| 
 சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 49ஆவது பொதுக்குழுக் கூட்டம், வரும் மார்ச் மாதம் 06ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, மன்றத்தின் சார்பில், அதன் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:- 
  
 அன்பின் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், 
  
இன்ஷாஅல்லாஹ் வரும் மார்ச் மாதம் 06ஆம் தேதி நமது RKWA-வின் 49ஆவது பொதுக்குழுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
  
இடம்: ஷிஃபா அல் ஜஸீரா பாலி கிளினிக் மாடியில் (பார்ட்டி ஹால்)  
தேதி: 06 மார்ச் (வெள்ளிக்கிழமை)  
நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 
  
** இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (காயல் களரி சாப்பாடு)** 
  
எனவே, மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்கள் அனைவரும், இச்செய்தியையே முறையான அழைப்பாகக் கருதி அவசியம் கலந்துகொள்ள வருமாறும், நமதூரிலிருந்து புதிதாக வந்திருப்போர் மற்றும் உம்ரா / சுற்றுலா விசாவில் வந்திருக்கும் உங்களுக்கு அறிமுகமான அனைத்து காயலர்களையும் இவ்வருமையான நிகழ்ச்சியில் பங்கெடுக்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
  
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
ரியாத் காயல் நல மன்றத்தின் 48ஆவது பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |