| 
 காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில், வாராந்திர கடனுதவி, ஜகாத் நிதியுதவி வழங்குவதற்கான சிறப்புக் கூட்டம் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது. 
  
அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், உதவிகள் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
  
இக்கூட்டத்தின்போது, கடனாக 11 பயனாளிகளுக்கும், ஜகாத் நிதியிலிருந்து 16 பயனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. 
  
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை நிர்வாகிகளான வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், டூட்டி சுஹ்ரவர்த்தி, வி.எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ, எஸ்.எம்.அஹ்மத் ஸுலைமான் ஆகியோர் கலந்துகொண்டனர். 
  
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |