| காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த ‘தந்தி டிவி’யின் ‘உள்ளது உள்ளபடி’ என்ற 
தலைப்பிலான நேரலை நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 31) 14.00 மணி முதல் 15.00 மணி வரை ஒளிபரப்பட்டது. 
 அந்த நிகழ்ச்சியை  சென்னையில் 
இருந்து தந்தி டிவி யின் மூத்த செய்தியாளர் ஆண்ட்ரூஸ், காயல்பட்டினத்தில் இருந்து தந்தி டிவி  செய்தியாளர் தெய்வானை  ஆகியோர் 
ஒருங்கிணைத்தனர்.
 
 
  
 அரங்கில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்  நரசிம்ம ராஜ், தொலைபேசி மூலமாக கடலூரில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள் செல்வம், 
தொலைபேசி மூலமாக தூத்துக்குடியில் இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் பாத்திமா பாபு, காயல்பட்டினத்தில் இருந்து நேரடியாக - காயல்பட்டினம் 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள், ஆறுமுகநேரி உப்பள தொழில் அதிபர்கள் உட்பட பொது மக்கள் பலர் இந்நிகழ்ச்சியில் 
கலந்துக்கொண்டு தங்கள் கருத்துகளை வெளியிட்டனர்.
 
 
  
 இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தந்தி டிவி சார்பாக டி.சி.டபிள்யு. தொழில் நிறுவனத்திற்கு அழைப்பு விடப்பட்டதாக தெரிகிறது. அவ்வழைப்பினை அந்நிறுவனம் 
ஏற்றுக்கொள்ளவில்லை என இந்நிகழ்ச்சியின் போது அத்தொலைகாட்சியின் செய்தியாளர்களால் தெரிவிக்கப்பட்டது.
 
 மேலும் - இந்நிகழ்ச்சி, காயல்பட்டினத்தின் குறுக்கு சாலை அருகே அமைந்துள்ள, இத்தொழிற்சாலையை ஒட்டியுள்ள நீரோடைக்கு அருகில் இருந்து - 
உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துகளுடன்  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால் - 
இத்தொழிற்சாலையின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்கள், பிரச்சனை செய்யவே, தந்தி டிவி குழுவினர்கள் - இந்நிகழ்ச்சியை, நகரின் உள்ளிருந்து 
நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
 
 
  
 நேரடி ஒளிபரப்பின் போது பங்கேற்க மறுத்த டி.சி.டபிள்யு. தொழிற்சாலை நிர்வாகிகள், நிகழ்ச்சி முடிந்தப்பின் தந்தி டிவி செய்தியாளர்களை தொடர்பு கொண்டு 
தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
 
 
  
 DCW தொழிற்சாலை சார்பாக அதன் துணைத் தலைவர்களில் ஒருவரான ஜெயகுமார் தந்தி டிவிக்கு பேட்டி 
அளித்துள்ளார். 
அப்பேட்டி - தந்தி டிவியின் செய்தி களம் நிகழ்ச்சியில் நேற்றிரவு (ஜனவரி 31) 9:00 மணியளவில் ஒளிபரப்பாகியது.
 
 அந்த நிகழ்ச்சியின் முழு தொகுப்பு காண இங்கு அழுத்தவும். டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் துணைத் தலைவர் பேட்டி குறித்த செய்தி - அப்பதிவின் 12:39 நிமிடத்தில் இருந்து 14:03 நிமிடம் வரை உள்ளது.
 
 அப்பேட்டியில் டி.சி.டபிள்யு. துணைத் தலைவர் (வேலை) ஜெயகுமார் கூறிய தகவல்களின் சாராம்சம்:
 
 --- அரசு மூலமான தகவல்கள் பார்த்ததில் புற்று நோய் பரவுவதாக இல்லை
 
 --- புற்று நோயெல்லாம் காற்று சுவாசிச்சு எல்லாம் வரவே வராது
 
 --- சில பிரீதிங் டிரபல், காஃபு, கீஃபு எல்லாம் வரலாமே தவிர ... அது மாதிரி இருக்கலாம்
 
 --- இந்த மீனை சாப்பிட்டதால எல்லாம் புற்று நோய் எல்லாம்  ...(வார்த்தையை முடிக்க வில்லை)
 
 --- அது தவிர   மெர்குரி பற்றி சொன்னாங்க ... DCW நிறுவனம் 2002-2003 ல சிறந்த காஸ்டிக் சோடா நிறுவனம் விருது வாங்கியிருக்கு, அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைந்த மெர்குரி லெவல் தான் இருந்துச்சு
 
 --- 2007 ல நாங்க மெர்குரியை விட்டு மெம்ப்ரேன் செல் முறைக்கு மாறிட்டோம்
 
 --- இவங்களை விட நாங்க அடிக்கடி நீரை டெஸ்ட் பண்றோம். கடலிலே கலககுதானு பார்க்குறோம். அது மாதிரி எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை
 
 --- சமீபத்தில சோழமண்டலம் MS அசோசியேட்ஸ் அறிக்கையெல்லாம் கூட இருக்குது ... வேணும்னா உங்களுக்கு தரோம்
 |