Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:43:38 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10845
#KOTW10845
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 20, 2013
எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டேங்கறாங்க?!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3469 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மார்ச் 31 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் 8 உறுப்பினர்கள் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்த செய்தி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.



இக்கட்சியின் சார்பாக சில தினங்களுக்கு பிறகு அச்சிடப்பட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் போஸ்டரில் - அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்ததாக அறிவிக்கப்பட்ட நகராட்சியின் 3 வது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் பெயர் இடம் பெறவில்லை.



ஏப்ரல் 29 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தான் அ.இ.அ.தி.மு.க.வில் இணையவில்லை என்றும், மரியாதை நிமித்தமாகவே அமைச்சர் சி.த. செல்லாபாண்டியனை தான் சந்திக்க சென்றதாகவும் 3 வது வார்டு உறுப்பினர் சாரா உம்மாள் தெரிவித்தார்.



இருப்பினும் - மே 18 (சனிக்கிழமை) அன்று காயல்பட்டினம் சீதக்காதி திடலில் நடைபெற்ற இக்கட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனைகள் குறித்த விளக்கக் கூட்டத்திற்கு வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் - 3 வது வார்டு உறுப்பினர் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.



சமீபத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் நகராட்சிக்கு வந்த போது - அந்நிகழ்வில் 3 வது வார்டு உறுப்பினர் அவருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. டிண்ட டிண்ட டிண்டடைன் டுடடைன் ....
posted by முத்துவாப்பா.... (al khobar) [20 May 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27482

நீங்க திமுக வா ..?? இல்லை அஇஅதிமுகவா ..????

தெரியலையப்பா .....??? டிண்ட டிண்ட டிண்டடைன் டுடடைன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Salai Sheikh Saleem (துபாய்) [20 May 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27488

அரசியலில் இதெல்லாம் சகஜமுங்கோ !!!

ஆனால் காயல் நகராட்சியில் அரசியலே நாறிவிட்டதே !

சமுதாய சேவை எனபது இந்த அளவிற்கு எள்ளி நகையாடப்படும் என்று யாருக்காவது இம்மியளவும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து வாருங்கள் எங்கள் நகராட்சிக்கு -- பாருங்கள் சம + ஆதாயம் தேடும் எங்களின் பிரதிநிதிகளை....

அதேபோல் எங்கள் பிரதிநிதிகள் என்ன செய்தாலும் பரவாயில்லை,, எங்கள் சொந்த வேலைகள் எப்படியாவது நடந்தால் போதும் என்ற சமுதாய உணர்வு மேலோங்கி நிற்கும் ஒரு மாபெரும் சமூகத்தையும் இங்கே தான் நீங்கள் காணலாம்.

இவின்களா மனது வைத்தால் தான் உண்டு !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வாழ்த்துகின்றோம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [20 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27489

அம்மாவின் கட்சியில் இணைந்த இந்த உம்மாவுக்கு அதாங்க சாரா உம்மா 3வது வார்டு உறுப்பினருக்கு வாழ்த்துக்கள். சகோதரி செய்தித்தாளில் தாங்கள் அம்மாவின் கட்சியில் ஐக்கியமான செய்தி ஆதாரப்பூர்வமாக வந்தது கண்டு மகிழ்ச்சி!

ஈராண்டுகாலம் சாதனை புரிந்த புரட்சித் தலைவியின் கரத்தை வலுப்படுத்த தங்களைப் போன்ற தாய்க்குலங்களின் பேராதரவு அவசியம் தேவை! வாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் சமுதாயப் பணி மேலும் சிறக்க மனமுவந்த நல்வாழ்த்துக்கள்...!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by salai s nawas (singapore) [20 May 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 27490

அட சொன்னா நம்புகப்பா !!!!!! நான் எந்த கட்சியும் 'சாரா'தவள்பா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S ABDUL KADER (JEDDAH. SAUDIA) [20 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27496

கட்சி தாவல், விரைவில் தேர்தலுக்கு வாக்கு வங்கி காட்டத்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. .இரண்டாண்டின் எண்ணற்ற சாதனைகள்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [20 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27502

இரண்டாண்டின் எண்ணற்ற சாதனைகள்,எதை சொன்னார்கள்,எதைவிட்டார்கள் நேரமில்லையென்று.

எமக்குத்தெரியவில்லை, இருப்பினும் என்மனது நினைக்கும் சாதனைகளான கீழே குறிப்பிட்ட சாதனைகளை சொல்லி இருப்பார்களோ?

1> திமுக் ஆட்சியில் இருட்டில் வாழும் இதயங்களே,நாங்கள் ஆட்சிக்கி வந்தால் 6 மாதத்தில் அந்தி பொழுது சாய்வது கூட தெரியாமல் அனைத்து பொழுதும் பகல்தானோ என்று பிரமிக்கும் அளவிற்கு மின் வெள்ளம் பாய்ந்து கொண்டே இருக்கும் என்று சொன்னதை செய்த சாதனையை சொன்னார்களா?

2>. ஒன்றுக்கு 10 மடங்கல்லாது 5 மடங்குள்ளாக மட்டும் பால் விலையை ஏற்றியது எங்கள் சாதனை இல்லையா என்று சொன்னார்களா?

3> ஒன்றுக்கு 50 மடங்கல்லாது 25 மடங்குள்ளாக மட்டும் பேருந்து கட்டண விலையை ஏற்றியது எங்கள் சாதனையல்லவா என்று சொன்னார்களா?

4> வேண்டிய உதவிகளை விவசாயிகளுக்கு செய்கிறோம் அதனால்தான் ஏறக்குறைய 50 விவசாயிகளுக்குள்ளாக மட்டும தற்கொலை சம்பவங்கள் நடக்கின்ற அளவிற்கு கட்டுப்படித்தியுள்ளோம்! இந்த கட்டுபடுத்துதல் எங்கள் சாதனை இல்லையா என்று இயம்பினார்களா?

5> முந்தய ஆட்சிகாலத்து ஆவாத திட்டங்களையெல்லாம் அரண்மேல் தூக்கியறிந்து சாதனை புரிந்தோம், ஆமாம் சேதுசமுத்திர திட்டம் முதல் சென்னை மேம்பாலம் வரை மக்களுக்கு பயனில்லாத திட்டங்கள் என்று புதைகுழியில் போட்டு புதைத்தது எங்களின் இரண்டாண்டுகளின் சாதனை இல்லையா என்ற மிடுக்குடன் மேடையில் மார்தட்டினார்களா?

6>முந்திய ஆட்சி காலத்துடைய அமைச்சர்களிலிருந்து அந்தோ பரிதாப அங்கத்தினர்கள் வரை,யாரும் வாய் திறக்க கூடாது மீறித்திறந்தாள் சிறைவாசக சுகத்தை அனுபவியுங்கள் என்று ஓய்வெடுக்க அனுப்பிவைக்கும் அகன்ற மனதுடைய ஆட்சியின் சாதனை தான் எங்களின் சாதனை என்று எடுத்துறைதார்களா?

7> தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயும் சரி, ஏன் இந்தியாவிலுள்ள அனைத்து சட்டமன்றம், பாராளுமன்றம் வரலாறுகளிலும சரி வருடக்கணக்கில் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளே அடியெடுத்து வைக்க கூடாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தடையை போட்டது எங்கள் ஆட்சியின் சாதனை இல்லையா?யாருக்காவது இந்த தைரியமும்,துணிவும் வருமா? இது எங்கள் இமாலய சாதனைதானே என்று சவால் விட்டார்களா அந்த மேடையில்?

இன்னும் எழுதிக்கொண்டே போகலாம் சாதனைப்பட்டியல் நீளும்,ஆனால் இணயதளத்தில் இடம் போதாது! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...ஜோக் அடிக்காதீங்க சாச்சா!
posted by OMER ANAS (DOHA QATAR..) [21 May 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 27512

இன்னும் ஒரு முறை சொல்லுங்களேன்....!
கேட்ப்போர் கேட்ப்பர்.
திமுக வின் 5 ஆண்டு கால சாதனை பட்டியலை உலகமே அறியும்.

இலங்கையில் மனித உயிர்களை ஃ பக்சே கொன்று குவிக்க .....? உலக சாதனை புரிந்தது கலைஞ்சர் ஆட்சி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved