செய்தி எண் (ID #) 13919 | | |
திங்கள், ஜுன் 16, 2014 |
மஹ்ழரா அரபிக்கல்லூரி தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் காலமானார்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது!) |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 6876 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (62) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை முன்னாள் தலைவர் மற்றும் நடப்பு கவுரவ தலைவரும், காயல்பட்டினம் நாட்டாண்மை முஸ்லிம் முத்துச்சாவடி பொருளாளரும், நெல்லை முஸ்லிம் அநாதை நிலையத்தின் (MOC) முன்னாள் துணைத்தலைவரும், ‘மரைக்கார் இன்டஸ்ட்ரீஸ்’ எனும் பெயரில் - கோல்கத்தா, சென்னை, தூத்துக்குடி நகரங்களில் தொழிற்சாலை நடத்தி – பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியவருமான - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹாஜி எம்.எஸ்.எம்.முஹம்மத் பாஜுல் அஸ்ஹப் என்ற பாஜுல் அஸ்ஹப் ஹாஜியார், இன்று 15.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. அன்னார்,
மர்ஹூம் அ.லெ.செ.முஹ்யித்தீன் சதக்கத்துல்லாஹ் மரைக்கா ஸாஹிப் அவர்களின் மகனும்,
மர்ஹூம் அம்பலம் அஹ்மது நெய்னா அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி எம்.பி.ஏ.ஜமால் முஹம்மத், ஹாஜி எம்.பி.ஏ.அஹ்மத் நெய்னா, ஹாஜி எம்.பி.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் மரைக்கா ஸாஹிப், ஹாஜி எம்.பி.ஏ.காஜா முஹ்யித்தீன், ஹாஜி எம்.பி.ஏ.முஹம்மத் ஸலீம் (கைபேசி எண்: +91 94426 07776), ஹாஜி எம்.பி.ஏ.அப்துந்நாஸர் ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் ஹாஜி பிரபு இசட்.ஏ.மஹ்மூத் நெய்னா, ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் மரைக்கா ஸாஹிப், மர்ஹூம் ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஸ்தஃபா கமால், ஹாஜி எல்.எஸ்.செய்யித் அஹ்மத், ஹாஜி அம்பலம் எஸ்.எச்.அஹ்மத் நெய்னா, ஹாஜி எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஜி எம்.எம்.முஹம்மத் இக்பால் ஆகியோரின் மாமனாரும்,
ஹாஜி பிரபு எஸ்.ஏ.முஹம்மத் ஃபாரூக் அவர்களின் தாய்மாமாவுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜூன் 17) செவ்வாய்க்கிழமை 17.00 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
K.J.ஷாஹுல் ஹமீத்
படம்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி
மறைந்த ஹாஜி எம்.எஸ்.எம்.பாஜுல் அஸ்ஹப் அவர்கள், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த ஜெயில்சிங்குடன்...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் தேசிய தலைவர் மறைந்த குலாம் மஹ்மூத் பனாத்வாலா மற்றும் தமிழ்நாடு மாநில முன்னாள் தலைவர் அ.கா.அ.அப்துஸ்ஸமத் ஆகியோருடன்...
தென்மாவட்ட மக்களால் ‘சின்னய்யா’ என அழைக்கப்பட்ட மறைந்த சிவந்தி ஆதித்தனாருடன்... (ஆண்டுதோறும் தனது பிறந்த நாளின்போது, சிவந்தி ஆதித்தனார், ஹாஜி எம்.எஸ்.எம்.பாஜுல் அஸ்ஹப் அவர்களது இல்லத்திற்கு தன் குடும்பத்தினருடன் வந்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கம்.)
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
[கூடுதல் தகவல்கள், படங்கள் இணைக்கப்பட்டன @ 23:50 / 16.06.2014] |