செய்தி: இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்றப் பொதுக்குழு!! உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Buffet உணவு முறையும் சுன்னத்தை பின்பற்றுதலும் posted byHUSAIN NOORUDEEN (Kayalpatnam )[04 June 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46423
மக்கி மாமா அவர்களின் ஆதங்கம் நியாயமாக இருந்தாலும், அவர்கள் கவலை படும்படியாக நின்று சாப்பிடும் நிலையை எமது அபூதபீ காயல் நலமன்றம் ஏற்படுத்தவில்லை.
தம்பி SK ஸாலிஹ் குறிப்பிட்டுள்ளது போல் வந்தவர்கள் அனைவருக்கும் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த Buffet ஏற்பாடு நமக்கு மட்டும் செய்யப்பட்டிருந்தாலும், நமது மன்றத்தினர் கலைந்ததும் பிறர் வந்து உணவு அருந்த தொடங்கினர். எனவே உணவு வீணாகாமல் தடுக்கப்பட்டது.
Re:... posted byHUSAIN NOORUDEEN (Abu Dhabi)[04 October 2017] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45819
மிகவும் முட்டாள்தனமான ஒரு செயல். உலகில் எங்குமே நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளை ஏற்படுத்துவதில்லை. நம் நாட்டில் மட்டுமே நடக்கும், இத்தகைய அறிவாளிகளின் செயல்.
கிளைச்சாலையில் இருந்து வருபவர்கள்தாம் ஒழுங்காக பார்த்து வரவேண்டும். அவர்களுக்கு எப்படி நெடுஞ்சாலையை அணுக வேண்டும் என்று கற்பிக்க வேண்டுமேயொழிய நெடுஞ்சாலையின் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. அப்படியே அமைப்பதென்றால், இந்த தடுப்பரணை கிளைச்சாலையின் இறுதியில் அமைத்து அதற்குள்ளிருந்து நெடுஞ்சாலையை அணுகுபவர்களின் வேகத்தை குறைப்பது தான் உசிதமான செயல்.
Re:...;-( posted byHusain Noorudeen (Abu Dhabi)[03 November 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44862
@ விளக்கு SMA காக்கா, இப்படி எல்லாம் கேள்வி கேட்டீங்கன்னா, நாங்க அழுதுருவோம். எங்க நாட்டுல நாங்க இப்படி சோதனை பண்ணுனாத்தான் எங்க பாக்கெட்டுக்கும் துட்டு வரும், நல்லா வேலை செய்யுறோம்னு மக்களையும் எங்க மேலதிகாரிகளையும் ஏமாத்த முடியும்.
அதில்லாம, ரிஷிமூலம் நதிமூலம் பாக்குறதுக்கு எங்களுக்கு என்ன நாட்டுப்பற்றா வேர்த்து ஓடுது?
Re:...ஆழ்ந்த கருத்துக்கள் posted byHusain Noorudeen (Abu Dhabi)[31 October 2016] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44853
மாஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், ஆழ்ந்த கருத்துக்கள், ஆழமான சிந்தனையின் தெளிவான வெளிப்பாடு, தெளிந்த நீரோடையை போன்ற நடையாயினும் எட்டிப்பாயும் ஒரு ஏவுகணையின் வீறுநடை. அல்ஹம்துலில்லாஹ். ஒரு இஸ்லாமிய சகோதரியின் இந்த காவியம் ஆளுபவர்களின், நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓநாய்களின் செவியில் சென்று சேர்க்கும் வழிமுறை என்ன சகோதரர்களே.
இந்த கட்டுரையை பிரிண்ட் எடுத்து மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்புங்கள். தெரிந்து கொள்ளட்டும் இறை சட்டங்களின் மாண்புகளை, அவை எந்த காலத்திற்கும் ஏற்றவை என்பதை, என் சகோதரிகள் மதிக்கப்படுகிறார்கள் என்பதை, நீ உன் குடும்பத்திற்கு செய்த துரோகத்தை நினைத்துப்பார் என்று சொல்ல.
அல்ஹம்துலில்லாஹ், சகோதரி உம்மு நுமைரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
Re:...உன்னதமான முயற்சி posted byHusain Noorudeen (Abu Dhabi)[08 August 2016] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44383
அருமையான ஒரு நிகழ்ச்சி, வாழ்வியல் மாற்றத்தின் தொடக்கத்திற்கான நல்ல ஒரு வாய்ப்பு. இதனை ஏற்பாடு செய்த SK சாலிஹ் மற்றும் தம்பி BS ஆகியோருக்கு அல்லாஹ் நன்மையை கொடுப்பானாக.
தொலை தூர பயணத்தையும் பொருட்படுத்தாது நம் ஊருக்கு வந்து சிறப்பான முறையில் சிகிச்சை மற்றும் அறிவுரைகள் வழங்கிய அக்கு ஹீலர்களுக்கு எத்துணை முறை நன்றி சொன்னாலும் நிறைவடையாது. தினமும் தங்களுடைய வேலைப்பளுவுக்கிடையிலும் டெலெக்ராமில் கேட்கப்படும் அத்துணை கேள்விகளுக்கும் ஒன்றை கூட நாளைக்கு என்று மிச்சம் வைக்காமல் ஏற்கனவே கேட்கப்பட்டு 100 முறை பதில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் 101 ஆவது முறையாக மீண்டும் கேட்கப்பட்டாலும் கொஞ்சம் கூட சலிப்படையாமல் பதில் கூறும் சகோதரர்கள் சக்தி பகதூர், இம்தியாஸ் மற்றும் ஹாஜா முஹியித்தீன் ஆகியோருக்கு வல்ல நாயன் எல்லா நன்மைகளையும் வழங்கி அருள் புரிவானாக.
இதற்கு பிறகு நம்மூர் மக்கள் இதனை எப்படி பின்பற்றப்போகிறார்கள் என்பதில் தான் நம் வரும் தலைமுறையின் ஆரோக்கியம் இருக்கிறது. இதனை நம்மக்கள் உணர்ந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
செய்தி: காயல்பட்டினம் வழியாக அரசு பேருந்துகள் இயக்க கோரி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு தொலைநகலி (FAX) அனுப்ப நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வேரில் பிரச்னையை சரி பண்ண வேண்டும் posted byHusain Noorudeen (Abu Dhabi)[06 August 2016] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44377
நடப்பது என்ன குழுவினரின் சேவை மகத்தானது. ஆனால் நம் எல்லோருக்குமே தெரிந்த ஒரு முக்கிய உண்மையை ஒன்றுமே தெரியாதது போல நாமெல்லோருமே மூடி மறைத்து நடிப்பது ஏன்.
பெரும்பான்மையான பேரூந்துகள் நம் ஊருக்குள்ள வருவதை தவிர்ப்பதற்கான அடிப்படை காரணம் நம்மவர்களின் தவறான நடவடிக்கைகளால் தான் என்பது தெரிந்தும் ஏன் அதைப்பற்றி முதல் அக்கறை காட்டாமல் இந்த போராட்டமும் கோஷங்களும்.
வேரில் உள்ள பிரச்னையை சரி பண்ணுவதற்கு வேண்டிய முயற்சிகளை முதலில் எடுப்போமே..... ஒரு வழிப்பாதையை மதிக்கவும் பஜாரில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்கவும் நம் மக்களை முதலில் தயார் படுத்துவதற்கு வேண்டிய முயற்சிகள்.
Re:...இரவு பகலை முந்தமுடியாது posted byHusain Noorudeen (Abu Dhabi)[23 June 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44109
இங்கே பதிவிடப்பட்டிருக்கும் எந்த கருத்திலும் திரு வேதத்தின் வசனமான "இரவு பகலை முந்தமுடியாது" என்ற கருத்திற்கு வேறு ஒரு விளக்கத்தை குடுக்க முடியாத நிலையை காண்கிறோம்.
"ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மிகிழ்வடைகிறார்கள்" என்ற திரு வசனத்தினை (30:32) மெய்பிப்பவர்களாக அவரவர் சார்ந்த கொள்கையை தூக்கிப்பிடிக்கவே முயற்சிக்கிறார்கள்.
மேலும் இவர்கள் "தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்" (02:238) என்ற வசனத்திற்கு விரிவுரையாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடுத்தொழுகை என்பது அஸ்ரு தொழுகை என்று சொன்னதை எப்படி விளக்குவார்கள்?
Re:... posted byHusain Noorudeen (Abu Dhabi)[15 June 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44041
ஷேக் மாமா அவர்களின் கருத்து மிகவும் சரியானது. நமது ஊரில் நிலவும் கலாச்சாரத்தை நன்றாக படம் பிடித்து காட்டுகிறது.
ஆனால் அதே சமயம், நமக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணத்தில் நம் பிள்ளைகள் நாம் என்ன சொன்னாலும் என்ன தொந்தரவு குடுத்தாலும் தாங்கியே ஆக வேண்டும் என்ற நினைப்பில், தான் பெற்ற மகளை, அவளுக்கு பிறந்த பேர குழந்தைகளை மிகவும் அசிங்கமான சொற்களால் அர்ச்சிப்பதும், அவர்கள் விருப்பப்படி அவர்கள் வீட்டை பராமரிக்க கூட அனுமதிக்காமல், பேரன் சைக்கிள் ஓட்ட கூட பொறுக்காமல், நண்பர்களோடு அவன் வெளியே செல்வது கூட பிடிக்காமல் எதற்கெடுத்தாலும் வம்பு அளக்கும் வாப்பாமார்களை என்ன செய்வது?
செய்தி: கடந்த ஆண்டு ஒப்புதல் கொடுக்கப்பட்ட 59.7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு தற்போது நகராட்சி டெண்டர்! சி கஸ்டம்ஸ் சாலை டெண்டர் விடப்படவில்லை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...டெபொசிட் posted byHusain Noorudeen (Abu Dhabi)[03 November 2015] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42130
முன் வைப்புத் தொகை (இலட்சத்தில்).......
இலட்சத்தில்???????
விளம்பரம் கொடுத்த அலுவலர் எந்த இலட்சணத்தில் வேலை பார்க்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross