Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:56:11 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11634
#KOTW11634
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 19, 2013
டாக்டர் அப்துல்லாஹ் (எ) பெரியார்தாசன் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4951 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன், இன்று நள்ளிரவு 01.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 63.

சேஷாசலம் என்ற இயற்பெயருடைய இவர் 1949 ஆகஸ்ட் 21 அன்று, சென்னை - பெரம்பூரிலுள்ள வீராசாமி - சாரதாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

சென்னை பெரம்பூரிலுள்ள பள்ளியொன்றில் கல்வி பயின்ற இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து, அதே கல்லூரியிலேயே 1971ஆம் ஆண்டு பேராசிரியரானார்.

பின்னர், லண்டனிலுள்ள ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்று, மனோதத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

மறைந்த தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அவர், மூட நம்பிக்கைகள், மடமைத்தனங்களுக்கெதிராக தனது பேச்சாலும், எழுத்தாலும் தீவிரமாகப் போராடினார். தந்தை பெரியார் முன்னிலையிலேயே உரையாற்றி, அவரது உவப்பைப் பெற்றதையடுத்து, “பெரியார்தாசன்” ஆனார். பின்னர், உலகின் பல நாடுகளுக்கும் சென்று, அங்கு நடைபெற்ற கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி உலகப் புகழ் பெற்றார்.

இந்து சமயத்திலிருந்து வெளியேறி, பவுத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், பின்னர் பவுத்த சமய பரப்புரையாளராக மாறினார்.

உண்மையான வாழ்க்கை நெறியைத் தேடியலைந்த அவர், நிறைவாக, 2010ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இஸ்லாம் மார்க்கத்தைத் தன் வாழ்வியல் நெறியாக்கிக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, 2010 மார்ச் மாதம் 13ஆம் தேதியன்று, சஊதி அரபிய்யா சென்று, புனித மக்காவிலுள்ள கஃபத்துல்லாஹ்வில், உம்றா செய்தார்.





2010 ஏப்ரல் 30ஆம் தேதியன்று, சஊதி அரபிய்யா தலைநகர் ரியாதில் நடைபெற்ற - காயலர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தன் மனைவியும் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி, தன் பெயரை ஆமினா என மாற்றிக்கொண்டுள்ளதாகவும், தன் மக்கள் புனித குர்ஆனைப் படித்து வருவதாகவும், அவர்களும் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ அனைவரும் பிரார்த்திக்குமாறும், அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்தார்.



தன்னை முஸ்லிமாக உலகுக்கு அடையாளங்காட்டிய பின்னர், இஸ்லாம் மார்க்கத்தின் தீவிர பரப்புரையாளராக - தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் சென்று உரைகள் பல ஆற்றி வந்ததோடு, மனோதத்துவம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் நடத்தி, திருமறை குர்ஆன் - நபிமொழிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வுகளையும் வழங்கி வந்தார்.

நுரையீரலில் ஏற்பட்ட நோய் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று நள்ளிரவு 01.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அவரது ஜனாஸா - நல்லடக்கம் குறித்து இதுவரை அறிவிப்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [19 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29559

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by MAC.Mujahith (MUMBAI) [19 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29560

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..."

Pls Do Dua for his Magfirath. “But bloody public medias hided about him..”


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தாயீக்கள் மறைந்தாலும் அவர்கள் விதைத்த விதை தரணியெங்கும் பரவட்டும்!
posted by khatheeb Muhammad Muhyiddeen (Doha) [19 August 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29561

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் முந்தைய பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் ஈமானை ஏற்றுக் கொண்டு, பொருந்திக் கொண்டு, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அன்னார் தமது வாழ்வின் இறுதிப் பகுதியில் தெரிந்தெடுத்த / முன்னெடுத்த இஸ்லாமிய நல்வழிப்பாதையின் ஒளி - நம் தமிழ் மண்ணில் இன்னும் இஸ்லாமிய நறுமணத்தைத் தம்மில் தழுவிக் கொள்ளாத எண்ணற்ற இறை நிராகரிப்பாளர்களான நாத்திகர்களுக்கும், மறையாளர்களான கிறித்தவர்களுக்கும, முஷ்ரிகீன்களான பிற மதத்தவருக்கும் முன்மாதிரியாகத் திகழட்டும்! இஸ்லாம் இந்நாட்டின் இறுதிக் குடிமகன் வரை, அதனுடைய தூய வழியில் சென்றடையட்டும்! தாயீக்கள் மறைந்தாலும் அவர்கள் விதைத்த விதை தரணியெங்கும் பரவட்டும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [19 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29562

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அப்துல்லாஹ் என்ற இந்த மாணிக்கக்கல் ஆரம்பத்திலேயே இஸ்லாத்தில் இருந்திருப்பாரேயானால்,முற்றிலும் மெருகூட்டப்பட்ட மாணிக்கமாக இம்மண்ணில் உலாவந்து,நம் உன்னத மார்க்கத்தை மூளை,முடுக்குக்குகள் வரை மனம்பரப்ப செய்திருப்பார்.. அந்த அளவிற்கு சுறுசுறுப்பான வயோதிக வாலிபர். தாமத வருகை!

தனியோனாம் இறைவனின் கட்டளையின் மூலம் அப்துல்லாஹ் அல்லாஹ்வின் புறத்தில் சென்று விட்டார். அல்லாஹ் அவரை பொருந்திக்கொண்டு அவரின் பாவங்களை எல்லாம் மன்னித்து ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற் கூலியை வழங்குவானாக!ஆமீன்!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...பெரியார்தாசன் அப்துல்லாஹ் அவர்களின் சந்தேகம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [19 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29563

மறைந்த பெரியார்தாசன் என்ற அப்துல்லாஹ் அவர்கள் சொன்ன செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது.

மறுமை வாழ்க்கை என்று ஒன்று இல்லை என்றால் OK எனக்கு கவலை இல்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்து விட்டால் நான் என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தேன். இஸ்லாத்தை தழுவினேன். மாற்று மதத்தினர் மட்டுமல்ல முஸ்லிம்களாகிய நம்மையும் அவர் சிந்திக்க வைக்கிறார்.

நாம் மறுமை வாழ்க்கையை முற்றிலுமாக நம்ப வேண்டும். அது ஈமானில் முக்கியமான பகுதி. அந்த வாழ்க்கை வரும்போது அங்கே கேட்கப்படும் கேள்விகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வித்தாள் நமக்கு இப்போதே அல்லாஹ் தந்து விட்டான். அதற்கான விடைகளுடன் தயாராக என்னை வந்து சந்தியுங்கள் என்றும் சொல்லிவிட்டான். விடை தெரியாமல் விழித்தால் நான் அதற்கு பொறுப்பல்ல என்று கூறி. விடைகளை மிக தெளிவாக திருமறையிலும் கூறி நபிகள் நாயத்தை நமக்கு அனுப்பி அதன் விரிவான விளக்கங்களையும் எவ்வித சந்தேகமுமின்றி நமக்கு அறிவித்து விட்டான். இத்தனைக்கும் பிறகும் நாம் ஏனோ தானோ என்று வாழ்கிறோமே சிந்திப்போம் செயல்படுவோம்.

ஒரு மாற்று மத நண்பர். பல மொழிகளையும் வேதங்களையும் கற்று உணர்ந்தவர். கடவுள் இல்லை, இல்லவே இல்லை, அப்படி சொல்பவன் முட்டாள் மடையன் என்றெல்லாம் சொல்லும் இயக்கத்தில் தன முழு மூச்சையும் செலவு செய்தவர், கடைசியில் அவர் முடிவுக்கு வந்தார் இஸ்லாம் ஒன்று தான் தன் பாவ மீட்சிக்கு சரியான மார்க்கம்.இறை இல்லம் சென்றார், பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக மீண்டார். தன குடும்பத்தையும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்தார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர் பாவங்களை மன்னித்து மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.

மாற்று மத தலைவர்கள், அவர் ஏன் இஸ்லாத்தை தழுவினார் என்று ஒரு கணம் சிந்தித்து பார்த்து அவர்களும் இஸ்லாத்தில் இணைந்து தங்களை தூய்மை படுத்திக்கொள்ள அழைக்கிறோம். அல்லாஹ், பெரியார்தாசன் தேர்ந்து எடுத்த இந்த நேர்வழியை அவர்களும் தேர்ந்து எடுக்க அருள் புரிவானாக.

LAA THOWFEEQA ILLAA BILLAAH..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by nizam (india) [19 August 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 29564

இன்னாலில்லாஹி வன்னாஇலைஹி ராஜிஊஉன் அற்புதமான மனிதர் மிகவும் சிக்கலான மனோதத்துவ பிரச்சினைகளை தனது அனுபவ அறிவு கொண்டு சிறந்த பதிலை தருபவர் சில காலத்துக்கு முன்பு அன்னார் காயல் வந்திருந்தபோது கேள்வி பதில் நிகழ்ச்சியில் எனக்கு அவரிடம் கேள்வி கேட்கும் வாய்ப்ப்பை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு மனிதனின் கடைசி நிலை முக்கியமானது. அன்னாரை நல்ல முஸ்லிமாக வாழ செய்து மரணிக்க செய்த ஏக நாயகனுக்கே எல்லா புகழும் உரித்தாகும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வருந்துகிறோம்.
posted by Mohamed Hassan (Jeddah) [19 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29565

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by தேக் (kayalpattinam) [19 August 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 29566

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சாதி வெறிக்கு எதிராகவும்,மூட நம்பிக்கை ஒழிக்கவும்,மத வெறியை இந்த பூமியில் இருந்து அகற்றவும் பல்வேறு தளங்களில் பணியாற்றி இவை அனைத்தையும் ஒரு சேர ஒழிக்க இஸ்லாம் என்ற தளம் தான் சிறந்தது என்பதை இவருக்கு யா அல்லாஹ் நீ விளங்கியாதைப்போல் யா அல்லாஹ் அனைவரும் முஸ்லிமாக வாழ்ந்து முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக ...........

தேக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by nainamohamed (kuwait) [19 August 2013]
IP: 83.*.*.* Kuwait | Comment Reference Number: 29567

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

மதிப்பிக்குரிய டாக்டர் அவர்களுக்கு அல்லா சொர்கத்தே கொடுப்பானாக..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [19 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29568

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்...

தந்தை பெரியார் அவர்களின் தாக்கம் வரலாறுகளைப் புரட்டிப்போட்டதன் தொடக்கம், புதிய வரலாறுகளின் படைப்பாக்கம் என்பனவற்றை திராவிட இனமும் தமிழ்கூறும் நல்லுகமும் இந்தியாவும் மறந்துவிட முடியாது.

அழைப்புப் பணிக்கும் அவர் ஆற்றிய பணிகளால் என்றும் நினைவுகூரப்படுவார் என்பதில் சந்தேகமில்லை. அதுவே அவருக்குக் காலமெல்லாம் கிடைத்துவரக் கூடிய துஆ.

எல்லாம் வல்ல அல்லாஹ், தன் அடியாராகி வாழ்ந்து மறைந்த நம் சகோதரரான பேரா.அப்துல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுமைப் பேறுகளையும் வழங்குவானாக.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் அழகிய பொறுமையைத் தந்து அருள்வானாக என்று வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வருந்துகிறேன்...
posted by kavimagan m.s.abdul kader (doha..qatar.) [19 August 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 29569

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Cnash (Makkah) [19 August 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 29570

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ரஜிஊஒன் சேசாசலம் மாக பிறந்து, பெரியார் தாசனாக மாறி, பின்பு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , அப்துல்லாஹ் என்னும் ஓரிறையின் அடிமையாகி வாழ்ந்து, மறைந்து மறு உலகை அடைந்திருக்கும் இந்த அடியானின், பிழைகளை பொருத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயரிய சுவர்க்கம் கிடைக்க அல்லாஹ்விடம் பிராத்திப்போம்... அவர்கள் முன் சென்றவர்களாக இருக்கிறார், நாங்கள் பின் வரகூடியவர்களாக இருக்கிறோம்!! அவர்கள் பிழையை மன்னித்து அருள்புரிந்து, எங்களுக்கும் உன் மன்னிப்பையும் அருளையும் தருவாயாக!

அல்லாஹ் தான் நாடினவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான்!! அவ்வாறே இந்த அடியானை நேர்வழியின் பால் கொண்டு வந்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Shaik Dawood (Maldives) [19 August 2013]
IP: 124.*.*.* Maldives | Comment Reference Number: 29571

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by ceylon fancy kazhi (tuticorin) [19 August 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29572

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சிலோன் பேன்சி காழி
தூத்துக்குடி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. انا لله وانا اليه راجعون
posted by M.S.Kaja Mahlari (Singapore) [19 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29573

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by mohideen thambi s a m (kayalpatnam) [19 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29574

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:..அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன் மௌத்தா?
posted by ILAYANGUDI K.S.A.JAMALUDEEN (GUZHEN TOWN) [19 August 2013]
IP: 27.*.*.* China | Comment Reference Number: 29575

டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன் மௌத்து (இன்னா லில்லாஹி .....) நம் சமுதாயத்திற்கு ஒரு இழப்புதான். ஒரு முறை பேட்டியின்போது கூறினார், உலகத்திலேயே இருசமுகம்தான், ஒன்று "ஏற்கனவே இஸ்லாத்தில் இருக்கிறவர்கள்" மற்றொன்று "இஸ்லாத்திற்கு வர இருக்கிறவர்கள்" இதில் எவ்வவளவு பெரிய , ஆழ்ந்த கருத்து அடங்கிருக்கிறது என்று யோசித்துப் பாருங்களேன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Sulthan (Dubai) [19 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29576

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [19 August 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 29577

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Ahamed Shahul Hameed (Kayalpatnam) [19 August 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 29578

Inna lillahi Va Inna Ilaihi Raajioon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by saburudeen (dubai) [19 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29579

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. வருந்துகின்றோம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [19 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29580

யா அல்லாஹ் இவரது பாவங்களையும்,பிழைகளையும் மன்னித்து மேலான நற்பதவியையும், கூலியையும் வழங்கி சொர்க்கத்தில் பிரவேசிக்க வைத்தருள்வாயாக ஆமீன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...இன்னாலில்லாஹி.....
posted by மஹ்மூதுரஜ்வி (தம்மாம்,சவூதிஅரேபியா) [19 August 2013]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 29581

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...! வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனப்பதியினை வழங்குவானாக ஆமீன்.

தொலைக்காட்சி செய்திகளில் அவரின் மரண செய்தியினை தெரிவிக்கும்போது அன்னாரின் ஜனாஸா பொது மக்கள் பார்வைக்கு பின் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதே.

மஹ்மூதுரஜ்வி
தம்மாம்,சவூதிஅரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [19 August 2013]
IP: 59.*.*.* Hong Kong | Comment Reference Number: 29582

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சுவனப்பதியினை வழங்குவானாக ஆமீன்
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [19 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29583

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...!

வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனப்பதியினை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by A.M.NOOR MOHAMED ZAKARIYA (KAYALPATNAM) [19 August 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29585

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.....

சிறந்த ஓர் உறவை பிரிந்த கவலை ......
யா அல்லாஹ் இவர்களின் மண்ணறை வாழ்வை விசாலமாக்குவாயாக .....

யா அல்லாஹ் மறுமையின் விசாரணையில் இருந்து பாதுகாத்து -ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் இம் மனிதரை பிரவேசிக்கவைப்பாயாக ..

ஆமீன் யா அல்லாஹ் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Ahamed Mustafa (Dubai) [19 August 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29586

இன்னா லில்லாஹி வ இன்னா இளைய்ஹி ராஜி ஊன். May Allah Ta'ala Bless him with Jannah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [19 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29587

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் <<<

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து.... அன்னாரின் கபூரை விசாலமாக்கி மர்ஹும் அவர்களின் கப்ரு வாழ்க்கையை பிரகாசமாக்கி.....சுவன பதிவான ..... மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனபதியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் இழப்பால் வாடும் அன்னாரின் .... உற்றார், உறவினர்.... குடும்பத்தார் ...... அனைவர்களுக்கும் வல்ல இறைவன் அவனின் மேலான பொறுமையை கொடுத்தருள் வானாகவும் ஆமீன்

நான் மர்ஹும் அவர்களின் சிறப்புரையை சவுதி அரபு ஜெட்டாஹ் / தமாம் ..... இரு ஊர்களிலும் நேரில் கேட்டு மகிழ்ந்து உள்ளேன் .அவ்வளவு அருமையான சிறப்புடையுடன் பல தரப்பு இன மக்களின் பல அற்புதமான கேள்விகளுக்கு அவர்களின் இயற்கையான புன்னகையுடன் உண்மையான பதில் சொல்வார்கள் .....

அன்னார் அவர்களின் பேச்சை நாம் கேட்டு கொண்டே இருக்கணும் போல நமக்கு தோன்றும் என்றால் பார்த்து கொள்ளுங்கள் .....

மர்ஹும் அவர்கள் நம்மோடு இருப்பதை போன்றே நமக்கு தோன்றுகிறது. வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
KAYAL PATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. இவருக்காக பிரார்த்திப்போம்.
posted by Abdul Wahid S. (kayalpattinam) [20 August 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 29588

2 அல்லது 3 வருடங்களுக்கு முன் நமதூர் த.: வா சென்டர் நடத்திய ஆண்டு விழாவில் இவர் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

அவ்விழாவில் "என்னக் கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பில் இஸ்லாத்தை தழுவிய காரணங்களை விவரிக்கும்போது, தன்னுடைய பால்ய முஸ்லிம் நண்பர் ஒருவரை நெடுங்காலத்திற்குப் பின் வெளிநாட்டில் (ஒரு விமான நிலையத்தில்) சிறிது நேரம் சந்தித்து உரையாட வாய்ப்பு கிட்டியதாகவும், இறுதியில் விடைபெறும்போது அந்த முஸ்லிம் நண்பர் இவரை கட்டித் தழுவி (இவரின் மீது கொண்ட பாசத்தினால்) கூறிய வார்த்தைகள் இவரை சிந்திக்கத் தூண்டியதாகவும் கூறினார்.

அந்த வார்த்தைகள், " நீ மரணிக்கும்போது ஈமானுடன் மரணிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்பதே.

அந்த பாசத்திற்குரிய முஸ்லிம் நண்பர் விரும்பியது போல இந்த மூத்த சகோதரர் பலத்த ஈமானுடன் சென்றுவிட்டார்.

இன்னலில்லாஹி வா இன்ன இலஹி ராஜிவூன். எல்லாம் வல்ல நாயன் அன்னாரின் பாவங்களை மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பானாக ! ஆமீன் !!

Info :

த.:வா பணி இஸ்லாத்தின் ஆறாவது கடமை என்று ஆழமாக நம்பிய இவர் தன்னை முழுவதுமாக அதில் ஈடுபடுத்திக் கொண்டார். அதில் ஒரு ஒரு பகுதியாக ஈ.வே.ரா. பெரியார் மனதளவில் ஒரு முஸ்லிம்தான் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் "Documentary film" ஒன்றை தயாரிப்பதில் சுறுசுறுப்பாக இருந்தார். அனேகமாக அந்த Projectஐ முடித்திருப்பார் என்று எண்ணுகிறேன்.

(I.I.M. TV யின் இணைதளத்தில் நேரடி ஒளிபரப்பு (Webcast) செய்யப்பட்ட த.:வா சென்டரின் முதல் நிகழ்ச்சி "என்னைக் கவர்ந்த இஸ்லாம்")


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [20 August 2013]
IP: 120.*.*.* Hong Kong | Comment Reference Number: 29590

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!

வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான சுவனப்பதியினை வழங்குவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Jaffer (Kayalpatnam) [20 August 2013]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 29591

அவருடைய வாழ்க்கை யின் இறுதி கட்டம் ஈமானோடு முடிந்தது. அலலாஹ் அவருக்கு சுவன பதிய கொடுப்பானாஹ.அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by Shaikna Lebbai (Singapore) [20 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29592

Inna lillahi wa inna ilaihi rrajiyun.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. இன்னா லில்லாஹி ..........
posted by zubair rahman (Doha-Qatar) [20 August 2013]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 29596

இன்னா லில்லாஹி வ இன்னா இலையி ராஜிவூன்

ஆழ்ந்த கருத்தை மிக அழகாக பகிர்வு செய்வதில் வல்லவர்,

வல்லோன் அன்னாரின் பிழைகளை பொறுத்து சுவனசோலையில் பிரவேசிக்க செய்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [20 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29601

அல்லாஹ் அன்னாருடைய மறுமையை தன் அருளால் கண்ணியம் செய்வான்.

மிக யதார்த்தவாதி பாமர மக்களையும் இவருடைய பேச்சு ஈர்க்கும். நாத்திக வாதிகள் மக்கள் அனைவரும் சரி சமம் என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளமாட்டார்கள் இன்னும் சாதி வேறுபாடு மற்றும் மூட நம்பிக்கைகள் அனைத்தையும் எதிர்பவர்கள் இவைகள் அனைத்தும் இஸ்லாத்தோடு பொருந்துவது இறைவன் அருள் சகோதரர் மர்கூம் அப்துல்லாஹ் போன்று அணைத்து மக்களுக்கும் மற்ற ஓரிறைநம்பிக்கையற்றவர்களுக்கும் ஹிதாயத் கிடைக்க துவா செய்வோம் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...
posted by Husain Noorudeen (Kayalpatnam) [20 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29606

சகோதரர் அப்துல் வாஹிது அவர்களே, தாங்கள் கேட்ட அந்த கேள்விக்கு பதில்:

கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் துபை வந்திருந்தார்கள். அவர்கள் உருவாக்கிய "பெரியார் இஸ்லாத்தை எதிர்த்தாரா அல்லது ஆதரித்தாரா" என்ற அந்த டாகுமெண்டரி படம் ஒளிபரப்பப்பட்டது.

அதை முதலில் காணும் பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன். இந்த திரைக் காவியத்தை மக்கள் முன் கொண்டு செல்லும் பணிக்காக பொருளாதார உதவியை அன்னாருடன் இப்படத்தை எடுப்பதில் உதவியாக இருந்த சகோதர்கள் மூலம் கோரப்பட்டது. துபையில் நடந்த அந்த ஒன்றுகூடலிலேயே ஓரளவு தொகையும் சேர்ந்தது.

இன்ஷா அல்லாஹ், கூடிய சீக்கிரம் அந்த காவியம் வெளி வரும், என்னற்ற தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் விழிப்புணர்வு பெற்று இஸ்லாத்தை நோக்கி வரும் காலம் சமீபத்தில் வரும். ஆனால் அதைக் காண பேராசிரியர் அவர்கள் இல்லை என்ற கவலை நம்மை வாட்டுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [21 August 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 29610

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மூளை இருக்கா...? (?!)  (20/8/2013) [Views - 3457; Comments - 8]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved