Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:28:51 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18724
#KOTW18724
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஐனவரி 27, 2017
இக்ராஃ செயற்குழுக் கூட்டத்தில் இலங்கை இஸ்லாமிக் சென்டர் இயக்குநர் பங்கேற்பு! சேவைகளுக்கு பாராட்டு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2461 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில், இலங்கை இஸ்லாமிக் சென்டர் இயக்குநர் பங்கேற்று, அதன் சேவைகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை:-

இக்ராஃ செயற்குழுக் கூட்ட விபரங்கள்!

இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு கூட்டம், 22.12.2016. வியாழக் கிழமையன்று காலை 10:30 மணியளவில் , இக்ராஃ அலுவலகம் எதிரில் - கீழ நெய்னார் தெருவிலிருக்கும் கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில், இக்ராஃ கல்விச் சங்க தலைவரும் - சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவருமான எம்.எம்.மொகுதூம் முஹம்மது அவர்கள் தலைமையில், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார், மற்றும் பொறியாளர் எம்.ஏ.எம்.அபூபக்கர் (லண்டன்), ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் (தலைவர், இலங்கை காயல் நல மன்றம்), ஹாஜி குளம் முஹம்மது இபுறாஹிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.











ஐக்கிய ராஜ்ஜிய (UK ) காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எல்.அப்துல் மத்தின் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரும், இக்ராஃ தலைவருமான எம்.எம்.மொகுதூம் முஹம்மது அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ள முக்கிய விபரங்களை முன்வைத்தார்.

அவரைத் தொடர்ந்து இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது விளக்கிப் பேசினார். அவரது உரையின் உள்ளடக்கம்:-

>>>கடந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, அவை மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

>>>நடப்பு கல்வியாண்டில் (2016-17) இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு, நகரின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த 68 மாணவ-மாணவியரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்ராஃவின் தலைவர் எம்.எம்.மகுதூம் முஹம்மது, செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் மற்றும் இக்ராஃவின் முன்னாள் துணைத்தலைவரும், ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவருமான எம்.இ.எல்.நுஸ்கி ஆகியோரடங்கிய இரு குழுவினர் ,மாணவ-மாணவியரை தனித்தனியாக நேர்காணல் செய்தனர்.

இந்நேர்காணலில், 23 மாணவர்கள், 26 மாணவியர் என 49 பேர் நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் B.A.(Economics), B.Com, B.Com(CA), B.B.A., B.C.A., B.Sc. (CS), Dip. in Civil, Dip.in EEE, Hotel Management & Catering, B.Sc.(Nutrition and Dietetics) ஆகிய கல்வியும், மாணவியர் B.A.(Eng.), B.A.Tamil, B.com., B.Com.(CA), B.B.A., B.Sc.(Zoology), B.Sc.(Maths), B.Sc.(CS), B.Sc.(IT) ஆகிய கல்வியும் பயில்கின்றனர். இவர்களுக்கான உதவித்தொகையாக ரூபாய் 3,66,500/- ஒதுக்கீடு செய்யப்பட்டது .இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள ஐந்து மாணவர்கள் மற்றும் நான்கு மாணவிகள் என 9 பேர் முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் மூன்று மாணவர்கள் முழுக் கல்விக் கட்டணமும் கடனுதவி (வட்டியில்லா கடன்) அடிப்படையில் வழங்கிட தேர்வு செய்யப்பட்டனர்.(தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் இவர்களுக்கான முழுக் கல்விக் கட்டணமும் பொறுப்பேற்று வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்!).

இதில் இக்ராஃவுக்கு விண்ணப்பித்திருந்த அதிக மதிப்பெண்கள் (Merit marks) பெற்ற, புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒரு மாணவருக்கும், அதிக மதிப்பெண்கள் பெற்ற, மிகவும் வறுமையில் வாழ்ந்து வரும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும், இரு மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பித்து பின் பொறியியல் கல்லூரிக்கு மாறிச் சென்றவர்கள், இதர நிறுவனத்தின் கல்வி உதவித் தொகை பெற்றவர், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் என மொத்தம் 15 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்படும் சமயம்,''இது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்படும் நிதியாகும். எனவே தங்களுக்கு வசதி இருப்பின் பிற ஏழை மாணவர்களுக்கு வழி விடும் வகையில் நீங்கள் விலகிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படும்'' அந்த வகையில் ஒரு மாணவி விலகிக் கொண்டார். 3 மாணவிகள் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை.

>>>நடப்பு கல்வியாண்டில் (2016-17 to 2018-19), இக்ராஃவின் பொது கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு அனுசரணை வழங்கியோரின் பெயர் மற்றும் வழங்கிய நன்கொடை விபர பட்டியல் வாசிக்கப்பட்டது,.அதில் பற்றாக குறையாக இருந்த தொகைக்கு கூட்டத்தில் கலந்து கொண்ட ஹாஜி குளம் முஹம்மது இபுறாஹிம் அவர்கள் பொறுப்பேற்க 2016-17 to 2018-19 ஆம் வருடத்திற்கு தேவையான கல்வி நிதி பூர்த்தியானது. அனுசரணை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது

>>அடுத்து கடந்த வருடங்களைப் போன்று நடப்பு கல்வியாண்டிலும் (2016-17) சேகரிக்கப் பெற்ற ஜகாத் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் கடந்த 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர்.

அழைக்கப்பட்டிருந்த 36 மாணவ - மாணவியரில் 27 மாணவர்கள், 5 மாணவியர் உட்பட மொத்தம் 32 மாணவ-மாணவியர் இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை - (நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதித்தொகையான) ரூ.3,66,100/- உடனடியாக வழங்கி முடிக்கப்பட்டது.

இந்நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் IAS Coaching, IIPCC (Chartered Accountant), M.Sc. (Media & Communication), M.Com, B.Sc.(Hotel Management), B.Sc.(Comp.Sci.), B.B.A, B.Tech (Pharmaceutical Technology), B.Tech (Chemical), B.E (EEE, ECE, Mechanical, Civil, Automobile), Dip. in EEE, ITI (Turner, Automobile, A/c Mechanic) உள்ளிட்ட படிப்புகளுக்காக உதவித்தொகை கோரியிருந்தனர். மாணவியர் B.Sc (Nursing), BPT (Physiotherapy), M.Sc (Maths), B.Ed உள்ளிட்ட படிப்புகளுக்காக கல்வி உதவித்தொகை கோரியிருந்தனர்.

இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு ஜக்காத் நிதி வழங்கியோரின் பெயர் பட்டியல் மற்றும் வழங்கப்பட்ட நிதி குறித்தும் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

>>> அடுத்து, பொது கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அணுசரனை செய்தவர்களில் (முதலாமாண்டு.இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு) வரவேண்டிய நிதி விபரம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

>>> நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகையுடன் இதர அமைப்புகளின் உதவித்தொகைகளையும் பெற்று

B.Ed பயிலும் ஒரு மாணவருக்கான முதலாமாண்டு முழு கல்விச் செலவு (Full Scholarship) ரூபாய் 65,000/- ,

M.Sc (Media & Communication) பயிலும் ஒரு மாணவருக்கான முதலாமாண்டு முழு கல்வி நிதி (Full Scholarship) ரூபாய் 60,000/- ,

IAS பயிற்சிக்கு இக்ராஃ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாணவருக்கு (Full Scholarship) ரூபாய் 1,65,000/- மற்றும் தங்கிப் பயின்றிட விடுதி வசதி முறையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் IAS பயிலும் மாணவருக்கு மட்டும் (திருமணம் ஆனவர் என்பதால்) அவர் பயிற்சி பெறும் முதல் 10 மாதத்திற்கு குடும்பச் செலவுக்கு மாதம் ரூபாய் 10,000/- வீதம் 10 மாதத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் கல்விக் கடனாக வழங்கிட ஆவண செய்யப்பட்டுள்ளது.(IAS பயில ஆர்வமிருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்பு ஒரு ஹாஃபிழ் மாணவர் IAS பயில மிகுந்த ஆர்வமிருந்தும், அதற்கான முயற்சிகளை இக்ராஃ மேற்கொண்டபோதும் அவரது குடும்ப பொருளாதார சூழ்நிலை - நெருக்கடி காரணமாக அது கைகூடாமல் ஆகி விட்டது).

>>>நமது இக்ராஃ மூலம் வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் தவிர பல்வேறு தனியார் டிரஸ்ட்- கள் வழங்கும் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் இக்ராஃ மூலம் பதிவிறக்கம் செய்து ஏராளமான மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பல இலட்சம் அளவுக்கு கல்வி உதவித் தொகைகள் நமது மாணவ- மாணவியருக்கு கிடைக்கப் பெறுகின்றன. சமீபத்தில் கூட நமதூரைச் சேர்ந்த ஒரு மாணவரின் பெற்றோர் (தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறார்கள்).நமது இக்ராஃ வை தொடர்பு கொண்டு தமது மகனின் பொறியியல் படிப்புக்கு உதவிடுமாறும், தங்களது கஷ்ட சூழ்நிலையினையும் எடுத்துக் கூறிய போது, சென்னையிலுள்ள ஒரு தனியார் ட்ரஸ்ட் முகவரியை அளித்து,தேவையான தகவல்களையும்,விபரங்களையும் அளித்து உடனடியாக விண்ணப்பிக்க இக்ராஃ மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. .விண்ணப்பம் அனுப்பி ஒரு மாதத்தில் ரூபாய் 50,000 க்கான காசோலை கிடைக்கப் பெற்று, அந்த மகிழ்ச்சியில் ஊர் வந்து இக்ராஃ நிர்வாகத்துக்கு மிகுந்த நன்றி தெரிவித்துச்சென்றார்கள்.இது போன்று ஏராளமான கல்வி நிதி உதவிகள் கிடைத்திட இக்ராஃ மூலம் வழி காட்டப்பட்டு வருகிறது.

>>>கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமின்றி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியருக்கும் கல்வி நிதி குறித்த வழிகாட்டல் அளித்து வருகிறோம். குறிப்பாக கடந்த வருடத்தைப் போன்று, நடப்பாண்டும் (2016-17), 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளுக்கு மத்திய அரசின் சிறுபான்மைத் துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வரும் மவுலானா ஆஸாத் ஃபவுண்டேஷன் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு,அந்த விண்ணப்பங்களை இக்ராஃ அலுவலகத்திலேயே ஏராளமான மாணவிகளுக்கு பூர்த்தி செய்து அனுப்பப்பட்டுள்ளது.இந்த மாணவிகளுக்கு (+1 மற்றும் +2) ரூபாய் 12,000 கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

>>> முஸ்லிம் பெண்களின் வளர்ச்சிக்கென மாவட்டம் தோறும் ''முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கம்'' (மாவட்ட ஆட்சியர் தலைமையில்) செயல்பட்டு வருகிறது.நமது தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவிச் சங்கத்தின் சார்பில் ஏழை மற்றும் விதவைப் பெண்களின் பிள்ளைகளது கல்விக்கு உதவுமாறு இக்ராஃ மூலம் வேண்டுகோள் வைக்கப்பட்டு,சில விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஆக எங்கெல்லாம் கல்வி நிதி கிடைக்கப் பெறுகிறதோ அவற்றை நமது மக்கள் கிடைக்கப்பெற்று பயனடைய இக்ராஃ முழு முயற்சியை மேற்கொண்டு நிதி கிடைக்கச் செய்து வருகிறது.

>>> அடுத்து கத்தார், ஐக்கிய ராஜ்ஜியம் (UK), பஹ்ரைன் காயல் நல மன்றங்களின் சார்பாக நடப்பாண்டு (2016-17) 100 மாணவ- மாணவியருக்கு இரண்டு செட் பளிச்சீருடை வீதம் 200 செட் சீருடைகள் ரூபாய் 1,40,000/- செலவில், இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

>>> கடந்த 2015-16 ஆம் ஆண்டு ரியாத் காயல் நல மன்றத்தினால் துவக்கி வைக்கப்பட்ட புறநகர் பள்ளிகளுக்கான நலத்திட்ட (Kayal School Welfare Project) அடிப்படையில் நடப்பாண்டு (2016-17) தைக்காத் தெரு, அரசு நடுநிலைப்பள்ளிக்கு தம்மாம் காயல் நல மன்றத்தின் சார்பாக மாணவ-மாணவியருக்கான 7 steel Bench and Desk மற்றும் ஆசிரியைகளுக்கான சேர் 6 , ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பாக தீவுத்தெரு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான 6 மின் விசிறிகளும், Electric wiring works மற்றும் மின் விளக்குகளும் புதிதாக இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2015-16 ஆண்டும், நடப்பாண்டு (2016-17) இது வரையிலும் இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 3,55,000 வரை அளிக்கப்பட்டுள்ளன.

>>>அடுத்து, எதிர்வரும் அரசுப்பொதுத்தேர்வை முன்னிட்டு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு டிஸம்பர் மாத இறுதியில்,பள்ளி விடுமுறையை முன்னிட்டு அந்தந்த பாடத்தில் பாண்டித்யம் பெற்ற,உள்ளூர் மற்றும் வெளியூர் ஆசிரியர்களைக் கொண்டு ''கல்வி மற்றும் தேர்வு சிறப்பு வழிகாட்டு நிகழ்ச்சி'' யினை நடத்திட பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.இதில் ஏராளமான ஆசிரியர்கள் விடுமுறையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்று கூறியதாலும், பள்ளியிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டதாலும் நமது முயற்சி கைகூட வில்லை.

>>> இக்ராஃவின் 2015-16 வருடத்திற்கான வரவு -செலவு கணக்கு விபரங்கள் தணிக்கை (Auditing ) செய்யப்பட்டு,அந்த Auditor Report -ஐ சங்கங்களின் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

>>> இக்ராஃ கல்விச் சங்கத்தின் அரசுப் பதிவுக்கான புதுப்பிப்பு (Registration Renewal -2015-16) க்கு தேவையான ஆவணங்களை சங்கங்களின் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து Registration Renewal செய்யப்பட்டு விட்டது.

>>> சென்ற கூட்டத்தில் தீர்மானித்தது போல் இக்ராஃ வருடாந்திர உறுப்பினர் சந்தா நிலுவை குறித்த நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.

>>> கடந்த வருடங்களை போன்று நடப்பாண்டும் ''சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை -2016'' நிகழ்ச்சி, தி காயல் ஃ பர்ஸ்ட் டிரஸ்ட் அமைப்புடன் இணைந்து 03-09-2016 சனிக்கிழமை மாலையில் நடத்தப்பட்டது.+2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் உள்ளூர் பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் பெற்றோர்கள், பொது மக்கள், கல்வி / சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை துணைத்தலைவர் (DIG) உயர்திரு டாக்டர் R.தினகரன் IPS மற்றும் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் (DEO) திரு.K.நரசிம்மன் M.Sc., M.Ed., M.Phil ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

>>>இதற்கு அடுத்த நாள் 04-09-2016 ஞாயிற்றுக் கிழமை காலை “விடியலை நோக்கி...” எனும் தலைப்பில் உயர் கல்வி மற்றும் மத்திய - மாநில அரசுகளின் நிர்வாகப் படிப்புகள் (IAS, IPS, IRS) மற்றும் இதர வேலைவாய்ப்புகளுக்கான படிப்புகள் (TNPSC) குறித்த வழிகாட்டு நிகழ்ச்சி, நகர பள்ளிகளின் 10, 11, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ- மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்காக இக்ராஃ கல்விச் சங்கம், எஸ்.- ஐ.ஏ.எஸ் அகாடமி - சென்னை, மற்றும் தம்மாம் , ரியாத் காயல் நல மன்றங்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் எஸ் - ஐ.ஏ.எஸ் அகாடமி - சென்னை, நிர்வாக இயக்குனர் பேராசிரியர் டாக்டர் சேமுமு முஹமதலி மற்றும் சென்னை AMS பொறியியல் கல்லூரி பேராசிரியர் முஹம்மது ரபீக் ஆகியோர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் IAS பயிற்சிக்கு ஒரு மாணவர் இக்ராஃ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடியாக சென்னை எஸ். ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்க்கப்பட்டார். இவருக்கான பயிற்சி கட்டணத்தை எஸ். ஐ.ஏ.எஸ் அகாடமி பொறுப்பேற்றுக் கொள்வதாக அதன் இயக்குனர் அறிவித்தார்.இந்த மாணவரின் பயிற்சிக்கு தேவையான இதர அனைத்து செலவுகளுக்கும் (உணவு. விடுதி, புத்தகங்கள், திருமணமானவர் என்பதால் குடும்பச் செலவுக்கு உள்ளிட்ட செலவுகளுக்கு) இக்ராஃ முழுப் பொறுப்பேற்று அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என வாக்களிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர் நன்முறையில் பயின்று வருகிறார்.

>>>இது தவிர IAS பயில மிகுந்த ஆர்வம் இருப்பதாக கண்டறியப்பட்ட, சில வருடங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்ற, தற்போது இக்ராஃவின் முழுமையான கல்வி உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டு B.Com முதலாமாண்டு பயின்று வரும் மாணவருக்கும் இக்ராஃ பொறுப்பேற்றுள்ளது.இவருக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதோடு, தற்போதிருந்தே IAS பயிற்சிக்கு தேவையான தயாரிப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கான மாத இதழ்கள் மற்றும் புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

>>>அடுத்து 04-09-2016 அன்று மாலை கத்தார் காயல் நல மன்றம், இக்ராஃ மற்றும் தி காயல் ஃ பர்ஸ்ட் டிரஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடத்தும் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியருக்கான மாபெரும் வினாடி -வினா போட்டி நடத்தப்பட்டது.

>>>மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடத்தியதற்கான வரவு -செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

>>>இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்களுக்கு இது வரை கிடைக்கப் பெற்ற நன்கொடைகள் (வழங்கியவர்கள் பெயர் மற்றும் தொகை) விபரம் வாசிக்கப்பட்டது.

>>>கடந்த கூட்டத்தில் தீர்மானித்தப்படி ''ஆண்டில் ஒரு நாளை “இக்ராஃ நாள் - IQRA DAY” என அறிவித்து, அந்நாளை - அனைத்து காயல் நல மன்றங்களும், கடைப்பிடிக்கக் கேட்டுக்கொண்டு, அந்நாளில் - அமைப்பின் அங்கத்தினர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை அல்லது ஒருநாள் வருமானத்தை இக்ராஃ கருவூலத்திற்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும்,“இக்ராஃ நாள்” என்ற இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் இதுகுறித்த வேண்டுகோளை முன்வைக்கவும், விருப்பமுள்ளவர்கள் தரும் நிதியைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.,அதன்படி அனைத்து மன்றங்களுக்கும் இத்திட்டம் குறித்து வேண்டுகோள் அனுப்பப்பட்டது.இதில் தற்போது இக்ராஃ வை தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றம் '' IQRA DAY” என அறிவித்து அதன் மூலம் கிடைக்கப் பெற்ற ரூபாய் ஒரு இலட்சத்தை கல்வி உதவித்தொகைக்காக (scholarship) அளித்துள்ளது.

>>> எதிர்வரும் அரசு பொதுத் தேர்வுக்கு முன், நகர மாணவ-மாணவியருக்கு தேவையான அறிவுரை மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சி நடத்திடும் பொருட்டு ஜித்தா காயல் நல மன்றம், இக்ராஃவின் ஒருங்கிணைப்பில் ACCESS INDIA நிறுவனத்தின் உதவியுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் துவக்கத்தில் ''Goal Setting & Career Guidance Programme '' நடத்திட எண்ணி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களையும் சந்தித்து பேசினோம். இது தற்போதைக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும், ஆனால் ஜனவரி துவக்கத்திலிருந்து தேர்வுகள் (Revision Test) நடைபெறும் என்றும் கூறியதால் இந்நிகழ்ச்சியை நடத்திடும் தேதியை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

>>> மேலும் அரசுப் பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு இரண்டுக்கும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும். அதிலிருந்து ஒரு வார காலத்திற்குள் அந்த மாணவர்களுக்கான மேற்படிப்புக்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடத்திட எண்ணியுள்ளோம். இன்ஷா அல்லாஹ்! அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

>>> இக்ராஃவின் தற்போதைய முக்கிய இலக்கு அரசுப் பணிகளில் (TNPSC) நமது மக்களை ஆர்வப்படுத்தி, அதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் ஏற்பாடுகளை செய்து கொடுப்பது. இது குறித்து பலருடனும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் இதற்கான பயிற்சி வகுப்புகள் ஆறுமுகநேரி YPA (Young Pioneer Association) அமைப்பினரால் K.A.மேனிலைப்பள்ளியில் (பேயன்விளை) நடத்தப்படுவதாக அறிந்து, அந்த அமைப்பினருடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் செயலர் சகோதரர் செய்யது இஸ்மாயில் அவர்களுடன் அங்கு சென்று, இதற்கான பயிற்சி வகுப்புகள் எப்படி நடத்தப்படுகிறது? யாரால் நடத்தப்படுகிறது? எந்தெந்த பணிகளுக்கு வாய்ப்புள்ளது? அதற்கான தேவைகள் என்ன? என்பது குறித்து பார்வையிட்டு தேவையான விளக்கங்களை அந்த அமைப்பின் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தோம். அத்துடன் இக்ராஃவின் சேவைகள் மற்றும் நோக்கங்களை அவர்களிடம் எடுத்துரைத்து அரசு பணிகளுக்கான இது போன்ற பயிற்சி வகுப்புகள் காயல் நகரிலும் நிரந்தரமாக நடத்திட இக்ராஃ எண்ணியுள்ளதாகவும், இதற்கு தேவையான ஆலோசனைகள், ஒத்துழைப்புக்களை தங்கள் அமைப்பின் மூலம் எதிர்பார்ப்பதாகவும் கூறினோம். கண்டிப்பாக ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்களித்தார்கள். இன்ஷா அல்லாஹ்! கூடிய விரைவில் அதற்கான முழு ஏற்பாடுகளுடன் இத்தகைய பயிற்சி வகுப்புகள் மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சிகள் இக்ரா ஃ மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது விளக்கமளித்தார்.

அதனைத்தொடர்ந்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

>>>முதலாவதாக IAS / IPS - TNPSC போன்ற Special Project -ஐ நடைமுறைப் படுத்திடுவதற்கு separate Fund சேகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. IAS / IPS போன்ற படிப்புகளுக்கு உதவ தயாராக இருப்பதாக சில காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் சில வருடங்களுக்கு முன்பு கூறியிருந்தார்கள். அத்தகையவர்களையும், இந்த திட்டத்தில் ஆர்வம் கொண்ட காயல் நல மன்றங்களையும் தொடர்பு கொண்டு இதற்கான separate Fund சேகரிக்கலாம் என்று கருத்து கூறப்பட்டது.

>>>அறிவிக்கப்பட்ட IQRA DAY மூலம் கிடைக்கும் நிதியை மேற்கண்ட இந்த திட்டத்திற்கும், உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று அரசுக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கும் பயன் படுத்தலாம் என்று கருத்து கூறப்பட்டது.

>>>அடுத்து எதிர்வரும் 2017-18 கல்வி ஆண்டு முதல் கல்விக் கடன் வழங்க முடிவு செய்திருந்தோம். இதற்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கான IQRA Scholarship Loan Criteria தயார் செய்து கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. அவற்றில் தேர்தெடுக்கப்படும் மாணவருக்கான தகுதிகள், விண்ணப்பங்கள் ஏற்பதற்கான விதி முறைகள், எத்தகைய படிப்புகளுக்கு நிதி வழங்கப்படும், எத்தகைய கல்லூரிகள், எந்தெந்த கட்டணங்கள் ஏற்கப்படும், விண்ணப்பங்களை Interview Panel மூலம் தேர்வு செய்வதற்கான விதி முறைகள் மற்றும் இது சார்ந்த பணிகளை மேற்கொள்ளப்படவேண்டிய கால அட்டவணை உள்ளிட்ட விரிவான தகவல்கள் அளிக்கப்பட்டிருந்தன.இது குறித்து நீண்ட ஆலோசனை நடைபெற்றது. சிலரின் கருத்துக்களின் அடிப்படையில் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.

IQRA Scholarship Loan Criteria - வில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:

>> இக்ராஃ மூலம் வழங்கப்படவிருக்கும் கல்விக்கடன் மாணவர்களுக்கு மட்டுமே. (மாணவியருக்கு வழமைபோல் குறிப்பிட்ட கல்வி நிதி மட்டும் வழங்கப்படும்).

>> மாணவர்கள் காயல் நகர பள்ளிகளில் பயின்றவராக இருக்க வேண்டும்.

>> +2 பொதுத் தேர்வில் குறைந்தது 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

>> நமதூருக்கு அருகிலுள்ள அல்லது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளை தேர்வு செய்துள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இதர பகுதிகளிலுள்ள கல்லூரிகளை தேர்வு செய்திருந்தால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். அது நியாயமான காரணமாக இருந்தால் பரிசீலிக்கப்படும்.

>> ஹாஃபிழ் மாணவர்கள் மற்றும் இமாம்கள்- முஅத்தின்களின் பிள்ளைகளுக்கும், விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்த (sports category) மாணவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

>> நிதி உதவிக்கான படிப்புகள் (Field of Study) :

*** Undergraduate Courses (Arts & Science)

*** Polytechnic Diploma in Engineering

*** Industrial Training Institute (ITI)

*** Bachelor of Education (B. Ed)

*** Studies of Law

*** Other fields related to above disciplines.

>>> தயாரிக்கப்பட்டுள்ள இந்த IQRA Scholarship Loan Criteria விபரங்களை காயல் நல மன்றங்களுக்கும் அனுப்பிக் கொடுத்து, மன்றங்களின் ஆலோசனையையும் பெற்று அதற்கு இறுதி வடிவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.மேலும் எதிர்வரும் 2017-18 ஆம் ஆண்டுக்கான scholarship contribution (sponsors) ஐ மே மாதத்திற்கு முன்பே சேகரித்து விட வேண்டும்.அப்படியானால்தான் கிடைக்கப் பெற்ற நிதிக்கேற்றபடி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டிய கடன் உதவித்தொகையை முடிவு செய்வதற்கு தோதுவாக இருக்கும் என கருத்து கூறப்பட்டது.

>>> அடுத்து இக்ராஃவின் கட்டிட வரைபடம் (Building Plan) இறுதி செய்வது குறித்தும், கட்டிடம் சார்ந்த பணிகளை முடுக்கி விடுவது குறித்தும், இதற்கான நிதி சேகரிப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கட்டிட வகைக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் இக்ராஃ ஆயுள்கால உறுப்பினர் சந்தா மூலம் கிடைக்கப்பெற்றுள்ள நிதி, இதற்க்கு மேலும் வர வேண்டிய நிதி குறித்து விளக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய இக்ராஃ தலைவர் மொகுதூம் முஹம்மது அவர்கள், இதுவரை பெறப்பட்டுள்ள building plan தவிர நமதூரில் உள்ள HR Builders அவர்களிடம் நமது தேவைகளை எடுத்துக் கூறி, அதற்கேற்றவாறு அவர்களிடமும் ஒரு கட்டிட வரைபடம் பெற்றுக் கொண்டு, இதுவரை கிடைக்கப் பெற்ற அனைத்து வரைபடங்களையும் வைத்து இறுதியாக தகுந்ததோர் வரைபடத்தை தேர்வு செய்து அல்லது திருத்தம் செய்து, அதனடிப்படையில் வரைபடத்தை முடிவு செய்து அடுத்தக் கட்ட பணிகளை விரைவாக துவக்க வேண்டும் என்றும், எப்படியேனும் இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் இக்ராஃ பொதுக்குழுக்கூட்டத்திற்கு மறுநாள் அஸ்திவாரம் போடப்பட்டு பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும் என்றும், எதிர்வரும் டிஸம்பர் மாதத்திற்குள் இக்ராஃ அலுவலகத்தை புதிய கட்டிடத்தில் இயங்கும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.கூட்டத்தினர் யாவரும் இதனை ஆமோதித்தனர். மேலும் மேற்கண்ட பணிகளை துரிதப்படுத்தி முடிக்கும் வகையில் கீழ்க்கண்ட 10 பேர் கொண்ட செயல் கமிட்டி அமைக்கப்பட்டது.

1. ஹாஜி டி .ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர் , 2. ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா) , 3.ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால் , 4.ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், 5. ஹாஜி எம்.எஸ். ஜரூக், 6.ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி, 7.ஹாஜி எல்.டி .எஸ்.செய்யது ஸித்தீக், 8.ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலி, 9. கே.ஜே.ஷாஹுல் ஹமீது, 10. எம்.எம்.ஷாஹுல் ஹமீது.

>>> இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.இதில் கலந்து கொண்ட பல சிறப்பு அழைப்பாளர்கள் பல்வேறு ஆலோசனைகள் ,கருத்துக்களைத் தெரிவித்ததோடு தேவையான விளக்கங்களையும் கேட்டுப் பெற்றனர்.கல்விசார் நிகழ்ச்சி குறித்து பல ஆலோசனைகளையும் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1 :

இந்த செயற்குழுவில் தாக்கல் செயயப்பட்ட ''சந்தியுங்கள் முதல் மாணவரை - 2016'', ''விடியலை நோக்கி ...'', வினாடி வினா போட்டி '' போன்ற நிகழ்ச்சிகளின் -வரவு செலவு கணக்கை இக்கூட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கிறது.

தீர்மானம் 2 :

சமர்ப்பிக்கப்பட்ட IQRA LOAN CRITERIA வை (சிறிய திருத்தங்களுடன்) இக்கூட்டம் ஏகமனதாக ஏற்றுக் கொள்கிறது.

தீர்மானம் 3 :

நமதூரில் உள்ள HR Builders ஐ Building Plan Consultant ஆக மட்டும் ஏற்படுத்தி, அவர்களிடம் நமது தேவைகளை எடுத்துக் கூறி, ஆலோசனை செய்து அவர்களிடம் ஒரு கட்டிட வரைபடம் பெற்றுக் கொள்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் 4 :

இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் இக்ராஃ பொதுக்குழுக்கூட்டத்திற்கு மறுநாள் இக்ராஃ கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு (Foundation ) நிகழ்ச்சியை வைத்துக் கொள்வது என இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி .சுலைமான் அவர்கள் நன்றியுரை கூற, செயற்குழு உறுப்பினரும், ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் செயலருமான அல்ஹாஃபிழ் எம்.ஏ.செய்யது முஹம்மது அவர்களின் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் மதியம் 01:15 மணியளவில் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் (தலைவர், இலங்கை காயல் நல மன்றம்), கேஎம்.என்.மஹ்மூது ரிபாய் (செயலர், சிங்கப்பூர் காயல் நல மன்றம்), ஹாஜி பி.எம்.ரஃபீக் புஹாரி (செயலர், இலங்கை காயல் நல மன்றம்), ஹாஜி எம்.ஏ .எஸ்.செய்யது அபுதாஹிர் (தலைவர்,ஜெய்ப்பூர் காயல் நல மன்றம்), அல்ஹாஃபிழ் எல்.அப்துல் மத்தின் (செயற்குழு உறுப்பினர், ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம்), எம்.டபிள்யு.ஹாமீது ரிஃபாய் (செயற்குழு உறுப்பினர், ஜித்தா காயல் நல மன்றம்), டாக்டர் எம்.என்.முஹம்மது லெப்பை, சாளை எஸ்.ஷேக் நவாஸ், கே.டி .ஷாஹுல் ஹமீது பாதுஷா (சிங்கப்பூர் காயல் நல மன்றம்), பொறியாளர் எம்.ஏ.எம்.அபூபக்கர் (லண்டன்), ஹாஜி குளம் முஹம்மது இபுறாஹிம் (KCGC -சென்னை), ஹாஜி மக்கி நூஹுத் தம்பி , ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (ஹாஜி காக்கா), ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி, ஹாஜி எஸ்.இப்னு ஸவூது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இலங்கை காயல் நல மன்ற தலைவர் ஹாஜி ஷாஜஹான் (துரை) அவர்களுடன், இலங்கை இஸ்லாமிக் சென்டர் இயக்குனரும், அதன் மன்றக் குழு உறுப்பினருமான அக்பர் அலி கரீம் JP அவர்களும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். கூட்டத்தின் துவக்கம் முதல் இறுதி வரை முன் வரிசையில் அமர்ந்து அவதானித்த அவர்கள், கூட்டம் நிறைவுற்றதும் இக்ராஃ தலைவர் மொகுதூம் முஹம்மது அவர்களை தனியாக அழைத்து, இக்ராஃவின் எண்ணற்ற சேவைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, செயற்குழு கூட்டம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும், வழங்கப்பட்ட தகவல்கள், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்ட தெளிவான பதில்கள் யாவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்ததாகவும் கூறி, இக்ராஃவின் சேவையறிக்கையை இலங்கை இஸ்லாமிக் சென்டர் சேர்மன் எம்.ஹுஸைன் முஹம்மது JP (கொழும்பு முன்னாள் மேயர், மற்றும் ஸவூதி அரேபியாவுக்கான இலங்கைத்தூதர்) அவர்கள் பெயருக்கு அனுப்பித் தருமாறும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பெரிய அளவிலான கல்வி உதவித்தொகை (Scholarship) வழங்கிடும் , ஸவூதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் IDB (Islamic Development Bank) scholarship பிரிவுக்கு - இலங்கையில் தாங்கள் பொறுப்பில் உள்ளதாகவும், தங்கள் சார்பில் இக்ராஃ வுக்கு அவர்களிடம் சிபாரிசு செய்திட முயற்சிகள் மேற்கொள்வோம் என்றும் கேட்டுக் கொண்டார். இக்ராஃ நிர்வாகத்தின் சார்பாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட, இக்ராஃவின் மூலம் முழுப்பொறுப்பேற்கப்பட்டு M.Sc. Media & Communication (News Media 2 years Course) பயின்று வரும் மாணவருக்கு லேப்டாப் தேவையென்ற கோரிக்கையை உடனடியாக ஏற்று, அவருக்கான லேப்டாப்- ஐ (Intel i5 , 4 GB RAM) இக்ராஃ தலைவர் மற்றும் அங்கத்தினர் சிலரின் அனுசரணையுடன் வாங்கி இக்ராஃ தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் துணைத்தலைவருமான எம்.எம்.மொகுதூம் முஹம்மது அவர்களால் இக்ராஃ அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.



இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது
நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved