| 
 காயல்பட்டினம் நகரில், அரசு பொது மருத்துவமனை, சத்துணவு மையங்கள், அங்கன்வாடி பள்ளிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் வளாகத்தில் இன்று காலை 07.00 மணியளவில், தமிழக அரசின் அறிவிப்பின்படி - 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ - இளம்பிள்ளைவாத தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. 
  
 
  
 
  
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், இன்று காலை 07.00 மணியளவில் - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி, முகாமைத் துவக்கி வைத்தார். 
  
 
  
 
  
அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் கே.ஜஃப்ரீ, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஏ.பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டினர். 
  
 
  
 
  
 
  
 
  
 
  
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை,  
ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி,  
இரத்தினபுரி சத்துணவுக் கூடம்,  
கீழ லெட்சுமிபுரம் துணை சுகாதார நிலையம்,  
துளிர் பள்ளி பழைய கட்டிடம், 
  
பெரிய சதுக்கை (அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்),  
பெரிய பள்ளி வளாகம் (காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு),  
கடையக்குடி சத்துணவுக்கூடம்,  
கற்புடையார்பள்ளி வட்டம் தேவாலயம்,  
அப்பாபள்ளி சதுக்கை, 
  
இளைஞர் ஐக்கிய முன்னணி,  
தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,  
கோமான் மேலத் தெரு பெண்கள் தைக்கா,  
ஓடக்கரை சத்துணவு மையம், 
எல்.கே.மேனிலைப்பள்ளி,  
அலியார் தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 
ஆகிய 14 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 3173 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டது. 
  
இதர காட்சிகள் வருமாறு:- 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
கள உதவி:  
ஹிஜாஸ் மைந்தன்
  
படங்களில் உதவி:  
A.K.இம்ரான்
  
கடந்தாண்டு காயல்பட்டினத்தில் நடைபெற்ற போலியோ - இளம்பிள்ளைவாத தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  
[செய்தி திருத்தப்பட்டது @ 08:39 / 25.01.2014]  |