| 
 காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற  
வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.
  
கோமான் தெருக்களில் சுமார் 972 வாக்குகளும், கொம்புத்துறை (கடையக்குடி)  பகுதியில் சுமார் 546 வாக்குகளும், அருணாச்சலபுரம் பகுதியில் 
சுமார் 509 வாக்குகளும் என சுமார் 2025 வாக்காளர்கள் கொண்ட இந்த வார்டில், ம.அமலக்கனி (அ.தி.மு.க.), எஸ்.ஐ.அஸ்ரப் (சுயேட்சை) என  இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
  
2001, 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் - இவ்வார்டில், வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரங்களை 
காணலாம்.
  
2001 உள்ளாட்சி மன்ற தேர்தல் >>
  
பதிவான வாக்குகள் - 849 
செல்லாதவை - 11
  
(1) அபுசாலிஹ் - 460 (வெற்றி வேட்பாளர்) 
(2) ராஜேந்திரன் - 240 
(3) முத்துசாமி - 138
  
2006 உள்ளாட்சி மன்ற தேர்தல் >>
  
பதிவான வாக்குகள் - 989
  
(1) திருத்துவராஜ்	 (சுத்தி, அரிவாள், நட்சத்திரம்) - 280 (வெற்றி வேட்பாளர்) 
(2) மதியழகன்	 (இரட்டை இலை) - 155 
(3) முகம்மது பாரூக் என்.எம்.	 (மேசை விளக்கு) - 270 
(4) மைக்கேல் ததேயு எம்.எஸ்.	 (வைரம்) - 184 
(5) ரோஸ்லின் பியூலா மேரி செல்வி தே.	 (தண்ணீர் குழாய்)	 - 47 
(6) ஜாபர் சாதிக் ஏ. ஹெச்.	 (அரிக்கன் விளக்கு) - 53
  
2011 உள்ளாட்சி மன்ற தேர்தல் >>
  
பதிவான வாக்குகள் - 1298
  
(1) அமலகனி ம. (உலக உருண்டை) - 260 
(2) கதிரவன் அ. (வைரம்) - 177  
(3) செந்தமிழ் செல்வன் எம். (அரிக்கேன் விளக்கு) - 254 
(4) லுக்மான் அ. (குலையுடன் கூடிய தென்னைமரம்) - 607 (வெற்றி வேட்பாளர்)
  
[செய்தி திருத்தப்பட்டது  @ 6:15pm/13.09.2014]
  |