| காயல்பட்டினம் புதுப்பள்ளி துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.புகாரீயின் சகோதரி - தைக்கா தெருவைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீத் உம்மாள் நேற்று (ஜனவரி 24 சனிக்கிழமை) 18.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார், 
 மர்ஹூம் ஷம்சுத்தீன் அவர்களின் மகளும்,
 
 மர்ஹூம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களின் மருமகளாரும்,
 
 மர்ஹூம் மஹ்மூத் மாமுனா லெப்பை அவர்களின் மனைவியும்,
 
 புதுப்பள்ளி துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.புகாரீயின் சகோதரியும்,
 
 ஹாஜி ஜெய்னுல் ஆப்தீன், ஹாஜி சுல்தான் ஆகியோரின் தாயாரும்,
 
 ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மாமியாரும் ஆவார்.
 
 அன்னாரின் ஜனாஸா, இன்று 09.30 மணியளவில், புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
 |