| 
 பள்ளிக்கூடங்களில் 06 முதல் 09ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, வி யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் விளையாட்டுப் போட்டிகள், வரும் டிசம்பர் மாதம் 23ஆம் நாள் முதல் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து வி யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நிறுவனர் அலீ ஃபைஸல் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:- 
  
 காயல்பட்டினம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை மெருகேற்றவும், வீரர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் கடந்த 7 ஆண்டுகளாக, எல்லாம் வல்ல இறைவனின் துணையுடன், நமது ஊரின் விளையாட்டு மைதானங்களின் ஆதரவுடனும், விளையாட்டு வீரர்களின் ஒத்துழைப்புடனும், வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் We Are United By Sports என்ற தாரக மத்திரத்துடன் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளை நடத்தி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். 
  
வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கடந்த 7 வருடங்களாக 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருந்து வந்தது. 
  
அந்த இளம் வீரர்களின் ஆர்வத்தை அறிந்த நமது வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப், அவர்களுக்காக வீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் ஜூனியர் போட்டிகளை இன்ஷாஅல்லாஹ் வருகின்ற டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் பள்ளி விடுமுறை நாட்களில் நடத்திட திட்டமிட்டுள்ளது. 
  
இப்போட்டியில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். 
  
போட்டி அறிவிக்கப்பட்ட தேதிகளில், போட்டி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் (மழை காலமாக இருப்பதால்) அதனையடுத்து வரும் பள்ளி விடுமுறை காலத்தில் போட்டி நடத்தப்படும். 
  
இப்போட்டியில் பங்கேற்க உள்ள அணிகளுக்கான உரிமையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்... 
  
அலி ஃபைஸல் : 00852 97540095 
தஸ்லீம் : 00852 97431898 
அலாவுத்தீன் : 0091 9965974253 
சாஹூல்ஹமீத் : 0091 9884145525 
ஜஹாங்கிர் : 0091 9171776763
  
வி யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |