| 
   
  
வழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்தையொட்டி காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 
  
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு 15 நாட்களுக்கு மட்டும் அனுசரணை கோரப்பட்டுள்ளது. 
  
இதுகுறித்து, அப்பள்ளியின் தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான், செயலாளர் என்.டி.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ ஆகியோரிணைந்து வெளியிட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:- 
  
அன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்... 
  
இறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நமது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமை போன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 
  
கறிகஞ்சிக்கு ரூ.7,500/- என்றும்,  
வெண்கஞ்சிக்கு ரூ.6,000/- என்றும் 
நாளொன்றுக்கு அனுசரணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  
நமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, இதன் சுற்றுப்புறத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மீனவ குடும்பத்தினர். எனினும், அவரவர் சக்திக்குட்பட்டு நம் ஜமாஅத்தின் நலத்திட்டப் பணிகளுக்கு உதவி வருகின்றனர். 
  
இங்குள்ள மக்களுக்கு மார்க்க அடிப்படை அறிவு சில ஆண்டுகளாகத்தான் முறைப்படி ஊட்டப்பட்டு வருகிறது. போதிய மார்க்க விழிப்புணர்வை இதுவரை முழுமையாக பெற்றிடாத இம்மக்களுக்குத் தேவையான - மார்க்கம் தொடர்பான அனைத்து திட்டங்களும் நம் பள்ளியின் மூலமே செய்யப்பட்டு வருகிறது. 
  
அந்த அடிப்படையில், ஆண்டுதோறும் ரமழான் காலங்களில் இம்மக்களை - குறிப்பாக மாணவ-மாணவியரை ஒவ்வொரு நாளும் நோன்பு நோற்க ஊக்கப்படுத்துவதோடு, அவர்களை பள்ளிக்கே வரவழைத்து நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
  
அத்துடன் அவர்களின் பெற்றோர் நோன்பு துறப்பதற்காக - பள்ளியில் தயாரிக்கப்பட்ட நோன்புக் கஞ்சி - அவர்களின் இல்லத்திற்கே நேரடியாகச் சென்று வினியோகிக்கப்பட்டு வருகிறது. 
  
எனவே, அன்பான நமதூர் பெரியோர்களே, தாய்மார்களே! இப்பள்ளியை உங்கள் மஹல்லாவாக நினைத்து, கடமை உணர்வுடன் குறைந்தபட்சம் ஒருநாள் செலவை ஏற்பதன் மூலம், கருணையுள்ள ரஹ்மான் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையைப் பெற்றிட அன்புடன் வேண்டுகிறோம். 
  
கடந்த ஆண்டு நாம் இதே இணையதளத்தில் வேண்டுகோள் விடுத்ததையடுத்து - வேகவேகமாக அனுசரணைகள் வந்து சேர்ந்தன. கடந்தாண்டுகளில் தேவையான அனுசரணை கிடைக்கப்பெற்றதும், “போதும்” என்ற தகவலை நாமே அனைவருக்கும் தெரிவித்துள்ளோம். 
  
அதுபோல, இவ்வாண்டும் உங்கள் அனுசரணைகளை முந்திக்கொண்டு வழங்கி எமது சிரமங்களைக் குறைத்திடுமாறு அன்புடன் வேண்டுவதோடு, தேவைப்படும் 15 நாட்களுக்கும் அனுசரணைகள் முழுமையாகப் பெறப்பட்டுவிட்டால், இதே இணையதளத்தில் அதுகுறித்து தங்கள் யாவருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு அறியத் தருகிறோம். 
  
கருணையுள்ள அல்லாஹ் நம் யாவரின் நற்கருமங்களையும் கபூல் செய்து, ஈருலக நற்பேறுகளை நமக்கு நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன். 
  
அனுசரணை செய்ய விரும்புவோர், செயலாளர் ‘முத்துச்சுடர்’ என்.டி.இஸ்ஹாக் லெப்பை அவர்களை, +91 99653 34687 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொண்டு,  தமது பங்களிப்பை உறுதி செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். 
   
வங்கி மூலம் அனுசரணையளிக்க விரும்புவோர்,  
Account Number: 615301502714 
ICICI Bank, Kayalpatnam Branch 
என்ற வங்கிக் கணக்கிற்கு, ‘Nonbu Kanji Sponsor’ என்று குறிப்பிட்டு அனுப்பித் தர அன்புடன் வேண்டுகிறோம்.
  
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் சார்பில் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணை கோரி கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1437) வெளியிடப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  |