KFT Websites kayalpatnam.com kayalpattinam.com kayalsky.com topperstalk.com kayal.tv kayaljobs.com
Since 1998 - Kayal on the Web - Your home away from home SDPI - DCW - TNPCB - Agitation - Chennai - August 21,2015
Current Kayalpatnam Time
6:04:36 PM
Saturday | 29 August 2015 | Dul Qida 15, 1436
எழுத்து மேடை
Previous ColumnNext Column
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Column ID # 71
#KOTWEM71
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 29, 2012
கண்களை சற்றே மூடிட வேண்டும்!

This page has been viewed 1088 times | View Comments (9) <> Post Your Comment
(Comments awaiting approval - 0; Comments not approved - 1)
click here to post your comment using facebook{ facebook comments so far}

கண்களை சற்றே மூடிட வேண்டும்.
காட்சிகள் எல்லாம் மறைந்திட வேண்டும்.
கயமையும் பொய்மையும் நாட்டியம் ஆடுது
நீதியும் நேர்மையும் கனவாய்ப் போனது.

ஏறுது பாரம் பேப்பரைப் படித்தால்
இறங்கிடுமா வெறும் கண்ணீர் வடித்தால்?
இதுதான் விதியென அனைவரும் இருந்தால்
திருந்திடுமோ நம் பாரத தேசம்?

மகளின் கற்பை திருடிய தகப்பன்
மருமகள் கழுத்தை அறுத்தான் மாமன்
ஓடும் காரிலும் பஸ்சிலும் காமம்
ஒன்னரை வயது பிஞ்சிடம் வன்மம்.

ஏறுது பாரம் பேப்பரைப் படித்தால்
இறங்கிடுமோ வெறும் கண்ணீர் வடித்தால்?

வயல்வெளி வரப்பில் வாடும் பயிர்கள்
விதைப்பவன் கழுத்தில் ஆடும் கயிறுகள்
இருந்தும் நீர்தர மறுத்திடும் அரசுகள்
இந்தியா ஒன்றென முழக்கும் முரசுகள் !

கண்களை சற்றே மூடிட வேண்டும்
காட்சிகள் எல்லாம் மறைந்திட வேண்டும்.

பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சாவு
பன்றிக் காய்ச்சலில் பலபேர் காவு
மாத்திரை மருந்திலும் கலப்படம் பாரு
மருத்துவ மனைகளில் லஞ்சம் ஜோரு!

கயமையும் பொய்மையும் நாட்டியம் ஆடுது
நீதியும் நேர்மையும் கனவாய்ப் போனது!

பள்ளியை இடித்தவன் கெத்தா நடக்கிறான்
பாவம் முஸ்லிம் ஜெயிலில் கிடக்கிறான்
மோடியும் கேடியும் முதல்வர் ஆகிறான்
கோடிகள் சேர்த்தே கோட்டையை ஆளுறான்.

கண்களை சற்றே மூடிட வேண்டும்
காட்சிகள் எல்லாம் மறைந்திட வேண்டும்!

அன்னைத் தமிழகம் இருட்டில் தவிக்குது
அம்மா ஆட்சியில் அவலம் தொடருது
மதுக்கடை எங்கும் கூட்டம் வழியுது
மந்திரி மார்களின் பாக்கட் நிறையுது

ஏறுது பாரம் பேப்பரைப் படித்தால்
இறங்கிடுமோ வெறும் கண்ணீர் வடித்தால்?

பெட்ரோல் விலையோ அடிக்கடி எகிறுது
பாரத தேவியின் தலைமுடி கருகுது
சினிமாக் காரன் சில்லரை பார்க்கிறான்
சில்லரை வியாபாரியோ கல்லறை தேடுறான்!

கண்களை சற்றே மூடிட வேண்டும்
காட்சிகள் எல்லாம் மறைந்திட வேண்டும்!

ஆலையின் அமிலம் ஆழியில் கலக்குது
அலைநுரை சிவப்பில் மீன்கள் மிதக்குது
இதிலொரு கூட்டம் மக்களை ஏய்க்குது
இவருக்கு மட்டும் பணமரம் காய்க்குது

இதுதான் விதியென அனைவரும் இருந்தால்
திருந்திடுமோ நம் பாரத தேசம்?

ஷரீஅத் சட்டம் கொணர்ந்திட வேண்டும்
சத்தியம் என்றும் ஜெயித்திட வேண்டும்
ஒருதலைச் சட்டம் உடைந்திட வேண்டும்
தறுதலைக் கூட்டம் திருந்திட வேண்டும்.

கண்களை நாமும் திறந்திட வேண்டும்
கனவுகள் மெய்ப்பட உழைத்திட வேண்டும்!

Previous ColumnNext Column
Click here to post your comment about this column >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
(Registration not required. Moderated; displayed after approval)
>> Go to Last Comment
1. Re:...அரசுகளின் கையாலாகத்தனம்,
posted by: Palappa Muhiyyadheen Abdul Kader, (Chennai(Mannady)) on 29 December 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24812

அஸ்ஸலாமு அலைக்கும் புரட்சிக் கவிஞர் கவி மகன் காதர் அவர்களே!

தங்களின் புரட்சிக் கவி வாயிலாக அரசுகளின் கையாலாகத்தனத்தை எடுத்தியம்பி எங்களையெல்லாம் ஏக்க பெருமூச்சிட்டு கண்ணீர்க் கரைய வைத்து விட்டீர்.உங்கள் கவிப் புலமையை மேலும் மெருகூட்டி சிம்மாசனப் பேராசைப் பெரு மக்கள் கூனிக் குறுகி அவமானத்தால் அஞ்சியவர்களாக ஆக்சிஜன் காற்றை நுகர முடியாமல் தத்தளிக்க வேண்டும்.அல்லது இதற்கு மாற்றாக மக்கள் புரட்சி ஏற்பட்டு மானங் கெட்ட ஆட்சியாளர்களும்,அசூசையான அசுரர்களும் இந்த நாட்டை விட்டு விரண்டோடி விரைவில் சத்திய ஷரீஅத் ஆட்சி மலரும் நாள் வெகு தூரத்தில் இருக்கக்கூடாது என இரு கரம் ஏந்தி இறைவனைப் பிரார்த்தித்து பயகம்பர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஆசியையும் வேண்டி அன்னாரின் தோழர்கள்(ரலியல்லாஹு அன்ஹும்),இமாம்கள்(ரலியல்லாஹு அன்ஹும்),இறை நேசச் செல்வர்களின்(ரலியல்லாஹு அன்ஹும்) துஆவையும் வேண்டி நிற்ப்பதன் மூலம் வல்ல இறைவன் மாசு மறுவற்ற மக்களுக்கு நிம்மதியையும்,நீதியையும் நிலை நிருத்திடுவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் எனும் இறைஞ்சலுடன் நிறுத்துகின்றேன் வஸ்ஸலாம்.

இப்படிக்கு
பாலப்பா முஹிய்யதீன் அப்துல் காதர்,
மண்ணடி,
சென்னை
தொடர்புக்கு-9751501712,044- 25266705 ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. உண்மை உரைத்தீர்
posted by: Mohamed Abdul Cader (Saudi Arabia) on 29 December 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24815

காதர் காக்கா, நான் உங்களின் கவிதையின் அன்பு ரசிகன்.

உண்மையை சொன்னீர், இன்னும் உங்களிடமிருந்து புதுக் கவிதையையும் எதிர்ப்பார்க்கிறேன். தொடருட்டும் உங்களின் கவிப்பணி, தந்தைக்கு தப்பாமல் பிறந்த மகன் நீ.

உன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக. ஆனால் ஒன்று மட்டும் நிஜம் தங்கள் தகப்பனாருக்கு கவிதையில் இணை அவர்கள் மட்டுமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) on 29 December 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24816

அஸ்ஸலாமு அலைக்கும். குல் ஜாஅல் ஹக்கு வ ஜஹகல் பாதிழு இன்னல் பாதில காண ஜஹூகா . மாஷாஅல்லாஹ் ! மிகவும் அருமையான கட்டுரை ..பாராட்டுக்கள் ........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. சற்றே கண்ணை மூடிட வேண்டும்
posted by: NIZAR (KAYALPATNAM) on 30 December 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 24820

தொடர்ந்து கண்ணை மூடிவர சொன்ன கவிஞ்சர் இறுதியில் கண்களை திறக்கசொல்லி இருக்கிறார். கவிமகன் தனக்குரிய பாணியில் இன்றைய நாட்டு நடப்புகளை புட்டு புட்டு வைத்து இருக்கிறார்.

இதனை குற்றங்களுக்கும் தீர்வு இஸ்லாமிய சட்டங்களே என்பதை இன்றைய அரசியல் வாதிகளை விட மாற்று மத சகோதரர்கள் விளங்கி வருகிறார்கள். தூக்குதண்டனை என்ற ஒன்றே இருக்க கூடாது கூவி வந்த அரசியல்வாதிகள், பொதுநல அமைப்பை சார்ந்தவர்கள் இன்று அப்படியே மாறி கற்பழிப்பு மனித மிருகங்கள் மீது தூக்கை உடனே போடவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் என்றால் பாருங்களேன்.

இன்னும் பூரண மதுவிலக்கு கேட்கிறார்கள் என்றால் பாருங்களேன். கவிமகன் அவர்கள் இந்த கவிதையில் மின்வெட்டு, சில்லறை வணிகத்தில் அன்னியர் வருகை என அனைத்தையும் அற்புதமாக விளக்கி உள்ளார் என்றால் அது மிகையாகாது.

வரும் காலங்களில் இஸ்லாமிய சட்டங்கள் இஸ்லாமியர்கள் கேட்காமலே நடைமுறை படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. தரமான கவிதைகளை தொடர்ந்து தரும் கவிமகனுக்கு வாழ்த்துக்கள், கவிதையில் அனைத்தும் திகட்டாத வரிகள், அணைத்து செய்திகளும் ஒரு தட்டில் இருந்தது போல் உணர முடிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: suaidiya buhari (chennai) on 30 December 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24821

அருமையுளும் அருமை, காலத்துக்கு யாற்ற கவிதையை கொடுத்த "கவிமகனுக்கு" நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. அருமை.. அருமை.... :...
posted by: subhan n.m.peer mohamed (abu dhabi) on 30 December 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24822

அருமை.. அருமை.... தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி வாழ்த்துக்கள் ..

சுபான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. மிக அருமை !
posted by: Raiz (Sydney) on 30 December 2012
IP: 211.*.*.* Australia | Comment Reference Number: 24823

அருமை அருமை!

மயில் இறகை போல் மனதை வருடும் கவிதை ! பின் , துயில் கொண்ட மனதை தூங்காதே தம்பி தூங்காதே என தட்டி எழுப்பும் கவிதை!

வாசித்த பின்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது கவி மகனின் கவி !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:..மனதார பாராட்டுகிறேன்..
posted by: OMER ANAS (DOHA QATAR.) on 31 December 2012
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 24825

எனதருமை தம்பியின் கவிதைகள் வெறும்
காற்றில் கலப்பவைகள் அல்ல!
நல்ல மனிதர்களின் உயிர்
மூச்சில் கலப்பவைகள்!

தம்பி உன் கவித்திறனை
மனதார, மனம் திறந்து பாராட்டுகிறேன்!

வாழ்த்துக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:...English Version
posted by: Ibrahim Ibn Nowshad (Bangalore) on 31 December 2012
IP: 220.*.*.* India | Comment Reference Number: 24827

Nice.. Masha Allah..

Can anyone do a favor to translate it into English? I need to blog this.

Mail me @ ibnunowshad@yahoo.co.uk


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
>> Go to First Comment
(Registration not required. Moderated; displayed after approval)
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
Click here to post your comment about this column >>
FACEBOOK COMMENTS | Click here to go to Kayalpatnam.com Comments >>
TWITTER COMMENTS | Click here to go to Kayalpatnam.com Comments >>
Advertisement
DanubeNew Prince Jewellery
Cathedral Road LKS Gold ParadiseAKM Jewellers
Thai Nadu Tours and TravelsABS Constructions
Fathima JewellersDarbar Designs
Wavoo JewellersDubai Gold
Aynaz Construction Advertisement
Google Advertisement


>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Prayer Timings
Hijri Calendar
Sunrise/Sunset
Moonrise/Moonset
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2015. The Kayal First Trust. All Rights Reserved