கட்டுரை அல்ல.... படிப்பினை. posted bykavimagan kader (BAHRAIN)[18 October 2016] IP: 78.*.*.* Bahrain | Comment Reference Number: 44814
சமூக அக்கறையுள்ள நல்ல மனிதர், நல்ல எழுத்தாளரும் கூட... இந்த அளவில்தான் நான் மாமா அவர்களைக் குறித்து அறிந்து வைத்திருந்தேன்...
ஹிஜாஸ் மைந்தனின் கட்டுரை, இத்தனை காலம் எத்தனையோ வாய்ப்பிருந்தும் அவருடன் பழகி, நட்பு பாராட்டாமல் போய் விட்டேனே என்ற சுய குற்ற போதத்தை எனக்குள் விதைக்கிறது.
மொத்தத்தில் நண்பன் வடித்தது வெறும் கட்டுரை அல்ல...
மனிதம் நிறைந்த ஓர் உன்னத மனிதனின் வரலாற்றுத் துளி...
படிப்பதற்காக மாத்திரமல்ல இந்தக் கட்டுரை...
வரும் கால சந்ததியினரின் படிப்பினைக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம்...
அன்னாரின் மறு லோக நல் வாழ்விற்காக
இரு கரமேந்தி இறைவனை இறைஞ்சுகிறேன்.
எட்டாண்டு காலம் கத்தர் காயல் நல மன்றத்தின் தலைவராக
இருந்து,இவர் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம்.புதியவர்களுக்கு
வழி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தானாகவே முன் வந்து,
மற்றவர்களின் வேண்டுகோளை மறுதலித்து,தன்னை அந்தப்
பதவியில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ள இவர்,வயதில்
சிறியவராயினும்,அறிவில்,ஆற்றலில்,அரவணைத்துச் செல்கின்ற
பாங்கில்,ஏற்றத்தாழ்வற்ற அனுகு முறையில் ,நீதி தவறாத நெறி
முறையில்,மதச் சார்பற்ற மனிதத்தில் மிக மிகப் பெரியவர்...
உயர்ந்தவர். காயல் நகரத்தின் கல்விக் கூட்டமைப்பாகிய இஃராவின்
தற்போதைய தலைவரும் இவரே....
மன்றத்தின் மூலமாக .மாத்திரமல்ல... தனிப்பட்ட முறையிலும்,
ஏழை பாழைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக நான்
இவரைத் தொடர்பு கொண்ட போதெல்லாம் இவர் செய்த உதவிகளை
பட்டியல் இடுவதெனில் முகநூலின் பக்கங்கள் போதாது...
நகைச்சுவை உணர்வும்,நல்லிதயமும் கொண்ட இவர் இந்தப்
பதவியைத் துறந்த போதிலும்,இன்று போல் என்றென்றும் இவரைத்
" தலைவரே!" என்று அன்புடன் அழைக்கவே ஆசைப்படுகின்றோம்..
எல்லாம் வல்ல இறைவன் சமூக தளத்தில் இவரது நற்சேவை,
தனி மனித பங்களிப்பு ஆகியவற்றுக்கான நற்கூலியை வழங்குவானாக ஆமீன்.... சான்றோனைப் பெற்றெடுத்த இவரது
தாய் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கலாம்...
புதிய தலைவராக ஒட்டு மொத்த உறுப்பினர்களின் நல்லாதரவுடன்
பொறுப்பேற்றுள்ள எனது அருமை மச்சான்,பண்பாளர்,சமூக
ஆர்வலர்,எம்.என்.முஹம்மது யூனுஸ் அவர்களது
பணி சிறக்க நெஞ்சார வாழ்த்தி துஆ செய்கிறேன். தகுதியுள்ள
ஒருவர் தகமை சார்ந்த இடத்திற்கு வந்திருப்பது வரவேற்கத் தக்கதும்,மகிழ்ச்சிக்குரியதுமாகும்.
சமூகப் போராளிகளின் மீது தெளிக்கப்படும் சாக்கடை,சத்தியம் நிலைபெறும் போது அவர்களது தலைக்கு மேல் விரிக்கப்பட்ட
பூக்கூடையாக மாறி விடுகிறது...
நியாயங்கள் நிலை நிறுத்தப்பட
போராடும் ஒரு தலைவரை வாடி,போடி என்று ஏக வசனத்தில் பேசுகின்ற,கார்பரேட் நிறுவனங்களின் கைக்கூலிகளை எதிர்த்துப்
போராடும் வல்லமையை எஸ்.கேவின் எழுத்துகள் விதைக்கிறது....
களத்திற்கு வராத கருத்து கந்தசாமிகளின் முகத்திரைகளை காலம்
கிழித்தெறியக் காத்திருக்கிறது....
எல்லாம் தெரிந்தும் நடுநிலை
நாடகமாடும் சிலரது கொண்டைகள் அவர்களது தலைப்பாகை கட்டவிழ்த்து
தலை காட்டுகிறது....
எஸ்.கே குறிப்பிட்டதைப் போல,பருவ மழை
பத்திரங்களையும்,பாத்திரங்களையும் பார்ப்பதில்லை... தனது ஆதாரத்தை
மாத்திரமே அது குறி வைக்கிறது....
சத்தியமும் அப்படித்தான்...அது தனது
வீரியத்தைக் காட்டத் துவங்கும் போது,கிள்ளாது.....கொல்லும்...
கொலை வாளுக்கு முன்பொலிக்கும் எச்சரிக்கை மணிதான் எஸ்.கேவின் இந்தக்
கட்டுரை....
செய்தி: பல்சுவைப் போட்டிகள், மருத்துவ பரிசோதனை முகாமுடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அன்பு நிறை மச்சான்.... posted bykavimagan kader (BAHRAIN)[20 December 2015] IP: 78.*.*.* Bahrain | Comment Reference Number: 42499
நல்லவன் என்றோ
கெட்டவன் என்றோ
இவனை முன்மொழியாத
வழிமொழியாத
உரையாடல்களே இல்லை...
பஞ்சப் பராரிகளையும்
பணம் படைத்தவர்களையும்
ஒருபோலக் காட்டத் தெரிந்த
சமூக ரசம் பூசப்பட்ட
சமத்துவக் கண்ணாடி...
மத வாதம் இல்லாத
மதப் பற்றாளன்...
மனங்களை உற்று நோக்கும்
மனித நேயன்...
இமைப் பொழுதும் நான் மறவா
இனிய நண்பன்...
வாழ்க நீ நலமுடன்...நிறைவுடன்...
வல்லவன் இறைவனின் அருளுடன்...
நினைந்து நினைந்தே
ஞாபகம் செய
உள்ளம் முழுதும்
வெள்ளம் சூழ
நடையாய் நடந்தே
இடர்கள் கடந்த
முன்னோர் வாழ்வைச்
சொன்னாய் மழையே...
அற்புதமான சிந்தனை தாங்கிடும் அருமையான வரிகள்
இவை.... ஆடம்பர வாழ்க்கைக்கு ஏங்கிடும் இன்றைய
தலைமுறையினருக்கு, பண்டைய நம் முன்னோரின்
வாழ்வியல் போராட்டத்தை பிரதிபலித்த விதம் அருமை...
மனிதன் அத்து மீறும்போது வரங்கள் சாபங்களாக மாறிவிடுவதை ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கும்
தாயக்குடி இளம்பிறை அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துக்கள்...
சாளை பஷீரின் எழுத்து நடை,மேடு பள்ளங்களை இலாவகமாகக்
கடந்து,கடலில் சங்கமம் ஆகும் ஆற்றொழுக்கு போல அத்தனை
நேர்த்தி....
இதற்கு மேல் இந்தப் படத்தை எந்த டியுபிலும் காணத்
தேவையில்லை....நமக்குள் உருவாகும் உணர்வின் அதிர்வலைகளை, பிறிதொருவருக்குள் கடத்துவது என்பது அசாதாரணமானது..... அதனை
சர்வ சாதரணமாக செய்து விடுகிறது பஷீரின் எழுத்துகள்.... தொடர்ந்து பயணிப்போம் தோழரே.... களைப்பு தீர்ந்து புத்துணர்ச்சி பரவும் வரைதொடர்ந்து பயணிப்போம்....
தேதி .............................11
நேரம்............................11
அறை எண்.............. ...14
தீர்ப்பு பக்கங்கள்..... ...900
சோதிடத்திற்கும்,நியுமராலஜிக்கும்,இருக்கும் மதிப்பு,மரியாதை
கூட சட்டத்திற்கும்,நீதிக்கும்,தர்மத்திற்கும் இந்த தேசத்தில் இல்லை என்பது நிதர்சனமான ஒன்று....
நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும்,நூறு கோடி அபராதமும்
நாற்பத்தொரு நாட்களில் தள்ளுபடியாகும் ஒரே தேசமும்
இந்தியாவாகத்தான் இருக்க முடியும்....
நம்மால் என்ன செய்ய முடியும்? வாங்க! மொட்டை அடிச்சு,
மண் சோறு சாப்பிட்டு,மகிழ்ச்சியோடு பட்டாசு வெடிச்சு,
மானங்கெட்ட செம்மறி ஆட்டு மந்தையில் ஐக்கியம் ஆகி விடலாம்....
எங்கள் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்புகழ்
சாற்றும் ஸலவாத் பாடலின் பின்னணியில்,
அன்னாரது உடலினின்றும் உயிர் பிரியும்
அந்தத் தருனத்தை ஒளிக் காட்சியாக இப்போதுதான்
கண்டேன்..... உறைந்தேன்.... அவரது மரண செய்தி
அறிந்தும் இந்த நிமிடம் வரை எட்டிப்பார்க்காத
விழி நீர், இந்த நொடியில் தாரை தாரையாக.....
இப்படிப்பட்ட தலைவர்களுடன் கண்டும், கதைத்தும், சமூகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய் விட்டதே!
இத்தனை வருடங்கள் இந்த இயக்கமும், இதன் தன்னலமற்ற தலைவர்களும் எனது கண்ணில் படாமலே போய்விட்டனரே!
துர்பாக்கியத்திலும் ஒரு பாக்கியம் என்பது போல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னைத் தாய்ச்சபையில் இணைத்துக்
கொண்டேன்..... அவன் தருவதை தடுப்பதற்கும், அவன் தடுப்பதை தருவதற்கும் எவருக்கும் சக்தியில்லை.....
முகம் பார்த்தறியா மூத்த அண்ணனே! நீங்கள் முன்னதாக சென்று விட்டீர்கள்.... நாங்களும் வந்து கொண்டே இருக்கிறோம்....
உங்கள் மஃபிரத்திற்காக துஆ செய்கிறோம்.... நீங்கள் விட்டுச்
சென்ற பணியினை, இறைவன் வாய்ப்பு தரும் வரை, உங்களைப்
போலவே எந்த சுயநலமும் இன்றி, மனித சமூகத்திற்காக
தொய்வின்றி தொடர்ந்து செய்வோம்.....
நல்ல முஸ்லிமாகவும், முஸ்லிம் லீகனாகவும் மரணிக்கும்
ஆசை, உங்களது மரணத்திற்குப் பின் அதிகரித்து இருக்கிறது...
அதிகரித்துக் கொண்டே இருக்கும்.... இன்ஷா அல்லாஹ்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross