Re:... posted byஅப்துல் லத்தீஃப் (துபாய்)[19 August 2015] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41684
நம் ஊர் பெரியவர்களுக்கு ஓர் தாழ்மையான கருத்து........ ஊர் மக்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படாத வரை தயவு செய்து பொதுவேட்பாளரை அடுத்த முறை அறிவிக்க வேண்டாம் (இப்போது வெற்றி பெற்றவருக்கு எதிராகதான் - ஊரும் ஜமாத்தும் எடுத்த நிலைபாட்டிற்கு ஆதரவாகதான் நான் கடந்த முறை வாக்களித்தேன் .....எனவே எனது கருத்தில் யாரும் உள்நோக்கம் கற்பிக்காதீர்கள்).....
ஏனெனில் அப்படி நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோற்றுப் போனது ஏதோ ஒரு வகையில் ஈகோ வை ஏற்படுத்திவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது...... அதுதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறதோ என்ற எண்ணம் நம்மூர் மக்கள் மனதில் இருக்கிறது என்பதனை மறுப்பதற்கு இல்லை.....
அடுத்ததாக
திருமதி ஆபிதா ஷேக் சரியான பாதையில் செல்கிறாரா என்பதை பட்டவர்த்தனமாக ( Transparent ) பொதுமக்கள் அறிய நம் முன் இரண்டே வாய்ப்புதான் உள்ளது
ஒன்று......
நம் ஊர் மக்களால் நேர்மையானவராக அறியப்பட்ட ஹாஜி வாவு செய்யது அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைவராக இருந்த போதும் இப்போது சந்தேகிக்கப்படுகின்ற ஊழல்கள் கவுன்சிலர்களால் நடை பெற்றதா.... அப்படி நடந்து இருந்தால் அதனை அவர் சகித்துக்கொண்டு எப்படா 5 வருடம் கழியாது என்று இருந்தார்களா?........
அப்படி ஏதும் இல்லை என்றால் .... திருமதி ஆபிதா ஷேக் அவர்கள்தான் தேவையற்ற அச்சத்தினால் நம் நகருக்கு செய்ய வேண்டிய பணிகளை நிறுத்தி வைத்துள்ளாரா என்பதனை முன்னால் தலைவர் கருத்தை அறிய முற்படலாம்....
இரண்டாவது
இப்போதைய தலைவர் அடுத்த தேர்தலிலும் நிற்க வேண்டும்.... இவரை மக்கள் ஏற்று கொள்கிறார்களா? இல்லையா? என்பது உறுதியாகிவிட்டால் ஜனநாயகத்தின் தீர்ப்பு எதை நோக்கி இருக்கிறதோ அந்த பாதை தான் சரி என்ற முடிவுக்கு மக்கள் வந்து விடலாம்..............
செய்தி: தக்வா அமைப்பின் வருடாந்திர இன்பச் சுற்றுலா! 60 காயலர்கள் பங்கேற்பு!! பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி வாங்கிட 60 ஆயிரம் நிதியுதவி!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVILAK ABDUL LATHEEF (DUBAI)[24 December 2014] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38558
மாஷா அல்லாஹ் அருமை. இன்னும் கொஞ்சம் போட்டோ போட்டு இருக்கலாமோ என்பது போல் இருந்தது.
செய்தி: வழக்குச் சிக்கல்களிலிருந்து ஜெயலலிதா விடுபடுவதற்காக காயல்பட்டினம் உள்ளிட்ட இந்திய தர்காக்களில் வக்ஃப் வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byஅப்துல் லத்தீஃப் (DUBAI)[04 December 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38342
NO COMMENTS .......... இதை தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை.......
Re:... posted byVILAK ABDUL LATHEEF (KAYALPATNAM)[22 September 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 37395
வாழ்த்துக்கள். நம் வடபகுதி மக்கள் மத பாகுபாடு இல்லாத மக்கள் என்பது நமக்கு மிகுந்த சந்தோஷம்....... அதே போல் நாமும் அவர்களுடன் ஒற்றுமையாக இருந்து ஊரில் சிறுபான்மையினரான இந்து கிறித்துவ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.......... பெரும்பான்மையினர் ஆள வேண்டும்... சிறுபானமையினரும் வாழ வேண்டும் இதுதான் நம் ஜனநாயகத்தின் தாரக மந்திரம்
Re:... posted byABDUL LATHEEF (KAYALPATNAM)[23 March 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 33871
எங்கள் அன்புள்ள வைகோ அவர்களுக்கு
உங்கள் பேராதரவு பாரதீய ஜனதாவுக்கு
அப்போ நம் பாரதத்திற்கு இல்லையா?
அதுசரி நாம் ஈழத்தின் பிள்ளைகள்தானே
இந்தியாவைப் பற்றி நமக்கென்ன கவலை?
ஒண்ணேமுக்கால் இலட்சம் உயிருக்கு பகரமாக
இருபதுகோடி முஸ்லிம்களை காவு கொடுக்கலாமா?
முள்ளிவாய்க்கால் கொடூரத்தை நாங்களும் கண்டிக்கிறோம்
முஸ்லிம்கள் என்பதால்தானே எங்களை தண்டிக்கிறீர்கள்?
முசாபர் நகரும், நரோடா பாட்டியாவும் இந்தியாதானே
அங்கே கரிந்து சாம்பலானது இந்தியன் உயிர்தானே?
அதுசரி நாம் ஈழத்தின் பிள்ளைகள்தானே
இந்தியாவைப் பற்றி நமக்கென்ன கவலை?
காங்கிரஸை அழிக்க வேறு கட்சிகள் இல்லையா?
காலை பிடித்து மோடி பின்னால் ஏன் சென்றுவிட்டீர்கள்
இந்திய முஸ்லிமின் இதயத்தை ஏன் கொன்றுவிட்டீர்கள்
துணிச்சல் மிகுந்த ஜெயலலிதாவே துணியாத காரியத்தை
துச்சமெனக் கருதி செய்ய துணிந்து விட்டீரே
அதன் விலை எங்க உயிர்தான் என்று தெரியாதோ
பெரியாரின் வாரிசு நான் என்று சொன்னவரே
எங்கள் உயிர் தோலில் போடும் துண்டென நினைத்தீரோ?
சேகுவேராவையும், பெரியாரையும் புகழ்ந்த உதடுகள்
கோட்சேவையும், கோல்வார்க்கரையும் இனி போற்றுமோ?
மோடியை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்
முதலில் ராஜபக்சேக்கு சிவப்பு கம்பளம் விரிக்கலாமா?
தவறு செய்தவன் திருந்துவானென்றால் எல்லோருக்கும் பொதுதானே?
தனிமனிதன் யாரை கொன்றாலும் தவறு என்பது என் மதம்
எரிந்து போன உடல் முஸ்லிம் என்றால் உமக்கு சம்மதமா?
ஜாஃப்னாவின் உயிரும், ஜாஃப்ரியின் உயிரும் வலித்தது
புரட்சி புயலே மோடிக்கு மட்டும் ஜால்ரா ஏன்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross