Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:11:21 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5738
#KOTW5738
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 1, 2011
நாளை பிளஸ் டூ தேர்வு துவக்கம்! தலைமை ஆசிரியர்கள் சிறப்பு பேட்டி!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4098 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாளை தமிழகம் முழுவதும் பிளஸ் டூ அரசு பொது தேர்வுகள் துவங்குகின்றன. இத்தேர்வுகள் மார்ச் 25 அன்று நிறைவுபெறும். காயல்பட்டினத்தில் இருந்து 6 பள்ளிக்கூடங்கள் மூலம் 441 மாணவர்கள் தேர்வுகள் எழுத உள்ளனர்.

பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதும் எல்கே மெட்ரிக் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் உட்பட - 7 பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களின் சிறப்பு பேட்டிகள் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பேட்டிகளில் தலைமை ஆசிரியர்கள் - தேர்வுகளில் மாணவர்கள் வெற்றிபெற நடப்பு ஆண்டில் பள்ளிக்கூடங்கள் மேற்கொண்ட முயற்சிகளை விவரித்துள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Good Luck
posted by Thaika Sahib (Riyadh, KSA) [01 March 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2945

Good Luck to all the Students.

May God succeed you in every exams of your life.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [01 March 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2946

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு மாணவ மணிகளே!

இன்ஷா அல்லாஹ்! நாளை பிளஸ் டூ தேர்வுகள் துவங்குகின்றன, அதற்கு எல்லோரும் தயாராக இருப்பீர்கள்.

மேலோட்டமாக பார்க்க வேண்டியப் பாடங்களையும் , இன்னும் படிக்க வேண்டிய பகுதிகளையும் படபடப்பின்றி படித்து, பயமின்றி உற்சாகமாக , தைரியமாக தேர்வை எழுதுங்கள் எல்லோரும் கூடுதலான மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவீர்கள்.

-------------------------------------------

பெற்றோர்களே!

தேர்வுகள் தொடங்க இருப்பதால் உங்கள் குழந்தைகளின் நலனை கருதி, தயவு செய்து தொலைகாட்சிப் பெட்டியை உபயோகிப்பதையும் ,அவர்களுக்கு சிரமம் தரும் செயல்களையும் செய்யாதிருப்பீர்களாக.

-------------------------------------------

அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களே!

உங்கள் வீட்டில் தேர்வு எழுதக்கூடிய குழந்தைகள் இல்லை என்றாலும் உங்கள் தொலைக்காட்சி பெட்டியின் சவுண்டைக் குறைத்து உபயோகப்படுத்துங்கள்.

அதன் மூலம் அக்கம் பக்கத்தில் உள்ள தேர்வுக்காக படிக்கும் மாணவ மணிகளின் கவனம் சிதறாமல் இருக்கும். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.

----------------------------------------------

பிள்ளைகளே! தேர்வுக்கு படிக்ககூடிய அவசரத்தில் தொழுகையை மறந்து விடாதீர்கள். தொழுகையை அதனதன் நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்.

உங்கள் தேர்வுகள் மிக சுலபமானதாக அமைந்து நீங்கள் எல்லோரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.

அன்புடன், " மஹ்மூது மாமா ".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Dear Parents & Viewers of KPM,
posted by DoFish (Singapore) [01 March 2011]
IP: 12.*.*.* United States | Comment Reference Number: 2947

Wasalam...

Wish you all the best to all the students

Life of the our students are going to be decided in this examinations.

My only advice to viewers of KPM is to sacrifice for our great future leaders by not Tuning your TV.

Hope we pray for good results.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள்........
posted by Sulthan (Sudan) [01 March 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 2949

நமதூர் மாணவ , மாணவிகள் அனைவரும் இந்த தேர்வில் சாதிக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக.

Regards
M.Sulthan(Parimar Street)
Sudan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புல்லரிக்கின்றது..
posted by சாளை. S .I . ஜியாவுதீன் (அல்கோபார் ) [01 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2950

ஐயோ.. நாளைக்கு பிளஸ் டூ தேர்வுகள் ஆரம்பிக்கின்றதா? டென்ஷன் ஆக இருக்குமே! இந்த டென்ஷன் தான் கூடவே கூடாது.

நம் மாணவ/மாணவிகள் அனைவர்களும் நன்கு படித்து பாஸ் ஆகக் கூடியவர்கள் தான், தாங்கள் அதிகம் கஷ்டப்படுவது அதிக மார்க் வாங்குவதற்கு தான் என்று தெரியும். கண்டிப்பாக எடுப்பீர்கள். இன்ஷா அல்லாஹ்.

உங்கள் அனைவர்களுக்கும் என்னுடைய பிராத்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள்.

தெரியும் தானே, மாநிலத்தில் முதலிடம் வருபவர்களின் வீட்டிற்க்கு மாவட்ட கலெக்டர் அவர்களே விருந்துக்கு வருவார்கள், உங்களுக்கும் கூட விருந்து அவர்களின் வீட்டிலும்..அது மட்டுமா.. மேலும் பல பல பரிசுகள், பாராட்டுக்கள்,பேட்டிகள், அப்பப்பா..புல்லரிக்கின்றது..

உங்களுக்கு டென்ஷன் கூடாது என்று சொன்ன எங்களுக்கு அதிக டென்ஷன், நம் ஊர் மாணவ/மாணவி மாநிலத்தில் முதல் இடம் வரனும் என்று.. நடக்கும்.. நடக்கும்.

அன்பு வாழ்த்துக்களுடன்,
சாளை. S .I . ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. All the best...
posted by Nainaysh (Chennai) [01 March 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2951

Assalamu Alaikum,

All the best guys...Ask ALLAH ALONE, he ll respond to all your supplications, Insha Allah. And dont fail to include my sister in all your prayers, she is also facing +12 exam... Thank you...

And your Lord said: “Invoke Me, (i.e. believe in My Oneness (and ask Me for anything) I will respond to your (invocation)...” (Quran: 40: 60)

Let Others Make a Dua For You… Consider this Hadeeth of the prophet (SAWS): The Prophet (saws) said: Whenever you make a supplication for another believer and he is not present, an angel will say ‘and same to you.’

It is very important that you NOT just rely on others to make a Du’a for you. You must ALWAYS ask Allah for yourself and ask Him directly when praying.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. All the Best..
posted by Moahmed Salih (Bangalore) [01 March 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 2952

Dear Students of kayalpatnam.. Pls Follow Mahmood Advice.. its realy good..

MAy allah full fill all your needs and wants.. insha allah..

Dont worry study well and achive the target in state level..

Once again wish u all the best from members of
KWA - Bangalore &
K.K.S Mohamed Salih & Family..
Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. GOOD LUCK
posted by Zackariya Labeeb (vellore) [01 March 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2953

I wish u all the studnts foh attndng the public xamintion especially ma schl guyz........

ALL THE BEST.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ...
posted by SUBHAN (abu dhabi) [01 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2955

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். தேர்வு நெருங்கும் இந்த நாளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். டாக்டர், இன்ஞ்சினியர் கனவுடன், புத்தகமும் கையுமாக உள்ள, உங்களுக்கு இது ஒரு பொன் முட்டையிடும் வாத்து போன்றதொரு காலம். இதை ஒரேடியாக அறுத்து, உங்கள் கனவுகளை தகர்த்து விடாதீர்கள்.

விரல் நுனியில் விபரங்களை வைத்து, கேள்விகளை தொடுக்கும் முன்னே பதிலை அள்ளித்தெளித்து அதிக மதிப்பெண் எடுத்து, தம் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்க காத்துக் கொண்டிருக்கும் கண்மணிகளே, உங்கள் உடல் நலத்தில் முன்பை விட அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கணித பார்முலாக்களை கண்முன் நிறுத்தும் நீங்கள், இனி கண்ணிற்க்கு அதிக நேரம் விழிப்பை தரக்கூடாது. இரவு அதிக நேரம் விழித்து படிப்பதை தவிர்க்கவும். விரைவில் தூங்கி அதிகாலை விரைவில் எழுந்து படியுங்கள். அதிக விழிப்பு உடலுக்கு சோர்வை ஏற்படுத்துவதுடன், மூளையை அதிகமாக சோர்வாக்கி, மெமரி லாஸ் உருவாக்கும். அதிக நேரம் விழிப்பு உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும், மேலும் உடல் செரிமானத்தை குறைக்கும். இதனால் தேர்வுக்கு செல்லும் நாளில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும். ஆகவே, இரவில் அதிக நேரம் விழித்துப் படிப்பதை தவிர்க்கவும்.

இடைவிடாத படிப்பிற்கு இடையிடையே ஓய்வு தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஓய்வு இன்றி படிப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். மன அழுத்தம் உங்கள் லட்சியத்திற்கு தடையாக அமையலாம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் உங்களின் மதிப்பெண்களை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இவ்வேளையில், படிப்பிற்கு இடையே ஓய்வு என்பது ஒரு உற்சாக டானிக்காக அமைந்து உங்களின் இலக்கை சரியானப் பாதையில் எடுத்துச் செல்ல உதவும்.

கனவிலும் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறன் படைத்த மாணவர்களே , தண்ணீர் விசயத்தில் கவனமாக இருக்கவும். கண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். எப்போதும் வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லவும். முடிந்த மட்டும் சுட வைத்து ஆறவைத்த நீரைப் பருகவும் . படிப்பில் ஆர்வம் காட்டும் நீங்கள் தண்ணீர் குடிப்பதை மறந்து விடக்கூடாது.

இரவு படித்து விட்டு புரோட்டா சாப்பிடுவதை தவிர்க்கவும். சாப்பாடு விசயத்தில் கவனமாக இருக்கவும். எளிதில் செரிக்கும் உணவு வகைகளை உண்ணவும். இரவு எட்டு மணிக்கு அல்லது அதற்கு முன் சாப்பிடுவது நலம். பொதுவாக திட ஆகாரத்தை தவிர்க்கவும். அதற்காக சாப்பிடாமல் படிப்பதும் கூடாது. காலையில் உணவு நன்றாக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மார்க் விடைகளை ஒரு நிமிடத்தில் எழுதுவதற்கு கற்றுக் கொள்ளவும். முதலில் ஒரு மதிப்பெண் விடைகளையும், பின்பு இரண்டு மார்க் விடைகளையும், பின்பு ஐந்து மதிப்பெண் அல்லது பத்து மதிப்பெண் விடைகளையும் செய்யவும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கி விடை அழைக்க இப்போது இருந்தே மாதிரி தேர்வுகளில் பழகிக் கொள்ளவும். முதலில் நன்கு தெரிந்த வினாக்களுக்கு பதிலளிக்கவும். பின்பு யோசனை செய்து பிற வினாக்களுக்கு பதிலளிக்கவும். கணிதத்தில் நிருப்பிக்கவும் போன்ற கேள்விகளை தேர்ந்தெடுக்கவும். கணிதத்தில் விதிகள் , தத்துவங்கள் , நிரூபி போன்ற வினாக்கள் தேர்ந்தெடுத்தல் முழு மதிப்பெண்களை பெற்றுத்தரும்.

மாணவர்களே கவனமாக உங்கள் உடல் நலத்தை பேணவும், மன நலம் அதை விட முக்கியம் என்பதால் அதிக விழிப்பு, மற்றும் அதிக நேரம் மனப்பாடம் செய்தல் போன்றவற்றை தவிர்த்து ஓய்வு கொடுத்து படிக்கவும். அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. மிக்க நன்றிகள்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [01 March 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2957

இவ்வளவு நன்றாக அறிவுரை கூறி எழுதும் சகோ. சுபான் அவர்கள் தொடர்ந்து எழுதலாமே. இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தீர்கள்.

நாங்கள் படிக்கும் காலம் இப்படி அறிவுரை கூற ஆட்கள் இல்லையே. நன்கு பரிட்சை எழுத வேண்டும் என்று இரவில் பல புரோட்டக்கள் அடித்து மயக்கத்துடன் பரிட்சை எழுதிய நாட்களை நினைத்தால் சிரிப்பாகத்தான் உள்ளது. அப்படியும் நன்கு எழுதி ஆளானது பெரும் கதை.

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

அன்புடன்
சாளை S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. என் மனமார்ந்த வாழ்த்துகள்...
posted by முத்துவாப்பா.... (al khobar) [01 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2958

+2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இங்கு உங்களுக்காக பல அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது அதை நீங்கள் கடைபிடித்தாலே போதும் வெற்றி நிச்சயம்.

ஜியாவுதீன் காக்கா நீங்கள் புரோட்டோ அடித்து பரீட்சை எழுதிய காரணத்தால் தானோ என்னவோ சமயலிலும் சிறந்து விளங்குகின்றீர்களோ..?

மாணவர்களே சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் ஆகையால் சாப்பிட்டு தெம்பாக பரீட்சை எழுத போங்கள் ஆனால் ஜியாவுதீன் காக்கா சாப்பிட்ட மாதிரி மயக்கம் வர அளவுக்கு சாப்பிட்டு விடதீர்கள்..

என்றும் அன்புடன்
முத்துவாப்பா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. wishes for Kayal +2students
posted by seyed ismail (Jeddah K.S.A.) [01 March 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2972

Dear Kayal all +2students wish you all the best of luck. Allah is with you all, pray well ease your exam tensions and relax your mind and body, take care of your health, be dedicative and sincere in this time which is going to determine your future.

please don't think about cricket or any other TV programmes. I request all the parents and family members of those appearing exams, please don't do anything in home which will tense your son/daughter. ALLAH is kind enough to shower his all blessings to our kayal students in gettibg through exams with remarkable scores.

we are so eagerly waiting to hear the very good news of all Kayal students are passed and also Kayal students have scored State level marks INSHA ALLAH.

I appreciate all teachers and school managements for their eforts and pain they delivered and you all will be rewarded by results given by your students.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. piraarththanai
posted by sithi katheeja (kayalpatnam) [02 March 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 2973

தேர்வு எழுதும் அன்பு கண்மணிகளே1 நீங்கள் அனைவரும் அதிகமான மதிப்பெண்களுடன் வெற்றி பெற இறைவனிடம் இரு கரமேந்தி பிரார்த்திக்கின்றேன் அல்லாஹ் கபூல் செய்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. வாழ்த்துக்கள்
posted by vsm ali (kangxi, jiangmen , china) [02 March 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 2979

தேர்வு எழுதும் அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் , என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் துஆ என்றென்றும் உண்டு. இன்ஷா அல்லாஹ், இந்த முறை நமது மாணவ கண்மணி ஒருவரின் வீட்டிற்கு நமது மாவட்ட ஆட்சியர் உணவருந்த வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ADVICE AND ALL THE BEST
posted by MOHIDEEN ABDUL KADER (KAYALPATNAM) [02 March 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2982

ASSALAMU ALAIKKUM.VARAH.

Advanced congrajulation and all the best to both public exam students of Great kayalpatnam.

SOME ADVICE:

1. Pls first 2minits pray well before start question,read all question very carefully and tick which one konwn very well and easy for time consuming.

2. Very importantly dont imagine or expect any particuler question or lession or unit from any subjects only will come to the exam and be pared for any and all.

3. If any out of subject or un expected question come means dont pannic [like last year maths exam in the +2] and start to write without thinking of unexpected one write imediately to wellknown question and finaly come to unexpected one.

4. before start answer pls make box, important area have to under line, write paragraph by paragaraph, final result and farmula have to boxed and cross check all answer before handing over your paper.

5.If any out of sylabus question come means, atleast write its question number u can get full marks.

Allah will help our all kayal students will get good result with state topper award. aameen.

Kind information to N.S.E.MAHAMOOD KAKA.

This is mohideen abdul kader from FEDERAL NATIONAL COUNCIL,Abudhabi and when i was in SOMC, met you at onaizah, K.S.A. King Saud Hospital in the Samama of your concern.pls, can u send ur mobile no of kayal & k.s.a. to 00971 50 413 23 08.

vassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அனைவரும் வெற்றிபெற துஆக்கள்
posted by moulavi,hafil m.s,kaja mohideen.mahlari. (singapore.) [02 March 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 2983

"பிளஸ் டூ" எழுத இருக்கும் அணைத்து மாணவ,மாணவியர்களுக்கும் எனது துஆக்களும்,வாழ்த்துக்களும்.அஸ்ஸலாமு அலைக்கும். அன்புள்ள மாணவ, மாணவியர்களே! எப்போதும் தொழுகை,திக்ர்,குரான் திலாவத், தவ்பாஹ்,தஸ்பீஹு,சலவாத்,சதக்கா , துஆ போன்ற இபாதத்களில் ஈடு பட்டு வருவதோடு ,இந்த தேர்வு காலங்களில் கூடுதலாக இன்னும் அதிகமாக ஈடு பட்டு வாருங்கள்.அதனால் இறைவனின் அன்பும்,அருளும் கிடைத்து,தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும்.சில மாணவர்கள் தேர்வு காலங்களில் அதிகமாக இபாதத்களில் ஈடுபடுவதும், ஐங்கால தொழுகை இமாம் ஜமாத்தில் ஈடுபட்டு,பிறகு தேர்வு முடிவுகள் எல்லாம் வந்த பிறகு பள்ளி வாசல் பக்கமே தலை காட்டாமல் தலைமறைவாகிவிடுவது போன்ற நடைமுறைகள் வுடையவர்களாக பார்க்கிறோம்.இம்முறைகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இவைகளின் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். இதனின் நஷ்டங்கள் நமக்கே அன்றி நாயனுக்கு இல்லை.எனவே ! தேர்வுக்கு நன்றாக பாடங்களை படிப்பதுடன் ,தேர்வு துவங்குவதற்கு முன்பு "سُبحَانَكَ لآ عِلمَ لَنَا اِلا مًا عًلمتَنَا اِنكَ என்ற ஆயத்தை 40 தடவை ஓதி தேர்வை எழுத துவங்கினால் இன்ஷாஅல்லாஹ் தேர்வில் வெற்றி கிடைக்கும்.இந்த முறையை எங்களின் ஆசிரியர்கள் எங்களுக்கு சொல்லி தந்தவை.இதன் மூலம் பலர் பலன் அடைந்துள்ளார்கள்.நீங்களும் முயற்சித்து பாருங்கள்.ஒரு விஷயம் இதனை பாடமிட்டுக் கொள்ளுங்கள்.பிட்டில் எழுதி எடுத்து "பரீட்சை ஹாலுக்கு"சென்றுவிடாதீர்கள்.கவனம்.எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அல்லாஹ் தாலா வுங்கள் அனைவருக்கும் வெற்றியை தந்தருளி ,மென்மேலும் கல்வியில்,பட்டப்படிப்பில் சிறந்தோங்க பேரருள் புரிவானாக!ஆமீன்!வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved