சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவரும், தற்போது ஹாங்காங் நாட்டில் பணியாற்றி வருபவருமான எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் உடைய தந்தை – காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த எஸ்.எல்.முஹம்மத் நூஹ் (யான்பு), 14.04.2020. செவ்வாய்க்கிழமையன்று 19.00 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் நகரில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,
மர்ஹூம் சுல்தான் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும்,
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,
சஊதி அரபிய்யா யான்பு நகரில் பணிபுரியும் எம்.என்.சுல்தான் அப்துல் காதிர், ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவரும் – தற்போது ஹாங்காங்கில் பணிபுரிந்து வருபவருமான எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, 16.04.2020. வியாழக்கிழமையன்று 22.30 மணியளவில் சம்பல் நகரிலுள்ள பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
|