Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:42:17 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
காயல் வரலாறு
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Next Article
ஆக்கம் எண் (ID #) 1
#KOTWART071
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 18, 2013
மண்ணறை கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு! (பாகம்-1)
இந்த பக்கம் 5828 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மண்ணறை கல்வெட்டுகள் வரலாற்று தொடர்பான ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. ஒரு பகுதியின் தொன்மை, அப்பகுதியில் வாழ்ந்தவர்கள் யார், அவர்களின் பூர்வீகம் என்ன போன்ற அரிய தகவல்களை கல்வெட்டுகள் வழங்குகின்றன.

காயல்பட்டினத்தின் கப்ருஸ்தான்களில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் இருந்தன. போதிய பராமரிப்பு இல்லாமை, அதுகுறித்த ஆர்வம் குறைவு போன்ற காரணங்களினால் - தற்போது அவற்றில் ஒரு சிலவே மிஞ்சியுள்ளன. இருப்பினும், காயல்பட்டினத்தில் காணப்படும் கல்வெட்டுகளை - வரலாற்று துறை வல்லுனர்கள் அவ்வப்போது, ஆய்வு செய்து, அவை கூறும் தகவல்களை பதிவாக்கியுள்ளார்கள்.

அவற்றை - மூல ஆவணங்களில் இருந்து - காயல்பட்டணம்.காம் அவ்வப்போது தொடராக தர உள்ளது.

துவக்கமாக - A TOPOGRAPHICAL LIST OF ARABIC, PERSIAN AND URDU INSCRIPTIONS IN SOUTH INDIA என்ற புத்தகத்தில் உள்ள தகவல்களை பார்ப்போம். இந்த புத்தகத்தை ஜியாவுதீன் ஏ.தேசாய் தொகுத்துள்ளார். INDIAN COUNCIL OF HISTORICAL RESEARCH கண்காணிப்பில் இப்புத்தகம் 1989 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அந்த புத்தகத்தில் சுமார் 1600 கல்வெட்டுகளின் விபரம் அடங்கியுள்ளது. காயல்பட்டினத்தில் உள்ள 22 கல்வெட்டுகளில் காணப்பட்ட விபரங்கள் - அப்புத்தகத்தின் பக்கங்கள் 93, 94, 95 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. இத்தகவல்கள் அனைத்தையும் - இப்புத்தகம், ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY (ARIE) மற்றும் EPIGRAPHIA INDICA ARABIC AND PERSIAN SUPPLEMENT (EIAPS) என்ற புத்தகங்களின் பல்வேறு பதிப்புகளில் இருந்து தொகுத்துள்ளது.

(1)

இடம்: பெரியப்பள்ளி வாயிலில் உள்ள தூண் ஒன்றில்
அரசர் குலம்: மதுரா பிரதேச சுல்தான்கள்?
அரசர்: முஹம்மத் ஜமாலுதீன்
தேதி: ஹிஜ்ரி 737; கிருஸ்துவ ஆண்டு 1336 - 37
மொழி: அரபி
மூலக்கருத்து: சுல்தான் முஹம்மத் ஜமாலுதீன் ஜும்ஆ பள்ளியை கட்டியதாகவும், அவரின் மரணத்திற்கு பிறகு இப்பள்ளியின் கட்டுமானங்கள் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டில் - முடிந்ததாகவும் தெரிவிக்கிறது.
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 375


(2)

இடம்: சிறுப்பள்ளியில் உள்ள அறை ஒன்றில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 811, ஷவ்வால் 4, புதன்கிழமை இரவு; கிருஸ்துவ ஆண்டு 1409 பிப்ரவரி 20
மொழி: அரபி
மூலக்கருத்து: அப்துல் மாலிக் என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் சய்யித் அஹமத் என்பவரின் மகன்; சய்யித் அஹமத் - சதுதீன் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 318; 1949-50, B, 380


(3)

இடம்: சிறுபள்ளியில் உள்ள அறை ஒன்றில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 812, ரமழான் 9; கிருஸ்துவ ஆண்டு 1410 ஜனவரி 15
மொழி: அரபி
மூலக்கருத்து: மௌலானா சித்திக் முசிலி(?) என்பவரின் மரணம் குறித்த தகவல்.இவர் நைனா(?) என்பவரின் மகன்; நைனா(?) - முஹம்மத் அல்-இராகி என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 317


(4)

இடம்: கற்புடையார் பள்ளிக்கு வடக்கே 400 மீட்டர் தூரத்தில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 847, ஜமாதுல் ஆஹிர் 14, செவ்வாய் இரவு; கிருஸ்துவ ஆண்டு 1443 அக்டோபர் 9
மொழி: அரபி
மூலக்கருத்து: சேக் அபூபக்கர் என்ற கடலோடியின் மரணம் குறித்த தகவல். இவர் அஹமத் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 391


(5)

இடம்: சிறுப்பள்ளியில் இருந்த ஒரு தியாகியின் மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 866 (?), ஜமாதுல் ஆஹிர் 17, ஞாயிறு; கிருஸ்துவ ஆண்டு 1462 மார்ச் 19
மொழி: அரபி
மூலக்கருத்து: சய்யித் அஹமத் என்ற கடலோடியின் மரணம் குறித்த தகவல். இவர் சாதுல்லாஹ் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 378


(6)

இடம்: சிறுப்பள்ளியில் இருந்த ஒரு தியாகியின் மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 883, ரபியுல் ஆஹிர் 22, புதன்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1478 ஜூன் 23
மொழி: அரபி
மூலக்கருத்து: சேக் அபூபக்கர் என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் கைரோவை சார்ந்த உதுமான் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 379


(7)

இடம்: நைனார் முஹம்மத் தர்காவில், நடைமேடையில் இருந்த பலகை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 887, ஜமாதுல் அவ்வல், திங்கட்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1482 ஜூன் - ஜூலை
மொழி: அரபி
மூலக்கருத்து: பழுதடைந்திருந்தது. (பெயர் தெளிவில்லை) என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் மரைக்காயர் என்பவரின் மகன்; சம்சுதீன் என்பவரின் பேரன்; சம்சுதீன், நைனா மரைக்காயர் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 312


(8)

இடம்: சிறுப்பள்ளியின் வழிநடைபாதையின் அருகே இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 901, ஜமாதுல் ஆஹிர் 28; கிருஸ்துவ ஆண்டு 1496 மார்ச் 14
மொழி: அரபி
மூலக்கருத்து: பெருந்தலைவர் (ரைஸ்) சேக் அலி என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் ஜமாலுதீன் என்பவரின் மகன்; சய்யித் அஹமத் என்பவரின் பேரன்; ஜமாலுதீன் என்பவரின் பணியால்; இவர் சய்யித் அஹமத் என்பவரின் மகன், மலசளி அல்-மாபரி சத்ருத்தீன் மாபரி என்பவரின் வழித்தோன்றல்
மூலப்புத்தகம்: EIAPS, 1951 & 1952, pp. 30-31, pl. XIIa; ARIE, 1971-72, D, 135; 1947-48, B, 105


(9)

இடம்: ஜாமிஇ கபீர் பள்ளிக்கு மேற்கில் உள்ள மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 905, ரபியுல் ஆஹிர் 22, புதன்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1499 நவம்பர் 26
மொழி: அரபி
மூலக்கருத்து: கதீஜா என்பவரின் மரணம் குறித்த தகவல். இவர் முஹம்மத் என்பவரின் மகள்; முஹம்மத் - சேக் அபுபக்கர் என்பவரின் மகன்; சேக் அபூபக்கர் - சேக் உதுமான் என்பவரின் மகன்; சேக் உதுமான் - முஹம்மத் என்பவரின் மகன்; முஹம்மத் - இப்ராஹிம் என்பவரின் மகன்; இப்ராஹிம் - கைரோவை சார்ந்த சதகத் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 308


(10)

இடம்: கற்புடையார் பள்ளிக்கு அருகே உள்ள மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: கிருஸ்துவ நூற்றாண்டு 15 வாக்கில்
மொழி: அரபி
மூலக்கருத்து: முழுமையாக இல்லை. ஃபாத்திமா நாக்யார் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் அஹமத் என்பவரின் மகள்; அஹமத் - கடலோடி சேக் அபூபக்கர் என்பவரின் மகன்; சேக் அபூபக்கர் - சய்யித் அஹமத் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 387


(11)

இடம்: மரைக்கார் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 912, ஜமாதுல் ஆஹிர் 1, ஞாயிறு இரவு; கிருஸ்துவ ஆண்டு 1506 அக்டோபர் 19
மொழி: அரபி
மூலக்கருத்து: கற்றறிந்த, தேர்ச்சியடைந்த சேக் நூஹு என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் கற்றறிந்த, குறைபாடற்ற சேக் சய்யித் அஹமத் என்பவரின் மகன்; சேக் சய்யித் அஹமத் - அல்லாமா நூஹு அல்-பக்கரி என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 314


(12)

இடம்: பெரியப்பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 918, ரஜப்; கிருஸ்துவ ஆண்டு 1512 செப்டம்பர் - அக்டோபர்
மொழி: அரபி
மூலக்கருத்து: ஒரு பெண்ணின் (பெயர் அழிந்துவிட்டது) மரணம் குறித்த தகவல்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 374


(13)

இடம்: மரைக்கார் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 928, துல்கைதா 25, புதன்கிழமை இரவு ; கிருஸ்துவ ஆண்டு 1522 அக்டோபர் 16
மொழி: அரபி
மூலக்கருத்து: ஹாமியா என பரவலாக அழைக்கப்பட்ட சேக் மய்யா என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் ஃபாதிலியார் சேக் நைனா என்பவரின் மகன்; ஃபாதிலியார் சேக் நைனா - சேக் மையா அல்-மாபரி என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 310


(14)

இடம்: ஒரு பள்ளியில் இருந்த மண்ணறை (எந்த பள்ளி என குறிப்பிடப்படவில்லை)
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 857, ஜமாதுல் ஆஹிர் 9, புதன்கிழமை மதியம் ; கிருஸ்துவ ஆண்டு 1550 ஜூன் 25
மொழி: அரபி
மூலக்கருத்து: அப்துல் கஃப்பார் என்பவரின் மரணம் குறித்த தகவல்; அப்துல் கஃப்பார் - அலி என்பவரின் மகன்; அலி - ஜமாலுதீன் என்பவரின் மகன்; ஜமாலுதீன் - ஷிஹாபுதீன் சய்யீதீ அஹமத் என்பவரின் மகன்; ஷிஹாபுதீன் சய்யீதீ அஹமத் - நியாயமான அமீர் ஜமாலுதீன் என்பவரின் மகன்; ஜமாலுதீன் - சய்யீதீ அஹமத் சதுதீன் அல்-மாபரி என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1949-50, B, 376


(15)

இடம்: கொடிமரப்பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 987, ஜமாதுல் அவ்வல் 4, புதன்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1579 ஜூலை 29
மொழி: அரபி
மூலக்கருத்து:
மூலப்புத்தகம்: கற்றறிந்த, இறையச்சம் கொண்ட மகன் சேக் அப்துல்லாஹ் மரைக்காயர் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் - சேக் உதுமான் பரிக்கார் என்பவரின் மகன்; சேக் உதுமான் ஃபரிக்கார் - சேக் அலி ஃபரிக்கார் என்பவரின் மகன்


(16)

இடம்: பெரியப்பள்ளிக்கு வடக்கே இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 989, ரபியுல் ஆஹிர் 17, ஞாயிற்று கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1581 மே 21
மொழி: அரபி
மூலக்கருத்து: பெருந்தலைவர் (ரைஸ்) மௌலானா அப்துல் கஃப்பார் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் - சய்யீதி அஹமத் என்பவரின் மகன்; சய்யீதி அஹமத் - சேக் அப்துல்லாஹ் என்பவரின் மகன்; சேக் அப்துல்லாஹ் - சயீத் அஹமத் என்பவரின் மகன்; சயீத் அஹமத் - ஜமாலுதீன் என்பவரின் மகன்; ஜமாலுதீன் - யூசுப் என்பவரின் மகன்; யூசுப் - ஹசனுத்தீன் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: EIAPS, 1951 & 1952, pp. 31-32, pl. XIIb; ARIE, 1947-48, B, 103


(17)

இடம்: கற்புடையார் பள்ளியின் நுழைவாயிலுக்கு வலது புறம்
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 9xx, ஷாபான், திங்கட்கிழமை;
மொழி: அரபி
மூலக்கருத்து: தகவல்கள் அழிந்துள்ளது. ஒருவரின் மரணம் குறித்த தகவல்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 313


(18)

இடம்: குட்டியார் பள்ளிக்கு கிழக்கே உள்ள மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: கிருஸ்துவ நூற்றாண்டு 16 வாக்கில்
மொழி: அரபி
மூலக்கருத்து: சிலவற்றை தவிர பல தகவல்கள் அழிந்துள்ளது. தேதி அழிந்துள்ளது. சேக் முஹம்மத் என்ற (பெயர் தெளிவில்லை) என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் ஃபாதிலன் முதலியார் என்பவரின் மகன்; ஃபாதிலன் முதலியார், நைனார் சேக் முஹம்மத் என்பவரின் மகன்; நைனார் சேக் முஹம்மத் - மய்யா சம்சுதீன் என்பவரின் மகன்; ....; இவர் அஹமத் என்பவரின் மகன்; அஹமத் - சேக் பரீதுத்தீன் என்பவரின் மகன்; சேக் பரீதுத்தீன் - (பெயர் தெளிவில்லை) என்பவரின் மகன்; மேலும் இறந்தவரை, கற்றறிந்தவர், தேர்ச்சியடைந்தவர், குறைப்பாடற்றவர், முகமரியாதவர்கள் மற்றும் ஏழைகளை நேசிப்பவர் என கூறுகிறது.
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 309


(19)

இடம்: ஜாமிஇ கபீர் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 1211, ரபியுல் அவ்வல் 2, திங்கட்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1796 செப்டம்பர் 5
மொழி: அரபி
மூலக்கருத்து: சயீத் முஹ்யுதீன் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் சயீத் அப்துல் காதிர் என்பவரின் மகன்; சயீத் அப்துல் காதிர் - மஹ்மூத் என்பவரின் மகன்; மஹ்மூத் - சயீத் அஹமத் என்பவரின் மகன்; சயீத் அஹமத் - அலி என்பவரின் மகன்; அலி - மஹ்மூத் என்பவரின் மகன்; மஹ்மூத் - அஹ்மத் என்பவரின் மகன்; அஹமத் - அலி என்பவரின் மகன்; அலி - ஹுசைன் என்பவரின் மகன்; ஹுசைன் - பக்ருதீன் என்பவரின் மகன்; பக்ருதீன் - நூருதீன் என்பவரின் மகன்; அல்-வலி, அஸ்-சுல்தான் (தலைவர், சுல்தான்) என இவரை வர்ணிக்கிறது
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 307


(20)

இடம்: சிறுப்பள்ளியின் ஒரு அறையில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: கிருஸ்துவ நூற்றாண்டு 18 வாக்கில்
மொழி: அரபி
மூலக்கருத்து: முழுமையாக இல்லை. பீபி மரியம் என்பவரின் புனித உயிர்த்துறவு குறித்து குறிப்பிடுகிறது. இவர் - சயீத் அஹமத் முதலியார் என்பவரின் மகள்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 319


(21)

இடம்: மரைக்கார் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 1226, ரபியுல் ஆஹிர் 10, செவ்வாய்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1811 மே 4
மொழி: அரபி
மூலக்கருத்து: வணிகர் சுலைமான் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் பிர்ஹனைன் என்பவரின் மகன்; பிர்ஹனைன் - அஹமத் அல்-கபீர் என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 315


(22)

இடம்: மரைக்கார் பள்ளியில் இருந்த மண்ணறை
அரசர் குலம்:
அரசர்:
தேதி: ஹிஜ்ரி 1229, துல்கைதா 16, வியாழக்கிழமை; கிருஸ்துவ ஆண்டு 1814 அக்டோபர் 30
மொழி: அரபி
மூலக்கருத்து: பழுதடைந்துள்ளது. வணிகர் முஹம்மத் என்பவரின் மரணம் குறித்த தகவல்; இவர் - வணிகர் (தெளிவில்லை) நைனா என்பவரின் மகன்; (தெளிவில்லை) நைனா - வணிகர் (தெளிவில்லை) நைனா என்பவரின் மகன்
மூலப்புத்தகம்: ARIE, 1976-77, D, 316


[Administrator: படம் இணைக்கப்பட்டது @ 6:05 pm / 22.12.2013]

Next Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வெறும் 700 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதுதானா நம் ஊர்?
posted by: V D SADAK THAMBY (Guangzhou,China) on 19 December 2013
IP: 113.*.*.* China | Comment Reference Number: 32095

மிகுதமான கல்வெட்டுக்களை பார்க்கும்போது ,மிகப்ப பழைமையானது 13ம் நூற்றாண்டில் உள்ள கல்வெட்டுகளாக தெரிகிறது.அப்படியானால் வெறும் 700 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதுதானா நம் ஊர்? சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஊர் காயல்பட்டணம் என கேள்விப்பட்டிருக்கிறோமே!

இரட்டைகுளத்துப்பள்ளியும் மிகவும் பழமையானதுதான். அதன் கல் வெட்டு பற்றி தகவல் இல்லை.காட்டு மொகுதூம் பள்ளிவாசலும் இதேபோன்றுதான்.

உங்கள் 2ஆம் பாகத்தில் அதிக தகவல் எதிர்பார்க்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 19 December 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32098

அஸ்ஸலாமு அழைக்கும்

உலகத்தின் பழமையான வானிக மையம் இந்த காயல் முன்பு உலகத்தின் உள்ள வர்த்தக மயைங்களுள் காயளும் ஒன்று . தமிழர்களும் , அரபு , பாசிக , யவன் ,போட்கிகள் ,டச்சு ,ரோம் ,இன்னும் பல மக்கள் இங்கு வியாபாரம் செய்தனர் உலகின் ஆதி மனிதன் ஆதம் காலம் தொட்டு இங்கு மனித இனம் இங்கு உள்ளது .

முஹமம்து ( ஸல் ) அவைகளுடைய காலத்தில் தான் அபூபக்கர் கலிபா அவர்களது வம்சத்தினர் தற்போதைய காயல் பகுதிஇல் நிரந்தர குடி அமர்தனர் அதற்கு முன்பு இம் மக்கள் வர்த்தக சய்து வந்தனர் அதற்கு முன்பும் காயலேல் மக்கள் உள்ளனர் இஸ்லாம் குடி அமர்ந்தது 1450 ஆண்டுகள் இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது .

காயல் என்பது ஒரு உலக பட்டினம் தமிழ் இனம் உலகத்தோடு இணைந்த இடம் . குமரி கண்டம் பகுதி தான் மக்கள் முதல் வாழ்த்த இடம் அது தற்போதைய தமிழ் மண்ணில் உள்ள இடம்தான் .

நம் மக்கள் இது போன்ற வரலாற்று உண்மைகளுக்கு அதிக முக்கியம் கொடுக்கணும் நாம் வருவதற்கு முன்பு இங்கு இந்த மண்னில் நம் பூர்வீக தமிழ் தொப்புள் கொடி சொந்தகள் இருந்துள்ளான் அவர்களுடன் ஒன்றாக கலந்து கொண்டோம் இது தான் உண்மைளும் உண்மை .

கல் எழுத்துகள் இங்கு பாதுகாக்க படுவதிலை என்பதுதான் உண்மை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...நல்ல இந்த காலத்திற்கு தேவையான முயற்சி
posted by: abdul wadood (jaipur) on 19 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32099

அஸ்ஸலாமு அலைக்கும் நம் காயல் பதியின் வரலாறை அறிய நாள் ஒரு அறிய வாய்ப்பு. மிகப் பழமையான மக்தூம் பள்ளியின் கல்வெட்டுகளைப் பற்றியும் எழுதவும்.

குறிப்பாக இந்த விசஹ்யத்தில் ஏற்கனவே முயற்சி எடுத்து அதை பதிந்து வைத்துள்ளவர்கள் நான்அறிந்தவரை நம் ஊரில் இருவர். ஓன்று L S இபுராஹிம் ஹாஜி மற்றவர் R S அப்துல் லதீப் ஹாஜி.

இந்த இருவர்களிடம் நிறைய பதிவின் விபரங்கள் இருக்கின்றது. அதையும் கேட்டு அறிந்து இங்கு பதிவு செய்தால் இன்னும் நிறைய விஷயங்கள் அறிய முடியும்.

அப்துல் வதூத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. வாழும் தலைமுறையினரான நாமே அதற்கு பொறுப்பு...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) on 19 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32100

தொன்மை வாய்ந்த காயல்பதிக்கு சமதிகள் மட்டுமே சான்றுகள் அல்ல! இன்னும் ஏராளமான சரித்திர பொக்கிஷங்கள் நம் மண்ணுள் புதைந்து கிடக்கின்றன. கண்ணுக்குத்தெரிந்த பழமைச் சின்னங்கள் பல முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்து பாழாகிவிட்டன. நம் வழித்தோன்றல்களின் வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகள் காணாமல் போனதற்கு வாழும் தலைமுறையினர்களான நாம்தான் அதற்கு பொறுப்பு! நம் சொந்த மண்ணின் சுயசரிதத்தை சுருக்கமாக முடித்துவிட்டு முகவரி இல்லாத சமூகமாக அதை மாற்றி வருவதும் நாமே!

அழிந்து போனது பல, அழிக்கப்பட்டது சில. தற்கால வசதியை மட்டுமே கருதி கற்கால வரலாற்று சின்னங்களை சிதைத்துவிட்டு இப்போது நாம் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கின்றோம். தமிழ்ச் சங்கங்களின் வட்ட வடிவிலான கட்டட வடிவொத்து அமைந்திருக்கும் (பெரிய குத்பா பள்ளியின்) சதுக்கைத்தூண்கள், அதன் மேற்கூரையில் பொருத்தியிருக்கும் செப்புக்கலசம் ஆகியவற்றை நாம் இப்போதும் காணலாம். அப்பள்ளியின் உட்புறத்தோற்றமும் உறுதி மிக்கத்தூண்களும் இனி வருங்காலங்களில் வசதியைக் கருதி வழியனுப்பப்பட்டு விடுமோ? எனும் அச்சம்தான் மேலோங்குகிறது.

ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் ஒரு சரித்திர பின்னணி இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை! காயலின் சரித்திரத்தை ஒரு மீள் ஆய்வு செய்து வெளிக்கொணர்வதற்கு சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும். நம் பாட்டனார்களின் கால்ச்சுவடுகள் கண்டறியப்பட்டு கால பொக்கிஷமான பழமையின் பெருமைதனை உலகிற்கு உணர்த்த நாம் நம்மிடத்தில் இருப்பதை பாதுகாத்தாலே போதும். காயலின் பின்னணியை ஓர் தெளிந்த நீரோடையாய் நாம் நம் சந்ததிகளுக்கு விட்டுச்செல்லலாம்.

கல்வெட்டுகளை தூசு தட்டிக் காட்டித்தந்த காயல்பட்டணம் டாட் காமிற்கு நன்றி!!!

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. ஹிஜ்ரி 700 களில் கிறிஸ்துவ ஆண்டு உண்மையில் நடைமுறையில் இருந்ததா?
posted by: MOHAMED SIRAJUDEEN (Eruvadi) on 19 December 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32103

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பான சகோதர சகோதரிகளுக்கு,

இஸ்லாமிய வரலாற்றுச் சான்றுகளை அறிந்து கொள்வதற்காக முக்கியத்துவம் கொடுத்து ஒரு இணையத்தளம் செயல்படுகின்றது என்பது மிகவும் அவசியமான ஒன்று. இச்சேவையை செய்பவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்ய பிரார்த்திப்போம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளில் கிருஸ்துவ ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 700 களில் கிருஸ்துவ ஆண்டு உண்மையில் குறிக்கபட்டிக்கின்றதா? என்பதை சம்மந்தப்பட்டவர்கள் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுகளை சென்று பார்வையிட்டு இங்கு பதிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

அவ்வாறு குறிக்கப்பட்டிருந்தால் அதை தற்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டால் அதன் உண்மை தன்மையையும், ஹிஜ்ரி 700களில் கிறிஸ்துவ ஆண்டு பின்பற்றப்பட்டுள்ளதா என்பதின் உண்மை நிலையையும் ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே காயல்பதி சகோதரர்கள் இதற்கு முயற்சி செய்வார்களா?

இப்படிக்கு,
முகம்மது சிராஜுதீன்

[Administrator: சில கல்வெட்டுகளில் ஹிஜ்ரி ஆண்டுகளும், சில கல்வெட்டுகளில் கொல்லம் ஆண்டுகளும் - சில கல்வெட்டுகளில் கிழமையும் இணைந்து, இடம்பெற்றுள்ளன. இந்த தகவல்கள் வழங்கும் ஆவணங்கள், பிற வாசகர்கள் தெளிவாக அறிந்துகொள்வதற்காக, சமமான கிருஸ்துவ ஆண்டுகளை இணைத்து வழங்குகின்றன. அதுவே இங்கும் வெளியிடப்பட்டுள்ளது. பின்வரும் பாகங்களில் கல்வெட்டு புகைப்படங்கள் வெளிவரும்]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. தொண்மை பேசும் காயல்பதி
posted by: Mohamed Omar (Babu) (Chennai) on 19 December 2013
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32106

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் காயல்மாநகரின் தொண்மையான வரலாற்றை சிறந்த முறையில் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். இவ்வளவு வருட தொண்மையை கொண்டதா நம் நகரம் என்று இன்று தான் அறிகிரிகின்றேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள கல்வெட்டுகளின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டால் ஊரின் தொண்மையை பார்பதற்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நான் இதுவரை அது போன்ற கல்வெட்டுகளை ஊரில் பார்த்தது இல்லை. நீங்கள் அதன் விளக்கத்தை புகைப்படத்துடன் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:...
posted by: B.G. mujahith ali (kayalpatnam) on 19 December 2013
IP: 123.*.*.* India | Comment Reference Number: 32107

செய்திகளுடன் அதற்குரிய கல் வெட்டுக்களின் புகைபடங்களை சேர்த்தால் கல் வெட்டுகளும் பழமையான செய்திகளை கூறும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved