்லது.

ஒன்று மட்டும் நாம் நினைவில் வைத்து கொள்ளனும், இஸ்லாமியர்களை நசுக்குவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஐயாவும், அம்மாவும் நம் சமுதாயத்திற்கு செய்த துரோகங்கள் கொஞ்சம் அல்ல. இருவருமே அடுப்பில் எறிகின்ற நெருப்புதான்.

தற்போது உள்ள தமிழக அரசியலில் எந்த கட்சியும் இந்த இரண்டு கழக ஆதரவு இல்லாமல் கால் பதிக்க முடியாது, ஏன் இந்தியாவை ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட.

என் ஆசை, பிராத்தனை என்ன வென்றால், இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை சீட் கிடைக்காமல்,ம.ம.க - மற்றும் SDPI ஆகிய முஸ்லிம் MLA களின் ஆதரவில் தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை வரனும். அப்படி நம்மிடம் கடிவாளம் வந்த பின் நாம் ஏன் மற்றவர்களிடம் கை ஏந்த வேண்டும்.

ஆகவே, ஏன் நம்மை நாம் கமெண்ட்ஸ் அடித்து வேறு யாருக்கோ வக்காலத்து வாங்க வேண்டும். நம் முஸ்லிம் சகோதரர்கள் வெற்றி பெறவும், அதிகாரத்தில் நமக்கு பங்கு வரவும் இறைவனிடம் கை ஏந்தி பிராத்தித்து, அவர்களின் வெற்றிக்கு பாடுபடுங்கள். இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

அப்புறம், சகோ. ஜுபைர் அவர்களே, "நாய் நடு கடலில் நிண்றாலும் நக்கியே குடிக்கும்" பழமொழி சரியாக அமையவில்லையே. உப்பு தண்ணீரை யாரும் குடிப்பதும் இல்லை,நாய் நக்குவதும் இல்லை... நாடு கடல் என்பதற்கு பதிலாக 'நாடு ஆற்றில்' என்று இருந்தால் சரியாக இருக்குமே.

-என்ன- இரண்டு கவிமகன்களும் ஒன்று சேர்ந்து விட்டீர்களா!! நல்ல்லல பட்டையை கிளப்புங்க..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. குரங்கு கையில் கிடைத்த தேங்காய் பன்னு மாதிரி...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்.(ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [07 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3814

நண்பர் சாளை-ஜியாவுத்தீன் கூறிய கருத்து நல்லா செவுட்லெ அறைஞ்ச மாதிரி இருந்திச்சு! இதுக்குன்ணு மனுஷன் ரூம் போட்டு யோசிப்பாரோ? என்னவோ? ஆணித்தரமான கருத்துக்களை அவருக்கே உரிய பானியில் பதிக்கும்போது ஆழமாக மனதில் பதியத்தான் செய்கிறது! அவரது ஆசை நியாயமானதும்,நிறைவேற்றப் பட வேண்டிதும் கூட!சொன்னது போல யாருக்கும் பெரும்பாண்மையே கிடைக்காமல், குரங்கு கையில் கிடைத்த தேங்காய் பன்னு மாதிரி பிச்சு புடுங்கி கிட்டு பேயாய் அலையணும்! யோசிச்சுப் பார்த்தால் நல்லாதான் இருக்கு!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. கற்றது கையளவு கல்லாதது கடளவு.......
posted by zubair (riyadh) [07 April 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3833

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு ஜியாவுதீன் அவர்களே... நான் குறிப்பிட்டு இருந்தது பழமொழி. கடலை உதாரணம் காட்டுவது உப்பு, தித்திப்பை குறிப்பிட அல்ல.... நாய் என்றாலே சின்னஞ்சிறுசுக்கு கூட தெறியும் நக்கும் என்பது. ஆடு, மாடுகளைப் போல உறிஞ்சி குடிக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved