Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:19:44 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5513
#KOTW5513
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 20, 2011
வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிகள்-2011! அணி அனுசரணையாளர்கள் வரவேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3818 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விளையாட்டுத் துறை மூலம் நகரை அய்க்கியப்படுத்தும் முயற்சியின் கீழ், வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிகள் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC) மற்றும் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானங்களில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டுக்கான கால்பந்து மற்றும் க்ரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இவ்வாண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்களுக்கான அனுசரணை வரவேற்கப்படுவதாக வி-யுனைட்டெட் குழுமம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

வி யுனைட்டெட் கே.பி.எல். - ஓர் அறிமுகம்:

வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் என்பது Indian Premiere League - IPL அமைப்பை ஒத்தது. கால்பந்துக்கு பன்னிரண்டு அணிகளும், க்ரிக்கெட்டுக்கு எட்டு அணிகளும் இந்த லீக் போட்டியின் துவக்கத்தில் போட்டியிடும். 2011ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் லீக் போட்டிகள் துவங்கும். சுற்றுப்போட்டிகள் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் (U.S.C.) மற்றும் Kayal Sporting Club (K.S.C.) மைதானங்களில் நடைபெறும். இச்சுற்றுப் போட்டியின் முக்கிய நோக்கமே, நகரின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள விளையாட்டு வீரர்களை, கே.பி.எல். சுற்றுப்போட்டியின் கீழ் இணைந்து விளையாடச் செய்வதேயாகும்.

போட்டி அமைப்பு:

கால்பந்து சுற்றுப்போட்டியில் இடம்பெறும் பன்னிரண்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தத்தம் பிரிவிலுள்ள இதர ஐந்து அணிகளுடன் ஒவ்வோர் அணியும் ஒருமுறை துவக்கத்தில் மோதும். எட்டு அணிகளைக் கொண்ட க்ரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை துவக்கத்தில் மோதும்.

அவ்வாறு மோதும் அணிகள் பெறும் வெற்றிப் புள்ளிகளின் அடிப்படையில், முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். புள்ளிகள் பட்டியலின்படி, ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்படும்.

போட்டி சம நிலையில் முடிந்தால், அதில் மோதிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இவ்வாறாக, கால்பந்து சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டி உட்பட ஓரணிக்கு 7 போட்டிகள் இருக்கும். அதுபோல க்ரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி உட்பட ஓரணிக்கு 9 போட்டிகள் இருக்கும். கால்பந்து போட்டிக்கு 25 நிமிடங்களும், க்ரிக்கெட் போட்டிக்கு 10 ஓவர்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மற்றும் க்ரிக்கெட் போட்டிகளில் அணியொன்றுக்கு 9 வீரர்கள் விளையாடுவர்.

பரிசுகள்:

இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பதினைந்தாயிரம் ரூபாய் (ரூ.15,000/-) பணப்பரிசும், சுழற்கேடயமும் வழங்கப்படும். வெற்றிக்கு முனைந்த அணிக்கு பத்தாயிரம் ரூபாய் (ரூ.10,000/-) பணப்பரிசும் வழங்கப்படும். மூன்றாம், நான்காமிடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா மூவாயிரம் ரூபாய் (ரூ.3,000/-) வழங்கப்படும்.

அணிகள்:

இச்சுற்றுப் போட்டியில் அங்கம் வகிக்க ஆர்வப்படுவோர் உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் அணிகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஓர் அணிக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.14,000 தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உடையமைப்பு:

இந்த சுற்றுப்போட்டியை மெருகூட்டும் வகையில், IPL அமைப்பு முறைப்படி அணிகளுக்கான ஜெர்ஸி உடைகள் வடிவமைக்கப்படும். அணிகளுக்கான அணுசரணையாளர்கள் மற்றும் அணியின் இலச்சினை ஆகியன அந்த ஜெர்ஸி உடையில் அச்சிடப்பட்டிருக்கும்.

ஏலம்:

இச்சுற்றுப் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வப்படும் அணி உரிமையாளர்களுக்காக வீரர்களை ஏலம் விடுவர். தனதணியில் ஒரு வீரரை விளையாடச் செய்யும் பொருட்டு அணி உரிமையாளர்கள் வீரர்களை ஏலம் எடுக்கலாம். கூடுதல் தொகைக்கு ஏலம் எடுப்பவர் அந்த வீரரைப் பெற்றுக்கொள்வார்.

செலவினமும், நன்மைகளும்:

ஓர் அணிக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.14,000/- தொகை மட்டும் பெறப்படும். சுழற்கேடயம், அலுவலர்களுக்கான ஊக்கத்தொகை, விளம்பரம் மற்றும் ஏற்படும் இதர செலவினங்களுக்காக இத்தொகை செலவழிக்கப்படும். விளம்பர அனுசரணையாளர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டால், பரிசுத்தொகை அதிகரிக்கப்படும்.

ஓரணியின் உரிமையாளர் ரூ.14,000.00 தொகை செலுத்தினால், தமதணி வீரர்களுக்கான செலவினங்களுக்காக போட்டி ஏற்பாட்டாளர்கள் அத்தொகையில் ரூ.4,000 தொகையை உரிமையாளர்களிடம் திரும்பத் தருவர். 12 செட் ஜெர்ஸி உடை ஏற்பாட்டுக்காக ரூ.4,000 தொகை செலவழிக்கப்படும்.

ஆக, தமதணியை போட்டியில் இடம்பெறச் செய்வதற்காக ஓர் உரிமையாளர் செலவிடுவது ரூ.6,000 மட்டுமே! அவரது அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணிக்காக செலவழித்துள்ள ரூ.6,000 தொகை போக அவர் ரூ.9,000 தொகையை லாபமாகப் பெற்றுக் கொள்வார். அவரது அணி இறுதிப்போட்டியில் வெற்றிக்கு முனைந்த (இரண்டாமிடம் பெறும்) அணியானால், அவர் அந்த அணிக்காக செலவழித்துள்ள ரூ.6,000 தொகை போக ரூ.4,000 தொகையை லாபமாகப் பெற்றுக் கொள்வார். மூன்றாம், நான்காமிடங்களைப் பெறும் அணிகளின் உரிமையாளர்கள் இழப்பது வெறும் ரூ.3,000 தொகை மட்டுமே! அதுபோல, அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிவாய்ப்பை இழக்கும் அணிகளின் மொத்த இழப்பு ரூ.6,000 தொகை மட்டுமே!

நடைமுறை சாத்தியம்:

முதலாவதும், மிக முக்கியமானதுமாக மக்களின் மனதில் பதியச் செய்யப்படும் சிந்தனை என்னவெனில், ஒரு க்ளப்புக்கு (அணிக்கு) உரிமையாளராக யார் வேண்டுமானாலும் முன்வரலாம். அதுபற்றி சிறிது பார்ப்போம்:-

(அ) இதுபோன்ற விமரிசையான ஏற்பாடுகளைக் கொண்ட விளையாட்டு சுற்றுப் போட்டியில் அங்கம் வகிப்பதற்காக ரூ.6,000 மட்டும் செலவழிப்பதென்பது ஒரு பாரமான காரியமல்ல.

(ஆ) நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள நம் சமுதாயம் உலகளாவிய அளவில் பல்கிப் பரவியுள்ளது. எனவே, நமதூரிலிருந்து உலகம் முழுக்க வசித்து வரும் விளையாட்டு ஆர்வலர்கள் இதுபோன்ற வித்தியாசமான முனைப்புகளில் ஈடுபடுவதற்கு இச்சுற்றுப் போட்டி ஒரு களமாக இருக்கும்.

(இ) உள்ளூரிலிருந்து சிந்தித்து, உலகளாவிய அளவில் அச்சிந்தனையைப் பரவச் செய்வதாகும் இது.

நிகழ்வை மேம்படுத்தல்:

நமதூரிலிருந்து பல திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர். அதுபோல, வித்தியாசமான சிந்தனைகள் கொண்ட பல வணிகர்களும் கூட அதுபோன்று வியாபித்துள்ளனர். இப்படிப்பட்ட மக்கள் குழுவை ஒருங்கிணைக்கும் ஒரு காரணியாக இச்சுற்றுப்போட்டி நிச்சயம் அமையும். இவர்கள் கை கோர்த்தால் இந்த போட்டியமைப்புக்கு வலிமைக்கு மேல் வலிமை சேரும்.

கவர்ச்சி மற்றும் புகழ்:

ஆர்வமூட்டும் விமரிசையான விளையாட்டு ஏற்பாடுகள், வீரர்களுக்கு வண்ணமயமான ஜெர்ஸி உடைகள் என இவையனைத்தும் இச்சுற்றுப் போட்டியை மணம் கமழச் செய்வதோடு, இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஆர்வத்தையும் பெற்றிடும். வி-யுனைட்டெட் கே.பி.எல். குறித்த மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்க:-

திரு. ஃபைஸல் - +852 9754 0095
மின்னஞ்சல்: info@vunited.org


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் ஆங்கில வடிவம் பின்வருமாறு:-

V united KPL = an Introduction

V-united Kayal Premier League is a concept on the lines of IPL. There would be Twelve teams for Football & Eight Teams for Cricket competing in the initial stage. It would be inaugurated in May or June 2011. Tournaments would be conducted in The U.S.C. and The K.S.C. The main purpose of this endeavour is to allow players from different areas play together with each other under KPL event.

Format

The Twelve teams for Football in the league divided into two groups would compete against each other facing once and Eight Teams for Cricket would compete against each other facing once.The format would be League Table format with the highest two teams facing one another in the final. A win in a match would be a 3 Points on the Table. If Draw then the both team will get each one points. There would be a total of 7 Matches including the final for each team of Football and 9 Matches including the final for each team of Cricket.25 min each side for football & 10 over each side for cricket & 9 players play in each team both football & cricket

Prizes

The Winner would be Awarded Rs. 15,000.00; The Runner takes home Rs. 10,000.00, the Third & Fourth Runners would be awarded Rs. 3,000 & Rs. 3,000 respectively. The winner would be awarded a Rolling Trophy.

The Teams

Teams could be taken by interested parties around the world. An enrolment fee of Rs. 14,000 is determined.

The Outfits

The Team Jerseys would be modelled in line with IPL concept to promote this league. Sponsors & each team logo will be printed in the Jerseys

Auction

The Organisers will facilitate an auction where the interested team owners would be in a position to provide a bid for the player willing to play for their team. The highest bidder would get the player.

Budget & Benefits

An entry fee of Rs. 14,000.00 would be collected. This would be utilized towards the Trophy, Officials’ remuneration, Advertisement and other incidental/miscellaneous expenditures. We would enhance the prize money, if we get advertising sponsors.

If a franchisee owner pays Rs. 14,000.00, the organisers will give back Rs. 4,000.00 to spend on players. and is being provided with 12 sets of outfits (Jerseys) worth Rs. 4,000.00 In fact he practically spends only Rs. 6,000.00. If his team wins, he is paid Rs. 6,000.00 which translates to a profit of Rs. 9,000.00. If his team is the Runner up, he is paid Rs. 6,000.00, which effectively earns Rs. 4,000.00. The team in third & Fourth place they lose only Rs 3,000.00. If his team loses all the matches, his total loss would not be more than Rs.6,000.00.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. i like IPL
posted by N.MOHAMED ABDUL KADER (sri lanka) [20 January 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 2363

insha allah..........success this tournament. wish and my help every IPL tropy


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved