Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:53:57 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14383
#KOTW14383
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 28, 2014
கத்தர் காயல் நல மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! எல்.கே.மேனிலைப்பள்ளி மீண்டும் கோப்பையைத் தட்டிச் சென்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4498 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐந்தாமாண்டு வினாடி-வினா போட்டி:

காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, கத்தர் காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

ஐந்தாமாண்டு போட்டி, 22.06.2014 ஞாயிற்றுக்கிழமையன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெற்றது. இதுகுறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-



பங்கேற்ற மொத்த அணிகள்:

சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 13 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 14 அணிகளும்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 23 அணிகளும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 15 அணிகளும்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 19 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 4 அணிகளும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 25 அணிகளும்
என இந்த 7 பள்ளிகளிலிருந்து, அணிக்கு 3 பேர் வீதம் 113 அணிகளில் 339 மாணவ-மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

போட்டி நடத்துநர்:

புதுயுகம் தொலைக்காட்சியில், பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை தயாரித்து நடத்தும் - கோவை நடராஜன் கிருஷ்ணசாமி இப்போட்டியை நடத்தினார்.







நுழைவுப் போட்டி:

முதற்கட்ட போட்டி எழுத்து முறையில் நடத்தப்பட்டது. போட்டி நடத்துநர் ஆங்கிலத்தில் வாசித்து, தமிழாக்கமும் செய்து விளக்க, மாணவ-மாணவியர் அவற்றுக்கான விடைகளை - கொடுக்கப்பட்ட விடைத்தாள்களில் எழுதினர்.

நுழைவுத் தேர்வு முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் விடைத்தாள்களை, கத்தர் காயல் நல மன்றத்துடன் இப்போட்டியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மதிப்பீடு செய்து, இறுதிப்போட்டிக்குரிய 6 அணிகளை முறைப்படி தேர்வு செய்தனர்.

இறுதிப்போட்டியில் இடம்பெற்ற அணிகள்:

பொது அறிவு சார்ந்து கேட்கப்பட்ட 26 வினாக்களில், அதிக வினாக்களுக்கு விடையளித்ததன் மூலம்,
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 1 அணி,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 2 அணிகள்
என மொத்தம் 6 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.





மதிப்பீட்டாளர்கள்:

தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ‘நெட்காம்’ புகாரீ, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் மதிப்பீட்டாளர்களாகக் கடமையாற்றினர்.

கேள்விச் சுற்று, விரைவுக் கேள்விச் சுற்று, அசைபட விரிதிரை மூலம் ஒலி - ஒளிச் சுற்று என பல விதங்களில் கேள்விகள் கேட்கப்பட, மாணவ-மாணவியர் ஆர்வமுடன் விடையளித்தனர்.





எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பை:

நிறைவில்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
எம்.எஸ்.செய்யித் அஹ்மத்,
இசட்.எச்.ஸஈத் அலீ,
எம்.ஐ.ஹபீப் முஹம்மத்
ஆகியோரடங்கிய அணி 55 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது.

இவ்வணிக்கு ரூபாய் 5 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களையும், அணி சார்ந்த எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பையையும், பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய நகரப் பிரமுகர் எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வழங்கினார்.







5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து முதலிடத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டாமிடம்:

எல்.கே.மேனிலைப்பள்ளியின்
பி.விக்னேஷ்,
எஸ்.என்.ஸதக் துஃபைல்,
எஸ்.லட்சுமி நாராயணன்
ஆகியோரடங்கிய அணி 50 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு மற்றும் சான்றிதழ்களை, விழாவில் முன்னிலை வகித்த - இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுவின் மூத்த உறுப்பினர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வழங்கினார்.



மூன்றாமிடம்:

சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின்
பாளையம் நஃபீஸத் ஆமினா,
எம்.ஏ.சி.ஃபாத்திமா ஹுமைரா,
எஸ்.எச்.அஹ்மத் தஸ்னீம்
ஆகியோரடங்கிய அணி 45 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.

இவ்வணிக்கு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, முன்னிலை வகித்த - இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வழங்கினார்.

இதர 3 அணிகள்:

இறுதிப்போட்டியில் பங்கேற்றதன் மூலம் சான்றிதழ் பெற்ற இதர 3 அணிகள்:-



எல்.கே.மெட்ரிக் பள்ளியின்
எஸ்.டீ.ஆயிஷா ஹுஸ்னா
எம்.எஸ்.ஹமீதா நாஃபிஆ

சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின்
பி.கோகுல் சந்திரா
எஸ்.எம்.கஸ்ஸாலி மரைக்கார்
பி.சுபாஷ்

மற்றும் அதே பள்ளியின்
கே.ஹம்ஸத் ஸதக்கத்துல்லாஹ்
ஹாஃபிழ் பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ்
பி.அப்துல் ஹமீத்

இவ்வணியினருக்கு, கடந்த ஆண்டில் வினாடி-வினா போட்டியை நடத்திய காயல்பட்டினம் எல்.டீ.இப்றாஹீம் சான்றிதழ்களை வழங்கினார்.

நினைவுப் பரிசுகள்:

பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, வினாடி-வினா போட்டியை நடத்திய நடராஜன் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.



பார்வையாளர்களுக்கும் பரிசுகள்:

போட்டியில், 6 அணியினரும் விடையளிக்கத் தவறிய கேள்விகள் பார்வையாளர்களிடம் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டன.





நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியும், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளருமான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார்.







ஏற்பாடு:

போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில், பார்வையாளர்களாக பலர் கலந்துகொண்டனர், ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர் ஹுஸைன் ஹல்லாஜ், இக்ராஃ கல்விச் சங்க மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோருடன், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், இக்ராஃ அலுவலக முன்னாள் பொறுப்பாளர் காதிர் சுலைமான் மற்றும் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) அங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.



கடந்தாண்டு (2013) கத்தர் காயல் நல மன்றம் சார்பில் நடத்தப்பட்ட - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. காலம் கடந்து வந்த செய்தி
posted by Faizal Rahman (Doha-Qatar) [28 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36796

அஸ்ஸலாமு அழைக்கும்,

இச்செய்தியை பார்த்தவுடன் வினாடி வினா போட்டி மீண்டும் நடத்து விட்டதோ என்று தான் நினைத்து விட்டேன்.

காலம் கடந்து வந்த செய்தி( 2 மாதம் கழித்து)

அதில் கலந்து கொண்ட சில கத்தார் காயல் உறுப்பினர்கள் மீண்டும் கத்தார் வந்து அடுத்து விடுமுறைக்கு தயாராகி கொண்டு இருகிறார்கள்.

இத்தனை நாள் தாமததுக்கு பிறகு எங்களின் செய்தியை மறக்காமல் 2 மாதம் கழித்து வெளி இட்டதற்கு மிகவும் நன்றி....

இப்படிக்கு,
பைசல் ரஹ்மான்
தோஹா - கத்தார்

Moderator: நிகழ்ச்சி நடந்தவுடனேயே செய்தி வெளியிடப்பட்டுள்ள விபரம் இச்செய்தியின் துவக்கத்திலேயே தரப்பட்டுள்ளது. இச்செய்தியில் இடம்பெற்றுள்ள விரிவான தகவல்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [28 August 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36802

அஸ்ஸலாமு அலைக்கும் ,

வினாடி வினா என்றால் சுட சுட என்ற பொருளும் உண்டு . அனால் அதன் செய்தி ஆரிபவன் ஆனாலும் தகவலுக்கு நன்றி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வரும் கத்தார் காயல் நல மன்றத்துக்கு பாராட்டுகள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Solukku.ME.Syed Md Sahib (QATAR) [28 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36809

அஸ்ஸலாமுஅலைக்கும்.லேட்டாக செய்திகள் வந்தாளும் லேட்டஸ்ட்டாக வந்ததற்கு நன்றி.கத்தார் பிரதிநிதி அவ்வளவு பிஸி ஆக இருக்கிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved