முன் உதாரணம்! posted bym.s.m.shaik abdul kader (dubai)[11 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7929
முக்கியமான விஷயங்களில், நமது கருத்தை எப்படி வெளிப்
படுத்த வேண்டும் என்பதற்கு மெகாவின் அறிக்கை சரியான
முன் உதாரணமாகும்.பேரவையின் பெரியவர்கள் கொண்டு வந்த சில தீர்மானங்கள், மோசமான பல விளைவுகளை
ஏற்படுத்தக்கூடும் என்ற என்னைப் போன்றவர்களின் உணர்வை இந்த அறிக்கை மிக அழகாக எடுத்ததுக்காட்டி
இருக்கிறது.
இடித்துரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பாரி லனினும் கெடும்
என்ற குறளுக்கு மெகா மரியாதை செய்திருக்கின்றது.அதை
காப்பாற்றிக் கொள்வதுதான் பேரவையின் கண்ணியத்திற்கு
உகந்ததாக இருக்க முடியும்.
நீதிகள் தோற்பதில்லை! posted bym.s.m.shaik abdul kader (dubai)[08 September 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7794
ஐக்கியப்பேரவை தவறுக்குமேல் தவறு செய்துவிட்டு,முழு
பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க நினைப்பது ஒன்றும்
புதிதல்ல.சுனாமி தொகுப்பு வீடுகள் பிரச்சனையில்,,நகர
மக்களின் உணர்வுகளைக் கிளறிவிட்டு,அப்பாவி வியாபாரிகளை கடை அடைக்கச் செய்து,தேர்தலைப்
புறக்கணிப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி தந்துவிட்டு,
பின்னர் இவர்களே குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக மாறி,அந்தர் பல்டி அடித்தது மாத்திரமல்லாமல்,உள்ளதை
உரக்கச் சொன்ன ஊடகங்களை மன்னிப்பும் கேட்கச்சொன்ன
நல்லவர்களே! பெரியவர்களே!!
பிரதிநிதி என்பவரது ஆதரவு மெஜாரிட்டி அடிப்படை என்று
வரும்போது வாக்கு என்ற அர்த்தம் வராதா? உங்களை நாங்கள் மதிக்கிறோம். இன்னமும் நம்புகிறோம்! ஆனால்
உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்யும் காலம் வந்து
விட்டது. நீதிகள் அழிவதில்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross