Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:36:42 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous EditorialNext Editorial
தலையங்கம் எண் (ID #) 45
#KOTWEDIT45
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 2, 2012
தலையங்கம் குறித்த விமர்சனங்களும், விளக்கமும்!
இந்த பக்கம் 4759 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நகரில் ஒரு வழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனவரி 22 அன்று - எங்கே செல்கிறது இந்த ஒரு வழிப்பாதை? என்ற தலைப்பில், காயல்பட்டணம்.காம் தலையங்கம் ஒன்று வெளியிட்டிருந்தது. நகரில் ஒருவழிப்பாதை அமல்படுத்துவதில் உள்ள பல்வேறு அம்சங்கள் அத்தலையங்கத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.

ஒருவழிப்பாதை சம்பந்தமாக, டிசம்பர் மாதம் நடந்த பெரிய நெசவு தெரு ஜமாஅத் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கே.டி.எம். தெரு - மெயின் பஜார் மற்றும் ஹாஜி அப்பா தைக்காத் தெரு ஆகிய போக்குவரத்து வழிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சீர்செய்ய வேண்டுகோள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தீர்மானத்தினை தொடர்ந்து - இதுகாலம் வரை, ஒருவழிப்பாதை விஷயத்தில் - பெரிய நெசவு தெரு பாதையைக் குறிப்பிட்டு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளாதிருந்த தாயிம்பள்ளி ஜமாஅத்தினர், நகரிலுள்ள ஜமாஅத்துகளிடமிருந்தும், பொது நல அமைப்புகளிடமிருந்தும், நகர்மன்ற உறுப்பினர்களிடமிருந்தும் - ஒருவழிப்பாதை பெரிய நெசவுத் தெரு வழியாகவே அமையவேண்டும் என கையெழுத்து வாங்கும் முயற்சியில் இறங்கினர்.

இம்முயற்சி குறித்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தலையங்கம் - இதனை (கே.டி.எம். தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளது என பெரிய நெசவு தெரு ஜமாஅத் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை) இரு ஜமாஅத்தினரும் நேரடியாகப் பேசித் தீர்த்திருக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தது.

மேலும், இப்பிரச்சனையில் - நகர் முழுவதும் கையெழுத்து வாங்கும் முயற்சி, பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினருக்கும், நகரின் பிற மக்களுக்கும் இடையே உள்ள தூரத்தை மேலும் அதிகரிக்கும் என்ற அடிப்படையிலும், சுமுக தீர்வுக்கான வாய்ப்பை மேலும் இது குறைக்கவே செய்யும் என்ற அடிப்படையிலும், ஒரு தவறான முன்னுதாரணமாக தோன்றுகிறது என அத்தலையங்கத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தலையங்கம் குறித்த விமர்சனங்கள் - இணையதளத்தின் கருத்துக்கள் பகுதி மூலமும், தொலைபேசி மூலமும் - பெறப்பட்டன. மேலும் தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் - காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளரை நேரடியாக அழைத்தும் - தலையங்கம் குறித்து வினவியுள்ளனர். தவறான முன்னுதாரணமாகவே தோன்றுகிறது என்ற தலையங்க வாசகத்தை ஆட்சேபனைக்குரியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறான முன்னுதாரணமாகவே தோன்றுகிறது என்ற அவ்வாசகம், வருங்காலங்களில் (ஒரு ஜமாஅத்திற்கும், மற்றொரு ஜமாஅத்திற்கும்) இதுபோன்று பிரச்சனைகள் ஏற்படுகையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து முயற்சி போன்று, அவ்வேளையிலும், ஒரு சாராரின் நிலையினை ஆதரித்தோ, எதிர்த்தோ - மற்றவர்களும் நகர் முழுக்க கையெழுத்து வாங்க முற்பட - முன் உதாரணமாக ஆகிவிடும் என்ற அடிப்படையிலேயே பதிவுசெய்யப்பட்டிருந்தது.

மேலும் இதுபோன்ற முயற்சி - மாற்றுக்கருத்தில் உள்ள பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினரையும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் கடுமையாக்கிக் கொள்ள வழிவகுக்கும் என்ற எண்ணத்திலும், சுமூகமாகவும் - விரைவாகவும் ஒருவழிப்பாதை அமையும் வாய்ப்பையும் இது குறைக்கும் என்ற ஐயத்திலுமே அவ்வாறு அத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர, தாயிம்பள்ளி ஜமாஅத்தினரை விமர்சிக்கவேண்டும் என்ற நோக்கில் அவ்வாசகம் வெளியிடப்படவில்லை என்பதனை இங்கு தெளிவுற தெரிவித்துக் கொள்கிறோம்.

இரு வழிப்போக்குவரத்து கே.டி.எம். தெரு வழியாக அமைந்துள்ளதால் அத்தெரு மக்கள் அனுதினமும் அனுபவித்து வரும் இன்னல்களையும் சுட்டிக்காட்ட அத்தலையங்கம் மறக்கவில்லை என்பதனையும் நினைவுகூர விரும்புகிறோம்.

சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளில் - ஒரு தனி நபருக்கு எவ்வாறு கருத்துக்கள் கூற உரிமை இருக்குமோ, ஓர் அமைப்புக்கு எவ்வாறு கருத்துக்கள் கூற உரிமை இருக்குமோ, அது போல் - ஊடகத்திற்கு உள்ள கருத்துரிமை தலையங்கங்கள் வாயிலாக வெளியிடப்படுவது வழமை. சமூக அக்கறை உள்ள அனைத்து ஊடகங்களிலும் - தலையங்கம் பகுதி என்பது இன்றியமையாத ஓர் அம்சமாகும். அதில் தெரிவிக்கப்படும் - கருத்துக்கள், அந்த ஊடகத்தை நிர்வகிக்கும் ஆசிரியர்/ஆசிரியர் குழுவின் கருத்துக்களே. அந்த கருத்துக்கள் - இணையதளத்தின் பிற பகுதிகளான செய்திகள், செய்தி விமர்சனங்கள் போன்றவற்றில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ - எவ்வழியிலும் திணிக்கப்படுவதில்லை.

தலையங்கத்தில் வரும் கருத்துக்களோடு உடன்படவும், மாறுபடவும் அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையுடன் தெரிவிக்கப்படும் தரமான கருத்துக்களை அனைவரும் மனந்திறந்த முறையில் அமைதியாக எதிர்கொண்டு விவாதிக்க முனையும் போதுதான், ஓர் ஆரோக்கியமான, ஜனநாயகமிக்க, சமூகத்தை உருவாக்க முடியும்.

நகரின் பெருவாரியானவர்கள் விரும்புவது போல் - காயல்பட்டணம்.காம் இணையதளமும் - பெரிய நெசவு தெரு வழியாகவே ஒரு வழிப்பாதை - சுமூகமாகவும் - விரைவாகவும் அமைவதை - வலியுறுத்துகிறது. எங்கே செல்கிறது இந்த ஒருவழிப்பாதை? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்திலும் பல இடங்களில் அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதனை நினைவு படுத்த விரும்புகிறோம்.

Previous EditorialNext Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

இது ஒரு சமாளிப்பான பதிளாகவே தெரிகிறது. ஏனெனில் இது போன்ற பொதுகாரியங்களில், நடுநிலை செய்திகளை வெளியிடும் ஒரு அமைப்பு மூக்கை நுழைக்காமல் செய்திகளை வெளியிடுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் பட வேண்டும்.

இந்த அனுபவம் "அக்டோபர் புரட்சி" தலையங்கத்தில் வாசகர்களின் கருத்துக்கள் மூலம் கிடைத்திருக்கும்.

"எங்கே செல்கிறது இந்த ஒரு வழிப்பாதை' தலையங்கம் முதுகில் அடித்து விட்டு தடவிக்கொடுப்பது போல் எழுதப்பட்டுள்ளது என்பது தொடர்ந்து படிக்கும் அனைவரும் உணர்ந்த ஒன்று.

இனி வரும் காலங்களில் தங்கள் நடுநிலையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.


posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) on 02 February 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20445

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

உங்கள் தலையங்கத்தின் தன்னிலை விளக்கமாவது எப்படி இருக்கிறது என்றால்,ஒருவன் பட்டுகோட்டைக்கு வழி கேட்டால்,கொட்டை பாக்குக்கு விலை சொன்னானாம். அது போல இருக்கிறது.

தாயும் பள்ளி ஜமாஅத், நெசவுதெருஜமாஅத் தீர்மானத்தை குறிப்பிட்டு ஊர் முழுவதும் கையெழுத்து வேட்டை நடத்தியது போல ஒரு மாயையை ஏற்படுத்தி இது ஒரு மோசமான முன் உதாரணம்.

எதிர் காலத்தில் இது தொடர்ந்தால் ஏதாவது இருஜமாதிற்க்குமிடையே சண்டை சச்சரவு என்று வந்தால் இதுபோன்ற கையெழுத்து வேட்டை நடைபெற வாய்ப்பாக அமையுமே. அதனால் தான் இந்த கையெழுத்து வேட்டை தவறான முன் உதாரணம் என்று தலையங்கம் எழுதினோம் என்று முழு பூசணிகாயை சோற்றில் மறைக்க முயன்று இருக்கிறீர்கள்.

உண்மைக்கு மாற்றமாக உளறும் உங்கள் தளயங்கத்தால் தான் இரு சகோதர ஜமாதிற்க்குமிடையே பிரிவினை தீ பற்றி எறிந்து கொண்டிருக்கிறது.

இருவழி சாலைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அணைத்து ஜமாத்தினரும், அணைத்து அரசியல் கட்சிகளும்,அணைத்து தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் இத் தவறான முன் உதாரணதிற்கு துணை போயிருக்கிறார்கள்.

தாயும் பள்ளி ஜமாஅத் நெசவு தெரு ஜாமதிர்கெதிரான நடவடிக்கைக்கு ஊர்மக்களை பகடைகாய்களாக பாவித்து இருக்கிறார்கள் ஆக மொத்தத்தில் ஊர் முழுவதும் பெரும்பாலோர் ஒரு முட்டாள் தனமான காரியத்திற்கு கொப்பான முன் உதாரணதிற்கு முழு பொறுப்பாளிகள் என்று தானே உங்கள் தலையங்கம் சொல்கிறது.

தாயும் பள்ளி ஜமாஅத் வாங்கிய கையெழுத்தில் ஒரு வரியிலாவது நெசவு தெரு ஜமாத்தின் தீர்மானம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்களா.அப்படி குறிப்பிட்டிருந்தால்,அதை பார்க்காமல் கையெழுத்திட காயல் நகரமக்கள் அந்த அளவிற்கு கருத்து குருடர்களா?

நெசவு தெரு கோமான் தெரு ஆகிவைகளை எந்த சம்பந்தமும் எடுக்காமல் ஒதிக்கியே வைக்கிறோம் என்பது உங்கள் தலையங்கத்தின் மற்றுமொறு குற்றசாட்டு.

ஒரு கண்ணியமிகு காயல் சகோதரன் இப்படி சொல்வதற்கு தயங்குவான். இப்படி சொல்வது நாமாகவே அவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ள முயற்சிக்கும் செயல் என்று தான் சொல்வேன். ஏனெனில்,ஒட்டு மொத்த காயல் சகோதரர்களையும் அண்ணன்,தம்பிகளகதான் நேசிக்கிறோம்.

சம்பந்தம் என்பது அவரவர் எண்ணத்தாலும்,குணத்தாலும்,குளத்தாலும்,குடும்பத்தாலும் அமையக்கூடியது. ஒரு வீட்டிலுள்ள சொந்த அண்ணன் தம்பி,ராத்தா,தங்கை குள்ளேயே சம்பந்தம் எடுக்க மறுக்கிறார்கள். இதில் வலியுறுத்தலோ ,வற்புறுத்தலோ, கட்டாயமோ கட்டுபடுத்தாது. இருவேறு வாழ்க்கைமுறையை ஒப்பிட்டு பார்காதீர்கள்.அப்படி பார்க்கும் பொழுது சில நேரம் உயர்வு தாழ்வு என்ற கருத்து மேலோங்கி நிற்பதுபோல் தெரியும்,அதுவே உண்மையாகி விடாது.

எவரும்,எவருக்கும் இளைத்தவர்கள் அல்ல.எல்லோரும் நம் காயல்பதியின் உடன் பிறவா சகோதரர்களே!. எல்லா தெரு சகோதரர்களும்,எல்லோர்களிடமும் ஒரு சில காரியங்களுடன் ஒன்று படாவிட்டாலும், பல காரியங்களில் பண்புடனும்,அன்புடனும் அரவணைத்து செல்கின்ற காட்சியைத்தான் காண முடிகிறது. அக் காட்சியை கொச்சையாக்கி விட்டீர்கள் உங்கள் தலையங்கத்தில்.

ஆக மொத்தத்தில் உங்கள் தவறான தலையங்கத்திற்கு நேரிடியாக வருத்தம் தெருவிக்காமல் சுற்றிவளைத்து நியாயப்படுத்த முயற்சித்து இருக்கிறீர்கள் என்பது தான் யதார்த்தமான உண்மை.

மனசாட்சிபடியும்,உண்மைநிலைகேர்ப்பவும்,ஊர்மக்கள் ஒட்டு மொத்த நிலைபாட்டிற்கு மதப்பளிக்கும் முகமாகவும், தலகவ்ரவத்தை தூக்கி எறிந்து விட்டு,

தெளிந்த மனதோடு,நாங்கள் எழுதிய தலையங்கத்திற்காக எங்களின் வருத்தத்தை தெருவிக்கிறோம் என்று நீங்கள் தெளிவாக கூறும் வரை, பற்றி எறிந்து கொண்டிருக்கின்ற தீ யானது அனையபோவது இல்லை.

உங்களின் மேல் கண்ட, கண் துடைப்பு விளக்கத்தால் மன வேதனையான ஊர் அணைத்து ஜமாதாரும்,தாயும்பள்ளி ஜமாதாரும் அமைதியாக மாட்டார்கள் என்பது தான் எதிகாலத்தின் வேதனையான விஷயம். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.


posted by: Mohammed Adam Sultan (Kaaraikkal) on 02 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20446

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

தலையங்கம் !!!தலை கால் புரியாமல் ...மழுப்புவது மட்டும் நன்றாக தெரிகிறது ....

நெசவு தெரு ஜமாத்திற்கு எதிராக யாரும் கை எழுதிடவில்லை என்பதும் ஊர் நன்மைக்காகத்தான் இத்தனை போராட்டமும் என்பது கூட தெரியாத தகரம்!!! (தலையங்கம்)...

இது போல் ஊர் நன்மைக்காக எதிர் காலத்திலும் கை எழுத்து வேட்டை நடத்தலாம் ...ஊர் பயனடையலாம் என்பதற்கு தாயும் பள்ளி ஜமாத்தினரின் இந்த செயல் பாடு ஒரு அழகான முன் மாதிரி என்பதற்கு இப்போது பிரபிக்கபட்டுள்ள கலெக்டரின் உத்தரவே அறிய சாட்சி.


posted by: MAHMOOD HASAN(mammaash) (QATAR) on 02 February 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20447

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

Kayal.com explanation is a very good movie script. There are lots of “if” clauses, now kayal.com had given those ppl lots of idea to do against this one way project

Good Luck, Allah know the best
ISMAIL (KTM ST)


posted by: ISMAIL (KTM) (HONG KONG) on 02 February 2012
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 20448

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

காயல்பட்டணம்.காம் இணையதளமும் பெரிய நெசவு தெரு வழியாகவே ஒரு வழிப்பாதை அமைவதை - வலியுறுத்துகிறது , தலையங்கத்திலும் பல இடங்களில் அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறுவதை விட அதற்கு எதிர்ப்பான கருத்துக்களை தாமதப்படுத்துவதும் பதிவுகளை பிரசுகிக்க மறுப்பதும் இன்னும்ம்மா எங்களக்கு தெரியாது ?.

நமதூருக்கு வருகைபுரிந்த டி.எஸ்.பி. திரு.ஞான சேஹரன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் திரு.சேகர், ஆறுமுகநேரி காவல் ஆய்வாலர் திரு.பார்த்திபன், ஆர்.டி.ஓ. S.I திரு.K.சந்திர சேகர், காயல்பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி திரு.செல்வலிங்கம், காயல்பட்டணம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணையா, நகராட்சி பொறியாளர் திரு.செல்வமணி, சர்வேயர் திரு.கந்தப்பன் ஆகியோர்கள் நமதூருக்கு வருகை தந்ததையும் அவர்கள் கூறிய விசயத்தையும் நமது இணையதளத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைபதைப்போல மறைத்தார்கள. கேட்டால் எங்களுக்கு தெரியாது என்பார்கள். இதெல்லாம் நாங்க பலயபடத்திலேயே பார்த்துட்டோம்.

தற்போதைய சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு பற்றி பேச தலையங்கத்திருக்கு தலை இல்லை அங்கம் மட்டும் தான் இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது.


posted by: Ahamed Mohideen (Chennai) on 02 February 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20449

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

ஐயோ... ரொம்பவே கண்ணை கட்டுது...??? தலையும் புரியல... காலும் புரியல.. மொத்தம் ஒன்னும் தலைகால் புரியல..

அட்மின் ஏதோ சமாளிக்க இப்படி புரிந்தும் புரியாமல் இருக்க ஒரு விளக்கம் .... தான் எழுதிய தலையங்கம் சரி தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

வல்ல இறைவன் எல்ல வற்றையும் அறிவான்..

S.M.B. MOHAMED ABUBACKER
DUBAI.


posted by: ATC ABUBACKER (DUBAI) on 02 February 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20451

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

இப்படி ஒரு புழுத்த தலையங்கம் எப்படி உங்களுக்கு எழுதத்தொன்றியதோ.இது இருஜமாத்திர்க்கிடையே கம்பை முறித்து போட்டு வேடிக்கைபார்க்க எழுதியது தானே.ஊரே ஓன்று திரண்டு ஊரின் முன்னேற்றத்தை கனவு காணும்போது நீங்களும் அதற்க்கு முட்டுக்கட்டை போடுவது போல் இந்த தேவையில்லாத தலையங்கத்தை எழுதியதால் நீங்களும் ஒருவழிப்பாதையை எதிர்க்கும் நம்மூர் கருத்துக்குருடர்களோடு சேர்ந்துவிட்டீர்களோ?இன்னொன்று தெரு ஆக்கிரமிப்பு அகற்றப்படவேண்டும் என்பது மறுக்க முடியாதுதான்.ஆனால் அதை பற்றி பேச நெசவுதேருக்காரகளுக்கு எந்த யோக்கியதையும் இல்லை.அவர்கள் அரசுக்கு சொந்தமான வீதியில் பஸ்ஸே போகக்கூடாதென்று என்று நூதனமாக போராடுவதிலிருந்து தெரு முழுவதுமே நூற்றுக்கு நூறு சதவீதம் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறார்களே.


posted by: SEYEDALI (ABUDHABI) on 02 February 2012
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20452

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

எங்கள் ஜாமத்துக்கு இந்த மழுப்பலான விளக்கம் தேவை இல்லை,தங்கள் தலையங்கத்தில் நிகழ்ந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தாலே போதுமானதாக இருக்கும்.மறுக்கும் பட்சத்தில் kayalpatnam.com இணய தள செய்தியாளர்களை தாயும்பள்ளி நிகழ்சிகள் எதிலும் செய்தி சேகரிக்க அனுமதிப்பது பற்றி யோசிக்க வைக்க வேண்டியது வரும்

ஏறுமே யோசிக்காத யோசிக்கத்தோனத ஒரு புது கோணத்தில் நெசவு மற்றும் கோமான் தெரு மக்களை யோசிக்க தூண்டி இருக்கிறது இந்த தலையங்கம்,இது ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் தலையங்கம் இல்லையா? எதற்கு இந்த விபரீத விளையாட்டு?

நட்புடன்
ஷைக் அப்பாஸ் பைசல்.த.


posted by: SHAIK ABBAS FAISAL .D. (KAYALPATNAM) on 02 February 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 20454

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

நெசவு தெருவில் oneway எ நிறைவேற்ற கலெக்டர் ஆர்டர் செய்தியில் கம்மாண்டை பதிவு செய்ய முடியதலால் இந்த செய்தியுடன் பதிவு செய்கிறேன்................தயவுகுர்ந்து வெளிஎடவும்.........

அடுத்தவரை குறைவாக பேசி கம்மண்ட்களை பதிவு செய்யும் சகோதரர் முஹம்மத் ஆதம் சுல்தான் கம்மாண்ட்களை எந்த விட எடிட் டும் செய்யாது வெளியிடும் அட்மின் அவர்களுக்கு என்ன நேர்ந்தது .........KTM தெரு வாசிகள் கமான்ட்டில் வார்த்தைகள் எப்படி இருந்தாலும் எடிட் செய்யாமல் வெளியிடும் தாங்கள் ஏன் நெசவு தெரு காரர்கள் பதிவு செய்யும் கமான்ட் களை எடிட் செய்கிறீர்கள் ........அப்படியே வெளிஎடுங்கள்............... ரூல்ஸ் என்பது எல்லா மக்களுக்கும் ஒன்றுதானே?????????????????????

மேலும் நெசவு தெரு காரர்கள் தீர்மானத்தில் KTM தெரு மற்றும் இல்லை HIGHWAY 176 யில் வுள்ள தெரு களான KTM தெரு,மெயின் பஜார் சாலை மற்றும் ஹாஜியப்பா தைக்க தெரு ஆகியவைகள் இருக்கும் போது KTM தெரு காரர்கள் மட்டும் ஆத்திரம் அடைகிறார்கள் ஏன்?????????????



Administrator: Comment edited


posted by: abbas saibudeen (kayalpatnam) on 03 February 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20455

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

இத்தனை பிரச்சனைக்கும் ஒட்டு மொத்த ஜமாஅத் மக்களையும் புண்படுத்த காரணம் தலைகனத்தோடு, தலையில் உள்ள அங்கத்தை அடமானம் வைத்து எழுதப்பட்ட இந்த தலையங்கம்தான் என்பதை ஏன் தான்தோன்றி தனமாக எழுதிய இந்த இணையதள ஆசிரியர் குழு ஒப்பு கொள்ள மறுக்கிறது என்று தெரியவில்லை...எதற்காக இந்த சமாளிப்பு!! யாரை திருப்திபடுத்த?

வருத்தம் தெரிவிப்பதில் உங்களுக்கு ஏதேனும் வருத்தம் அல்லது ஈகோ இருந்தால், நாங்களே வருந்தி கொள்கிறோம்...இந்த இணைய தளத்தின் நீண்ட நாள் வாசகர் என்பதற்காகவும் அதன் அபிமானி என்ற முறையிலும்!!!

இத்தனைக்கும் காரணம் இந்த பிரச்சனையை தலையங்க ஆசிரியர் ஊர் நலனுக்காக உள்ள பிரச்னை என்று கருதாமல் குறுகிய நோக்கத்தோடு மனசாட்சியை அடகு வைத்து இரு தெரு பிரச்சனையாக முடிச்சிபோட முயற்சித்திருப்பதே என்பது உங்கள் உன்மனதில் உதறல் இருந்தாலும் அதை மிஞ்சிய ஈகோ வருத்தம் தெருவிக்கவோ அந்த ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை அகற்றவோ தடுக்கிறது!!

பத்திரிக்கைகென்று சுதந்திரம் ஒன்று இருக்கிறது!! ஆனால் அது தனிநபர் சுதந்திரத்திலோ அல்லது ஒட்டு மொத்த அமைப்பின் அல்லது ஜமாத்தின் நலத்தின் தவறான நோக்கில் தலையிடாத வரை தான் அது சமூக பத்திரிக்கை என்ற தகுதியை அடைய முடியும்!! இல்லையென்றால் பப்ளிசிட்டிக்காக எதையும் எழுதும் தரம்கெட்ட மஞ்சள் பத்திரிக்கை பட்டியலில் தன்னையும் இணைத்து கொள்ள வேண்டியது தான்!!

மீண்டும் மீண்டும் கையெழுத்து வாங்கியதை தவறனா முன்னுதாரணம் என்று தகுதிக்கு மேல் விமர்சிக்கும் உங்கள் இணையதளத்தின் விருப்பமும் அந்த நெசவு தெரு வழியே ஒரு வழிபாதை வருவது தான் என்று சாமாளித்து சொல்லி இருக்கும் நீங்கள்!! அதே எண்ணத்தை, ஊர் நலன் வேண்டி மற்ற பொது நல இயக்கங்களும், ஜமாத்துக்களும், ஏன் நகராட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து கையெழுத்து வாங்கியதையும் போட்டதையும் வேடிக்கை என்றும் தவறான முன்னுதாரம் என்றும் ஏன் விமர்சித்து இருக்கிறீர்கள்? அப்படி என்றல் உங்கள் இணையதளத்தின் ஆதரவு நிலை வேடிக்கையாக, நகைப்புக்குரியதாக இல்லையா? ஆதரவு என்றால் துணிந்து சொல்ல திராணி இல்லாமல் வார்த்தை ஜாலாத்தில் சமாளிப்பதும் ஆதரவு தெரிவிப்பவர்களை விமர்சிப்பதும் தானா?

நீங்கள் எழுதிய விஷமத்தனமான விளையாட்டுக்கு வலு சேர்பதற்கு இந்த பிரச்சனையில் ஊருமக்களின் விருப்பத்தின் படி ஊர் நலனுக்காக ஒன்றுபட்டு இருக்கும் கோமான் தெரு மக்களையும் யாருமே எண்ணி பார்காத ஒரு தாழ்த்த எண்ணத்தில் தூண்டி விட துடித்த உங்கள் செயலுக்கு என்ன சொல்லுவது? அதற்க்கும் ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத உங்கள் செயல் இந்த இணைய தளத்தின் மீது எங்களை போன்றோர் கொண்டுள்ள மதிப்பை தாழ்த்தி இருக்கிறது!! இதற்கு பிறகும் எல்லோரும் ஒட்டு மொத்த மக்களும் ஒரு குரலின் எதிர்ப்பு தெரிவித்தும் உங்கள் நிலையில் மாற்றம் இல்லை என்றால் ...உங்கள் மேல் நாங்கள் கொண்டுள்ள (நல்ல) நிலையை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை!!

அல்ஹம்துலில்லாஹ்!! இன்று முதல் ஒரு வழி பாதை ஊர் மக்கள் விரும்பும் வழியில் அமுலுக்கு வந்து இருக்கிறது!! இனியும் இந்த இணையதளம் முடிச்சி போடுற, சிண்டு முடியும் வேலைகளை தலையங்கம் என்ற பெயரில் பார்க்காமல் இருப்பதே நீங்கள் ஊருக்கு செய்யும் உகந்த காரியம்!!


posted by: Cnash (KTM Street) (Makkah ) on 03 February 2012
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20456

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. A well balanced Editorial

After reading this article and the comments, I forced myself to read the original Editorial (dated 22nd Jan) for the second time. I do not understand the fuss some people are making about the Editorial, though they have the right. It is a well balanced and well timed one. It did not let any Jamath down nor created anemosity between the two. It potrays the reality.

As far this article is concerned, It is a good explanation for those who do not "read between the lines".

Throwing accusations against each other (one Jamath member against another) will not solve the problem, on the contrary it will widen the gap. Above all people should give up " எங்க உம்மா உம்மா, உங்க உம்மா சும்மா " attitude.

Anyway we got what we wanted all these years. That is "The one way". Thus ends the story.


posted by: Abdul Wahid S. (Kayalpatnam) on 03 February 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 20458

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

தாங்கள் எழுதிய தலையங்கத்தில் தவறு இல்லை என்பதே என்போன்றோர்களின் நிலைப்பாடு. இங்கே தலையங்கத்திற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு எழுதி இருப்பவர்களில் பலரும் கே.டி. எம் தெருகாரகலாகவே இருக்கவேண்டும் எனபது என் அனுமானம் ஒரு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பாரில் ஒரு தரப்பாரின் `நிலை குறித்து கேள்வி எழுப்பும் பொது இவ்வாறான கோப தாபங்களை சந்திக்க வேண்டி வரும் எனபது எதிர் பார்க்க கூடியதுதான்.

பெரிய நெசவு ஜமாத்தார்கள் ஒருவழிப்பாதை குறித்து பிடிவாதம் காட்டுவது எந்த நிலையிலும் நடைமுறை சாத்தியம் இல்லாதது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அந்த வகையில் பெரிய நெசவு தெருவாசிகளின் பிடிவாத போக்கு ஊர் நன்மையை கருத்தில் கொண்டு அமைந்ததல்ல.

அதே சமயம் ஒரு மிட்டாய்க்கு அடித்து கொள்ளும் இரு குழைந்தைகள் இடத்தில் ஒரு பொறுப்புள்ள பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ளவில்லை நமதூர் ஜம்மாத்துகளும் சங்கங்களும். இது குழைந்தைகள் இடத்தில் ஒருவிதமான பிரிவினை உணர்வையும் வெறுப்பையுமே உண்டாக்கும் இது அக் குழைந்தைகளின் எதிர் காலத்திற்கும் நல்லதல்ல. இந்த அரிச்சுவடியே தலையங்கத்தில் உணர்த்தப்பட்டுள்ளது. இது தெரியாமல் சம்பந்த பட்டவர்கள் கொந்தளிப்பதில் நியாயம் இல்லை. இங்கு யாரு யாருக்கும் ஆதரவான நிலைப்பாடு எடுக்கவில்லை. எனவே தலையங்கத்தில் பிழை இல்லை.


posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 05 February 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20460

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. உப்பு திண்டவன் தண்ணி குடிக்கணும் தப்பு செய்தவன் திருந்தியாகணும்

அஸ்ஸலாமு அலைக்கும்..

இது தலை இல்லாத அங்கம்..
யாரையோ திருப்திபடுத்த ஆதாரம் இல்லாத ஆதாயம் தேடும் செய்தி..

இதை எழுதிய புண்ணியவான்கள் தான் நம் ஊரை இரண்டாக்கிட, நம்மை இரு கூறுகள் போட்டு இன்பம் காணும் இழி நிலைமைக்கு ஆளாகி உள்ளார்கள்..

ஒரு பாரம்பரியம் மிக்க பள்ளிவாசல் முன் நின்று எடுத்த நல்ல முயற்சிக்கு ஊரே தனது பங்களிப்பை செய்துள்ளார்கள்..

இதற்காக முயன்றவர்கள்,எல்லா வகையிலும் உதவியாக இருந்தவர்கள் மறுக்காது ஆதரவு அளித்த அனைத்து அங்கத்தினர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றிகளை சமர்ப்பிகின்றோம்...

இது ஏதோ இரண்டு தெருவிற்கும்,முஹல்லாவிற்க்கும் இடையில் உள்ள சண்டை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது...

இது நாங்கள் நேசிக்கும் காயல் சம்பந்தமான தொலை நோக்கு கொண்ட தூய்மையான சிந்தனை...

போகின்ற போக்கில் எங்கள் சொந்தங்கள் கோமான் தெரு சீமான்களையும் கோபம் கொள்ளும் வண்ணம் குதர்க்கத்தனம் கொண்டு குழப்பி உள்ளார்கள்..

இந்த தலையங்கம் எழுதிய ஆசிரியர் குழுவில் (தலை இல்லாத அங்கம் கிறுக்கிய) உள்ள உங்களில் நீங்களோ, உங்கள் குடும்பத்தில் யாரவது இந்த தெருவில் சம்பந்தம் சாவடி எடுத்து இருக்கின்றிர்களா?????? இல்லை?????????????????? இனி எடுக்க நாடி உள்ளீர்களா????????வாழ்த்துக்கள்...

உங்கள் நம்பகத்தன்மை,நடுநிலைமை எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் கள்ளஓட்டு போட காயலில் கள்ளசாராயம், பணம் , விநியோகம் செய்தி மற்றும் கடந்த அக்டோபர் புரட்சி தலையங்கம் எழுதிய அன்றே காணமல் போனது?????? மீண்டும் அது போல் இதன் மூலம் கேள்விக்குறியானது ???????????. மேலும் கானல் நீர் ஆனது,,

எங்கள் அன்பினும் இனிய பெரிய நெசவு தெரு,கோமான் தெரு பெரியோர்கள் ,நண்பர்கள் ,இளையோர்களுக்கு இந்த தலையங்கம் (தலை இல்லாத அங்கம்) எங்களை போல் உங்களை மனதளவில் பாதித்து இருக்கலாம் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடக்க இருக்கும் அனைத்தும் நல்லவையாக,நன்மையாக நாயன் அல்லாஹ் அருளால் அமையட்டுமாக ஆமீன்...

உப்பு திண்டவன் தண்ணி குடிக்கணும் தப்பு செய்தவன் திருந்தியாகணும் தவறு செய்தவன் வருந்தியாகணும் ஆனால் தலையங்கம் குறித்த விமர்சனங்களும், விளக்கமும் என்பதில் எதுவுமே இல்லை என்றாலும் மழுப்பல் பள பள என உள்ளது...

என்றும் மாறாத அன்புடன்
சட்னி.செய்யது மீரான்..
ஜித்தா.


posted by: சட்னி.செய்யது மீரான்.. (??????....????? ??????? ) on 14 February 2012
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20462

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நிதானம் வேண்டும்!

செய்தி ஊடகங்கள் தனிப்பட்ட தங்களது கருத்தை,சமூக பார்வையோடு வெளியிடுவதே தலையங்கம்.அந்த வகையில் மிகவும் கவனமாகவும்,சமூக அக்கறையோடும் எழுதப்பட்ட ஒரு தலையங்கத்தை,அதில் உள்ள சில வார்த்தைகளின் யதார்த்தங்களை உணர்ந்து கொள்ளாமல்,தடித்த வார்த்தைகளால் ஏனோதானோவென்று விமர்சிப்பவர்களின் கருத்துக்களையும் அப்படியே வெளியிட்டுவரும் காயல்பட்டணம்.காம் உடைய ஊடக தர்மத்திற்கு முதற்கண் எனது வாழ்த்துக்கள்!

இந்த பிரச்சனையால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு ஜமாஅத்தினரின்,எம்மோடு உடன்பிறந்த சகோதரர்களின் மனவேதனையை அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம். கையெழுத்து இயக்கம் நடத்தி,பெரும்பான்மையோரின் ஆதரவைப்பெறுவது என்பது ஜனநாயகரீதியான நேரிய செயலே! அது ஒருபோதும் தவறான முன்னுதாரணம் ஆகாது.

அதே நேரத்தில்,தலையங்கம் குறித்த விமர்சனங்களுக்கு விளக்கமாக, நகரின் ஒவ்வொரு பிரச்சனைக்கும்,அல்லது இருசாராரின் கருத்து வேறுபாடு களைவதற்கும்,கையெழுத்து இயக்கம் நடத்துவது, தொடர்ந்த பேச்சுவார்த்தை மூலமாக ஏற்படவேண்டிய சுமூக நிலைக்கு குந்தகம் விளைவித்துவிடும் என்று கருதியதால்,அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தியதாக வலைத்தளம் சார்பாக சொல்லப்படுவதை ஏன் ஏற்கக்கூடாது? வார்த்தைகளை மட்டும் பார்க்காமல்,பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்படவேண்டும் என்ற அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.

பாசமிகு சட்னி மீரான் காக்கா அவர்கள்,தளத்தின் நடுநிலைமை குறித்து விமர்சிக்கும் போது,கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது நடந்த சில சம்பவங்களை போகிற போக்கில்,புழுதி வாரித் தூற்றி இருக்கின்றார். வேண்டாம் காக்கா இந்த வினோத விளையாட்டு! நீங்கள் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களுக்கும் ஆதாரம் இருக்கின்றது.அவற்றை எல்லாம் மீண்டும் விவாதகளத்திற்கு கொண்டு வந்தால் நகரின் ஒற்றுமை நிரந்தர கேள்விக்குறி ஆகிவிடும்.இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடமே விளக்கம் சொல்லப்பட்டு விட்டது.இதனை இத்தோடு நிறுத்திவிடுவது நல்லது!

நிறைவாக, இரு பகுதியையும் சேர்ந்த எங்களது அன்பு உடன்பிறப்புக்களே! எங்கள் மண்ணின் மைந்தர்களே! காயல் சொந்தங்களே!உங்களது சிரமங்களை,மன உளைச்சலை நாங்கள் உணர்ந்தே இருக்கின்றோம்! ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டாமல்,நமது வார்த்தை விளையாட்டுக்கள் நகரின் ஒற்றுமைக்கு நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திவிடாமல்,கவனமாக எழுதுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.


posted by: kavimagan (chennai) on 14 February 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20463

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:தலையங்கம் குறித்த விமர்சன...

கள்ளஓட்டு போட காயலில் கள்ளசாராயம், பணம் , விநியோகம் செய்தி இப்போ விவாதிப்பது தேவையற்றது. இதுவெல்லாம் புற நகரில் நடந்து இருக்கலாம். அதுக்கு ஐக்கிய சபை எப்படி பொறுப்பாகும். அவர்கள் வாக்கு முழுமையா யார்க்கு கிடைத்தது என்பது எல்லாருக்கும் தெரியும்.


posted by: seyed mohamed (ksa) on 14 February 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20465

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved