Re:ஹாங்காங் பேரவையின் மூத்த ... posted byAHAMED SULAIMAN S.M. (kayalpatnam)[26 December 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 15096
வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் மிக உயர்ந்த பாக்கியத்தை அவர்களுக்கு அளிக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு இந்த பேரிழப்பை தாங்கும் அழகிய பொறுமையையும் மன வலிமையையும் வல்ல இறைவன் அவர்களுக்கு தந்தருள ஏக வல்லோனை பிரார்த்திக்கிறோம்.
யோகா பயிற்சி posted byAHAMED SULAIMAN (kayalpatnam)[07 March 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3064
அன்புச் சகோதரர் என்.எஸ்.இ.மஹ்மூது அவர்கள், பெண் மக்களின் நலன் கருதி ஒரு நல்ல கருத்தை இங்கு பதிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து நாங்கள் சொல்ல வரும் கருத்து இதுதான்:-
சம்பந்தப்பட்ட அப்பள்ளியில் ஆண்கள் நேரடியாக வந்து யாருக்கும் யோகா பயிற்றுவிப்பதில்லை. வெளியிடங்களுக்குச் சென்றாலும் இந்த விதிமுறை பேணப்படுகிறது என்று அறிந்தே நாங்கள் எங்கள் மக்களை இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கிறோம்.
யோகா என்ற அந்த பயிற்சியையே மார்க்கம் தடுத்திருப்பதாக நாங்கள் இதுவரை கேள்விப்படவில்லை... சகோதரர் மஹ்மூது அவர்கள் அவ்வாறு சொல்ல வரவுமில்லை. மார்க்க வரைமுறைகளுக்கு முரணாக எதுவும் போய்விடக் கூடாதே என்ற கவலைதான் அவரை இவ்வாறு கருத்துப் பதிவு செய்ய வைத்தது!
மார்க்க வரைமுறைகளுக்கு சிறு பாதிப்பு என்றால் கூட அந்நடவடிக்கைகளிலிருந்து எங்கள் பெண் மக்களைக் காத்துக்கொள்ள நாங்கள் என்றும் தயார்!
The library is the best place you can be on earth! Congrats Tamilnadu CM! We improve our knowledge and improve our life. Especially for research students
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross