நன்றியும் கண்ணீரும் posted byபாளையம் சதக்கத்துல்லா (தமாம், சவுதி அரேபியா)[09 January 2015] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38831
அல்லாஹ் இவருடைய நல்ல பணிகளை ஏற்று அவருடைய கப்ர் வாழ்கையை விசாலமாக்கி வைப்பானாக! சொர்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக!.
இவருடைய உதவி ஏதாவது ஒரு வகையில் தமிழக முஸ்லிம்களுக்கு சென்றடைந்து இருக்கும். அதுவும் நம்மூர் மக்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
1983ஆம் ஆண்டு, நானும் என் நண்பன் கலீல் ரஹ்மானும் (தேங்காய்பட்டினம்) பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கீழக்கரையில் உள்ள சதக் பாலிடெக்னிகில் படிக்க முயற்சி செய்து கொண்டு இருந்த நேரம். பெரியவர் BSA அவர்கள் என் சாச்சப்பா (துணி உமர்) அவர்கள் வீட்டிற்கு வந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கும் வந்திருந்தார்கள். (LMS ஸாமு அப்பாவும் உடன் வந்திருந்தார்கள்). அச்சமயம் என் தாயார் சதக் பாலிடெக்னிகில் எனக்கு சீட்டு கிடைக்க BSA அவர்களிடம் உதவி கேட்டார்கள். அதற்கு அவர்கள் சதக் பாலிடெக்னிக் தனது கல்வி நிறுவனம் அல்ல என்றும் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாக வாக்களித்து விட்டு சென்றார்கள்.
சிறிது நாட்களுக்கு பின்பு பாளையம்கோட்டையில் இருக்கும் முஹம்மது இஸ்மாயில் ITI யிலிருந்து எனக்கு அப்ளிகேஸன் ஃபாம் வந்தது. நான் அந்த ITI க்கு அப்ளை செய்யவுமில்லை, ஃபாமுக்கு பணம் கட்டவுமில்லை. பிறகு விசாரித்ததில், BSA அப்பாவின் உதவியாளர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டேன்.
நான் அந்த கல்வி நிறுவனத்திலோ அல்லது BSA அவர்களின் கல்வி நிறுவனத்திலோ படிக்கவில்லை. இன்னும் அரபு நாட்டில் வேலை செய்தாலும், அவர்களின் தொழில் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு வகையில் அவர்களின் உதவியை என் வாழ்வில் பெற்றுள்ளேன்.
இது போல மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு எல்லா தரப்பு மக்களுக்கும் உதவி செய்துள்ளார்கள்.
அவர்களுக்கு அனைத்து மக்களின் துஆ நிச்சயமாக கிடைக்கும். வல்ல அல்லாஹ் அவர்களின் குடும்பத்தாருக்கு மன அமைதியை அளிப்பானாக! BSA அப்பாவை கப்ரில் புது மாப்பிள்ளை போல் தூங்க வைப்பானாக! மறுமையில் ஜன்னத்துல் பிர்தெவ்ஸ் எனும் மேலான சுவர்கத்தை வழங்குவானாக!
தொலைபேசி உறவுகள் posted byபாளையம் சதக்கதுல்லா (தமாம், சவுதி அரேபியா)[17 November 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38175
நண்பர் பஷீரின் கட்டுரையை படிக்க படிக்க, என் தந்தை, அவர்களில் அந்திம காலத்தில் என்னுடன் தொலைபேசியில் பேசியவைகளே நினைவுக்கு வருகிறது. சிறிய குடும்பம், அதிக செல்வம், சந்தோஷம் கொடுக்கும் என்று நாம் அவைகளை விரும்புகிறோம். ஆனால் நிம்மதி...?
இருக்கும் போது தெரியாத அருமை, சொந்தங்களை இழந்த பின்பே புரிய முடிகிறது. நண்பனின் கட்டுரை நம் வாழ்கை சக்கரதத்தின் மீள் பார்வைக்கான முதல் படி.
சிறந்த களப்பணியாளர் posted byபாளையம் சதக்கத்துல்லா (தமாம், சவுதி அரேபியா)[12 November 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38111
சமுதாயத்தின் மீது பற்று மிக்கவர். சிறந்த களப்பணியாளர். சமீபத்தில் அவர் வீட்டுக்கு சென்ற நேரத்தில் சமுதாய சிந்தனையே அவரின் பேச்சில் அதிகமாக வெளிப்பட்டது. அல்லாஹ் அவருடைய நற்செயல்களை பொருந்தி கொள்வானாக! அவரின் கப்ர் வாழ்கையை வெளிச்சமாக்கி, மறுமையில் ஜன்னத்துல் பிஃர்தௌசை பாக்கியமாக்கி வைப்பானாக! அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், தமுமுக சகோதரர்களுக்கும் மன நிம்மதியை அளிப்பானாக! ஆமீன்
சதக்கதுல்லாஹ் அப்பா posted byபாளையம் சதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா)[07 August 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36287
வாவ்! எங்கள் அப்பா, கேரளாவிற்கெல்லாம் சென்றார்களா?! என் முன்னோர்களின் சரித்திர நிகழ்வுகளை, உங்கள் பயணக் குறிப்பின் மூலம் அறிய தந்தமைக்கு மிக்க நன்றி சகோ. சாளை பஷீர் .
செய்தி: நோன்புப் பெருநாள் 1435: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.15 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெருநாள் posted byசதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா)[30 July 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36156
சர்வதேச பிறையை நீங்கள் பின்பற்றவில்லை என்கிறீர்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை இலங்கையில் பிறை பார்த்தால் நம் ஊரில் பெருநாள் கொண்டாடிணோமா இல்லையா? இப்பொழுது என்ன புதிய மார்க்க சட்டம் வந்துள்ளதால், இலங்கையில் பிறை பார்த்தாலும் புறக்கணிக்கிறீர்கள்? விளக்கவும்.
செய்தி: நோன்புப் பெருநாள் 1435: இன்று நோன்புப் பெருநாள் இரவு! நாளை காலை 07.15 மணிக்கு கடற்கரையில் பெருநாள் தொழுகை!! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பெருநாள் posted byபாளையம் சதக்கதுல்லாஹ் (தமாம், சவுதி அரேபியா)[29 July 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36150
ஆதாரப்பூர்வமான தகவல் எங்கிருந்து வருகிறதோ அதன் அடிப்படையில்தான் பெருநாள் அறிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டு கேரள மாநிலம் காப்பாடு என்ற ஊரில் இருந்து ஆதாரப்பூர்வமான தகவல் வந்த உடன் பெருநாள் அறிவித்தார்கள்.
அது சரி, சவுதி அறிவித்தால் அதற்கு மாற்றமாகத்தான் நோன்பு வைப்போம், பெருநாள் கொண்டாடுவோம் என்று நீங்கள் அறிவித்து விட்டு போக வேண்டியதுதானே? அது அருகில் இருக்கும் இலங்கையில் பிறை பார்த்தாலும் கூட!
கருத்து கணிப்பு posted byP.M.S. Sadakathullah (Dammam)[15 May 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34976
(1) தூத்துக்குடி தொகுதியில் [ ADMK] கட்சி வெற்றி பெறும்.
(2) தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி (21) இடங்கள் பெறும், தி.மு.க. கூட்டணி (16) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (2) இடங்கள் பெறும், காங்கிரஸ் (0) இடங்கள் பெறும்.
(3) தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணி (121) இடங்கள் பெறும், பா.ஜ.க. கூட்டணி (189) இடங்கள் பெறும், இதர கட்சிகள் (233) இடங்கள் பெறும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross