Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:29:06 PM
திங்கள் | 4 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1922, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0715:2818:0219:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:14
மறைவு17:55மறைவு20:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20371
#KOTW20371
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 9, 2018
மக்கள் பணியில் இருபது வருடங்களைக் கடந்த தம்மாம் கா.ந.மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் விளக்கம்!! பல்சுவைப் போட்டிகளுடன் நடந்தேறிய குடும்ப சங்கம நிகழ்வு!!
செய்திஅ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம், சஊதி அரபிய்யா)
இந்த பக்கம் 3102 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா – தம்மாம் காயல் நல மன்றத்தின் 82-வது பொதுக்குழுக் கூட்டம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் & பல்சுவை நிகழ்ச்சிகளுடன் - குடும்ப சங்கம நிகழ்வாக அண்மையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் நிர்வாகக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை கிழே:

காயல் நற்பணி மன்றம் – தம்மாம் (KNM-D) அமைப்பின் 82-வது பொதுக்குழுக் கூட்டம் & 3-வது குடும்ப சங்கம நிகழ்வு, 30.03.2018 வெள்ளிக்கிழமையன்று, இறையருளால் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 09:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை நடந்தேறிய இந்நிகழ்வில், சுமார் 200 பேர் (காயலர்கள் & ஆதரவாளர்கள்) கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



பொதுக்குழுக் கூட்டம்

மன்றத்தின் 82-வது பொதுக்குழுக் கூட்டம், நிகழ்வு தினத்தன்று மஃரிப் தொழுக்கைக்கு பின்னர் துவங்கியது. நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ஜனாப் முஹம்மது ரஃபீக் தலைமை வகித்து, அறிமுகவுரை வழங்கினார். துணைத் தலைவர் ஜனாப் செய்யத் ஜியாவுதீன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, செயலாளர் ஜனாப் செய்யத் இஸ்மாயீல் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.



நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த (சஊதி அரபிய்யாவின் தகவல் அமைச்சகத்தில் பணிபுரியும்) இலங்கையை சார்ந்த மவ்லவி முஹம்மது மக்கீன் நளீமி, சென்னையைச் சார்ந்த கட்டிடவியல் நிபுணர் ஜனாப் ஜக்கரிய்யா, ரியாத் காயல் நல மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் முஹ்ஸின் & ஜனாப் நூஹு ஆலிம் ஆகியோர் தத்தம் சிறப்புரைகளை சுருக்கமாக வழங்கினர்.

இவர்களின் சொற்பொழிவுகளில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

--> இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற செயல்படும் மன்றம்
--> பல்வேறு தளங்களில் பாராட்டத்தக்க நலத் திட்டங்கள்
--> இப்பணிகள் தொடர்ந்து செம்மையாக நடைபெற ஆவணச் செய்தல்
--> பொருளாதார பங்களிப்பை மிகுதியாக்குதல்
--> இறைவழியில் அறப்பணி செய்வதன் அவசியம்
--> உறுப்பினர்களுக்கிடையே நிலவும் 'போற்றத்தக்க’ ஒற்றுமை
--> மன்றம் திறம்பட செயல்படுவதற்கு, உறுப்பினர்களின் சிறப்பான ஒத்துழைப்பு
--> மன்றப் பணிகளில் இளையவர்களும் பங்கேற்ப்பதின் அவசியம்
--> உறுப்பினர்களின் சிற்சிறு பங்களிப்பும் கூட, மன்றப் பணிகளுக்கு பெரியளவில் வலுசேர்க்கும் என்னும் புரிதல்
--> இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளுக்கு (பொருளாதாரம், உடல் நிலை & தனிப்பட்ட திறமைகள்) நன்றி செலுத்துதல் & அதனை சரியான பாதையில் பயன்படுத்துதல்
--> மகிழ்ச்சி நிறைந்த கேளிக்கை விளையாட்டுகளைத் தாண்டி, நம் மக்களை ஒன்றிணைப்பதும், சமூகப் பணிகளை இன்னும் விரிவுபடுத்தவதுமே இந்நிகழ்வின் மையக்கரு எனபதை உணர்த்துதல்
--> மார்க்கப் பற்றோடு இணைந்திருக்க வேண்டிய ஊர்ப் பற்றின் முக்கியத்துவம்
--> சஊதி அரபிய்யாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையற்ற வேலைவாய்ப்புச் சூழல், அதனால் உண்டாகும் பொருளாதார பாதிப்பு & ஊர் திரும்பும் இக்கட்டான நிலையை சமாளித்தல்
--> நம் கட்டுப்பாட்டை மீரிய அத்தகைய அனைத்து பொருளாதரம்-சார்ந்த சறுக்கல்களை, இறைவனின் சித்தமாக கருதும் மனப்பாங்கை உருவாக்கல்
--> நகரின் நலனுக்காக பாடுபடும் பல்வேறு நல மன்றங்களில் செயல்பாடுகள் குறித்த பொதுவான தகவல்கள் &
--> இம்மன்றங்கள் முறையாக செயல்பட தேவையான பொருளதவி குறித்த விழிப்புணர்வு


சிறப்பான போதனைகளைக் கொண்ட இந்த குறு உரைகள், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வண்ணம் அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.













குழந்தைகளுக்கு கொசுவுசட்டை (T-Shirt)

முன்னதாக, காலை வேளையில் பெரியவர்கள் & சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மன மகிழ்வை ஏற்படுத்திய இவற்றுள், வெளிப்புற விளையாட்டுகள், உள்ளரங்க நிகழ்வுகள் & நீச்சல் குளப் போட்டிகள் எனப் பிரிக்கப்பட்டு - ஆடவர், பெண்டிர் & சிறார்களுக்காக தனித்தனியே நிகழ்த்தப்பட்டன.

இவ்விளையாட்டுகளில் பங்கேற்ற இளவல்களுக்கு, மன்றத்தின் முத்திரை பதிக்கப்பட்ட கொசுவுசட்டை (T-Shirt) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



வெளிப்புற விளையாட்டுகள்

கால்பந்து உதைத்தல் (penalty shootout), சணற்பை ஓட்டப் பந்தயம் (gunny sack race), கையிறிழுக்கும் போட்டி (tug of war) & இசைப் பந்து (Passing the ball) ஆகியன ஆண்களுக்கும்; ஊதற்பை வெடித்தல் (balloon bursting), எலுமிச்சை & கரண்டி (lemon with spoon), & சணற்பை ஓட்டப் பந்தயம் ஆகியன இளவல்களுக்கும் (இரு பாலர்) வெளிப்புற விளையாட்டுகளாக நடத்தப்பட்டன.















ஊதற்பை வெடித்தல் & நீருள்ள கோப்பையை தலை மீது வைத்தபடியே நடத்தல் (walking with water cup on head) ஆகியவை பெண்களுக்கான வெளிப்புற விளையாட்டுகளாக நடத்தப்பட்டன.

உள்ளரங்க நிகழ்ச்சிகள்

உள்ளரங்க நிகழ்வுகளாக, வர்ணம் தீட்டுதல் (coloring) & அருள்மறை மனனப் போட்டி (Al-Quran hifz competition) ஆகியன குழந்தைகளுக்கும்; நாணயங்களை எழுதுகோலின் மீது அடுக்குதல் (coin layering on a pencil), காயல் வார்த்தை விளையாட்டு & வினாடி வினா (quiz) ஆகியவை ஆடவர்களுக்கும்; மெளன மொழி (silent language), வினாடி வினா, உறிஞ்சு குழாய் மூலம் விதைகளை நகர்த்துதல் (picking seeds using straws), கோப்பைகளை அடுக்குதல் (cup layering), (தலைகீழாக) வரிசையாக வைக்கப்பட்ட கோப்பைகளின் மீது பந்தை உருட்டுதல் (glass road trucker) & நாணயங்களை அடுக்குதல் ஆகியவை பெண்டிருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன.







வினாடி வினா போட்டியானது, அல்-குர்ஆன், நபிமார்கள், இஸ்லாமிய வரலாறு, இந்தியாவின் முஸ்லிம்கள், மொழியாக்கம் ஆகியச் சுற்றுகளை கொண்டிருந்தது.



பெண்களுக்கான நிகழ்வுகளை, மகளிர் ஒருங்கிணைப்புக் குழு செவ்வனே செய்திருந்தது.

நீச்சல் குளப் போட்டிகள்

பெரியவர்கள் & இளையவர்கள் என இருவேறு பிரிவுகளில் நடைபெற்ற ஆண்களுக்கான நீச்சல் குளப் போட்டிகளில், ஆர்வமுள்ள பலரும் கலந்துகொண்டனர்.







நிகழ்விடத்தில், பெண்களுக்கான தனி நீச்சல் குள வசதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுவர் கதைநூல் அறிமுகம்

நிகழ்வின் ஒரு பகுதியாக, மன்ற செயற்குழு உறுப்பினர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் எழுதி, புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான பிரிவு) மூலம் வெளியாக இருக்கும் 'ஊஞ்சல் தாத்தா’ எனும் சிறுவர் கதைநூல் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டது.





சிறப்பான உணவு

நிகழ்ச்சிக்கு வருகைத் தந்த அனைவருக்கும், சுவையான சிற்றுண்டி (இட்லி & உளுந்து வடை), தேநீர் & குளிர்பானம் ஆகியன காலை வேளையிலும்; நெய்ச்சோறு, களரிக் கறி & குளிர்களி (ice cream) ஆகியன மதிய வேளையிலும்; மற்றும் தேநீர் & வெங்காய வடை ஆகியன மாலை வேளையிலும் வழங்கப்பட்டது.

இதற்கான பணிகளை, உணவு ஏற்பாட்டுக் குழுவினர் செவ்வனே செய்திருந்தனர்.







பரிசளிப்பு விழா

பல்வேறு உள்ளரங்க & வெளிப்புற விளையாட்டுகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கும் & குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.





ஜும்ஆ தொழுகை

புல்வெளி மைதானம், நீச்சல் குளம், உள்ளரங்கு, சமையலறை & உணவுக்கூடம் என பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்ட “இஸ்திராஹா அல்-கல்ஆ” (Castle Recreation Center) நிகழ்விடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சென்ற ஆண்டின் நிகழ்வும், இதே இடத்தில்தான் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



நிகழ்விடத்துக்கு அருகில் இருந்த மஸ்ஜித் அல்-உரைஃப்பியில், நிகழ்ச்சியில் பங்கேற்றோர் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.



நிகழ்ச்சி ஏற்பாடு

முன்னதாக, நிகழ்ச்சி குறித்த அறிவிப்பினை மன்ற உறுப்பினர்களுக்கும் & சஊதி அரபிய்யாவின் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் அனைத்து காயலர்களுக்கும் & ஆதரவாளர்களுக்கும், மன்றத்தின் வாட்ச்-ஆப் குழுமத்தின் மூலமாகவும் & இணையதள ஊடக செய்தியாகவும், மன்ற நிர்வாகக் குழுவின் சார்பில் அழைப்பறிக்கை வெளியிடப்பட்டது.

அதற்கு பின்னர் நடைபெற்ற சிறப்புக் கூட்டங்களில், நிகழ்வினை செம்மையாக நடத்திடும் பொருட்டு, பல்வேறு உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு - நிகழ்விற்கான ஆயத்தப் பணிகளில் அக்குழுக்களின் உறுப்பினர்கள் மும்முரமாக ஈடுபடலானர்.

நிதி திரட்டுதல்: ஜனாப் நூர்தீன் & குழுவினர்
உணவு ஏற்பாடு: ஜனாப் செய்யத் ஜியாவுதீன் & குழுவினர்
பொது சேவைகள்: ஜனாப் இம்தியாஸ் & குழுவினர்
வரவேற்பு & பெயர் பதிவு: ஜனாப் மஹ்மூது சுல்தான் & குழுவினர்
மேடை & அரங்க ஏற்பாடு: ஜனாப் புஹாரி & குழுவினர்
ஒலி & ஒளி: ஜனாப் ஸஃப்ஆன் & குழுவினர்
பரிசுப் பொருட்கள்: ஜனாப் நவ்ஃபல் & குழுவினர்
உள்ளரங்க நிகழ்ச்சிகள்: ஜனாப் இஸ்மாயீல் & குழுவினர்
வெளிப்புற விளையாட்டுகள்: ஜனாப் அப்துல் அஜீஸ் & குழுவினர்
போக்குவரத்து & பாதுகாப்பு: ஜனாப் காசிம் & குழுவினர்
மகளிர் ஒருங்கிணைப்பு: சகோதரி சகீலா இம்தியாஸ் & குழுவினர்


தம்மாம்-91 புறநகர் பகுதியிலுள்ள நிகழ்விடத்தை இலகுவாக வந்தடையும் வண்ணம், துறைமுகப் பகுதியில் இருந்து, நகரின் மையப் பகுதி (சந்தைப் பகுதி - Al Souq) வழியாக, ஊர்தி ஏற்பாடு (ஊர்தி வசதி இல்லாதவர்களுக்காக) செய்யப்பட்டிருந்தது.

நன்றி நவில்தல்

நிகழ்ச்சியின் இறுதியில், மன்ற நிர்வாகக்குழு உறுப்பினர்களுள் ஒருவரான ஜனாப் இம்தியாஸ் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்விற்காக தம்மாம், அல்-ஃகொபர், ஜுபைல், ரஹிமா, அல்-ஹஸ்ஸா & ரியாத் என பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த அன்பர்கள் அனைவருக்கும் மன்றத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.

குடும்பத்தோடு மழலைகளையும் அழைத்து வந்தோருக்கும் & ஏனைய சிறப்பு விருந்தினர்களும் நன்றிக் கூறியதோடு, இந்நிகழ்ச்சிக்காக பொருளுதவி புரிந்த பெருமக்களுக்கும், அன்பளிப்புகளை வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் & நிகழ்விற்காக உழைத்த அனைத்து நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினருக்கும் [குறிப்பாக ‘உணவு ஏற்பாட்டுக் குழு’ அங்கத்தினருக்கு] மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கினார்.

இறுதியாக, துஆ கஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.



ஒளிப்பட செருகேடு (Photo Album)

நிகழ்வு தினத்தன்று எடுக்கப்பட்ட அனைத்து ஒளிப்படங்களையும், தனி உயர்தெளிவான படங்களாக (high-resolution images) பதிவிறக்கம் செய்திட, கீழுள்ள வலைப்பக்கத்தை சொடுக்கவும்:


https://www.irista.com/gallery/rhhwvuhslav0





இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாக்கம் & ஒளிப்படங்கள்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
செயற்குழு உறுப்பினர்



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 April 2018]
IP: 178.*.*.* Ukraine | Comment Reference Number: 46124

மாஷா அல்லாஹ்.

மிக அருமையான ஒன்றுகூடல்.

இந்த சவுதி அரேபியா நாட்டில் (இதுவரை ) எந்த பொழுதுபோக்கும் நிகழ்வோ, ஒன்று கூடல் நிகழ்வோ இல்லாமல் போரடிக்கும் எங்களுக்கு, இது மாதிரியான நிகழ்ச்சிகள் என்று நடைபெறும் என்று ஆவலுடன் இருப்போம்.

பல பாகங்களில் பிரிந்து கிடைக்கும் அனைத்து சகோதரர்களையும் சொந்தங்களையும் ஒரே இடத்தில் சந்திக்கும் இந்த நிகழ்வும் ஒரு பெருநாள் போன்று தான்.

ஒன்று கூடி, மகிழ்ந்து, களைந்து விடாமல், நம் ஊர் மக்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்யும் நல்ல உள்ளம் தான் இந்த ஒன்றுகூடலின் பிராதான நோக்கமே.

சகோ. ஹபீப் இப்ராஹிம் அவர்களின் புகைப்படங்கள், செய்தி ஆக்கம் ஆகியவை சூப்பர்.

அவருடைய சிறுவர் புத்தகத்திற்கு கூடுதல் பாராட்டுக்கள்.

இந்த நிகழ்வுக்கு உண்டான அனைத்து செலவுகளும் மன்றத்திலிருந்து ஏதும் எடுக்காமல், நல்லுள்ளம் கொண்ட நம் சகோதரர்களின் பங்களிப்பில் இருந்து செலவு செய்து வருவது பாராட்டத்தக்கது.

இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் அல்லாமல் மன்றத்தின் அனைத்து வித பணிகளுக்கும் பங்களிப்பு செய்து வரும் அனைவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

வல்ல இறைவன் எல்லோருக்கும் அருள் புரிவானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மாற்றம் ஒன்றுதான் மாறாதது
posted by mackie noohuthambi (kayalpatnam ) [10 April 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46125

சுபுஹானல்லாஹ். இந்த நிகழ்ச்சி களைகட்டுவதை பார்த்து பரவசமடைகிறேன்.சவூதி அரேபியாவில் இவ்வளவு சுதந்திரமா!

1983 -85 காலகட்டத்தில் இந்த மாபெரும் மன்றத்தின் செயலாளராக பணி புரியும் வாய்ப்பை எனக்கு தந்தார்கள். பழைய கோப்புக்கள் உங்களிடமிருந்தால் அதை பார்க்கலாம்.

சின்ன எஸ்க்கே பொருளாளர் எ.ஆர் தாஹா கொள்கை பரப்பு செயலாளர். KMT அமைவதற்கு இங்கு நாங்கள் வசூல் வேட்டையில் இறங்கினோம். அப்போதுதான் பல இடங்களில் பல கஷ்டங்களை அனுபவித்து வரும் நமதூர் மக்களை பார்க்க நேரிட்டது உள்ளம் நெகிழ்ந்தது..

ஒரு சர்வாதிகார ஆட்சியில் இருப்பதுபோல் உணர்ந்தோம் வெளியே இப்படி எல்லாம் சுதந்திரமாக ஆடிப் பாடி விளையாடி இன்பமாக இருக்க முடியாது.

தாலிக்கு தங்கம் என்ற திட்டம் முதலில் இங்குதான் அரங்கேறியது. 20 பெண்களுக்கு கழுத்துக்கு ஒரு அழகிய அணிகலன். அதை ஊரில் சத்தமில்லாமல் அவர்கள் வீட்டில் கொடுக்க வேண்டும் என்று நானும் அதை வெளிப்படையாக கொடுக்க வேண்டும் என்று வேறு சிலரும் நினைத்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் நான் பதவி விலகினேன் அதன் பிறகு கால ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வேறு வேறு இடங்களுக்கு மாறி சென்றோம். என்றாலும் KMT யில் .இன்றும் பொது வார்டில் தம்மாம் காயல்நல மன்றம் என்ற கல்வெட்டு நம் சாதனைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றது.

நாம் பாடு பட்டு சேர்த்த பணத்தை கொடுக்கும்போது இன்பம்

வாடும் ஏழை மக்கள் முகத்தை பார்க்கும் போதும் இன்பம்

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்

மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள்

அண்ணல் நபி சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்..

இதுதான் அன்றைய சுலோகம் இன்றும் அது நீடிக்கிறது.

வாழ்த்துக்களும் து ஆ வும்..

மக்கி நூஹுத்தம்பி 00917530075337


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (11/4/2018) [Views - 1389; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved