Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:33:48 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous EditorialNext Editorial
தலையங்கம் எண் (ID #) 44
#KOTWEDIT44
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 22, 2012
எங்கே செல்கிறது இந்த ஒரு வழிப்பாதை?
இந்த பக்கம் 5096 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சின்ன நெசவு தெரு, கே.டி.எம். தெரு, மெயின் ரோடு வழியாக காயல்பட்டினத்தில் தற்போது பேருந்து போக்குவரத்து உள்ளது. குறிப்பிட்ட இடங்களில் - வாகன நெருக்கடி ஏற்படுவதால், இப்பாதையில் அவ்வப்போது போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனை செய்தியாக பலமுறை காயல்பட்டணம்.காம் வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் நமதூருக்கு வந்த பொதுவான அடிப்படைகட்டமைப்பு வசதிகளான உள்ளூர் நிதியச்சாலை (L.F. ROAD), கூட்டுக்குடிநீர் திட்டம், கல்விச்சாலைகள், அஞ்சலகம், வங்கி, உயர்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் போன்ற நல்ல பல விஷயங்கள் நல்லுள்ளம் படைத்ததனிநபர்களின், குடும்பங்களின், பொதுமக்களின் முயற்சியால் எவ்வித விவாதமோ, மனக்கசப்போ, பிரிவினையோ, மோதலோ இல்லாமல் சுமுகமாகவும் மனமுவந்துமே கிடைத்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் ஒரு வழிப்பாதை குறித்த விவாதங்கள் இத்தனை தயாளமும், விசாலமும் நிறைந்த நமதூரின் வரலாற்றில் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சத்தக்க அளவில் உள்ளது.

நமதூரில் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கை - தற்போதைய பாதையால் நீண்ட நாட்களுக்கு அனைத்து போக்குவரத்தையும் தாங்க இயலாது என்ற உண்மையை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. இதனை இவ்விவாதத்தில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். திருசெந்தூரில் இருந்து தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கத்தில் - காயல்பட்டினம் வழியாக - செல்லும் வாகனங்களை எவ்வழியில் அனுப்புவது, இதற்கு மாற்று வழி என்ன என்ற கேள்விக்கான பதிலில்தான் கருத்து வேறுபாடு உள்ளது.

மாற்று வழியாக பிரதானமாக மூன்று தீர்வுகள் பலரால் கூறப்பட்டுள்ளன:

(1) ஓடக்கரை வழியாக, துளிர் பள்ளி அருகில் எல்.எஃப். சாலையை அடைவது

(2) கே.எம்.டி. மருத்துவமனை அருகில் உள்ள ஓடை வழியாக விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைக் கடந்து - புதிய பேருந்து நிலையத்தை அடைவது

(3) தாயம்பள்ளி முன் திரும்பி, பெரிய நெசவு தெரு - எல்.கே. லெப்பை தம்பி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைவது

இதில் முதல் தீர்வான ஓடக்கரை வழியாக, துளிர் பள்ளி அருகில் எல்.எஃப். சாலையை அடையும் பாதை - இன்னும் பல ஆண்டுகள் கழித்து பிரதான சாலையாக அமையலாம். தற்போது இப்பாதை அமைந்தால் நகரின் பெருவாரியான மக்களுக்கு சிரமமே.

இரண்டாவதாக எடுத்துவைக்கப்பட்டுள்ள தீர்வு - பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினர் சார்பாக - பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பாதையைப் பயன்படுத்த, இவ்வழியில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக - ஓடை வழியே புதிய, வலுவான சாலை அமைப்பது... அச்சாலையை அகலப்படுத்த நிலம் ஆர்ஜிதம் செய்வது... விசாலாட்சியம்மன் கோயில் அருகே உள்ள கோயில் - சாலை சந்திப்பு பகுதியின் அகலத்தை விரிவாக்குவது... போன்றவை இப்பாதையை அமல்படுத்தும் முன் செய்ய வேண்டிய காரியங்கள்.

இதில் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள சிக்கல்கள் குறித்து அதிக விளக்கம் தேவையில்லை. சுருங்கக்கூறின், இப்பாதையை அமல்படுத்த முற்பட்டால், புதிய பிரச்சனைகள் உருவாகும். அவற்றைத் தீர்ப்பதும் எளிதல்ல.

மூன்றாவதாக பரிசீலனையில் உள்ள பாதை (தாயம்பள்ளி முன் திரும்பி, பெரிய நெசவு தெரு - எல்.கே. லெப்பை தம்பி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைவது) பலரால், பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரிய நெசவு தெரு மக்களால் - இப்பாதை பயன்பாடு எதிர்க்கப்பட்டு வருகிறது. அதற்காக பல காரணங்களும் அவர்களால் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

முதல் காரணம், வேறு வழி இருக்கும்போது ஏன் அதனை பரிசீலிக்கக்கூடாது என்பது. இரண்டாவது காரணம், புதிய போக்குவரத்து நடைமுறை மூலம் ஏற்படும் விளைவுகள் / ஆபத்துக்கள். இதில் - இப்பகுதியில் வாழும் மக்களுக்கு விபத்து ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து, குழந்தைகள் விளையாட இடம் இல்லாமை, தெருவில் திருமணம் நடத்த முடியாமை, வழியில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாதிப்பு போன்றவை அச்சங்களாக எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

முன்னரே கூறியபடி, முதல் காரணம் (கே.எம்.டி மருத்துவமனை அருகில் உள்ள ஓடை வழி) அமலுக்கு வர வாய்ப்புகள் - அதில் உள்ள சிக்கல்களால் - மிகவும் குறைவு. இதில் இரண்டாவதாக கூறப்படும் - பல கஷ்டங்கள், பல சாலைகளில் - குறிப்பாக கே.டி.எம். தெரு, சின்ன நெசவு தெரு மற்றும் மெயின் ரோடில் - அங்குள்ள மக்களால் அனுதினமும் அனுபவிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பெருவாரியான பிரச்சனைகளுக்கு - எளிதானதாக இல்லாவிட்டாலும், போதுமான தீர்வுகள் உள்ளன.

பெரிய நெசவு தெரு சார்பாக குறையாக கூறப்பட்ட அம்சங்களில் ஒன்று - நகரின் பெருவாரியான மக்களின் அணுகுமுறை, ஒரு வழி பாதை விஷயத்தில் - உத்தரவு போடும் வகையிலேயே இருந்தது என்பதும், கலந்தாலோசனையாகக் கூட எக்காலமும் இருந்தது இல்லை என்பதும்தான். இதில் ஓரளவு உண்மையும் உள்ளது. பெரிய நெசவுத் தெரு ஜமாஅத்தினருக்கும், கோமான் தெரு ஜமாஅத்தினருக்கும் - நகரின் பெருவாரியானோர் தங்களை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை என்ற அதிருப்தி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

அக்குறையைக் கருத்தில் கொண்டே நகர்மன்றதிற்கு புதிதாக தேர்வாகியுள்ள தலைவர் ஐ.ஆபிதா - ஒரு வழிப்பாதை குறித்து, பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினரை அண்மையில் - பெரிய நெசவு தெருவுக்கு நேரடியாக சென்று - சந்தித்தார். அச்சந்திப்பின்போது, அவ்வழியில் வாழும் மக்களின் அச்சங்களைக் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர், ஒரு வழிப்பாதை குறித்து நகர்மன்றதிற்கு முடிவு செய்யும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

மேலும் - அதிகாரிகள் வட்டாரத்தில், பெரிய நெசவுத் தெருவே ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த சிறந்தது என முடிவெடுக்கும் தருவாயில் இருப்பதை அறிய முடிவதாகவும், அவ்வாறு அறிவிப்பு வரும் பட்சத்தில் - நகர்மன்றம் மூலம், பாதுகாப்பு / சௌகரிய ஏற்பாடுகள் என்னென்ன சாத்தியமோ, அவையனைத்தையும் நகர்மன்றம் மூலம் தான் செய்து தர ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அச்சங்களுக்கான தீர்வுகளையும் அக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

பாதுகாப்பு கருதி இவ்வழியில் அதிகம் வேகத்தடைகளை உருவாக்குவது, ஆபத்து உண்டாக்கக்கூடிய மின் கம்பங்களையும், மின்கம்பி வடங்களையும் உயர்த்துவது, குழந்தைகள் விளையாட பூங்கா அமைப்பது, வழியில் உள்ள பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்வது போன்ற உறுதிமொழிகளை பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினருக்கு அவர் வழங்கினார்.

சுமுகமான முறையில் தீர்வு காண - நகர்மன்றத் தலைவரின் இம்முயற்சி ஒரு துவக்கமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பை, அத்தெருவின் தலைமை - தவறவிட்டு விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. ஜமாஅத் ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், முற்போக்குச் சிந்தனைக்கு பேர்போன இப்பகுதியினரின் இந்த அணுகுமுறை ஏமாற்றத்தையே தருகிறது.

இது ஒரு புறமிருக்க - பெரிய நெசவு தெரு வழியாகத்தான் பேருந்துகள் செல்லவேண்டும் என வலியுறுத்தி, கே.டி.எம். தெருவினை உட்கொண்ட தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பாக சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கே.டி.எம். தெருவைப் பொருத்த வரை, பிரதான போக்குவரத்து சாலையாக அமைந்ததால் - அத்தெரு மக்கள் இழந்தவை ஏராளம்.

நகரில் சாதாரணமாகக் காணக்கூடிய - தெருக்களில் குழந்தைகள் விளையாடும் காட்சிகள், திருமண வைபவங்கள் - கே.டி.எம் தெரு, சின்ன நெசவு தெரு, மெயின் ரோடு ஆகியவற்றில் காண இயலாது. அது மட்டுமின்றி, விபத்து அச்சம், வாகனங்கள் எழுப்பும் ஒலி, வாகனங்கள் ஏற்படுத்தும் மாசு பிரச்சனை போனற் சங்கடங்களையும் பல வருடங்களாக அப்பகுதிகளின் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இருப்பினும் பெரிய நெசவு தெரு பாதையை ஒரு வழிப்பாதையாக அறிவிக்க வலியுறுத்தி தாயிம்பள்ளி சார்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள - நகரின் பிற ஜமாஅத்துக்கள், பொது நல அமைப்புகளிடம் கையெழுத்து வாங்கும் முயற்சி ஒரு தவறான முன்னுதாரணமாகவே தோன்றுகிறது.

பெரிய நெசவு தெரு ஜமாஅத் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் - கே.டி.எம். தெருவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறியிருந்ததே இக்கையெழுத்து வாங்கும் முயற்சிக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது. ஒருவழிப்பாதை குறித்த விவாதங்கள் பல காலமாக இருந்து வருகின்றபோதிலும், பெரிய நெசவுத் தெருவைக் குறிப்பிட்டு தாயிம்பள்ளி சார்பில் நகர்முழுக்க ஆதரவு திரட்டுவது இதுவே முதன்முறை. இதனை இரு ஜமாஅத்தினரும் நேரடியாக பேசி தீர்த்திருக்கலாம்.

இந்த கையெழுத்து வாங்கும் முயற்சி ஒரு வழிப்பாதை நகரில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்பது ஒருபுறமிருக்க, பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினருக்கும், நகரின் பிற மக்களுக்கும் இடையே உள்ள தூரத்தை மேலும் இது அதிகரிக்கும். சுமுகமான தீர்வுக்கான வாய்ப்பை மேலும் இது குறைக்கவே செய்யும்.

காயல்பட்டினம் நகர்மன்றத்தையும் இப்பிரச்சனையில் தலையிட வைக்க முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதைக்கான வழித்தடத்தை நிர்ணயிப்பது நகர்மன்றத்தின் கட்டுப்பாட்டில் கிடையாது. ஆகவே இவ்விஷயத்தில் நகர்மன்றத்தின் தலையீடு புது சட்டச் சிக்கல்களை உருவாக்கும்.

நகர்மன்றம் என்பது ஓர் அரசாங்க அமைப்பு. அது ஒரு தீர்மானம் நிறைவேற்றும்போது - ஆதாரங்கள் அடிப்படையிலும், அதுகுறித்த தீர்மானம் நிறைவேற்ற அதற்கு உரிமையுள்ளதா என்ற அடிப்படையிலுமே இருக்கவேண்டுமேயன்றி, மக்களின் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கக் கூடாது.

பழைய வழியில் இருந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை, அதில் உள்ள பிரச்சனைகள், பரிசீலனைக்கான மாற்றுப் பாதைகள், அவற்றில் உள்ள சாதக - பாதகங்கள் ஆகியவற்றை, அத்துறை சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்தே - அரசு ஒரு வழிப்பாதையை அறிவிக்கும்.

இதுபோன்ற ஆய்வுகள் செய்யும் வசதி - நகர்மன்றத்திடம் கிடையாது. ஆகவே இவ்விஷயத்தில் நகர்மன்றம் - தலையிடாமல், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக செயல்புரிவதே சரியான அணுகுமுறையாக அமையும்.

கடந்த நகர்மன்றக் கூட்டத்தில் - இவ்விஷயம் குறித்து விவாதம் நடந்தபோது, இது நகர்மன்றம் தீர்மானிக்கக்கூடிய பிரச்சனை இல்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் - தாயிம்பள்ளி சார்பாக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

இப்பிரச்சினையை மேலும் பெரிதாக்க சில சந்தர்ப்பவாதிகள் முயற்சி செய்கின்றனர். அவர்களின் திட்டங்களுக்கு இரையாகாமல் தாயிம்பள்ளி மற்றும் பெரிய நெசவு தெரு ஜமாஅத்துகளின் பெரியவர்கள் ஒரு குழு அமைத்து, சுமுகமான முறையில் - பெரிய நெசவு தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த, காலந்தாழ்த்தாமல் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு முயற்சிகள் எடுக்காமல் விட்டு - இப்பிரச்சனை விபரீதத்தில் முடிந்தால் - இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் பொது வாழ்விலும் இது ஒரு கரும்புள்ளியாகவே அமையும்.

Previous EditorialNext Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மிகவும் அருமையான அவசியமான கட்டுரை

மிகவும் அருமையான அவசியமான கட்டுரை

யாரையும் புறக்கணிக்காது யார் மனதையும் புண்படுத்தாது இரு ஜமாத்தார்களின் ஒற்றுமைக்கும் ஊரின் நன்மைக்கும் உன்னதமனான ஆலோசனைகளோடு பதிக்க பட்ட கட்டுரை. அதேநேரத்தில் சிலரின் பிரித்தாளும் சூல்சியையும் இக்கட்டுரை தெளிவாக சுட்டி காட்டுகிறது. அருமை இலும் அருமை. ஊர் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட ஒரு வழி பாதை அவசியத்திலும் அவசியம்.

இக்கட்டுரை பதித்த கரங்களுக்கு அன்பு முத்தங்கள்


posted by: Hameed Rifai (Yanbu - KSA) on 22 January 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20427

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

மிக அருமையான தலையங்கம், இரு தெரு பொதுமக்கள் கலந்தாலோசித்து நமதூருக்கு ஒரு நற்செயலை செய்ய முன் வாருங்கள்.

வஸ்ஸலாம்
A .T Soofi Ibrahim


posted by: Soofi (Riyadh) on 22 January 2012
IP: 155.*.*.* United States | Comment Reference Number: 20428

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

இக்கட்டுரை மூலமாவது நம் ஊர் நலம் விரும்பி ஒற்றுமையுடன் செயல் பட்டு விரிவான தீர்வு காண வேண்டும்.


posted by: Muzammil (Dubai) on 22 January 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20429

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

தலையங்கம் அருமை......

காயல் நகர மக்கள் எதிர்பார்க்கும் ஒருவழி பாதை விரைவில் அமலுக்கு வர இரு ஜமாத்தினரும் கூடி முடிவு செய்யவேண்டும்.

சகோ. ஹமீத் ரிபாய் அவர்களே "இக்கட்டுரை பதித்த கரங்களுக்கு அன்பு முத்தங்கள்", என்று சொல்கின்றீர்களே? கட்டுரை பதித்தது ஆணா/பெண்ணா? (தமாசு.....)


posted by: AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) on 22 January 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20430

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தாயும் பள்ளி முயற்சி..

தாயும் பள்ளி ஜமாஅத் , மற்ற ஜமாத்திலும்,பொது நல அமைப்பிலும் கையழுளுது பெறுவது, தவறான முன்னுதாரணம் என்ற கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம்..

ஒரு பூனையை ஒரு அறையில் பூட்டி தொடர்ந்து தாக்கினால், குறிப்பிட்ட தவணைக்கு பின் தக்குஓவனை நோக்கி சீறதான் செய்யும். இங்கே புலியையே குனிய குனிய குட்டினால்....என்ன செய்வது..

ஆரம்பத்திளினைய தளத்தில் சில அன்பர்கள் மட்டும், KTM தெரு ஆக்கிரமிப்பு என்றார்கள்.. இறுதியில் ஒரு ஜமாத்தே, KTM தெருவில் ஆக்கிரமிப்பு அகற்ற collecotr மற்றும் நகராட்சி தலைவருடன் மனு கொடுக்கும்போது...என்ன நாங்க மட்டும் கையை சூப்பிக்கொண்டு சும்மா இருக்கவா முடியும்..பின்னர் எங்கள் தெரு வாரிசுகள், எங்களை முதுகெலும்பு இல்லாத முன்னோர்கள் என்று தூற்ற மாட்டார்களா.

கேய்யழுத்து பெற முயற்சிதுடன், தொண்ணூறு சதவிகிதம் கேயோப்பம் இட்டதில் இருந்தே தெரிகிறது.. அந்த திட்டத்திற்கு தான் ஏகோபித்த ஆதரவு என்று..

கட்டுரையில்று இடத்தில் குறிப்பிட்ட இரு தெரு சகோதரர்கள் மட்டும் தனியாக பர்க்கபடுகிரார்கள் என்ற கருத்தில் எழுத பட்டு இருந்தது..அது தவறு.. கல்யாணத்தில் மாப்பிளை பொன் எடுப்பதில் தவிர , மற்ற எல்லா விசயத்திலும் அவர்களும் , நம்மில் ஒருவராகவே உள்ளார்கள் என்பதற்கு பல பல உதாரணங்கள்..கல்யாண விஷயம் கூட, அவங்க தெருவின் பாரம்பரியம் படி தான் நடுக்கிரதே ஒழிய,வேறு நோக்கு இல்லை.. இன்னும் குடும்பத்தை விட்டே வெளியே மனம் பேச தயங்கும் நம் ஊரில், இந்த விஷயம் ஏரையும் ஒதுக்கி வைப்பதாக ஆகாது.. இன்னும் வரும் காலங்களில், அதுவும் (மாப்பிளை பெண் இட்ன்ஹா தெருவிலும் எடுக்கும் பழக்கம் ) முறையாகி வந்து விடும் இன்ஷா அல்லாஹ்

இந்த ஒரு வழி பிரச்சனையில் , KTM தெரு மற்றும் நெசவு தெரு இடையை விரிசல் போல் தெரிவது உண்மை தான். இந்த விரிசலை களைய, BALL IS IN THEIR கோர்ட்......அவர்கள் தான் எங்கள் கஷ்டம் கொஞ்சம் குறைய விட்டு கொடுத்து ஒரு வழி பாதை அமைய வழி வகுகனும் தவிர, நாங்க மேலும் விட்டு கொடுத்து KTM தெரு வழியை மூணு வழி பாதை ஆக்க முடியாது..

இது தற்காலிக சகோதர சண்டையே, தவிர நிரந்தர பிரச்சினை அல்ல.

நான் என் தெரு சார்பாக சகோதர கரம் நீட்டுகிறேன் .... அவர்களும் விட்டு குடுத்து நீட்டடும்.. ஒன்றிணைந்து ஊரை முன்னேற்றுவோம்..வஸ்ஸலாம்


posted by: DR D MOHAMED KIZHAR (chennai) on 22 January 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20431

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

தலையங்கம் = தடியும் உடையாமல் , பாம்பும் செத்த மாதிரி இருக்குது !

ஹம்ஸா


posted by: HAMZA (Riyadh) on 23 January 2012
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20432

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

தலையங்கம் மிகவும் அருமை . பாராட்டுக்கள்.


posted by: VSM HASAN (Dubai) on 23 January 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20433

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

தாயும்பள்ளி ஜமாஅதார்களின் தவறான முன் உதாரணம் என்று கட்டுரையாளர் தன் கருத்து பிசைவால் கசப்புணர்வுக்கு தூபமிட்டிருக்கிறார்.

தவறான முன் உதாரனத்திற்க்கு வித்தூன்றியதே பெரிய நெசவு ஜமாஅதார்கள்தான்.

இன்று நேற்றல்ல பல ஆண்டுகள் ஒருவழிப்பாதை வேண்டும் என்று KTM தெரு வாசிகள் முயன்று வந்தது கட்டுரையாளருக்கு தெரியுமா? அந்த கோரிக்கையில் ஒரு வரியில் கூட பெரிய நெசவு தெருவை பற்றி சொல்லி இருப்பார்களா? அந்த அளவிற்கு கண்ணியம் காத்த KTM தெருவை பார்த்து ஆக்கிரமிப்புள்ள தெரு என்று உண்மைக்கு மாறான குற்றசாட்டை ஜமாஅத் தீர்மானமாகவே கூறி, KTM தெரு வாசிகளின் கோபத்தையும்,கொதிப்பையும் கிளறிவிட்ட அந்த பெ.நெசவு ஜமாஅதார்களின் நடவடிக்கை மோசமான முன் உதாரணம் இல்லையா? இதை ஏன் கட்டுரையாளர் கண்டுகொள்ளவில்லை.

நமதூரின் அணைத்து ஜமாஅதார்களின் விருப்பமான,வசதியான வழியாகிய பெரிய நெசவு தெரு பாதை, ஒரு வழிப்பாதையாக வரவேண்டும் என்ற கோரிக்கையை அணைத்து ஜமாஅதினுடைய அங்கீகார ஒப்புதல் முத்திரையுடன், அணைத்து அரசியல் கட்சிகள், அணைத்து தன்னார்வுதொண்டுஅமைப்புகள் அங்கீகாரத்துடன் கூடிய மனுவை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஊர்மக்கள் சார்பாக தாயும் பள்ளி ஜமாஅத் சமர்ப்பித்தது தவறான முன்உதாரணமா?

கட்டுரையாளரின் கருத்து கண்ணோட்ட காளை மிரண்டு போகிறது சற்று மடக்கி வையுங்கள். ஆரம்ப காலத்தில் KTM தெருவும் பெ.நெசவு தெருவைப்போல் விசாலமாகதான் இருந்தது நாளடைவில் ஆக்கரமிப்பால் சுருங்கிவிட்டது என்று கூறும் பெ.நெசவு ஜமாஅதார்களே, உங்களிடம் அதற்குரிய ஆதாரம் இருந்தால் கொண்டுவாருங்கள்,அது உண்மையாக இருந்தால் உங்கள் கண் முன்னாலேயே எங்கள் வீட்டை இடிக்கிறோம்.

ஒருவேளை நீங்கள் நிரூபிக்க முடியாவிட்டால், நீங்களே முன்வந்து எங்கள் தெருவழியாக போக்குவரத்து போகலாம் என்று ஒப்புகொள்வீர்களா? இதற்கு கட்டுரையாளரின் கணிப்பு என்ன? சிறிதேனும் பொருபெர்பாரா? பதுங்குவார?

நகராட்சியில் ஒருவழிப்பாதை கொண்டுவர உரிமை இல்லாவிட்டாலும்,ஊர்மக்களின் ஒட்டுமொத்த விருப்பமான வசதியான,வழியை பரிந்துரைப்பதில் தவறு இல்லை. நகராட்சியின் கமிஷனர் அவர்கள் உண்மை நிலையை விளக்கி ஒருவழி பாதைக்கு உகந்தது பெ.நெசவுதெரு வழி தான் என்று பருந்துரை கடிதம் கொடுத்திருக்கும் பொழுது, ஊர்மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பிகிணங்க ஊர் தலைவி அவர்கள் ஊர்ஜமதார்கள் வழியை எற்றுகொண்டவராக பரிந்துரை சம்மத கையப்பொமிடுவதில் என்ன தயக்கமோ?

சுனாமி வீடு பிரச்னையில் ஊர் ஜமாஅத் நிலைதான் என் நிலை என்று கூறிய அதே தலைவி அவர்கள் இன்று ஊர் ஜமாத்தோடு ஒத்துபோக தயக்கம் காட்டுவதின் பின்னணிதான் என்ன? தயவுசெய்து உண்மைக்காகவும் ஊருக்காகவும் ஒத்துபோகவும். அதுதான் நடுநிலைமைக்கு நல்லது. . .

"இது நகர்மன்றம் தீர்மானிக்கக்கூடிய பிரச்சனை இல்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் - தாயிம்பள்ளி சார்பாக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது".

என்று கட்டுரையாளர் கூறியருப்பதுதான் விந்தையாக இருக்கிறது. .நகரமன்ற பொறுப்பு இல்லை என்பதால் ஊருக்கு அவசிய தேவையை பருந்துரைப்பது குற்றமா?அல்லது வேடிக்கைய?

நகரமன்ற உறுப்பினர்களை ஜமாதுதான் தேர்ந்தெடுகிறது,அந்த ஜமாத்தே ஒப்புதல் கடிதமும் முத்திரையும் கொடுக்கும் பொழுது, அந்த வார்டு உறுப்பினர் கையெழுத்து இடுவது வேடிக்கையா?

நகராட்சியின் துணை தலைவர் அவர்கள் இல்லாத பாதையை மேற்கோள் காட்டி அதை ஒருவழிப்பாதையாக அமுல்படுத்தி தீர்மானம் போடுங்கள் என்று நகராட்சியில் வற்புறுத்தியதாக கேள்வி..

மனசாட்சி இல்லாமல் சொந்த ஜமாஅத், ஊர்ஜமாஅத் மக்களுக்கு எதிராக செயல்படும் அவரை ஆட்டிவைக்கும் பின்னணி சக்தி.. பலம் பொருந்திய சக்தி என்பதுமட்டும் தெரிகிறது.

திமுக சார்பில் வெற்றிபெற்றதற்காக பெருமை பெற்ற கழக கட்சியாளர்களின் ஒருவனான நான் மேற்கண்ட செயலுக்காக இப்பொழுது வெட்கபடுகிறேன்.

இறுதியாக சொல்ல வருவது, கட்டுரையாளரின் முழு உண்மையற்ற,விபரமற்ற செய்தியால்தான் இரு ஜமாஅதார்களுக்கிடையே நெருக்கம் நகர்ந்து போக வழிவகுக்கும் என்பதை என்னுடைய கருத்தாக பதிவு செய்கிறேன். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்


posted by: Mohamed Adam Sultan (kayalpatnam) on 24 January 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 20434

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. பூனைக்குட்டி வெளியே வந்தது

மதிப்பிற்குரிய சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களின் ஆதங்கத்தின் வாயிலாக என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு ஜமாஅத்தார் மீதுள்ள அவரது வெறுப்பு சற்று தூக்கலாகவே தொணிக்கிறது.

ஊர் நன்மை என்று வரும்போது, நமக்குள் பேதமை கொள்வது தகாது. “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பதைப் போல் நாம் நடந்துகொள்வது முறையாகாது.

தலையங்கத்தைப் பொறுத்தவரை தனிப்பட்ட எவரது ஆக்கமோ கட்டுரையோ அல்ல என்பதை சகோதரர் புரிந்துகொள்ள வேண்டும். தலையங்கம் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் திருத்தங்களுக்கு உட்பட்டே வெளியிடப்படுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். Editorial Boardல் அங்கம் வகிப்போருக்கு எந்தவொரு அமைப்பையோ ஜமாஅத்தையோ சார வேண்டிய தேவையும் இல்லை; சாட வேண்டிய தேவையும் இல்லை என்பதே தலையங்கத்தின் குறிக்கோள். அப்படியிருக்க வரிக்கு வரி கட்டுரையாளர்... கட்டுரையாளர் என்று குறைபட்டிருப்பது தவறான பதிவாகும்.

எனவே, உங்களுக்குள்ள தனிப்பட்ட விரோதங்களை அல்லது மாச்சரியங்களை இதுபோன்ற தளங்களில் தயவுசெய்து நுழைக்க விரும்பாதீர்கள். பொதுசேவையில் நாட்டமுள்ள தங்களைப் போன்றோர் விருப்பு வெறுப்புகளைக் களைந்து சுமுகமான நல்லதோர் தீர்வை நோக்கி வாருங்கள்.

உங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. மொத்தத்தில் பூனைக்குட்டி வெளியே வந்தது.


posted by: Mohamed Buhary (Chennai) on 25 January 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20435

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:தீர்வு சொல்லாத தலையங்கம்

தலையங்கம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதில் ஒரு தீர்வு வெளிப்படவில்லை.

ஒரு வழிப்பாதை பிரச்சனையில் எழுத்தும் கருத்துக்கள் ஏதோ இரு ஜமாஅத் சார்ந்த பிரச்சனைபோலவே வெளிப்படுகிறது அல்லது வெளிப்படுத்தப்படுகிறது.ஊர் போதுப்பிரச்சனையாக யாரும் பார்ப்பதில்லை.

மாற்று வழியாக பிரதானமாக பலரால் கூறப்பட்டுள்ள மூன்று தீர்வுகளில் முதல் வழியான ஓடக்கரை வழியாக, துளிர் பள்ளி அருகில் எல்.எஃப். சாலையை அடைவதுதான் இந்த பிரச்சனைக்கு முடிவான தீர்வாக இருக்கும்.

இது பயன்பட்டுக்குவர நாட்களாகும் என்ற வாதம் ஏற்புடையதில்லை.

இதை நாம் தாமதமாக ஆரம்பித்தால் தாமதமாக பயன்பாட்டுக்கு வரும்.விரைவாக நடைமுறைபடுத்தினால் விரைவாக பயன்பாட்டுக்கு வரும்.

எதையும் நாம் தொலைநோக்கு பார்வையுடன்தான் அணுகவேண்டும்.

வசதி என்றுபார்த்தால் ,தற்போது நடைமுறையில் உள்ள மெயின்ரோடு கூட எம்மைப்போன்ற சதுக்கைதெரு/நெயனாதெரு /கொமான்தெரு வாசிகளுக்கு சற்று சிரமம்தான் . நாங்கள் ஆட்டோபிடித்துதான் தற்போது பஸ் ஏறிக்கொண்டிருக்கிரோம்.நாங்களும் சாலையில் காலைவைக்காமல் வீட்டுவாசலில் இருந்து நேரடியாக பஸ்ஸில் காலை வைக்கவேண்டும் என்று நினைத்தால் எங்கள் தெருவையும் ஒருவழிப்பாதையாக உபயோகிக்க முடியுமா என்ன?

எதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

கிராமம் ஊர் ஆகி, ஊர் நகர் ஆகிவிட்டது.இன்னும் சிலவருடங்களில் நமதூர் மாநகராட்சியாககூட ஆகலாம்( ஒருவேளை அருகிலுள்ள நகரங்களுடன் இணைந்து) .

என்னுடைய அறிவிற்கு தெரிந்தவரை பெரியநேசவுதெரு பஸ் போக்குவரத்திற்கு உகந்ததேயல்ல.

அதற்காக KTM தெருவாசிகளுக்கு சிரமம் இல்லை என்று சொல்லவும் இல்லை

எனவே நாம் முன்னேற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது.

துணிவாக முடிவெடுக்க பழக வேண்டும்.முன்னேற்றப்பாதையில் முடிவெடுக்க வேண்டும்.


posted by: V D SADAK THAMBY (ABU DHABI) on 25 January 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20436

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. போலி ஒற்றுமை வேண்டாம்.

ஒற்றுமை என்ற வாதத்தின் அபத்தங்களை வெளிக்கொண்டு வந்து இருக்கிறது இந்த பதிவு. நெசவு தெரு மற்றும் கோமான் தெரு ஜமாத்தை யாரும் இரண்டாம் தாரமாக பார்க்க வில்லை. ஒரு வழி பாதைக்கு இருக்கும் வழிகளில் சிறந்ததாக ஏகோபித்த மக்களின் தேர்வாக இருப்பது பெரிய நெசவு தெரு. நெசவு தெரு ஜமாத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் கூறுமாறு கேட்கிறேன்.

1 நெசவு தெரு ஜமாஅத் கூறிய மாற்று பாதை அந்த பகுதியில் உள்ள மக்களிடம் கலந்தாலோசித்த பிறகா கூறப்பட்டது?

2 நெசவு தெரு ஜமாஅத் கூறிய K.T.M. தெரு ஆக்கிரமிப்பு யாரிடம் கலந்தாலோசித்து கூறப்பட்டது?

3 நெசவு தெரு ஜமாஅத் சார்பாக கலக்டரிடம் மனு கொடுக்கப்பட்ட போது யாரிடம் கலந்தாலோசனை செய்தார்கள்?

4 வேண்டாம் என்று பிடிவாதம் செய்பவர்களிடம் எவ்வாறு சமரசம் செய்வது? இது என்ன முடுக்கு பிரச்சனையா உனக்கு 2 அடி எனக்கு 2 அடி உனக்கு என சமரசம் செய்வதற்கு?

5 நகராட்சி தலைவியே நேரில் சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க முன் வந்த போதும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களிடம் எந்த மாதிரி சமரசம் செய்ய சொல்கிறீர்கள்?

தாயிம்பள்ளி ஜமாத்தின் தீர்மானத்தை தவறான முன்னுதாரணம் என்று கூறுவதற்கு யார் நீங்கள்? முதலில் அந்த வாசகத்தை நீக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இந்த பிரச்சனையை நீங்கள் K.T.M. தெரு விற்கு மட்டும் சம்பந்த பட்ட பிரச்சனையாக பார்ப்பதால் தான் இந்த எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறது. ஊரில் உள்ள பெரும்பாலான அமைப்புகள், ஜமாஅத்கள் தங்களது ஆதரவை தெரிவித்து இருப்பதன் மூலமும் நீங்கள் இதை உணரவில்லை என்றால் என்னவென்று சொல்வது?

சில நச்சு பாம்புகள் நல்லது நடப்பதை தடுக்க நினைத்தாலும் அதன் விஷ பற்கள் பிடுங்க படும் நேரம் விரைவில் வரும். மேயிற மாட்டுக்கு நக்குற மாடு இளப்பம் என்று கூறுவார்கள். அதை தான் தற்போது நாம் கண்டு கொண்டு இருக்கிறோம். தற்போது நகராட்சியில் எந்த ஒரு நல்ல திட்டம் அமுல் படுத்த முனைந்தாலும் அதை தடுக்க சில குள்ள நரிகள் சூழ்ச்சி செய்கிறது.

இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒரு வழி பாதை வர நாம் அனைவரும் துஆ செய்வோமாக.


posted by: S.A.Muhammad Ali (Velli) (Kayalpatnam) on 26 January 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 20437

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

தலையங்கம்!! தலையும் காலும் புரியாத ஒரு அங்கமாகவே காட்சியளிகிறது! உண்மை,நன்மைகளை, சரி என பட்டவைகளை உடைத்து சொல்ல துணிவில்லாத இந்த தலையங்கம் மக்கள் எதிர்பார்ப்பை விட்டு தலை தெறித்து ஓடி இருக்கும் அங்கமாக இருக்கிறது!

எத்தனையோ நல்லுள்ளம் படைத்த ஊர் பெருமக்கள் ஊர் நன்மைக்காக தங்கள் உடமைகளை அர்பணித்து போல் தாயிம்பள்ளி ஜமாஅத் வாசிகள் அனைவரும் தங்கள் வீட்டின் ஒரு பகுதியையோ அல்லது சிறு பகுதியையோ இழந்து இருக்கிறார்கள் மேலும் தாயும் பள்ளியின் ஒரு பகுதியும் இழக்கபட்டிர்கிறது என்பதனை சொல்ல மறுத்த அல்லது மறந்த இந்த தலையங்கம் பொழுதுபோக்கு கட்டுரைதான் அன்றி வேறில்லை, இத்தனைக்கும் ஊரு மக்கள் அனைவரும் அனுபவிக்கும் பொது பிரச்சனையை தாயிம் பள்ளி ஜமாத் மீது மட்டும் உள்ள பிரச்சனையாக மாற்றி காண்பிக்க துடிக்கும் உங்கள் தலையங்கத்தில் உண்மையில் தலை இல்லை!

தீர்வுகள் என்று சொல்லி அறிவிற்கும் நடைமுறைக்கும் ஒத்துவராத இரண்டு வழிகளை சுட்டிகட்டியதை ...அது சாத்தியபடாதது என்று தெளிவாக அழுத்தி சொல்ல துணிவில்லாத இந்த தலையங்கம் தாயிம்பள்ளி ஜமாத்தார் கையெழுத்து வாங்கியதை தவறான அணுகுமுறை என்று அழுத்தம் திருத்தமாக கோடிட்டு சொல்லி இருப்பதில் இருந்தே கட்டுரையாளரின் சார்புத்தன்மை தெரிகிறது...தலையங்கம் எழுதும் பொது தலையில் உள்ள அங்கத்தை ஒழுங்காக செயல்பட விடவில்லையோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது!! அப்படி இது தவறான அணுகுமுறை என்றால் நகரமன்ற தலைவர் முதல் கலெக்டர் வரை அவர்கள் மனு கொடுத்தது நல்ல முன்னுதாரமா?

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! அந்த பாதையை நாங்கள் குறிப்பிட்டு காட்டியது தாயும் பள்ளி ஜாமாதார்களின் நலனுக்கு இல்லை!! ஊர் நலனும் ஊரு மக்கள் எளிதான முறையில் சென்று வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான்!! இதை கருத்தில்கொண்டு தான் எல்லாம் ஜமாத்தும், அனைத்து நல மன்றங்களும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள்!! உங்கள் தான் தோன்றி தனமான தவறான முன்னுதாரணம் என்ற வார்த்தை இவர்களை நோக்கியும் தான்!! இதனால் எங்களுக்கு ஒரு பெரிய நன்மையையும் கிடைத்து விட போவதில்லை... அதே தூசி, அதே பஸ் சத்தம், அப்படியே பிள்ளைகளை விட்டில் அடைத்து வைப்பது எல்லாம் தொடரத்தான் செய்யும்!!

இந்த பிரச்சனையில் சம்பந்தபட்ட அத்தனை ஜமாஅத் மற்றும் நல சங்கங்களை குறை கூறிய இந்த தலையங்கம்.... பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாதவர்களை குறிப்பிட்ட பகுதியினர் சென்று சந்தித்ததை மறைத்து இருக்கிறது.

தங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்று சொல்லுவதை மறுக்க முடியாத உண்மை என்றும் அங்கீகரித்திருக்கும் இந்த தலையங்க எழுத்தாளர் கடந்த 20 வருடம் அவர்கள் அழைக்கப்பட்டு எதற்கும் முன்வராததும், முன்னாள் இந்நாள் நகரமன்ற தலைவர்கள் அழைத்து பேசியது வரை உள்ள நிகழ்வுகளை தெரிந்தவரிடம் கேட்டு விட்டு வந்து எழுதி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

ஒரு வழி பாதை வரும் பட்சத்தில் அந்த தெருவுக்கும் செய்யப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விலாவரியாக பேசிய தலையங்கம் ..இத்தனை வருடங்கள் அல்லல் படும் KTM தெருவை நோக்கி தலை நிமிர்ந்து பார்க்க வில்லையே ஏன்?

நகர்மன்றம் தான் தலையிட முடியாது உங்கள் கூற்றுப்படி! மன்ற உறுபினர்கள் ஊர் நலம் கருதி ஆதரவு தெரிவித்ததும் தவறா!! அப்படி என்றால் துணை தலைவரின் பாரபட்சமான நிலையை ஏன் கண்டிக்க வில்லை? ஏன் நகர்மன்றம் சுனாமி வீடு, சிங்கி துறை, கொம்புதுரை ஆக்கிரமிப்பு, இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சட்டரீதியாக மட்டும் பார்த்தா இல்லை மக்களின் உணர்வு ரீதியாக பார்த்தா?

ஆக மொத்தத்தில் இந்த தலையங்கத்தில் இரு ஜமாத்தினரை பகைமூட்ட செய்யும் வாசகங்கள்தான் நிரம்பி இருகிறதே ஒழிய...யாருக்கும் பயனளிக்கும் எந்த உருப்படியான செய்தியும் இல்லை!! எனவே இந்த தலையங்கம் தலை இல்லா வெறும் அங்கமாக களை இழந்து காட்சியளிகிறது !!


posted by: Cnash (Makkah) on 28 January 2012
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 20438

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. LET'S ALL WIN AND NO BODY SHOULD லோசே.......................................!!!!!!!!!!!!!!!!!!!!!!

தலையங்கத்தை ஒரு விமர்சனமாகவும் அதன் கீழ் இடப்பட்டுள்ள காரசாரமான (பல) விமர்சனங்களை தலையங்கமாகவும் மாற்றிப் பார்த்தால் பொருத்தமாக இருக்குமோ.........??????? ஒரு வேளை தலையங்கத்தின் நோக்கமும் அதுதானோ............!!!!!!!!!!

எனது பள்ளி உயர்கல்விப் பருவத்திலும் என் கல்லூரி நாட்களிலும் கூட எனக்கு இரண்டாவது தெருவாக அமைந்திருந்தது KTM தெருதான்.

மாலை நேரத்திலும் விடுமுறைக் காலங்களிலும் தெருவில் உள்ள பல இளைஞர்களுடன் தெருவில் ஒன்று கூடி நடந்து சென்று KMT -க்கு நேர் கிழக்கில் உள்ள பொலி முகத்தில் சென்று தான் விளையாடுவோம்.

அப்போது அவர்கள் மனதில் எந்தக் கவலையும் இருக்காது. இப்படி மற்ற தெரு போல நமக்கும் தெருவிலேயே விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என எப்போதும் யாரும் சொல்லக் கேட்டதே இல்லை. நம் முன்னோர் இப்படி செய்து விட்டார்களே என அவர்களையும் இந்த சீதேவிகள் குறை கூறியதும் கிடையாது.

எப்போதாவது தெருவில் ஏதாவது ஒரு வாகனம் வேகமாகச் சென்று அதனால் பிள்ளைகளுக்கு அச்சுறுத்துவது போல இருந்தால் கூட களகமோ கலவரமோ பண்ண மாட்டார்கள் இந்த தெருவாசிகள். அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே தமது எதிர்ப்பை வெளியிட்டு இனி பிற வாகனங்கள் அவ்வாறு செல்லாமல் இருக்க சம்மந்தப் பட்டவர்களிடம் உறுதிக் கேட்பார்கள். இது அவர்களுக்கு பழகிப்போன விஷயம். தற்போதுள்ள சர்ச்சையால் தான் இப்போது தமது பள்ளிப்பருவத்தில் உள்ள சிறியவர்கள் கூட இவ்வளவையும் நாம் இழந்திருக்கிறோமா என நினைத்திருப்பார்கள். ஃஹைர்.

இதே போல ஊர் விரிவாக்கம், ஊர் நலன் மீது அக்கறைக் கொண்டு நெசவுத்தெரு மேன்மக்களும் பரந்த மனத்தோடு வருங்கால சமுதாயத்தை நாமே மனோ ரீதியான அச்சத்திற்கு இட்டுச்செல்லாமல், தற்போது ஏற்பட்டிருக்கும் சிறு இடைவெளியை மறந்து, நீண்ட காலமாக நிலைநாட்டப்பட்டுள்ள KTM தெரு மக்களின் முன்மாதிரியை அவ்வாறாகவே எடுத்துக்கொண்டு நமதூருக்கு அமைதி மற்றும் ஒற்றுமைக்கான ஒரு புதிய அத்தியாத்தை உருவாக்கித்தருவீர்கள் என்ற மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் முடிக்கிறேன்.

"LET'S ALL WIN AND NO BODY SHOULD LOSE"
"UNITY IS OUR STRENGTH ; THEN ; NOW ; AND EVER.........................................

இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்.


posted by: Shameemul Islam SKS (Chennai) on 29 January 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 20439

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

salam

The editorial regarding the "One Way" is not appropriate. I hope the editorial is guiding them with new issues. Pls don’t portray us that we are against the peace and unity, we are ready for peace and unity, this issue r going for the past 15 yrs, they fooling our kayal ppl with stupid reason .

Our jamath had given the evidence that they accepted the route now they are going against their jamath acceptance. The action taken by our Jamath is 100% correct no body have the right to comment about that. It was done in democratic manner, we don’t have any intention to hurt anybody, and we had sacrificed lot for the town, now we request our bothers to do the same, but they are doing all the dishonest things against our Jammath (like illegal structure and threatening with peace and unity, they had surrender the petition to Govt and in the website also they had published that)

“Shame on the Editorial to Comment about our Jammath approach which is honest, open minded, foresighted and Democratic way of approach for the Noble cause.


posted by: ISMAIL (KTM ST) (Hong Kong) on 30 January 2012
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 20440

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

"ஒரு வழிப்பாதை பற்றிய உண்மை விளக்கம்"

நம் காயல் நகரில் சமீப கால சலசலப்புகுள்ளான தலைப்பு செய்தி ஒரு வழிபாதை பற்றியதாகும் . அது முக்கிய தேவையா? இல்லையா? என்பதை விட்டு,விட்டு இரு ஜமாதார்களுக்கிடையே கருத்து வேறுபாடாமே, குறிப்பிட்ட ஜாமத்தை குதறி எடுகிறார்கலாமே? என்று உண்மைக்கு மாற்றமாய்,கற்பனை கலந்து கனலாக்கி, நெருப்பாக்கி அதில் குளிர் காய நினைக்கும் சில நேர சந்தோஷ சிந்தனையாளர்களை, சென்னையில் நேரடியாகவும்,மேலும் சிலரை இணையத்தளத்தில் கமென்ட் மற்றும் தலையங்கம் மூலமாகவும் தங்கள் கரிசனங்களை கொட்டி கொண்டிருப்பதையும் பார்க்க நேரிட்டது. இப்படிப்பட்ட சிந்தனையாளர்களுக்கும், நம் காயல்பதி நடுநிலையாளர்களுக்கும்,உண்மைநிலையை விளக்க வேண்டும் என்ற முடிவில் எழுத தொடங்கி உள்ளேன் இன்ஷா அல்லாஹ்

ஒருவழி பாதையை வலியுறுத்தும் முகமாக தாயும் பள்ளி ஜமாஅத் அணைத்து ஜமாஅதார்களிடமும், அணைத்து அரசியல் கட்சிகள்,சங்கங்கள் ஆகியவற்றின் கையெழுத்துகளை பெற்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு கொடுத்தது தவறான முன் உதாரணம் என்று நேரிலும் இணையதளத்திலும் கருத்து தெருவிக்கபட்டது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், கூலக்கடை பஜார்,பெரிய நெசவு தெரு பெயரை குறித்திருக்க கூடாது என்பது தான்.

பல ஆண்டுகாலமாகவே, போக்குவரத்திற்கு பொருத்தமான வழியென்று எல்லா அதிகாரிகளும்,ஒட்டு மொத்த ஊர் மக்களும் விரும்பிய எண்ணத்தை ஊர்மக்கள் சார்பாக ஒரு ஜமாஅத் தெருவித்தது மோசமான முன் உதாரணமா? எங்கள் தெரு வழியாக பேருந்து போவதற்கு எதர்ப்பு தெரிவிக்கிறோம் என்று மட்டும் தீர்மானம் போட்டதோடு நிற்காமல், KTM தெரு.,மெயின் பஜார் HAT தெருவில் ஆக்கிரமிப்பு இருக்கிறது,அதை அகற்றிவிட்டு,இடித்துவிட்டு போக்குவரத்தை விரிவுபடுத்துங்கள் என்று உண்மைக்கு மாறான ஒரு புகாரை ஒரு குறிப்பிட்ட தெருவை சுட்டிக்காட்டி முதன் முதலில் தீர்மானம் போட்ட பெரிய நெசவு ஜமாத்தின் மேற்கோள் மோசமான முன் உதாரணமில்லையா?

இன்று நேற்றல்ல பல ஆண்டுகள் ஒருவழிப்பாதை வேண்டும் என்று KTM தெரு வாசிகள் முயன்று வந்தது இந்த ஊருக்கு தெரியுயும், அந்த கோரிக்கையில் ஒரு வரியில் கூட பெரிய நெசவு தெருவை பற்றி சொல்லி இருப்பார்களா? அந்த அளவிற்கு கண்ணியம் காத்த தெரு KTM தெரு..

ஆரம்ப காலத்தில் KTM தெருவும் பெ.நெசவு தெருவைப்போல் விசாலமாகதான் இருந்தது நாளடைவில் ஆக்கரமிப்பால் சுருங்கிவிட்டது என்று கூறும் பெ.நெசவு ஜமாஅதார்களே, உங்களிடம் அதற்குரிய ஆதாரம் இருந்தால் கொண்டுவாருங்கள்,அது உண்மையாக இருந்தால் உங்கள் கண் முன்னாலேயே KTM தெரு வீட்டை இடிக்கிறோம். ஒருவேளை நீங்கள் நிரூபிக்க முடியாவிட்டால், நீங்களே முன் வந்து எங்கள் தெருவழியாக போக்குவரத்து போகலாம் என்று ஒப்புகொள்வீர்களா?

நகராட்சியில் ஒருவழிப்பாதை கொண்டுவர உரிமை இல்லாவிட்டாலும்,ஊர்மக்களின் ஒட்டுமொத்த விருப்பமான வசதியான,வழியை பரிந்துரைப்பதில் தவறு இல்லை. நகராட்சியின் கமிஷனர் அவர்கள் உண்மை நிலையை விளக்கி ஒருவழி பாதைக்கு உகந்தது பெ.நெசவுதெரு வழி தான் என்று பருந்துரை கடிதத்தை மாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுத்திருக்கும் பொழுது, ஊர்மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பிகிணங்க ஊர் தலைவி அவர்கள் ஊர்ஜமதார்கள் வழியை எற்றுகொண்டவராக பரிந்துரை சம்மத கையப்பொமிடுவதில் என்ன தயக்கமோ? சுனாமி வீடு பிரச்னையில் ஊர் ஜமாஅத் நிலைதான் என் நிலை என்று கூறிய அதே தலைவி அவர்கள் இன்று ஊர் ஜமாத்தோடு ஒத்துபோக தயக்கம் காட்டுவதின் பின்னணிதான் என்ன? தயவுசெய்து உண்மைக்காகவும் ஊருக்காகவும் ஒத்துபோகவும். அதுதான் நடுநிலைமைக்கு நல்லது. .

"இது நகர்மன்றம் தீர்மானிக்கக்கூடிய பிரச்சனை இல்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் - தாயிம்பள்ளி சார்பாக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது". என்று ஒரு சகோதரர் இணயதளத்தில் கருத்து கூறியிருக்கிறார் . அவர் அப்படி கூறியருப்பதுதான் விந்தையாக இருக்கிறது.

நகரமன்ற பொறுப்பு இல்லை என்பதால் ஊருக்கு அவசிய தேவையை பருந்துரைப்பது குற்றமா? அது வேடிக்கையா? நகரமன்ற உறுப்பினர்களை ஜமாத்துதான் தேர்ந்தெடுகிறது,அந்த ஜமாத்தே ஒப்புதல் கடிதமும் முத்திரையும் கொடுக்கும் பொழுது, அந்த வார்டு உறுப்பினர் கையெழுத்து இடுவது வேடிக்கையா?

நகராட்சியின் துணை தலைவர் அவர்கள் இல்லாத பாதையை மேற்கோள் காட்டி அதை ஒருவழிப்பாதையாக அமுல்படுத்தி தீர்மானம் போடுங்கள் என்று நகராட்சியில் வற்புறுத்தியதாக கேள்வி..

மனசாட்சி இல்லாமல் சொந்த ஜமாஅத், ஊர்ஜமாஅத் மக்களுக்கு எதிராக செயல்படும் அவரை ஆட்டிவைக்கும் பின்னணி சக்தி.. பலம் பொருந்திய சக்தி என்பதுமட்டும் தெரிகிறது.

{திமுக சார்பில் வெற்றிபெற்றதற்காக பெருமை பெற்ற கழக கட்சியாளர்களின் ஒருவனான நான், மேற்கண்ட செயலுக்காக இப்பொழுது வெட்கபடுகிறேன்.}

நெசவு தெரு கோமான் தெரு ஆகிவைகளை எந்த சம்பந்தமும் எடுக்காமல் ஒதிக்கியே வைக்கிறோம் என்பது மற்றுமொறு குற்றசாட்டு. ஒரு கண்ணியமிகு காயல் சகோதரன் இப்படி சொல்வதற்கு தயங்குவான். இப்படி சொல்வது நாமாகவே அவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ள முயற்சிக்கும் செயல் என்று தான் சொல்வேன். ஏனெனில்,ஒட்டு மொத்த காயல் சகோதரர்களையும் அண்ணன்,தம்பிகளகதான் நேசிக்கிறோம். சம்பந்தம் என்பது அவரவர் எண்ணத்தாலும்,குணத்தாலும்,குளத்தாலும்,குடும்பத்தாலும் அமையக்கூடியது.

ஒரு வீட்டிலுள்ள சொந்த அண்ணன் தம்பி,ராத்தா,தங்கை குள்ளேயே சம்பந்தம் எடுக்க மறுக்கிறார்கள். இதில் வலியுறுத்தலோ ,வற்புறுத்தலோ, கட்டாயமோ கட்டுபடுத்தாது. தயவு செய்து இருவேறு வாழ்க்கைமுறையை ஒப்பிட்டு பார்காதீர்கள்.அப்படி பார்க்கும் பொழுது சில நேரம் உயர்வு தாழ்வு என்ற கருத்து மேலோங்கி நிற்பதுபோல் தெரியும்,அதுவே உண்மையாகி விடாது.

எவரும்,எவருக்கும் இளைத்தவர்கள் அல்ல.எல்லோரும் நம் காயல்பதியின் உடன் பிறவா சகோதரர்களே!. எல்லா தெரு சகோதரர்களும்,எல்லோர்களிடமும் ஒரு சில காரியங்களுடன் ஒன்று படாவிட்டாலும், பல காரியங்களில் பண்புடனும்,அன்புடனும் அரவணைத்து செல்கின்ற காட்சியைத்தான் காண முடிகிறது. அக் காட்சியை கொச்சையாக்கி விடாதீர்கள். தயவு செய்து.

இருஜமாத்தையும் ஒற்றுமையக்கிவிடுவேன் ரயில் ஏறி வந்து என்னை சந்தித்தால்,என்று ஊரின் முதுகெலும்புக்கொப்பான மரியாதைக்குரிய முக்கியஸ்தர் ஆதங்கபட்டதாக கேள்வி. அவர்களின் ஆதங்கம் உண்மையாக இருந்தால்.உண்மைநிலைக்கேற்ப முடிவெடுங்களேன். அதற்குறிய எல்லா பலத்தையும் அல்லாஹ் உங்களுக்கு தந்துதனே இருக்கிறான்.

உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற நோக்கம் எதுவாக இருந்தாலும் {அவ் விஷியதிர்க்குள் செல்ல விரும்பவில்லை} அந்த நோக்கத்தை சற்று நகர்த்திவிட்டு உள்ளங்கை நெல்லிக்கனியாய் உண்மை உங்கள் முன் நிற்கும் பொழுது,

உண்மைக்காகவும், ஊர்மக்களுக்காகவும், ஓரிறைவன் நம்மை உற்றுநோக்கி கொண்டே இருக்கிறான் என்ற இறை உணர்வுக்காகவும் உங்கள் இடத்தில் இருந்துகொண்டே ஒற்றுமையை நிலைநாட்டி ஊர்மக்கள் ஒட்டுமொத்த விருப்பத்தை நிறைவேற்றினால், உள்ளன்போடு ஊர்மக்கள் உங்களை நன்றியுடன் கண்ணியபடுத்துவார்கள்.

நான் இறுதியாக சொல்ல வருவது யாதெனில்.

தனி கவ்ரவமும்,தன்னலமும் ஒரு காலத்தில் பார்த்ததால் தான் நாம் ரயில்வே நிலையத்தை இழந்தோம். அக் கதை வேறு வடிவத்தில் தொடராவண்ணம், ஊர் மக்கள் நலனுக்காக,நாம் சிறிது தியாகம் செய்வோம் என்ற பரந்த எண்ணத்தில், எந்த கசப்பான காரியம் நடந்திருந்தாலும்அதை காயல்பதி மக்களுக்காக மறந்து விட்டோம்,.

நமதூர் நலனுக்காக எங்கள் தெருவை உபயோகித்து கொள்ளலாம் என்ற ஒப்புதலை தருகிறோம் என்கின்ற இனிய செய்திக்காக காயல் நகர மக்கள் காத்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவது பெரிய நெசவு ஜமாத்தார்களின் கையில் தான் இருக்கிறது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.


posted by: Mohamed Adam Sultan (kayalpatnam) on 30 January 2012
IP: 59.*.*.* India | Comment Reference Number: 20441

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. ஒற்றுமையை சீர் குலைக்கும் தேவைற்ற தலைஎங்கம்

இந்த தலைஎங்கத்தின் மூலம் என்ன சொல்ல வருக்ரீர்கள்?நண்பர் md ali சொன்னது போல் பிடிவாதமாக இருப்பவர்களிடம் எப்படி சமரசம் செய்வது? அவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்கள் எப்படி எழுப்புவது?

தலைஎங்கம் எழுதும் உரிமை உங்களுக்கு இருக்கிறது அதற்காக அடுத்தவர் மனதை புண் படுத்தும் படி எழுதும் உரிமை உங்களுக்கு இல்லை, அதுவும் ஒரு ஒட்டு மொத்த ஜமாத்தர்களின் உணர்வோடு விளையாடி இருக்கிறீர்கள்.தாயும் பள்ளியின் கை எழுத்து மனு ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

வாசகர்களின் கருத்துக்களை அடுத்தவர் மனம் புண் படும் என்பதிற்காக தணிக்கை செய்யும் moderator ஒரு ஜமாத்தின் ஒட்டு மொத்த மக்களின் மனதை புண் படுத்தும் இந்த கட்டுரையை எப்படி தணிக்கை செய்யாமல் இருந்தீர்கள் ,யாரை திருப்தி படுத்த இந்த செயல்.கை எழுத்து வேட்டை என்பது இப்போது ஒன்றும் புதிது இல்லையே?உலகின் பல கோரிக்கைகளுக்காக கை எழுத்து வேட்டை நடப்பது கட்டுரையாளருக்கு தெரியாதா? அல்லது மறந்து விட்டாரா? தாயும் பள்ளியின் இந்த கை எழுத்து மனு தான் கலெக்டர் ஒரு வழி பாதைக்கு ஆணை பிறப்பிக்க பூனைக்கு மணி கட்டியதாக இருந்தது என்பதை கட்டுரையாளர் மறந்து விட்டார் அல்லது யாருக்காகவோ மறைத்து விட்டார்,ஒரு வழி பாதை விசயத்தில் யாருக்கோ புகழ் சேர்க்கும் நோக்கில் தாயும் பள்ளியை பலி கடா ஆக்கி விட்டார் கட்டுரையாளர்

தியாக உள்ளம் படைத்த தாயும் பள்ளி ஜமாத்தார் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தார் போலும் நீங்கள் யாருக்காகவோ சிங்கி அடித்து விட்டு போங்கள் அனால் அந்த போக்கில் கோமான் தெரு மற்றும் நெசவு தெரு ஜமாஅத்துக்கும் இந்த ஊருக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை குழைத்து விட்டு போகாதீர்கள்

ஆகா மொத்தத்தில் இது தேவை இல்லாத நேரத்தில் தேவை இல்லாத தலைஎங்கம்,கடைசியாக moderatorku ஓன்று சொல்லிக்கொள்கிறேன் தயவு செய்து தாயும் பள்ளி ஜமாத்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் ,தாயும் பள்ளியின் கை எழுத்து மனு ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை இக்கட்டுரைளிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

நட்புடன்
த. ஷைக் அப்பாஸ் பைசல்

Administrator: Comment edited


posted by: shaik abbas faisal .d. (kayalpatnam) on 30 January 2012
IP: 180.*.*.* India | Comment Reference Number: 20442

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:எங்கே செல்கிறது இந்த ஒரு ...

ஆக்கிரமிப்பு எங்கு இருந்தாலும் அகற்றவேண்டும் என்று உறுதியாக இருக்கும் Mohamed Adam சுல்தான் அவர்களே, உண்மைக்கு மாறாக ஒரு புகாரை ஒரு போதும் சொல்லும் பழக்கம் எங்களுக்கு இல்லை.

சென்ற மாதம் 20 ம் தேதி நமதூருக்கு வருகை தந்து ஒரு வழிபாதைக்கு ஆய்வு செய்த டி.எஸ்.பி. திரு.ஞான சேஹரன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் திரு.சேகர், ஆறுமுகநேரி காவல் ஆய்வாலர் திரு.பார்த்திபன், ஆர்.டி.ஓ. S.I திரு.K.சந்திர சேகர், காயல்பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி திரு.செல்வலிங்கம், காயல்பட்டணம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணையா, நகராட்சி பொறியாளர் திரு.செல்வமணி, சர்வேயர் திரு.கந்தப்பன் ஆகியோர்கள் ஊரின் சில பகுதிகளை ஆக்கிரமிப்பு என்று கூறிய அதிகாரிகள் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள். அத்துடன் கே.டி.எம்.தெருவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமிப்பு என்று கூறிய அதிகாரிகள் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள். அதனை நமது ஊர் மற்றொரு இணையத்தளம் மூலம் அறியலாம்.

(http://www.kayaltoday.com/show.aspx?tNewsId=2156 )

தேவைபட்டால் தற்போது பயன்படுத்தி வரும் State Highway யில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று "குறி "யிட்ட இடத்தையும் பாருங்கள்.

ஆனால் உங்கள் ஜமாத்தினரோ உண்மைக்கு மாறாக நெசவு தெரு வழியாக பேரூந்துகள் ஒரு மாதத்திற்கு மேல் சென்றது என்று சொல்லி ஊரின் பல அமைப்பு, ஜமாத்தினரையும் மதிமயக்கி கையெழத்து வாங்கியது மோசமான முன் உதாரணமில்லையா?


posted by: Kaleel Rahman (Chennai) on 30 January 2012
IP: 124.*.*.* India | Comment Reference Number: 20443

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved