Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:36:32 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10970
#KOTW10970
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுன் 7, 2013
முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் முனைவர் செ.மு.ஹமீத் அப்துல் காதர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3532 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் 1983ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதலாவது தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியான முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரி, நர்சிங், பார்மஸி கல்லூரிகள், உயர்நிலைப்பள்ளி, அறிவியல் படிப்புடன் கூடிய மதரஸா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட சமுதாய உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் முஹம்மது சதக் அறக்கட்டளையின் தலைவரும், பொருளாளரும், கீழக்கரையைச் சேர்ந்தவருமான முனைவர் அல்ஹாஜ் செ.மு.ஹமீத் அப்துல் காதர், அலுவல் நிமிர்த்தமாக புது தில்லி சென்றிருந்தபோது, 06.06.2013 வியாழக்கிழமை (நேற்று) மாலை 06.48 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 81.

விரிவான விபரம் வருமாறு:-

முஸ்லிம் சமுதாயத்திற்கென கல்வி நிறுவனங்கள் பல இருந்தும், ஒரு மருத்துவக் கல்லூரி இல்லையே என்ற ஆதங்கத்தில், 200 படுக்கைகள் கொண்ட ஒரு மிகப்பெரிய மருத்துவமனையை ஏற்படுத்தியுள்ளார் அல்ஹாஜ் செ.மு.ஹமீத் அப்துல் காதர்.

இம்மருத்துவமனையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுவதற்காக, மத்திய சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் கே.ரஹ்மான் கானை சந்திக்க, தனது ஆழ்ந்த விருப்பத்தினை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மானிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, 05.06.2013 புதன்கிழமையன்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் ஏற்பாட்டில் மத்திய அமைச்சருடனான சந்திப்பும் நடைபெற்றது.





மருத்துவக்கல்லூரி துவங்குவதற்கு முன்னேற்பாடாக மருத்துவமனை ஏற்படுத்துவது குறித்து பெருமகிழ்வடைந்ததோடு, மருத்துவமனை திறப்பு விழாவில் தான் நிச்சயம் பங்கேற்பதாகவும் அப்போது உறுதியளித்தார் அமைச்சர் ரஹ்மான் கான்.

அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அப்துல் ரஹ்மான் ஏற்பாட்டில், இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியையும் மரியாதை நிமிர்த்தமாக அல்ஹாஜ். செ.மு.ஹமீத் அப்துல் காதர் சந்தித்தார். அப்போது சமுதாயத்திற்கென மருத்துவக் கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் தெரிவித்தார். துணை ஜனாதிபதியும், அதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்குடன் துணை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துவிட்டு, இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் பிற அலுவல்களை முடித்துவிட்டு, 06.06.2013 வியாழன் மாலை சென்னை செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நெஞ்சு வலி அதிகமாகி உயிர் பிரிந்தது.

அன்னாரது ஜனாஸா சென்னைக்கு கொண்டு வருவதற்கான பணியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார்.

ஜனாஸா, வெள்ளிக்கிழமை (இன்று) காலை சென்னை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலையில், சென்னை ராயப்பேட்டை மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அன்னாரது மறைவிற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், துபை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலீ, அதன் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மத் தாஹா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தகவல் & படங்கள்:
டைமண்ட் செய்யித்
சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [07 June 2013]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27811

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...சபூர் அல்லாஹுக்காக.
posted by M.S.ABDULAZEEZ (ch) [07 June 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 27815

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

குடும்பத்தினர்கள் யாவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [07 June 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 27816

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

குடும்பத்தினர்கள் யாவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re466417710400216.
posted by Hameed (Hong Kong) [07 June 2013]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 27817

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

குடும்பத்தினர்கள் யாவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [07 June 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27819

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஒரு சிறந்த சமூக சேவையாளர் அல்ஹாஜ் செ.மு. ஹமீத் அப்துல் காதர் அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் சமூக சேவைகள் யாவற்றையும் அங்கீகரித்து, அன்னாரின் பிழைகள், குற்றங்கள், குறைகள் யாவற்றையும் மன்னித்து மண்ணறையை சுவன பூங்காவாக ஆக்கி நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல் ) அவர்களின் சபாத்தை அடைந்து ஜன்னதுல் பிர்தொவ்சில் குடி அமர்துவானாக!

அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் நல்ல பொறுமையையும் , நற்கூலியையும் கொடுப்பானாக ! அன்னாரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ! அஸ்ஸலாமு அலைக்கும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [07 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27822

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

கல்விக்காக தங்கள் பொருள் நேரங்களை செலவு செய்து பொதுசேவை ஆற்றிய பெருந்தகையின் இழப்பு முஸ்லீம் சமுதாயத்துக்கு பெரும் அதிர்ச்சியை தரும் செய்தியாகும். எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூம் அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடிநிட்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஒரு சிறந்த சமூக சேவையாளர் நாம் இழந்து விட்டோம்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [07 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27827

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஒரு சிறந்த சமூக சேவையாளர் அல்ஹாஜ் செ.மு. ஹமீத் அப்துல் காதர் அவர்களின் மறைவு சமுதாயதிற்கு ஒரு பேரிழப்பாகும். அவர் விட்டு சென்ற கல்வி பணிகள் இனிதே தொய்வின்றி தொடர வல்ல இறைவனிடம் பிராத்திப்போமாக... ஆமின்...

குடும்பத்தினர்கள் யாவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்...

மிக வருத்ததுடன்...

M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு.
காயல்பட்டினம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...இன்னாலில்லாஹி.....
posted by மஹ்மூதுரஜ்வி (தம்மாம்,சவூதிஅரேபியா) [08 June 2013]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27830

அஸ்ஸலாமு அலைக்கும்,

சிறந்த பண்பாளரும், கல்வியாளரும், முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவருமான அல்ஹாஜ் முனைவர் செ.மு.ஹமீத் அப்துல் காதர் காக்கா அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க வருத்தமடைந்தேன். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நான் பாலிடெக்னிக்கில் பயிலும்போது அன்னாரின் பழக்கம் கிடைக்கபெற்றேன். அவர்கள் பழகுவதற்கு இனியவராகவும் அதே நேரத்தில் மாணவர்களின் நலன் கருதி கண்டிப்புடனும் இருப்பார்கள். நம் ஊர் மக்களிடம் தனிப்பட்ட அன்பும் காட்டுவார்கள்.

அன்னாரின் பிழைகளை வல்ல அல்லாஹ் பொறுப்பதுடன் அன்னாரின் இழப்பால் வாடும் அனைவருக்கும் பொறுமையினையும் வழங்குவானாக ஆமீன்.

மஹ்மூதுரஜ்வி
(முன்னாள் மாணவர்
முஹம்மது சதக் பாலிடெக்னிக்)
தம்மாம்,சவூதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [08 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27832

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [08 June 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 27834

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Noohu Sahib (Dubai) [08 June 2013]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27843

இன்னா வா இன்னா இலைஹி ராஜிஊன்.அருமை காக்கா சேனா மூனா ஹமீத் அப்துல் காதர் அவர்களின் திடீர் உபாத் செய்தி அறிந்து மிஹவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

அவர்களின் நிர்வாஹதின் கீழ் சுமார் 15 ஆண்டுகள் இருந்தேன்.மிஹவும் நிர்வாஹ திறன்மை உள்ளவர்ஹல்.அன்னாரின் மறைவு நமது சமுதாயத்திற்கு பெரும் இழப்பஹும்.அவர்களின் நீண்ட கால கனவாகிய மருத்துவ கல்லூரி நிறைவேறிட வல்ல நாயன் அருள் புரிவானஹா ஆமீன். அல்லாஹு மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து மேலான சுவன பதியை அளிப்பானஹா ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. “ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
posted by N.S.E.மஹ்மூது (காயல்பட்டணம் ) [08 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27845

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும் -

சமுதாய உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகத்தினர்களுக்கும் மற்றும் மர்ஹூம் அவர்களால் பயன் பெற்றுக்கொண்டிருந்த சமுதாயத்தவர்கள் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.

N.S.E.மஹ்மூது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...MAY ALMIGHTY ALLAH ACCEPT HIM
posted by RAWOOF 48 & FAMILY (HONG KONG) [08 June 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 27846

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [08 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27848

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

அன்னாரின் மறைவு நமது இசுலாமிய சமுதாயத்திற்கு பெரும் இழப்பாகும்... அவர்களின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved