| 
 04.04.2018. அன்று, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில்,  ரசாக் மருத்துவமனையில் நடத்தப்படவுள்ள குருதிக் கொடை முகாமிற்கு ஒத்துழைப்பளிக்கக் கோரி, நகரிலுள்ள மருத்துவர்கள், பொதுநல அமைப்புகளுக்கு குழுமம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
  
 எதிர்வரும் ஏப்ரல் 4 புதனன்று - இறைவன் நாடினால் - காலை 9:30 மணி முதல் மதியம் 3 மணி வரை, காயல்பட்டினம் ரத்தினாபுரி ரஜாக் மருத்துவமனை வளாகத்தில் - இரத்த தானம் முகாம் நடைபெறவுள்ளது.
  
நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைப்பில் - தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் இரத்த வங்கியுடன் இணைந்து இம்முகாம் நடத்தப்படவுள்ளது.
  
இந்த முகாமிற்கான ஒத்துழைப்பு கோரி - நகரின் மருத்துவர்கள், அமைப்புகளிடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக  கடிதம் வழங்கப்பட்டது.
  
 
  
இவண்,  
நிர்வாகிகள்,  
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.  
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
  
[பதிவு: மார்ச் 31, 2018; 11:30 pm]  
[#NEPR/2018033101]
  
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  |