| 
  காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ், இன்று காலை 06.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 93. 
  
அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காயல்பட்டினம் நகர்மன்றம் சார்பில் சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
  
நகர்மன்றக் கூட்டம்:
  
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி, நகர்மன்றக் கூட்டம், இன்று காலை 11.25 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. 
  
கலந்துகொண்டோர்:
  
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 
  
02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,  
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,  
04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா,  
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,  
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 
  
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,  
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா,  
09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா,  
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,  
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு, 
  
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,  
14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,  
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன்,  
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,  
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி 
ஆகியோர் கலந்துகொண்டனர். 
  
 
  
மவுனம் காப்பு:
  
இக்கூட்டத்தில், இன்று காலமான - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் மறைவையொட்டி, அவரது சேவைகளை நினைவுகூரும் வகையில் எழுந்து நின்று சில நிமிடங்கள் மவுனம் காக்குமாறு நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொள்ள அனைவரும் எழுந்து நின்று மவுனம் காத்தனர். 
  
இரங்கல் தீர்மானம்:
  
பின்னர், அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நகர்மன்ற அங்கத்தினர் சார்பில் இரங்கல் தெரிவிப்பதாகவும், வேறு விவாதங்களின்றி கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், நாளை (டிசம்பர் 18 புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெறும் என்றும் நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்துடன் கூட்டம் நிறைவுற்றது. 
  
இக்கூட்டத்தில், நகரின் சில பகுதிகளைச் சேர்ந்த சிலர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். 
  
கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுமாறு நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சார்பில், நகர்மன்றத் தலைவருக்கு அளிக்கப்பட்ட - முறைப்படியான கடிதம்:- 
  
 
  
கூட்டத்தின் அசைபடப் பதிவைக் காண இங்கே சொடுக்குக! 
 
  |