Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:39:40 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11724
#KOTW11724
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 2, 2013
ஓட்டை சின்னதா இருக்குல்ல...? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3360 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}





காயல்பட்டினம் தீவுத்தெரு - ஸீ கஸ்டம்ஸ் சாலை சந்திப்பில், தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியருகில் வைக்கப்பட்டுள்ள நகராட்சியின் நவீன குப்பைத் தொட்டியின் சுற்றுப்புறக் காட்சிகள்தான் இவை.

நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்கள், குப்பைத் தொட்டியிலுள்ள குப்பைகளைக் கொட்டி விட்டு, மீண்டும் அதே இடத்தில் குப்பைத் தொட்டியை வைப்பதற்குள் இவ்வளவு குப்பைகள் தரையிலேயே கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க, குப்பைத் தொட்டி இருக்கும்போதே, வாகனத்திலிருந்து கீழே இறங்க மனமின்றி, தொலைவிலிருந்தவாறே குப்பைகள் அடங்கிய பையை வீசிச் செல்லும் பொதுமக்களாலும் இதுபோன்ற குப்பைகள், நகராட்சியின் நவீன குப்பைத் தொட்டி கிடத்தப்பட்டுள்ள பெரும்பாலான பகுதிகளின் வாடிக்கைக் காட்சிகளாகிவிட்டன.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Zibo , Shandong , China) [02 September 2013]
IP: 222.*.*.* China | Comment Reference Number: 29947

திருந்தாத ஜென்மங்கள் .

தலைவியின் "தூய்மை நகரம்" கனவு ........ கனவாகவே போயிடும் போல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [02 September 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29949

திருந்தாத ஜென்மங்கள் .

தலைவியின் "தூய்மை நகரம்" கனவை மெய்பிக்க திருந்தாத ஜென்மங்களால் கனவு ........ கனவாகவே போயிடும் போல அதனால் இப்படி போடும்போது திருத்துங்கள்---சுத்தம் சுகம் தரும் என்றும் அது ஈமானை சாரும் என்றும் தயவாய் சாடுங்கள் சப்தம் போட்டால் மண்டையில் ரெண்டு போடுங்கள்........

வேதனையின் வரிகள் பொருத்தருள்க !!!!

AR.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மக்களின் ஒத்தழைப்பு இந்நகருக்கு இல்லாவிடில் பின்பு அனைத்தும் கனவாகவே போயிடும்.
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 September 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29952

திருந்தாத ஜென்மங்கள்... இந்நகரில் இருந்தென்ன லாபம்...!

குப்பைகள் அடங்கிய பையை வீசிச் செல்லும் போது அதன் பக்கத்திலும் எதிர் வீட்டிலும் வசிப்பவர்களின் மனது என்ன நினைக்கும்...? எப்படி சங்கடப்படும்...! கொஞ்சம் நினைத்து பார்க்க மனம் வருகிறதா..!

தற்போதையை நகர்மன்ற தலைவியின் பசுமை காயல் கனவு பொய்ப்பித்தது போல இந்த "தூய்மை நகரம்" கனவும் பொய்ப்பித்து போகும் போல...! இந்த தலைவியின் பதவி காலமும் சில ஆண்டுகளில் முடிந்து போய்விடும் நகர் மக்களின் ஒத்தழைப்பு இந்நகருக்கு இல்லாவிடில் பின்பு அனைத்தும் கனவாகவே போயிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by OMER ANAS (KAYAL PATNAM.) [02 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29953

அட இது எல்லாம் பழக்க தோஷங்க! எழுதி வச்சா படிக்கத்தெரியாது. மைக் போட்டு சொன்னா காது விளங்காது. காத்திருந்து சரியா ஓட்டையிலே போட ஆள்வச்சு டிரைனிங்கா கொடுக்க முடியும்? போகப்போக சரியாகும்........ அப்படின்னு நாம நினைச்சுக்க வேண்டியதுதான்!

அது சரி நகராட்ச்சியிலே துப்புரவு தொலிலாழிங்க இந்த பக்கம் வரமாட்டாங்களோ...? அல்லது வண்டிக்காரங்களுக்கு இதுவும் ஒரு வேலை இல்லையா..? இருக்க,,, நம் யூகப்படி கண்டிப்பா இது ஒரு மணி நேரத்தில் விழுந்த குப்பையே இல்லை! குப்பை தொட்டியிலே வீசமுடியாத சோம்பேறி ஜென்மங்கள் இவ்வளவு வேகமா வந்து எறிந்து இருக்க முடியாது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...குப்பை போடும் குப்பை..???
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [02 September 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 29955

இப்படி குபையை போடுகிறவர்களும் ஒரு குபதான்...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [02 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29956

தலைப்பின் வாசகம் மாற்றி அமைக்கவும். குப்பை தொட்டி மூடி போடாமல் இருந்தால் நல்லது. மூடி அவசியம் இல்லை, பொதுமக்கள் தொட்டிக்கு தூரம் நின்று குப்பையைவீசலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...ஓட்டை சிறியது அல்ல மனது சிறியது
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல்சாலை,சென்னை-86) [03 September 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 29960

வீடு நன்றாக இருந்தால் ஊர் நன்றாக இருக்கும் ஊர் நன்றாக இருந்தால் நாடு நன்றாக இருக்கும் என்பது பழமை மொழி வீடு நன்றாக இருக்கனும் ஊர் நாரனும் என்பது இவர்களின் புதிய மொழி குப்பைகளை கீழே கொட்டும் கண்ணியவான்களை கண்டால் ஒரு குட்பை சொல்லுங்கள்...

முன்னால் கவுன்சிலர் ரபீக் காக்கா இருக்கும் பொழுது அவர்வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பாதை அவர்கள் எங்கு பார்த்து திட்டிவிடுவாரோ என்ற பயம் இருந்தது. இன்றைய கவுன்சிலர்அந்தோணி சாச்சா சிங்கித்துரையில் இருந்தாவந்து திட்டப் போகிரார் என்ற தைரியம் தான். தலைவா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Rilwan (Michigan) [03 September 2013]
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 29964

பள்ளிகூட மாணவர்கள், இயக்கங்கள், ஜமாத்கள் மூலம் விழிப்புணர்வு பிரசங்கம் செய்யுங்கள். தெருவுக்கு தெரு ஜமாத்கள் இறக்கின்றன.. ஆரம்ப காலங்களில் கொஞ்சம் கண்காணிப்பு தேவை தான்.

தினமும் ஒரே மாதிரி செயல்களையே செய்து பழக்கப்பட்டவர்களுக்கு மாற்றங்களை பற்றி புரிதல் தானாக வராது.. அடுத்தவர் நிலத்திலே குப்பையை போட்டு பழக்கப்பட்டவர்கள்.. பிரசங்கங்களில் ஏன் இந்த மாதிரி விசயங்களை பேசக்கூடாது?

ஊரில் டெங்கு மாதிரி நோய்கள் வருவதற்கு சுத்தத்தை பற்றியான விழிப்புணர்வு இல்லாததே.. சமையல் நடக்கும் அடுப்பங்கலையை அசிங்கமாக வைத்திருக்கும் போது தெருவை பற்றி அக்கறை இருக்குமா? ஈக்களும் கிருமிகளும் பூச்சிகளும் குடும்பம் நடத்த இவர்களே ஏற்பாடு செய்கிறார்கள்..

மாணவர்களிடம் முதலில் பரப்புரை செய்யுங்கள்.. இந்த மாணவர்களை வைத்து வீடுகளை மாற்றுங்கள்... தீர யோசிக்கும் பழக்கம் ஆண்களிடமும் பெண்களிடமும் வரும்போது அவர்களாகவே தங்களை மேம்படுத்துவார்கள். அதுவரை யாராவது நியாபகப்படுத்தனும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [03 September 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29968

இந்த இழி நிலைமை நம் ஊரில் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதே நிலைமைதான்.

குப்பை தொட்டி இருந்தாலும், அதன் வெளியில் குப்பையை கொட்டுவதும், இங்கே குப்பையை கொட்டாதீர்கள் என்று எழுதிப்போட்டால், அங்கேயே குப்பையை கொட்டுவதும், இங்கே ஹாரன் அடிக்காதீர்கள் என்று போர்டு வைத்தால், அங்கு அதிகமாக ஹாரன் அடிப்பதும் நம் இந்தியர்களின் வழக்கம்.

ஒருவேளை, இந்த பளபளப்பான தொட்டிகளை பார்த்து மக்கள், இது குடி தண்ணீர் தொட்டியாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்து, அதில் குப்பையை கொட்டி வீணடிக்க வேண்டாமே, அப்படி கொட்டி, நெட்டில் "குடி தண்ணீர் தொட்டியில் குப்பையை கொட்டும் மக்கள்" என்ற செய்தி வந்துவிடுமே..! என்ற பயமும் இருக்கலாம் போல.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [03 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29971

காயலை பொறுத்தவரை நாம் தொன்று தோற்று சுகாதாரத்தை காக்கும் சமுதாயம். மக்கள்தான் இந்த ஊரை இந்த அளவு துமையாக வைத்துள்ளனர் அனால் எங்கும் இது போன்றவர்கள் இருப்பார்கள் அவர்களையும் நல்ல முறைபடுததனும் அந்த ஜமாத்தில் உள்ளவர்கள் அம்மக்களுக்கு எடுத்து கூறனும் கண்டிப்பாக நம் மக்கள் கட்டுபடுவார்கள் இஸ்லாமே போதும் மார்க்கத்தை கொண்டு அவர்களுக்கு போதியுங்கள் நல்ல முடிவு நிட்சயம் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ் .ஜமாத் .பள்ளிவாசல் , பாடசாலை ,ஜும்மா பயான் போன்றவற்றில் இது போன்ற சம்பவங்கள் பற்றி மக்களுக்கு இடை இடையாக பிரசங்கம் செயதுதால் நல்ல பயன் கிடைக்கும். நல்ல பாயான் என்றும் நல்ல பயனை தரும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. காயல்பட்டனமும், கீழக்கரையும் !!!
posted by M.S.Kaja Mahlari (Singapore) [03 September 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29976

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் !

சமீபத்தில் " சொல்வதெல்லாம் உண்மை " என்ற நிகழ்ச்சியை பார்தேன் www.youtube.com/watch?v=L_2EsZjRrOA அதில் நமது சகோதர ஊராகிய "கீழக்கரை " பற்றிய ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது ! மூன்று ஆண்கள் , மூன்று பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளார்கள் . அனைவரும் கீழக்கரையை சேர்ந்தவர்கள் .

அந்த உரையாடல் என்னை மிகவும் கவலை அடைய வைத்தது . காரணம் அதில் கருத்து சொன்னவர்கள் தங்கள் ஊர் முன்னைய ஊரைப்போல் அல்ல ! முற்றிலும் மாறிவிட்டது . எங்கள் ஊர் எங்களுக்கு பழைய ஊரைப் போல் வேண்டும் என சொல்கிறார்கள்!

காரணம் தங்கள் ஊரில் இப்போது சுகாதார கேடுகளால் , கடுமையான குப்பைமேடுகளால் , அழகிழந்து , மலேரியா , டெங்கு போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளது ! அழகிய வளமிக்க " கடற்கரை " மிகவும் அசிங்கப்பட்டு , குப்பைகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது , அரசாங்கமும் , மாவட்ட நிர்வாகமும், தமிழக முதலமைச்சரும் இது விசயமாக கவனித்து எங்கள் ஊரின் இந்த அவல நிலைமையை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடுகிறார்கள் !

அன்பர்களே ! சிந்தியுங்கள் ! நமதூருக்கும் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு சில ஊர் நலனில் அக்கறையில்லாத சுயநலவாதிகளின் செயல்களே போதுமாகும் !

ஆகவே ! கீழக்கரை நமது முன்னோர்கள் வாழ்ந்த , வாழும் ஊர். கொடுக்கல் ,வாங்கல் ,வியாபாரம் ,திருமண சம்பந்தம் , ஆன்மீக தொடர்புள்ள இனிய ஊர் . இன்றும் ,நமக்கும் ,அவர்களுக்கும் உள்ள தொடர்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது . அவ்வூருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை முற்றிலும் மாறி சுகாதார மிக்க ஊராகவும், சிறந்த , அழகிய , நோய்நொடிகள் அற்ற ஊராகவும் மாற வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக !

சகோதர்களே ! சிந்தியுங்கள் ! தமிழகத்தில் ஒரு அருமையான ஒரு ஊர் நமதூர் . அழகிய இயற்கையான சுகாதாரமான "கடற்கரையை" பெற்றுள்ளோம் !

நமதூரின் சுகாதாரம் , கடற்கரை , நகர் நல மன்றம் போன்ற பொதுநல அமைப்புக்களை பேணி பாதுகாப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகும் என உணர்ந்து செயல் படுவோம் !

நமதூரின் அமைப்பும், தெருக்களின் அமைப்பும் , பெண்களுக்கென தனிப்பாதை ,முடுக்கு ,வெட்டை , ஓடை போன்ற அமைப்பையும் பார்த்து இன்றும் பலரும் புகழ்ந்து பேசி வருவதை பார்க்கிறோம் ! அத்தகைய ஓர் அழகிய அமைப்பை சீரழிப்பவர்கள் யாரானாலும் தயவு,தாட்சண்யம் பார்க்காமல் அவர்களை அடையாளம் காண வேண்டும் ! அத்தகைய சுயநலவாதிகள் , பொதுநல நோக்கோடு , ஊரின் சுகாதாரம் , கல்வி, கலாச்சாரம் , கடற்க்கரை போன்ற அழகிய அமைப்புக்கு பங்கம் வாராமல் பாதுகாக்க முன்வரவேண்டும் ! அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட முயற்சிக்கவேண்டும் !

எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தகைய நல்ல நிலைமையை நமதூர் மக்கள் அனைவருக்கும் தந்தருள்வானாக ! ஆமீன் !!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இரயில் சரக்கு பெட்டி
posted by NIZAR (KAYALPATNAM) [03 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29978

யோவ்! நீங்க எது வேணாலும் சொல்லுங்க! எனக்கு குப்பையை வீசிதான்யா பழக்கம். உள்ளே விழுந்தா நகராட்சிக்கு ,வெளியே விழுந்தா மக்களுக்கு! இப்படிதான் நிலைமை இருக்குதுங்க.

மேலும் அந்த பகுதியில் கடைகள் வேறு அதிகம் உள்ளது. ஒரு வகையா அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தீவுத்தெருவில் போடப்பட்ட குப்பைகள் அடியோடு நின்றுவிட்டது. இதற்கு கொஞ்சம் காலம் பிடிக்குமென எண்ணுகிறேன்.

ஓட்டை சின்னதா இருந்தா இரண்டு பெட்டி வைக்க சொல்லுங்க, இல்லனா பேசாம இரயில் சரக்கு பெட்டி ஒன்னு வைங்க தூக்கி வீசுனா கப்புன்னு உள்ளே விலும்லா,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved