| 
 புதிதாக வழங்கப்படும் குடிநீர் இணைப்புகள் வீடுகள் வரை வழங்கப்படும் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளதாக, “நடப்பது என்ன?“ சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
  
 காயல்பட்டினம் நகராட்சியில் தற்போது இரண்டாம் குடிநீர் திட்டத்தின் முக்கிய அம்சமான  - உள்ளூர் குடிநீர் இணைப்புகள் (INTERNAL DISTRIBUTION SYSTEM) வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த பணியின் போது - ஒவ்வொரு இணைப்புக்கும் மீட்டர் பொருத்தப்படும். 
  
 
  
 
  
தற்போது நடைபெற்றுவரும் இப்பணிகளில் பல்வேறு குளறுபாடுகள் உள்ளதாக பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது சம்பந்தமாக நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், திங்களன்று (26-3-2018) - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அவர்களை திங்களன்று சந்தித்தனர்.
  
விபரங்களை கேட்டறிந்த ஆணையர் - வீடுகள் வரை முறையாக குடிநீர் இணைப்புகள் வழங்க தான் உறுதிசெய்வதாக தெரிவித்தார்.
  
பொது மக்களின் கவனத்திற்கு:
  
குடிநீர் இணைப்புகள் வழங்கும் போது - நகராட்சி  ஊழியர்கள், முறையான இணைப்பு வழங்க மறுத்தால் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலத்தை தொடர்புக்கொண்டு புகார் தெரிவிக்கவும். அவரின் தொலைபேசி எண்: 94438 58174
  
புகாருக்கு பின்பும் முறையாக இணைப்புகள் வழங்கப்படவில்லை என்றால் காயல்பட்டினம் நகராட்சிக்கு எழுத்துப்பூர்வ புகார் தெரிவித்து, அதன் நகலை நடப்பது என்ன? குழுமத்திற்கு வழங்கவும்.
  
இவண்,  
நிர்வாகிகள்,  
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.  
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
  
[பதிவு: மார்ச் 28, 2018; 10:00 am]  
[#NEPR/2018032801]
  
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  |