Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:45:55 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10843
#KOTW10843
Increase Font Size Decrease Font Size
திங்கள், மே 20, 2013
எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் எஸ்போன் காலமானார்! (கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களுடன்!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4982 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற - கணிதம் மற்றும் தமிழாசிரியர் ஒய்.எஸ்.எஸ்போன், 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மதியம் 03.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74.

அன்னாரின் உடல், மே 20 திங்கட்கிழமை (இன்று) மாலை 04.30 மணியளவில், சுப்பிரமணியபுரம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.



இந்த நல்லடக்க நிகழ்ச்சியில், அவர் பணியாற்றிய காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நல்லடக்க நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்:-









மறைந்த ஆசிரியர் எஸ்போன் அவர்களின் மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினர்:-



காயல்பட்டினம் தீவுத்தெரு - ஸீ கஸ்டம்ஸ் சாலை முனையிலிருந்த எல்.கே.துவக்கப்பள்ளியிலும், பின்னர், தற்போதைய எல்.கே. மேனிலைப்பள்ளி இயங்கி வரும் தாமரைப் பள்ளி வளாகத்தில் இயங்கிய எல்.கே. துவக்கப்பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து, எல்.கே. மேனிலைப் பள்ளியிலும் மொத்தம் 36 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்ததும், பணி நிறைவிற்குப் பின், சாயர்புரத்தில் தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள தேவாலயத்தின் சேகர பொருளாளராகவும் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தனது பணி நிறைவையொட்டி எல்.கே. மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற வழியனுப்பு விழாவின்போது, பள்ளி தாளாளர் - காலஞ்சென்ற ஹாஜி பி.மஹ்மூத், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, எல்.கே. துவக்கப் பள்ளியின் முன்னாள் தாளாளரான ‘நாவலர்’ ஹாஜி எல்.எஸ்.இப்றாஹீம் மற்றும் எல்.கே. மேனிலைப் பள்ளியின் சக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுடன் எடுக்கப்பட்ட குழுப்படம்:-



தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்


படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
மற்றும்
திரு. சாமுவேல் ராஜ்


[கூடுதல் தகவல்கள் மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 19:51 / 20.05.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fasi Ismail (GZ) [20 May 2013]
IP: 112.*.*.* China | Comment Reference Number: 27477

நல்ல தமிழ் இலக்கணமும், ஆர்வமுள்ள நல்ல ஆசிரியர், அவர், அவரை போன்று சில வாத்தியார்கள் எங்களுக்கு பயின்று தந்த காலத்தை சில காலம் முன்புதான் நான் நினைவில் கொண்டேன், ஆனால் இப்போது அவர் காலமான செய்தி படித்ததும் மிகவும் வருத்தமாக உள்ளது, அன்னாரின் குடும்பத்தார்க்கு என்னுடைய ஆழ்த்த இரக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் மேலும் அன்னாரின் பிழைகளை பொருக்க வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இரங்கல்....
posted by M.S.ABDULAZEEZ (kayal) [20 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27479

ஆசிரியர் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வருந்துகிறோம்!
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha - Qatar) [20 May 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 27484

எம் மதிப்பு மிகு ஆசானே!

நயமுடன்-நட்புடன்-இசையுடன்- கம்பீரமாய் எமக்குக் கல்வி புகட்டினீர்!

5ஆம் வகுப்பில் கணிதத்தைக் கற்கண்டாய் கற்பித்தீர்!

9ஆம் வகுப்பினிலே அருந்தமிழைத் தேனினும் இனிய சுவைத்தமிழாய் ஊட்டினீர்!

தனி வகுப்பில் [டியூஷன்] பள்ளிப் பாடங்களுடன் மனிதராய் உயர்ந்து நிற்கும் வாழ்வுக்கலைப் பாடமும் போதித்தீர்!

scout ல் நாட்டுப்பற்றை ஊட்டினீர்!

நீங்கள் பயிற்றுவித்த காலங்களில் பல்துறை நிபுணராய் எல்.கே. பள்ளிக்கே மகுடமாய் திகழ்ந்தீர்!

மறைந்ததாய் சொன்னார்கள்!
நினைவில் நிற்கிறீர் நிரந்தரமாய் என் ஆசானே!
நிலைத்து நிற்பீர் எம் இதயத்தில் என்றுமே!

உடலால் உம்மை இழந்து தவிக்கும் உங்கள் குடும்பத்தினர், சக ஆசிரியர்கள், நண்பர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [20 May 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27486

மிகவும் நகைச்சுவை உணர்வுடன் வகுப்பை நடத்துவதில் சிறந்தவர். அவரின் தலைமையின் கீழ் சாரணர் இயக்கத்தில் இருந்த நாட்களை மறக்க முடியாது. ஆசிரியர் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் .

முத்துவாப்பா (எ) புஹாரி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA ) [20 May 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27487

நான்காம் வகுப்பு அவரிடம் படித்தோம். மாணவர்களின் ஒழுக்கத்திற்கு, மற்றும் தூய்மையான உடை அணிந்து வரவேண்டும் என்பதிலும் கண்டிப்பாக இருப்பார் , L.K.மாமா அவர்கள் தேர்ச்சி சான்றிதழ் வழங்க ஒவ்வொரு மாதமும் வரும் போது மாணவர்கள் முடி வெட்டி இருக்கிரார்களா? நகம் வெடி இருக்கிரார்களா என்று சோதிப்பார்கள். அந்த நேரம் நகம் வெட்டாத மாணவர்களுக்கு எஸ்போன் சார் அவர்கள் நகம் வெட்டி விடுவார்கள்..

ஒரு சமயம் என்னோடு படித்த மாணவர் ஒருவருக்கு முடி வளர்ந்து இருந்தது. எஸ்போன் சார் அவர்கள் பல முறை சொல்லியும் அந்த மாணவர் முடி வெடி வரவில்லை. ஒரு நாள் பலமாக அடி கொடுத்து விட்டார். அழுது கொண்டே அந்த மாணவர் சொன்னார் வீட்டில் சாப்படிற்கே ரொம்ப கஷ்டம். முடி வெட்ட பணம் தர மாட்டிருகிர்ரர்கள் என்று சொன்னான் உடனே அந்த மாணவரை எங்கள் துவக்க பள்ளி அருகில் இருக்கும் பரமசிவன் சலூன் கடைக்கு அழைத்து சென்று பணம் கொடுத்து உதவினார்.

சுமார் ஆறு மாதம் அவரிடம் படித்தோம். அதன் பின் துவக்கப்பள்ளி (தாமரைபூ )க்கு TRANSPER ஆனார். அதன் பின் L.K.மேல்நிலை பள்ளி தமிழ் ஆசிரியர் ஆனார்.அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

M.E.L.நுஸ்கி
முன்னால் மாணவன்
L.K.பள்ளி
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by salai s nawas (singapore) [20 May 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 27491

நான் எல்கே பள்ளியில் பயிலும் பொது கணக்கு பாடம் பயிற்றுவித்தவர். அசெம்பளியில் பாடும் கடவுள் வாழ்த்து பாடல் " இரு கைகள் ஏந்தியே வேண்டுகிறோம் " என்ற பாடல் இவரால் மெட்டமைக்க பெற்றது.

ஆழ்ந்த அனுதாபங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [20 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27497

அருமையான ஆசான். எப்போதும் சிரித்த முகம். ராகத்தோடு பாடம் எடுக்கும் ஆசிரியர்.

நீண்ட இடைவெளிக்கு (25 வருடங்களுக்கு) பின்பு அவர்களை கண்டதும்.. என் பெயர் சொல்லி நலம் விசாரித்தும் அசந்து விட்டேன்.(பெயரை சரியாக நினைவில் வைத்து இருந்ததால்). அவர்களிடம் படித்த நாட்கள் நினைவில் ஓடுகின்றன.

துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Shaik Dawood (Maldives) [20 May 2013]
IP: 124.*.*.* Maldives | Comment Reference Number: 27499

ஆசிரியர் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA) [20 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27501

ஆசிரியர் எஸ்போன் அவர்களின் மரண செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். அவரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆண்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஆழ்ந்த அனுதாபங்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [20 May 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27503

எஸ்போன் சாரிடம் நான் ஒன்னாம் வகுப்பு முதல் படித்திருக்கிறேன் ஆனால் எனக்கு அவர்கள் நாலாம் வகுப்பு வகுப்பாசிரியர் - தினமும் ஸ்கூல் அச்செம்ப்லி யில் பாட்டு, பேச்சு போட்டிக்கு எழுதி தருவது, நாடகம் எழுதி தருவது என்று எங்களது வாழ்வியலில் எல்லா அங்கங்களிலும் எங்களுக்கு ஊக்கமளித்து, கல்வி கற்றுத்தருவதில் கருணையும் கண்டிப்பும் கலந்து கற்ப்பித்து இவர்களிடம் தான் கற்க வேண்டும் என்று பள்ளியில் எல்லா மாணவர்களும் என்னும் அளவிற்கு மாணாக்கர் வாழ்வில் அக்கறை காட்டிய ஒரு கண்ணியவாளர். கிட்டத்தட்ட நமதூரின் ஜனத்தொகையில் கணிசமான அளவு இவர்களிடம் படித்தவர்களாகத்தான் இருக்கும்.

உங்களின் பூத உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் நீங்கள் உருவாக்கிய ஜனங்களின் மனங்களில் என்றும் குடி இருப்பீர்கள், எங்களின் வாழ்வின் அர்த்தங்கள் உங்களின் புகழ் பாடிக்கொண்டே இருக்கும்.

அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்.

சாளை ஷேக் ஸலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Muzammil (Dubai) [20 May 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27505

ஆசிரியர் அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வருந்துகின்றோம். வாத்தியாரின் பிரிவால்.....
posted by M.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்.) [20 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27506

செய்தியைப் பார்த்ததும் நானும் எனது நண்பர்கள் சிலரும் சுப்பிரமணியபுரத்திற்கு விரைந்தோம். சார் அவர்களின் ஈமச்சடங்குகளில் இறுதிவரை பங்கெடுத்து குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தோம். காயல்பட்டினத்திலிருந்து வந்திருந்த எங்களை அவர்கள் பார்த்தவுடன் சாரின் மாணவர்களா? என ஆச்சரியத்தோடும் சோகமான அந்த நேரத்திலும் கூட இன்முகத்தோடும் வரவேற்றனர்.

நான் ஆரம்பப்பள்ளியில் படிக்கும் போது சார் அவர்கள் எனக்கு 5ஆம் வகுப்பு வாத்தியார். அசம்பெளியில் “ஆதியருள் கனிந்திளங்கி அமர் ஜிப்ரீல் வழியாக”, எனும் பாடலுக்கு ஆர்மோனியப் பெட்டியில் விரல் வித்தை காட்ட அப்பன் சார் தபலா வாசிக்க இருவருக்கும் சரியான போட்டியாக இருக்கும்.

நம் மக்களோடு ஒன்றி நமது திருமறையின் சிறிய சூராக்களை மனப்பாடம் செய்த்து அடிக்கடி அதை ஓதியும் காட்டுவார். மதிய உணவுக்காக மிக்சர் வாங்கி வந்து சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவார். அந்த மறக்க முடியாத காலம் பலருக்கும் இருப்பதால்தான் பழைய மாணவர்கள் பலமுறை அவரது வீட்டுக்குச் சென்று சட்டைத்துணிகள், இனிப்பு போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியும், ஹஜ்ஜிலிருந்து வரும் போது மக்காவிலிருந்து ஜம்ஜம் தண்ணீரும் கொடுத்து அளவலாவிவிட்டு வருவார்களாம். இச் செய்தியை அந்த நல்லாசிரியரை மண்ணுக்குள் மறைவு செய்யும் வேளையில் அவரது உறவினர் ஒருவர் நா தழுதழுக்க என்னிடம் கூறிய போது எனது கண்கள் நனைந்தன.

-L.K.பள்ளியின் முன்னாள் மாணவன்,
ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நெஞ்சம் மறக்கவில்லை...
posted by S.K.Salih (Kayalpatnam) [20 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27508

பள்ளியில் படிக்கும் காலங்களில், சிலர் படித்துத் தந்த நினைவே இல்லாமல் மறந்து போகும்... காரணம், அவர்கள் கடமைக்காக பணியாற்றியிருப்பர்.

இன்னும் சிலர், “இவர்கிட்ட போயி படிச்சோமே...” என்று எண்ணத் தோன்றும். அவ்வளவுக்கு வேண்டத்தகாதவர்களாக நடந்திருப்பார்கள்.

வெகு சிலர் மட்டும், வாழ்நாளெல்லாம் மறக்க முடியாத அளவுக்கு நெஞ்சில் நிலைத்திருப்பார்கள். அப்படி என் நெஞ்சில் நிலைத்து நின்ற மேதைதான் எனது பெருமதிப்பிற்குரிய ஆசான் எஸ்போன் சார் அவர்கள்.

06ஆம் வகுப்பு முதல் 08ஆம் வகுப்பு வரை எனதன்பு எஸ்போன் சார் அவர்களிடம் தமிழ் பாடம் பயின்றேன்...

அரசன் நளன், சுயம்வரம் மூலமாக கன்னியருள் தனக்குப் பிடித்த தமயந்தியைத் தேர்ந்தெடுக்கும் செய்யுள் பாடத்தை நடத்தினார்... அவ்வளவு ரசனையாக, (அவர் வயதையும் அறியாமல்) காதல் சுவையுடன் அப்பாடத்தை அவர் நடத்திய விதம் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

நளன் தமயந்தியை நிக்காஹ் செய்ய தேர்ந்தெடுத்தானாம்... பின்னர் “பாரக்கல்லாஹு அல்ஃபாத்திஹா” என்று கூறினார்களாம்... இப்படியெல்லாம், நமதூர் மரபுகளையும் கலந்து அவர் பயிற்றுவித்த பாடங்கள் எப்படி மறக்கும்?

செய்யும் தவறுக்காக அடிப்பார்.... வலிக்கும்... துடிப்போம்... அதை மனதில் வைத்துக்கொண்டு, ஓர் இரண்டு நாட்களுக்காவது அவரிடம் முகம் கொடுக்காமல் இருக்க நினைப்போம்... ஆனால், அளித்த தண்டனையையெல்லாம் மறந்துவிட்டு, அடுத்த நாள் அவர் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் தமிழ் பாடம் நடத்தும்போது, வாங்கிய அடி... அதனால் ஏற்பட்ட வலி மற்றும் தழும்புகள் அனைத்தும் எங்கோ சென்றுவிடும்.

“ஏசுவின் நாமம் எழிலான நாமம்
இணையிலா அன்பின் திருநாமம்”

என்ற இசையில்,

“காயல்மா நகரின் கண்மணி எல்கே
கல்வித் தந்தையாம் எங்கள் எல்கே”

என எல்.கே.அப்பாவின் மறைவையொட்டி, அவர்களைப் புகழ்ந்து இயற்றப்பட்ட பாடல்,

“காக்கும் எம் இறையோனே
கனிந்தே கையேந்தி இறைஞ்சுகிறோம்...
....
....
....
எல்கே பள்ளி மாணவர் யாம்
இசைந்தே இறைஞ்சுகிறோம்...
எல்லா வளம் யாம் பெறவே
ஏகனே அருள் புரிவாய்...”

என்ற இறைவணக்கப் பாடல் உள்ளிட்ட எங்கள் மனதில் ஆழப்பதிந்துள்ள பாடல்களுக்கு எங்கள் ஆசான் எஸ்போன் சார் அவர்களின் விரல்கள் ஆர்மோனியத்துடன் உற்சாகமாய் விளையாடியது இன்றும் நினைவில் நிற்கிறது...

இந்தப் பாடல்களுள் முதல் பாடலை மர்ஹூம் எஸ்.எம்.பி.மஹ்மூத் ஹுஸைன் அவர்களும், மற்றொன்றை ஆசான் எஸ்போன் அவர்களும் இயற்றியதாக நினைவு. (தவறாக இருப்பின், அறிந்தவர்கள் திருத்தித் தரவும்.)

பள்ளி ஆண்டு விழாவில், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் எனது ஆசானின் பங்களிப்பு மிகவும் மகத்தானதாகவும், சுவை மிக்கதாகவும் அமைந்திருந்தது.

சில நாட்களுக்கு முன்பு கூட, எஸ்போன் சார் அவர்களைப் பார்க்க ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று நினைத்தேன். இன்றுதான் அதற்கு வாய்ப்பு கிடைத்தது...

என் நெஞ்சம் மறவாத ஆசானை நான் கண் குளிரக் கண்டேன். ஆனால் அவர்தான் என்னைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டார். (இத்தனை நாள் அவரைப் பார்க்காத ரோஷமோ என்னவோ...)

ஆசிரியர் பெருமகனாரின் மறைவால் வாடிப் போயுள்ள அவர்களது அன்பு மனைவியார், மக்கள், மருமக்கள், பேரன் - பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கண்ணீருடன்
எஸ்.கே.ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. condolence
posted by syedahmed (GZ, China) [21 May 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 27509

We profoundly distressed to learn about the sudden demise of Espone Sir which was rudely shocked, He was a source of strength and inspiration to many of his fellow beings. We express our most sincere sympathy to his great breavement. May his soul rest in peace.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...ஆழ்ந்த அனுதாபங்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [21 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27511

எனது முன்னால் தமிழ் ஆசிரியர் அவர்களின் மரண செய்தி அறிந்து மன வேதனை அடைந்தேன் . நாங்கள் அவரிடம் படிக்கும் காலத்தில் எங்களுடன் மிக அன்புடன் பழகும் நல்ல பண்பாளர் . நான் விடுமுறையில் ஊருக்கு போகும் நேரத்திலும் அவரை சந்திக்கும் நேரத்தில் , எனது பெயரை சொல்லி மிக அன்புடன் நலம் விசாரிப்பார் .

அவரை இழந்து , பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Cnash (Makkah ) [21 May 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27513

இரண்டாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை எங்களுக்கு ஆங்கிலம்,கணிதம் கற்று தந்த அருமை ஆசிரியர், நான்காம் வகுப்பில் எங்களுக்கு வகுப்பாசிரியர், எங்களின் டியுசன் ஆசிரியர் மரியாதைக்குரிய ஆசான் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!

இரு கைகள் ஏந்தி இறஞ்சிகின்றோம்
இறைவா நீ எங்களை காத்திடுவாய்
அருள் வேண்டி தொழுதுன்னை வணங்குகின்றோம்
இருள் நீக்கி காத்திடுவாய்
வல்லவனே வளம் தருபவனே
நல்லவனே நன்மை தருபவனே
எல்லா புகழ் உன் பாதம் படைத்தோம்
கல்வி ஞானம் தந்திடுவாய்!!!

------------------------

வல்லோன் இறையோனே அருளாளனே
வாய்மை மிகவும் உன் அடியார்கள் நாங்கள்
இரு கைகள் ஏந்தி இறஞ்சிகின்றோம்

-----------------------

காக்கும் எம் இறையோனே கனிந்தே
கை ஏந்தி இறஞ்சிகின்றோம்..

-------------------------------

நவ்வி இலாஹ சமா
கல்பன் கரிபி கமா
நவ்வர்த்த கல்ப இமாம்
மின்னாசி கஸ்ஸாலி ....

போன்ற என்ற இறை பிராத்தனை பாடலுக்கு ஹார்மோனிய இனிய இசை அளித்து லைன்-கிளாஸ் இல் வாரம் இருமுறை கொடுத்தது இன்று வரை மனதில் நிறுத்தியது என்றும் காதுகளில் ஒலித்துகொண்டிருக்கிறது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by M.A.K.JAINUL ABDEEN,President, Kaakkum Karangal Narpani Manram. (kayalpatnam) [21 May 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 27514

மரியாதைக்குரிய ஆசான் எஸ்போன் சார் அவர்களின் மரணசெய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். சார் அவர்களை நான் ஆறாம் வகுப்பு படிக்கும் காலம் முதல் தெரியும். சாரணர் இயக்கத்தின் ஆசிரியராக இருந்தார்கள். ஆசிரியர், மாணவர் என்ற பாகுபாடே இல்லாமல் மாணவர்களாகிய அனைவர்களிடமும் நல்ல நண்பரைப் போல் பழகுவார்கள். அவர்கள் எங்களுடைய சிறுவயதில் சொல்லித்தந்த பாடம் அனைவர்களுக்கும் நாம் உதவியாக இருக்கவேண்டும் என்பது. இன்று நான் சமூகபணிகளில் ஆர்வமாக பணியாற்றுகிறேன் என்றால் அதற்கு எஸ்போன் சார் அவர்களும் ஒருகாரணம். சிறுவயதில் சொல்லிதந்த பாடம்தான்.

அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும். அவர்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவண்,
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,
எல்.கே.பள்ளி முன்னாள் மாணவன்,
தலைவர், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம்,
நகர தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்,
காயல்பட்டணம்,
உறுப்பினர், காயல்பட்டணம் அரிமா சங்கம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Seyed Mohamed (Bakkavi) (Saudi) [21 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27516

இதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது ... இலக்கிய மேதை என்று மாத்திரம் சொன்னால் மிகையாகது ..

இவரிடம் தான் நான் முதன் முதலாக tuition பயின்றேன் .. மிகுந்த நகைச்சுவை தன்மை உடையவர் .. ஆசிரியரின் இறந்த செய்தியை கேட்டு மிகவும் துயரம் அடைய்ந்தேன் ..

அன்னாரின் குடும்பத்தார்க்கு என்னுடைய ஆழ்த்த இரக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

Administrator: Comment edited as per user request


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...Thank You From Espone Sir Family member's bottom of the hearts
posted by Espone Sir Family (India) [24 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27566

Dear Beloved அப்பா, அம்மா, vaapa, Umma, Brothers & Sisters,

Greetings in the name of the Almighty.

Thank You for all your gratitude, love and affection shown for our father's dismissal. We are really proud of the response that we received for my father's funeral. We feel that our father has earned millions of affectionate hearts from L.K.S Higher Secondary School & families of Kayalpattinam.

As a member of Espone Sir family we can not repay the love that you shown us, but we will remember each and everyone in our prayers. Please uphold us especially for our mother (Beulah Espone) in your family prayers.

Thank You one and all again for your continual affection. Please stay connected as ever.

Please feel free to communicate to the below given email addresses.

With Love,affection and Prayers,
Mr. Y.S.Espone and Sons.
(Mrs. Beulah Espone)
(Mrs. Guin Jebachandran, Daughter)
(Mr. E.Solomon Devadason, Son - esddos@gmail.com)
(Mrs. Jasmine Samuel, Daughter)
( Mr. Azariah Jason, Son - hatstuff.jason@gmail.com)
and Grand sons and Grand daughters.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by SAMUELRAJ (Coimbatore) [25 May 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 27573

Thank you for your kindness and sympathy during our time of loss. It gives us much comfort to know that you are thinking of us as we grieve our uncle's death.

Regards,
Samuel Raj & Family members


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved