Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:48:56 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5143
#KOTW5143
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 29, 2010
புற்று நோய் சம்பந்தமாக கே.எம்.டி. மருத்துவமனையில் ஆலோசனை கூட்டம் நடந்தது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4097 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகரில் பெருகிவரும் புற்று நோய் சம்பந்தமாக நேற்று (நவம்பர் 28) ஞாயிறு மாலை - 5 மணி அளவில் கே.எம்.டி. மருத்துவமனையில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை செய்திருந்தது.

கூட்டத்திற்கு ஹாஜி எஸ்.எம். மிஸ்கீன் சாஹிப் பாஸி தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எம்.உவைஸ், ஹாஜி வாவு செய்யிது அப்துர் ரஹ்மான், ஹாஜி எஸ்.எம்.கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர். இஸ்ஹாக் கிராஅத் ஓதி நிகழ்வுகளை துவக்கி வைத்தார். ஹாஜி வாவு முஹம்மது நாசர் வரவேற்புரைக்குப்பின், எம்.எல். ஷாகுல் ஹமீது (SK) அறிமுகவுரை நிகழ்த்தினார்.



நிகழ்ச்சியல் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கிய மருத்துவர்கள் வருமாறு:-

(1) டாக்டர் எம்.எஸ்.எஸ். இஸ்மாயில்
(2) டாக்டர் எம்.ஏ.முஹம்மது தம்பி
(3) டாக்டர் அபுல் ஹசன்
(4) டாக்டர் வீ. பாவநாச குமார்
(5) டாக்டர் முஹம்மது மொஹிதீன்
(6) டாக்டர் முஹம்மது அபூபக்கர்
(7) டாக்டர் நூஹு பாரிஸ்
(8) டாக்டர் பாசி



அவ்வேளையில் மருத்தவர்கள் தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் வருமாறு:-

== புற்று நோய்கள் பெருக மரபணுக்கள் (Genes), உணவு பழக்கங்கள், கிருமிகள், சுகாதார சீர்கேடுகள் போன்றவை காரணமாக இருக்கலாம். DCW, மொபைல் டவர்கள் தான் காரணம் என்று ஆதாரங்கள் இல்லாமல் சொல்ல முடியாது

== முதல் கட்டமாக Cancer Registry மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். உலகளவிலான புற்று நோய் மையங்கள் வகுத்துள்ள அடிப்படை எண்ணிக்கைக்கு கூடுதலாக நகரில் புற்று நோய் உள்ளதா என்பதை அதன் அடிப்படையில் உறுதி படுத்த வேண்டும்

== காற்று, நிலம் மற்றும் நீரினை மாசு பரிசோதனை செய்யவேண்டும்

== அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதன் மூலமும், சமையலுக்கு ஒரே எண்ணையை பலமுறை பயன்படுத்துவதன் மூலமும் புற்று நோய் வர வாய்ப்புகள் கூடுகின்றன

மருத்துவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு அடுத்து, நகர் நல அமைப்புகள், ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு விரிவான ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றும், அதனை தொடர்ந்து மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

நன்றியுரையினை ஹாஜி செய்யத் முஹம்மது அலி வழங்கினர். ஹாஜி எஸ்.டி. புஹாரியின் துஆவிற்கு பின்னர் கூட்டம் மாலை 6:30 மணிக்கு நிறைவுற்றது.





ஹாஜி நூஹு, ஹாஜி பிரபு சுல்தான், ஹாஜி சதக்கத்துல்லாஹ், ஹாஜி டி.ஏ.எஸ்.அபூபக்கர், ஹாஜி வாவு அப்துல் கப்பார், ஹாஜி வட்டம் ஹசன் மரைக்கார், ஹாஜி பிரபு தம்பி, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், முத்து ஹாஜி, ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மது, எல்.எம்.ஈ. கைலானி, மஹ்மூத் நைனா, பி.எம்.டி.அப்துல் காதர், எஸ்.ஏ.கே. முஹைதீன் அப்துல் காதர், எஸ்.ஏ.கே.பாவா நவாஸ், மெஹர் அலி, பாதுல் அஹ்சாப் ஆலிம், எல்.டி.அஹ்மத் முஹைதீன், வீ.எஸ். முஹைதீன் தம்பி மற்றும் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தகவல்:
ஏ.தர்வேஷ் முஹம்மத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பாதி பயம் போய் விட்டது!
posted by N.S.E. மஹ்மூது (y) [29 November 2010]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1316

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

கூட்டம் நடைபெற்று முதல் கட்டமாக , கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டது நம்பிக்கையை அளிக்கிறது.

இதன் பின் நடக்க இருக்கும் மருத்துவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நகர் நல அமைப்புகள், ஆர்வலர்கள் அழைக்கப்பட்டு விரிவான ஆலோசனை கூட்டம் விரைவில் நடக்க இருப்பதையும் அறியும்போது பாதி பயம் போய் விட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

இன்ஷா அல்லாஹ் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கையை தீர்மானித்து செயலில் இறங்கிவிட்டால் முழுபயமும், ஏன் அல்லாஹ் உதவியால் நோயும் நம்மை விட்டு போய்விடும்.

அனைவர்களும் ஒற்றுமையாக, ஒரு குடையின் கீழ் இருந்து செயல் படுவோமாக. அல்லாஹ்வும் துணை புரிவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நீரினை மாசு பரிசோதனை செய்யவேண்டும்
posted by Muthu Magdoom VSH (Jeddah) [29 November 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1318

(காற்று, நிலம் மற்றும் நீரினை மாசு பரிசோதனை செய்யவேண்டும்.)

DCW & Mobile Towers தான் பிரச்சனை என்றால் நம் பக்கத்து ஊர்களிலும் இப்பிரச்சனை உள்ளதா?

"நம் நகராட்சியின் குடிநீர் சேமிப்பு தொட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறதா? அவை சுத்தமாகத்தான் உள்ளதா???."

நடவடிக்கை எடுப்பது யார்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Action Committee
posted by Adam Abulhasan (Riyadh, Saudi Arabia) [29 November 2010]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 1319

கூட்டம் சிறப்பாக நடந்தேரியாமைக்கு எங்களது நன்றி. அதை தொடர்ந்து உள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிக துரிதமாக அதாவது காற்று, நிலம் மற்றும் நீரினை மாசு பரிசோதனை செய்யவேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். அதற்கான ஒரு குழுவை (Action Committee) உடனே முடிவு செய்வது இத்தருணத்தில் சாலச்சிறந்தது ஆகும். இந்த முயற்சிக்கு வெளி நாட்டில் வாழும் நாங்கள் எந்த விதமான உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளோம். வல்ல அல்லாஹ் நமதூர் மக்களை எல்லா நோய்களில் இருந்தும் காப்பாததுவனாாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விழிப்புணர்வு துவங்கி இரண்டாண்டுகளாகிறது!
posted by Kavimagan Kader (Dubai, U.A.E.) [29 November 2010]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 1320

அன்பிற்கினிய காயலர்களே...! நமதூரில் புற்றுநோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி துவங்கி இரண்டாண்டுகளாகின்றன.

நமது நகர பெரியவர்கள் மற்றும் மருத்துவர்களால் நமது கே.எம்.டி.மருத்துவமனையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அந்த விழிப்புணர்வு முயற்சியின் தொடர்ச்சி என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், அமீரக காயல் நல மன்றம், ஜித்தா காயல் நற்பணி மன்றம், சிங்கப்பூர் காயல் நல மன்றம், பஹ்ரைன் காயல் நல மன்றம் (பக்வா), குவைத் காயல் நல மன்றம் ஆகிய உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து கடந்த 27.07.2009 அன்று காயல்பட்டினம் ஜலாலிய்யாஹ் நிக்காஹ் மஜ்லிஸில் புற்றுநோய் குறித்த மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கம் கத்தர் காயல் நல மன்றங்களின் சார்பில் நடத்தப்பட்டுள்ளது.

பார்க்க:
http://kayalpatnam.com/shownews.asp?id=3356

அதனைத் தொடர்ந்து இதே மன்றங்களின் உறுதுணையுடன் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான காயலர்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு, பெண்களுக்கான கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி சலுகைக்கட்டண அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

பார்க்க:
http://kayalpatnam.com/shownews.asp?id=3368

காயல்பட்டினத்திலுள்ள உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பொதுமக்கள் - குறிப்பாக தாய்மாரின் புற்றுநோய் குறித்த சந்தேகங்களுக்கு நீண்ட - தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பார்க்க:
http://kayalpatnam.com/shownews.asp?id=3371

அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

பார்க்க:
http://kayalpatnam.com/shownews.asp?id=3372

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் காயல்பட்டினத்தை கர்ப்பப்பைவாய் புற்றுநோயிலிருந்து முழுமையான விடுதலை பெற்ற நகரமாக்குவதற்கான செயல்திட்டத்துடன் நமது கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பார்க்க:
http://kayalpatnam.com/shownews.asp?id=3387

பின்னர் புற்றுநோய் குறித்து பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பார்க்க:
http://kayalpatnam.com/shownews.asp?id=3690

அடுத்து, இந்த 2010ஆம் ஆண்டில், இரண்டாமாண்டாக புற்றுநோய் பரிசோதனை முகாம் மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்கள் கே.எம்.டி. மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளன.

பார்க்க:
http://kayalpatnam.com/shownews.asp?id=4413

மேற்சொன்ன நிகழ்ச்சிகளில், புற்றுநோய் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? அதற்கான காரணங்கள் என்னென்ன என்பன குறித்து திருச்சியிலுள்ள ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்தின் மூலம் அதன் தலைமை மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜனின் தன்னிகரற்ற சேவை மனப்பான்மையுடன் கூடிய மருத்துவக் குழுவினர் இணைந்து விளக்கங்கள் அளித்து, மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஒரு முகாமில் 12 நபர்களுக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு, துவக்கத்திலேயே தடுப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு இன்று அவர்கள் இறையருளால் நலமுடன் உள்ளதால், அவர்களின் பல லட்சம் ரூபாய் பணம், அவர்களது உடல் ஆரோக்கியம், நேரம், உழைப்பு உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உலக காயலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வருடத்திற்கு ஒரு முகாம் நடத்தப்பட்ட நிலையில் 12 பேருக்கு புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்படுகிறதென்றால், இதுவே வருடத்திற்கு குறைந்தது 4 முகாம்கள் நடத்தப்பட்டால், 50 பேருக்காவது புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு ஏற்படும் என்பதையும், இதனால் பல லட்சம் ரூபாய் தொகை மருத்துவ உதவித்தொகையாக காயல் நல மன்றங்கள் அளிக்க வேண்டிய நிலை இல்லாமலாகும் என்பதை மிக முக்கியமாக அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிகப் பெரிய அளவில் - பல லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தாலும், இந்நிகழ்ச்சிகளை நடத்திய காயல் நல மன்றத்தினர் தவிர்த்து, உள்ளூரிலிருந்து அவற்றை ஒருங்கிணைத்தவர்கள், கே.ஜே.ஷாஹுல் ஹமீத் (காயிதேமில்லத் சங்கம்), தர்வேஷ் முஹம்மத் (இக்ராஃ கல்விச் சங்கம்), எஸ்.கே.ஸாலிஹ் (தாருத்திப்யான் நெட்வர்க்), எம்.எஸ்.ஸாலிஹ் (காயல்பட்டினம்.காம் அட்மின்), எஸ்.அப்துல் வாஹித் (ஐ.ஐ.எம். டிவி) ஆகியோர் உள்ளிட்ட ஒரு சில காயலர்கள் மட்டுமே...! (அப்போது சகோ. அப்துல் வாஹித் மோட்டார் பைக் விபத்தில், பலத்த காயமுற்றிருந்த நிலையிலும் கலந்துகொண்டு உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கத்தர் காயல் நல மன்றத்தின் நிர்வாகிகளான நாங்கள் அன்று பல காயலர்களை உறுதுணைக்காக எதிர்பார்த்து ஏமாற்றம் மட்டுமே எங்களுக்கு மிஞ்சியபோதிலும், இந்நிகழ்ச்சிகள் நடந்தேறிய பின்னர் நகரில் உருவான விழிப்புணர்வு எங்களது மனச்சோர்வுகளை மறக்கடித்தது என்றால் அது மிகையாகாது.

புற்றுநோயை நமதூரிலிருந்து முற்றிலும் அகற்றிடும் பொருட்டு உலக காயல் நல மன்றங்களுடன் இணைந்து இன்னும் பல செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

எனவே, எடுக்கப்படும் முயற்சிகள் ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளாக அமைந்தால் மட்டுமே அதன் பலன் முழுமையாக இருக்கும் என்பது எனது பணிவான கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. prevention is better than cure
posted by hyder (colombo) [29 November 2010]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1321

PLEASE FIND THE ROOT CAUSE OF PROBLEM WHICH IS AFFECTING MOST OF OUR KAYALITES RECENTLY. I WOULD ALSO SUGGEST THAT WE SHOULD TAKE A SAMPLE OF OIL WHICH IS USED IN MOST OF THE SWEET SHOPS AND HOTELS AND SEND TO THE LAB FOR TESTING.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. plz involve politicians in this!!
posted by FSK (United Kingdom) [30 November 2010]
IP: 188.*.*.* United Kingdom | Comment Reference Number: 1332

happy to see our unity in diversity :) .. please involve the politicians they may support adopting our town in some of their health schemes, that will provide continuous support in these assessments, treatments etc., thanks for all who actively involving them in these awareness programmes. but if you use women volunteers in these assessments the results may be much accurate since our men wont approach ladies.. conduct one to one scheduled interviews instead of asking them to fill in the forms etc.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. CANCER CAUSE
posted by RAFEEKBUHARY (Colombo) [30 November 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 1345

Please stop further discussions. Let us get into ACTION.Find the Root Cause.Then let's take Precaution,Treatment


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Cancer Prevention
posted by A S Hameed (Canada) [01 December 2010]
IP: 66.*.*.* Canada | Comment Reference Number: 1350

Please have a thought in the meat shops which are on the road side.

Vehicle pollution might cause the meat to get polluted. So causing the cancer.

Various Food quality Audits in and around the consumable shops should be conducted to prevent these diseases.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Cancer Checking Centre
posted by Shaik (Chennai) [01 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1353

Dear Brothers Assalamu Alaikum,

Every one Saying early identification can cure cancer.

So why not we can have a permanent cancer identification unit in our kmt?

Plz consider this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. cancer
posted by DR MOHAMED KIZHAR (kpm) [03 December 2010]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 1389

first, high risk category person must be identified.. say ex.. family history of cancer, smoking habit, hepatitis B infection....

early screening of cancer such as. BREAST SELF EXAMINATION BY LADIES THEMSELVES TO FIND ANY ABNORMAL MASS IN BREAST , PAP SMEAR FOR CERVICAL CNACER,ABNORMAL BLEEDING FROM ANY SITE, UNUSUAL LOSS OF WEIGHT WITHOUT OTHER REASON,LOSS OF APPETITE WITHOUR KNOWN CAUSE, SWELLING ANY WHERE IN THE BODY WHICH IS HARD, IRREGULAR AND BLEEDS,PROLONGED INTENSIVE HEADACHE WITH EARLY MORNING VOMITING,PRESENCE OF MULTIPLE NODES IN THE BODY WHICH IS HARD, DIFFICULTU IN SWALLOWING WITH BLOOD STAINED VOMITING... THESE R FEW SIGN, MAY NOT BE CANCER BUT SHOULD ALARM ABOURT POSSIBLKITY OF CANCER


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved