Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:38:15 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14065
#KOTW14065
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 11, 2014
மத்திய பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2469 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.



2014-15 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிறிய மற்றும் மிகச்சிறிய வரிவிதிப்பிற்கு உரியவர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும் அவர்களுக்கு சாதகமானதே.

சொந்த வீட்டில் குடியிருப்பவர் பெறும் வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு அளிக்கப்படும் விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.

உற்பத்தி வரிவிதிப்பின் மூலம், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. வரிவிலக்கு மூலம் ஏழை மக்கள் பயன்படுத்தும் சிஆர்டி தொலைக்காட்சிகள் விலை குறைகிறது. அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.





மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

[[[]]] பயோ - மெடிக்கல் கழிவு அகற்றும் பணிக்கு சேவை வரியில் விலக்கு.

[[[]]] தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரங்களுக்கு சேவை வரி விதிப்பு. அச்சு விளம்பரங்களுக்கு சேவை வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது.

[[[]]] புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி 22% அதிகரிக்கப்படுகிறது.

[[[]]] கல்வி வரியில் மாற்றமில்லை. வருமான வரியில் கல்விக்கான வரி 3% ஆகவே நீடிக்கும் என அறிவிப்பு.

[[[]]] நாடு முழுவதும் புதிதாக 60 வருமான வரிச் சேவை மையங்கள் அமைக்கப்படும்.

[[[]]] நேரடி வரி, மறைமுக வரி வசூல் இலக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டதே பின்பற்றப்படும்.

[[[]]] ரூ. 25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு 15% வரிச்சலுகை வழங்கப்படும்.

[[[]]] வரிவிதிப்பின் மூலம் ரூ.9.77 லட்சம் கோடி வருவாய் ஈட்டலாம் என அரசு எதிர்பார்க்கப்படுகிறது.

[[[]]] 80(சி) பிரிவின் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

[[[]]] வீட்டுக் கடனுக்கான வரிச் சலுகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்வு.

[[[]]] சேமிப்புக்கான வரி விலக்கு வரம்பு ரூ.1 லட்சமாக உயர்வு.

[[[]]] தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

[[[]]] வருவாய் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 2.1% ஆக இருக்கும்.

[[[]]] வடகிழக்கு மாநிலங்களுக்காக பிரத்யேகமாக 'அருண் பிரபா' என்ற 24 மணி நேர தொலைக்காட்சி அலைவரிசை துவங்கப்படும்.

[[[]]] வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவையை மேம்படுத்த ரூ.1000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.

[[[]]] இமாலய மலை தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள உத்தராகண்டில் தேசிய அகாடமி நிறுவப்படும்.

[[[]]] இடம்பெயர்ந்த காஷ்மீரிக்கள் மறுவாழ்விற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

[[[]]] கங்கை நதியை சுத்தப்படுத்த வெளிநாடு வாழ் இந்தியர் நிதி திட்டம்.

[[[]]] கங்கை நதியை தூய்மைப்படுத்தி, மேம்படுத்த ரூ.2037 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமாமி கங்கா ("Namami Ganga") என இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

[[[]]] வரவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

[[[]]] மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். தேசிய விளைடாட்டு அகாடமி அமைக்கப்படும்.

[[[]]] தற்போது நாடு முழுவதும் 15,000 கிமீ தூரத்திற்கு எரிவாயு குழாய்கள் இருக்கின்றன. பொதுத்துறை - தனியார் துறை பங்களிப்பில் இது இருமடங்காக அதிகரிக்கப்படும்.

[[[]]] காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

[[[]]] 6 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

[[[]]] தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

[[[]]] ரூ.100 கோடி செலவில் போர் நினைவிடம் கட்டப்படும்.

[[[]]] மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டம் மறு சீரமைக்கப்படும்.

[[[]]] கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ.14,389 கோடி பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்.

[[[]]] புதிய மருத்துவக் கல்லூரிகள் இந்த நிதியாண்டில் அமைக்கப்படும்.

[[[]]] தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் ரூ.500 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்

[[[]]] இயற்கை விவசாயத்தை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்படும்.

[[[]]] புதிய யூரியா கொள்கை கொண்டு வரப்படும்

[[[]]] விவசாயிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். விவசாய கடன்களை சரியாக திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3% ஊக்கத் தொகை வழங்கப்படும்.

[[[]]] நடப்பு நிதியாண்டில் விவசாய கடனாக ரூ.8 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

[[[]]] வேளாண் துறையில், 4% வளர்ச்சியை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

[[[]]] படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே புதிதாக அமைக்கப்பட்ட 6 எய்மஸ் மருத்துவமனைகளும் செயல்படத் துவங்கியுள்ளன. மேலும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும்.

[[[]]] சமுதாய வானொலி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

[[[]]] 2019-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.

[[[]]] கிராமப்புற வீட்டு வசதிக்கு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

[[[]]] விவசாயத்தில் புதிய யுக்திகளை அறிமுகப்படுத்த அசாம், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறப்பு மையம் அமைக்கப்படும்.

[[[]]] நிலமில்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு 'நபார்ட்' வங்கி மூலம் நிதியுதவி வழங்க பரிந்துரை.

[[[]]] காக்கிநாடா துறைமுகத்தில், வன்பொருள் ஏற்றுமதிகளை கையாளும் மையம் உருவாக்கப்படும்.

[[[]]] ரூ.100 கோடி செலவில் மதரஸாக்கள் நவீனப்படுத்தப்படும்.

[[[]]] கிராமங்களில் மின்சார வசதியை மேம்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

[[[]]] கிராமப்புறங்களில் சுகாதார சேவையை மேம்படுத்த, நவீனமயமாக்கப்பட்ட 15 மாதிரி கிராம சுகாதார மையங்கள் நிறுவப்படும்.

[[[]]] விவசாய சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.

[[[]]] தெலுங்கானாவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஆந்திரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

[[[]]] பஞ்சாப், இமாச்சல பிரதேசம், பிஹார், ஒடிசா, ராஜஸ்தானில் ஐ.ஐ.எம்.கள் அமைக்கப்படும்.

[[[]]] ரூ.500 கோடி செலவில் மேலும் 5 ஐ.ஐ.டி.க்களும், 5 ஐ.ஐ.எம்.களும் நிறுவப்படும். ஜம்மு, சத்தீஸ்கர், ஆந்திரம், கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் ஐ.ஐ.டி.,கள் அமைக்கப்படும்.

[[[]]] பெருநகரங்களில் பெண்கள் பாதுகாக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

[[[]]] பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கு தீர்வு காண டெல்லியில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்படும்.

[[[]]] ஆண் - பெண் பாலின பாகுபாடை தவிர்க்க பள்ளிகளில் இது தொடர்பான விழிப்புணர்வு கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.

[[[]]] பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டம் (Beti Bachao, Beti Padhao yojana) ரூ.100 கோடி செலவில் அமலுக்கு வருகிறது.

[[[]]] பிரெயில் எழுத்துக்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வரும், இதற்காக 15 பிரெயில் அச்சகங்கள் அமைக்கப்படும்.

[[[]]] வரிச் சட்டங்களில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள தொழில்துறையுடன் ஆலோசிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.

[[[]]] பாதுகாப்புத்துறை, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும்.

[[[]]] அந்நிய நேரடி முதலீடு மூலம் கூடுதல் நிதி ஆதாரம் திரட்ட குறிப்பிட்ட சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும்.

[[[]]] அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள வேண்டும். முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு வரப்படும்.

[[[]]] தாழ்த்தப்பட்ட மக்கள் வளர்ச்சிக்காக ரூ.50,548 கோடி ஒதுக்கப்படுகிறது.

[[[]]] ரூ.200 கோடி செலவில் குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை நிறுவப்படும்.

[[[]]] சுகாதார மேம்பாட்டிற்கு 'பாரத் ஸ்வச் யோஜனா' செயல்படுத்தப்படும்.

[[[]]] நீர்பாசனத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். இதற்காக 'பிரதான் மந்திரி கிருஷி சிச்சாயின் யோஜனா' செயல்படுத்தப்படும்.

[[[]]] 9 நகரங்களில் இ- விசா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

[[[]]] கிசான் விகாஸ் பத்திர திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

[[[]]] வீடுகளுக்கு 24 மணி நேரம் மின்சார வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

[[[]]] 100 நவீன நகரங்களை உருவாக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

[[[]]] வங்கிகளுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்படும்.

[[[]]] உற்பத்தித் துறையிலும், கட்டுமானத் துறையிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவது அவசியம்.

[[[]]] வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

[[[]]] அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7% முதல் 8% வரை அதிகரிப்பதே இலக்கு.

[[[]]] வரி விவகாரங்களை கையாள உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

[[[]]] மானியங்கள், எரிபொருள் பொருளாதார கொள்கைகள், உரங்களுக்கான மானியம் மறு சீரமைக்கப்படும்.

[[[]]] பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும். நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.1% என்ற சவாலான இலக்கை எட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

[[[]]] கவர்ச்சித் திட்டங்கள், அநாவசிய செலவினங்களை அரசு தவிர்க்க வேண்டும். அரசு செலவினங்களை நிர்வகிக்க தனியாக ஒரு ஆணையம் அமைக்கப்படும்.

[[[]]] இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த மிக முக்கியமான, துணிச்சலான முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

[[[]]] இராக் உள்நாட்டு சர்ச்சையும், பருவமழை எதிர்பார்த்த அளவைவிட குறைவாக பெய்துள்ளதும் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

[[[]]] கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருந்தது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.

[[[]]] மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை மத்திய அரசு உணர்ந்து இருக்கிறது.

[[[]]] வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வை இனியும் அரசு பொறுத்துக் கொள்ளாது.


தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மதரசாக்கள் விரிவுபடுத்தப்படு ம்
posted by mackie noohuthambi (chennai) [12 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35895

நிதி நிலை அறிக்கையில் என்ன என்ன திட்டங்கள் கூறப்பட்டிருந்தாலும் அவரவர்கள் துறைக்கு என்னென்ன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதைத்தான் கவனிப்பார்கள்.

அந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மதரசா எனபது முக்கியமானது. எனவே 100 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கான திட்டங்கள் என்ன என்பதை தெளிவாக தெரிந்து இந்த சமுதாயத்துக்கு தெரிவிக்க வேண்டியது சமுதாய கட்சிகள்., உங்களை போன்ற ஊடகங்கள் ஆகியவற்றுக்குள்ள கடமை.

எனவே இன்னும் தெளிவான விவரங்கள் அறிந்து இந்த இணையத்தளத்தில் அறியத்தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
கடையில்லை, குடியுண்டு?!  (13/7/2014) [Views - 3813; Comments - 9]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved