KFT Websites kayalpatnam.com kayalpattinam.com kayalsky.com topperstalk.com kayal.tv kayaljobs.com
Since 1998 - Kayal on the Web - Your home away from home Lost Tanks to Realty!
Current Kayalpatnam Time
11:28:44 AM
Saturday | 29 November 2014 | Safar 7, 1436
சிறப்புக் கட்டுரைகள்
Previous Article
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
ID # 88Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 17, 2014
காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது!
This page has been viewed 712 times | View Comments (4) <> Post Your Comment
(Comments awaiting approval - 0; Comments not approved - 0)

2014, நவம்பர் மாதம், கொச்சி கடற்கரையிலும், புது டெல்லியிலும் 'லவ் கிஸ்' என்ற அமைப்பு ஒன்றுகூடி, ஒருவருக்கொருவர் நேசத்தினைப் பரிமாற ‘கிஸ்’ செய்வது என்று அறிவிப்பு வந்து, அதனால் எதிர்ப்பும், போலிஸ் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு சென்று விட்டது ஒரு செய்திக் குறிப்பு. அதுவும் ஒரு ஆணுக்கு இன்னொரு ஆணும் ஓரினச்சேர்க்கையினை வெளிப்படுத்தும் அளவிற்கு உதட்டில் முத்தமிடும் காட்சிதான் உச்சகட்டம். ஏனென்றால் அறையில் நடக்க வேண்டிய செயல்கள் அந்தரத்திற்கு வந்து விட்ட அதிசயம்தான்.

சிறார்கள் உணவுப் பழக்கவழக்கங்களால் சமீப காலங்களில் இளம் வயதிலேயே பாலுணர்வு உச்சகட்டத்தினை எட்டும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதன் வடிகாலாய் ’லவ்’ என்ற ஒரு ஆயுதத்தைக் கையில் எடுக்கின்றனர். பாலுணர்வு ஆராய்ச்சியாளர் டாக்டர் நாராயண ரெட்டி கூறும்போது, “பாலுணர்வு தவறல்ல! ஆனால் அதை அறிவுடன் கட்டுப்படுத்துவது புத்திசாலித்தனம்” என்று சொல்கிறார்.

சமீபகால சினிமாவும், டிவியும் பாலுணர்வைத் தூண்டக் கூடிய பாடல்களையும், தொடர்களையும், படங்களையும் வெளியிடுவதால், அவற்றைப் பெரியோரும், சிறார்களும் வீடுகளில், தியேட்டர் போன்றவற்றில் ஒருங்கே அமர்ந்து பார்த்து ரசிப்பதால் பாலுணர்வை மேலும் தூண்டுவதிற்கு வழிவிடுகிறோம்.

பீச், தியேட்டர், பூங்கா போன்ற பொது இடங்களில் சிறார்கள் தங்கள் பள்ளி, கல்லூரி சீருடையைக் கூட மாற்றாமல் மெய்மறந்து அமர்ந்து லவ்வைப் பரிமாறிக் கொள்வதை நீங்களும் கண்டு மனம் வெதும்பி இருப்பீர்கள். பார்வை, சிரிப்பு, கடித பரிமாற்றம், பரிசு அன்பளிப்பு என்று தொடங்கி - உரசுதல், அணைத்தல், முத்தமிடல், பின்பு பெண் சிறார்கள் தங்களையே உடல் ரீதியாக 'தியாகம்' செய்தல் என்று எல்லை மீறிப் போகும். அதால் பாதிக்கப்படுவது பெற்றோரும், உடன்பிறந்தவர்களும், அவர்களுடைய மான-மரியாதையும்தான். அதில் பாதிக்கப்பட்டவர்கள், 'கவுரவக் கொலை' என்ற ஆயுதத்தைக் கடைசியாக கையாள்கின்றனர். அவையெல்லாம், 'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்' என்பது போன்ற செயலாகும்.

சிறார்கள் பாலுணர்வுக்கு அடிமையாவதற்கு என்ன முக்கியமான காரணம்:

(1) குடும்பத்தில் பெற்றோர் நல்ல சுமுகமான இணக்கமின்மை சிறார்களை பெற்றோர்களிடமிருந்து விலகி நிற்க வழிவிடுகிறது. பெற்றோர்கள் சிறார்களில் பராமரிப்பிலிருந்தும், வழி நடத்துவதிலிருந்தும் கவனம் செலுத்தாததால் சிறார்கள் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இல்லாமல் வளர்கிறார்கள். சில வீடுகளில் பெற்றோர்களின் ‘கூடா ஒழுக்கம்’ குழந்தைகளை வழிக்கேட்டுக்கு இழுத்துச் செல்கிறது.

வளரும் சிறார்களுக்கு வெளியிடங்களில் தங்களுடைய பாலுணர்வுக்கு அடிமையாகிவிட்டு வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று அறிவுரை சொல்லும் பெற்றோர், உற்றார், உறவினர் மிகக் குறைவே. சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் வரும் செயல்முறைகள் அலங்காரமானது மட்டுமல்ல; அபாயகரமான பொய்யானது, பாதுகாப்பற்றது என்று சிறார்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கு உதாரணமாக 10.11.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

சென்னை கொடுங்கையூரில் வினோத் என்ற 28 வயது வாலிபர் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக். அவர் வித்யா(27) என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து, நான்கு மாத கர்ப்பிணியாக்கி உள்ளார்.

அதன் பின்பு காதல் மனைவி மீது உள்ள பாசம் விலகி, அருகில் உள்ள பள்ளிச் சிறுமிகள் பக்கம் பார்வையைச் செலுத்தியிருக்கின்றார். அவர் வலையில் பிளஸ் 1 படிக்கும் மாணவி நக்மா, 'காதல்' படத்தில் வரும் கதாநாயகி போன்று விழுந்திருக்கின்றார். இருவரும் பொழுதுபோக்கு இடங்களில் சுற்றியிருக்கின்றார்கள். இதனை அறிந்த நக்மாவின் பெற்றோர் அவளை சொந்த ஊரான டெராடூனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனை அறிந்த வினோத்தும் டெராடூனுக்குச் சென்று பெற்றோருக்குத் தெரியாமல் சென்னையில் திருமணம் செய்ய ஜி.டி. ரயில் மூலம் நக்மாவை அழைத்து வந்துள்ளார்.

வினோத் டெராடூனுக்குச் சென்றதையறிந்து மனைவி வித்யா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உறவினர்களுடன் காத்திருந்து, அந்த இருவரும் சென்னை வந்து சேர்ந்ததும் கையும் களவுமாகப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். போலீசாரும் நக்மாவின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்கள் என்ற இந்தச் செய்தி மூலம் சிறார்கள் எந்தளவுக்கு பாலுணர்வுக்குப் பலியாகிவிடுகிறார்கள் என்று தெரிந்திருக்கும்.

(2) சுய மரியாதை, கவுரவம் இல்லாமை:

சுய மரியாதை மற்றும் கவுரவம் இல்லாத சிறார்கள், பெண்கள் மனோஇச்சைகளுக்கு கட்டுப்பட வேண்டியதுள்ளது. குழந்தைகள் வளரும்போதே வேற்று ஆடவர் கொடுக்கும் இனிப்புப் பண்டங்கள், அன்பளிப்பு போன்றவற்றை இலவசமாகப் பெறக் கூடாது என்று பெற்றோர் அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால், சிறார்கள் பெரியவர்களாக வளரும்போது வேற்று ஆடவர் கொடுக்கும் செல்போன், பாக்கெட் மணி, பிறந்த நாள் பரிசுப்பொருட்களை வாங்கமாட்டர்கள். அவ்வாறு சுய கவுரவுத்துடன் வளர்க்கப்பட்ட பெண் சிறார்கள் ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்கும்போது பாலுணர்வுக்கு உந்தப்பட்டு தங்களது கற்பை இழக்க மாட்டார்கள் என்றும், சுய கவுரவமில்லாது இருக்கும் பெண் சிறார்கள் தங்கள் கற்பையும் இழந்து, பால்வினை நோய்களையும் பெற்றுக்கொள்கிறார்கள் என்று டாக்டர் நாராயண ரெட்டி சொல்கிறார்.

அது மட்டுமா, காதலன் பெண் சிறார்களின் கற்பைச் சூறையாடி, கரு உண்டாக்கிவிட்டு, அதைக் கலைக்க யோசனைகளான கடுகுச்சாறு குடித்தல், கள்ளிப்பாலை பெண் உறுப்பில் செலுத்துதல், ஹேர்பின் மற்றும் குத்தூசி கொண்டு கர்ப்பப்பையைக் குத்துடல், போலி டாக்டர் உதவியுடன் கொடூரமான முறையில் கருக்கலைப்பது போன்ற கொடூரமான யோசனைகளுக்கும் அவர்களை வற்புறுத்துகிறான். அந்த விஷப்பரீட்சையில் பெண் சிறார்கள் உயிரிழக்கவும் நேரிடுவது உங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும்.

அது மட்டுமின்றி, ஒரு பூவில் தேனெடுத்துச் சுவை கண்ட காதலன் தன் காதலியைப் பார்த்து, 'நீ திருமணத்திற்கு முன்பு என்னுடன் உறவுகொண்டது போல வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருப்பாய்' என்று சந்தேகித்து காதலியை விட்டும் ஒதுங்குவதையும் கண்டுள்ளோம்.

(3) நேசமும், பாசமும்:

“காதலர்கள் காதலியின் உடலுறவிற்காக நேசத்துடன் பழகுவர். ஆனால் காதலிகள் பாசத்திற்காக உடலுறவை ஒப்புக்கொள்கிறார்கள்” என்று 1999ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் இயங்கும், 'பவுண்டேசன் ஆஃப் ரிசர்ச் அண்ட் ஹெல்த் சிஸ்டம்' என்ற நிறுவனத்தில் பணிபுரியும், நிர்மலா மூர்த்தி மற்றும் அகிலா வாசன் ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள், “பெண்கள் ஆண்களின் மேலுள்ள பாசத்தினை 'பியார், பிரேம்' என்று நவுன் ஆன பெயர்ச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆண்கள் அதனை வினைச்சொல்லாக மாற்றி, தங்களின் நேசம் வேண்டுமென்றால் அதற்குப் பரிகாரமாக காதலியின் கற்பைத் தரவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

புது டெல்லியின் ஓர் ஆய்வறிக்கை, “ஆண்களின் தோற்றத்தில் மயங்கும் பெண்கள் 57 சதவீதம்” என்று கூறுகிறது. சென்னையில் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் இளைஞர்கள் ஜீன்ஸ் பேன்ட், காதில் வளையம், கழுத்தில் கவரிங் செயின், கையில் வெள்ளி பிரேஸ்லெட் போன்று அணிந்துகொண்டு, பெண்கள் பள்ளி, கல்லூரி, பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் மால்ஸ் போன்றவற்றில் வளம் வந்து, தங்கள் வலையில் சிக்கும் கன்னிகளைச் சுற்றி வட்டம் போடுவதை நீங்கள் காணலாம். அதுபோன்ற வல்லூருகளிடமிருந்து பெண் சிறார்களை - கண்மணியைக் காக்கும் இமைகளைப் போல் பாதுகாப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

(4) ஆணாதிக்கம்:

காதலில் ஆண்களின் ஆதிக்கமே மேலோங்கி உள்ளது. ஒரு ஆய்வுக் கட்டுரையில், பெண்கள் சுகமில்லாது இருந்தாலும் ஆண் காதலர்கள் உடலுறவு கொள்ள வற்புறுத்தலுக்குப் பணிவதாக' சொல்கிறது. அதே அறிக்கையில் ஆண்கள் காதலிகளிடம் உடலுறவு கொள்ளும்போது தற்காப்பிற்கான ஆணுறைகளை 75 சதவீதம் பேர் தவிர்ப்பதாகக் கூறுகிறது. இதன் மூலம் கள்ளத்தனமாக காதலிகளைக் கர்ப்பிணியாக்கிவிட்டு தப்ப நினைக்கும் கயவர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பது பெற்றோர்களின் கடமையல்லவா?

(5) உற்றார், உறவினர், ஆலோசகர் கடமை:

மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராக்கி ஜெயின் கூறும்போது, 'பெண் சிறார்களுக்கு உடலுறவிற்கும், கர்ப்பம் தரிப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாததால், 98 சதவீத காதலர்கள் பாதுகாப்பற்ற உடலுறவிற்கு தள்ளப்படுகிறார்கள்' என்கிறார்.

ஆகவே பெற்றோர், உற்றார் - உறவினர் மற்றும் ஆலோசகர்கள் பெண் சிறார்களுக்கு பருவமடைதல், அதனால் உடல் மற்றும் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள், கற்பு பிறழா ஒழுக்கம், பாலுணர்வு, அதைப் பாதுகாக்கும் விதம் ஆகியவற்றை தன் நண்பர்களுக்குச் சொல்லும் புத்திமதி போல் எடுத்துச் சொல்லி, குழந்தைகளின் தேவைகளைக் குறிப்பறிந்து, ஆடம்பரமில்லா செலவினங்களுக்கு உதவி செய்து, அவர்களை காதல் என்ற மாய வலையில் விழாமல் வாழ்க்கையில் வெற்றிகாணச் செய்ய ஒவ்வொருக்கும் ஒரு குறிக்கோள் வேண்டும் எனச் சொல்லி, நல்வழியில், வாய்க்காலில் ஓடும் தண்ணீர் வீணாகாமல் நெல்லுக்குப் பாய எப்படி வழிவகை செய்கிறோமோ அதனைப் போன்று சமூதாய மக்களும் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா?

Previous Article
Click here to post your comment about this article >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
(Registration not required. Moderated; displayed after approval)
>> Go to Last Comment
1. Re:...வெள்ளி திரையும் சின்ன திரையும் கணினித்துறையும் செய்த மாற்றங்கள்
posted by: mackie noohuthmbi (kayalpaattinam) on 17 November 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38180

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன். கண்ணதாசனிடம் கவிதை என்ன புதிதா கமலஹாசனிடன் கிஸ்ஸு என்ன புதிதா..கிஸ்ஸு என்றால் உதடுகள் விரியும் தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்....

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும் குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டு. குமரிப் பெண்ணின் கைகளிலே ஆசை நெஞ்சை தரவேண்டும் ஆசை நெஞ்சை தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்....

இந்த பாடல்கள் வெள்ளி திரையில் வரும்போது எனக்கு வாலிப வயது....அப்போதே ஆரம்பித்து விட்டது இந்த கலாசார சீரழிவு. அப்போது அதிகமாக தொட்டுப் பேசமாட்டார்கள் அரை குறை ஆடை அணியமாட்டார்கள். ஆனால் தொட்டுப் பேசுவதும் முத்தம் கொடுப்பதும் அரை குறை ஆடை அணிவதுமே இப்போதுள்ள வெள்ளித்திரைக்கு மவுசு.

"கத்தி" வசூல் கோடி ரூபாயை தாண்டுகிறது. மது வசூல் 125 கோடியை தாண்டுகிறது. விபசார விடுதிகள் சட்டப் படி இயங்குகின்றன. பாலியல் பலாத்காரங்கள் கௌரவ கொலைகள் தற்கொலைகள் கொள்ளைகள் கண்டுகொள்ளப் படாமல் நீக்கமற நிறைந்துள்ளது. அதற்கான தண்டனைகள் நிறைவேற்று அதிகாரம் இல்லாமல், சரியான சாட்சியங்கள் இருந்தாலும் அரசியல் அங்கே நுழைந்து அவற்றை புஸ்வாணமாக்கி, குற்றவாளிகள் மீண்டும் அவர்கள் தொழில்களை மும்முரமாக நடத்துகிறார்கள்.

சகோதரர் முஹம்மது அலி அவர்கள் காவல் துறையில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கே தெரியும் குற்றவாளிகளை காவல் துறை அணுகும் விதம். இப்போது காவல் துறையே களங்கம் மிக்கதாக இருக்கிறது. மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது.

பாலியல் பற்றி நமது முன்னோர்கள் பாடமா நடத்தினார்கள். காதலிப்பது பற்றி கல்லூரியிலா கற்றுக் கொடுத்தார்கள். சொல்லி தெரிவதல்ல மன்மதக் கலை என்பது போல் அதெல்லாம் காலப் போக்கில் வந்து கொண்டிருந்தது. வாழ்க்கை நிம்மதியாக, பொறுமையாக போய்க் கொண்டிருந்தது. ஆங்காங்கே சில மணமுறிவுகள் நிகழ்ந்தன. பெரியவர்கள் தலை இட்டு அதையும் கூட இல்லாமல் ஆக்கினார்கள். பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று புறப்பட்ட ஒரு கூட்டம் இப்படி கேடு கெட்டு அலைய ஆரம்பித்தது.

இஸ்லாம் மிக தெளிவாக வாழ்வியல் தத்துவங்களை சொல்கிறது. நபிகள் நாயகம் 11 மனைவியர்களுடன் அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து காட்டினார்கள். திருமறையில் மணவாழ்க்கையின் அற்புதங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. நபி வழியில் திருமண பந்தங்கள் சொந்தங்கள் வாழ்க்கையை ரசனையுடன் வாழ்வது எப்படி என்பதை எல்லாம் கோடிட்டு காட்டி இருக்கிறது. மனைவியுடன் உடலுறவு கொள்வதே ஒரு இபாதத் என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள். முத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஒழு செய்துவிட்டு கூட ஆயிஷா நாயகி அவர்களை அணைத்திருக்கிறார்கள் என்று ஒரு நபி மொழி இருக்கிறது. ஆனால் இவை எல்லாம் விரசம் கெட்டு வெட்ட வெளியில் மற்றவர்களும் பார்த்து மகிழும் சல்லாபமாக மாற்றியது மேலை நாட்டு நாகரிகம். அவை எல்லை மீறி நம் நாட்டிலும் காலூன்ற வெள்ளி திரைகள் கோடுபோட்டுக் கொடுத்தன. அவற்றுக்கு ரோடு போட்டுக் கொடுத்தன இணையதளங்கள். நவீன வசதிகள் வாட்ட்ஸ் அப், செல்பி போன்றவை செங்கம்பளம் விரித்து நம் இளைஞர்களை அதனுள் சிக்க வைத்துள்ளது. NET மிக சரியாக பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த வலைக்குள் அகப்படாமல் எந்த மீனும் எந்த இளைஞனும் இளைஞியும் தப்ப முடியவில்லை. முகநூல், ட்விட்டர் என்று அதன் பரிணாமம் நீள்கிறது. இது எங்குபோய் முடியப் போகிறதோ. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

குறைந்த பட்சம் அல்லாஹ்வின் திருமறையையும் நபிகள் நாயகத்தின் வழிமுறையையும் கையில் வைத்துள்ள முஸ்லிம் இளைய சமுதாயம் இந்த பிடியிலிருந்து வெளியேறி ஒழுங்கான நெறிமுறையில் வாழ து ஆ செய்வோம். அதற்கான வழிமுறைகள் விழிப்புணர்வு கட்டுரைகள், திறந்தவெளி பிரசங்கங்கள் நம் உலமாக்களால் ஆங்காங்கே நடத்தப் படவேண்டும். சில்லறை பிரச்சினைகளை பேசி உள்ளங்களை காயப் படுத்தி சமுதாயத்தை பிரிக்கும் சூழ்சிகள் மாறி இப்படி புதிய கோணத்தில் இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டும்.

முஹம்மது அலி அவர்கள் கட்டுரை நீண்டு விட்டது என்றாலும் பொறுமையாக படிப்பவர்களுக்கு உண்மை உறைக்கும் தெளிவும் பிறக்கும்.

உங்களைக் கொண்டு ஒரு மனிதன் நேர் வழி பெற்றால் அது இந்த உலகம் அதில் உள்ள அனைத்தையும் விட உங்களுக்கு நற்கூலி தேடி தரும் என்று நபிகள் நாயகம் கூறி இருக்கிறார்கள். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 17 November 2014
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38181

சமூக பாதுகாப்பு சிந்தனையுடன் கட்டுரையை தந்துள்ளார் ஆசிரயர்.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என மாற்று மத நண்பர்கள் உவமை கூறுவார்கள். அப்படியில்லாமல் அனைவரும் பாதுகாப்பு பெற பெற்றோர் மட்டுமல்லாமல் அரசும் கல்வியில் இதனை உயர்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆண் பெண் இருபாலருக்கும் பாடத்திட்டத்தில் அடிப்படையாக சேர்த்து கற்ப்பிக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Mohamed Ali (Chennai) on 18 November 2014
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38183

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே!

காயல்பட்னம் இணைய தளத்தில் கட்டுரைகளை எழுதுவது மிகவும் மனநிறைவு ஏற்படுகிறது. ஏனென்றால் சகோதரர் 'மக்கி நூஹுதம்பி' போன்ற அறிவுசால்' சான்றோர் தங்கள் கருத்துக்களை ஆழமாக சிந்தித்து வழங்குகிறார்கள்.

எனது கட்டுரை நீண்டு விட்டது உண்மை தான், இருந்தாலும் சில விபரங்களை ஆதாரத்துடன் சொல்வதால் நீண்டு விட்டது. அதனையும் படித்து நீளமான கருத்துக்களைப் பொழிந்த நண்பர்களுக்கும், என்னுடைய கட்டுரையினை பிரசுரித்த ஆசிரியர் குழுவினுக்கும் மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4.
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 19 November 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 38186

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மாத்துல்லாஹி வபரக்காத்துஹு.

காகிதவாழ்த்தும் பூக்களும் கொடுத்து பின்கள்ளிப்பாலூட்டி சிசுக்கொலைசெய்யும் காலமாகிவிட்ட காலச்சீரழிவில் கவர்ச்சியெனும் பெயரில் கவர்செய்யப்படாமல்வருகிறது திறந்தவெளிகளில் பிறந்தமேனிகள்பொள் இன்றைய டீன் ஏஜ்மேனிகள். அஸ்தக்பிருல்லாஹில் அழீம்.

(நல்லதலைப்பு) "காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது"

பூஞ்சக்காளான் வேகத்தில்படரும் உடலீர்ப்பையும் முகஸ்துதிகளையும் காதலென்று முத்திரையிட்டு பெற்றோர்களின் நித்திரைகளையும் நிம்மதிகளையும் சிதைத்து கடைசியில் தாங்களும்சிதைந்து வாழும்பொருளின்றி புதைந்துபோகிறார்கள் தற்கொலைகளாகவும்,கொலைகளாகவும் எத்தனையோ நிகழ்ந்துகொண்டிருக்கும் நின்றுவிடவில்லை இந்தஅறியாமை எடுத்துச்சொன்னால் என்னபதில் வரும்தெரியுமா எங்கள் காதலைப்பற்றி உங்களுக்கு என்னதெரியும் என்றுகேள்விவரும்.

அவனுக்காக வாங்கிய கால்சட்டை ஜிப்வைக்கப்பட்டதாக இருந்தால் அதைக்கத்தரித்துவிட்டு பித்தான்வைத்துத்தைத்துக்கொடுப்பாள் அவனுடைய தாய் அவளுக்குத்தெரியும் இல்லையென்றால் என்னபிரச்சினைவருமென்று. புதிதாக ஒருபெண்ணின்சவகாசம் கிடைத்ததும் அவகாசம்எடுக்காமல் வெடுக்கென்று அவளைப்பற்றி உனக்குத்தெரியாதென்று அந்த அன்னையைப்பார்த்துச்சொல்வான்.

அவளுக்காக அவளுடைய முதல்திங்கள் எப்போதும்வரும்,வரலாமெனக்காத்திருந்த பின் அவள்வயதைஎட்டியதும் குனிந்ததளையுடன் பேசமுடியாது கூனிக்குருகி வீட்டின்மூலையில் அமர்ந்திருந்தவளுக்கு சுத்தம்செய்து பூச்சூட்டி புத்தாடைஅணிவித்து மேடையில் அமரவைத்து சீராட்டி சிறப்புசெய்து பொத்திபொத்திக்காக்கும் திண்ணைப்பள்ளியான அன்னையைப்பார்த்து கக்குவாள் தான்புதிதாகண்ட அரும்புமீசையின் முகவரியை தன அகவரியில் பிழையாகஎழுதிவிட்டு இவனைவிட எல்லாவிதத்திலும் எனக்கு ஏற்றவனை உன்னால்தேடித்தரமுடியாதென்று. அறியாமைதான் என்னசெய்வது அந்தவயது தான்எடுப்பதே சரியான முடிவென்று முடிவுகட்டும்பருவம் நாம்தான்பக்குவமாகஎடுத்துச்சொல்லிபுரியவைக்கவேண்டும் வேண்டும்.

கல்விக்கும் கலவிக்கும் ஒருபுள்ளிதான் வித்தியாசம் இவர்கள் பள்ளிக்குச்சென்று கல்வியில்கால்வைக்கிறார்களா இல்லை முள்ளில் தடம்பதிக்கிறார்களாவென்று எந்தப்புள்ளிக்கென்று விழிப்போடு கவனிக்கவேண்டும்.

வல்ல இறைவன் அனைத்துசமூகத்தினரையும் காத்தருள்வானாக அம்மக்களுக்கு புரியும்தன்மையையும் விழிப்புணர்வையும் கொடுத்து வாழ்க்கையில் வெற்றிப்பாதைக்கு வழிவகுத்துக்கொடுப்பானாக ஆமீன்.

ஆசிரியர் டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ) அவர்களின் கட்டுரையின் அணுகுமுறையும் ஆக்கமும் மிகவும் சிறப்பாக இருக்கிறது விழிப்புணர்விற்கு இன்னுமோர் வித்திட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது மரியாதைகலந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் மப்ரூக் வ ஜஜாக்கல்லாஹ் ஹ்கைரன்.

"கருக்கலைப்புக்கொலைகள் குறையுமென்றால் கட்டுரை எவ்வளவு வேண்டுமானாலும் நீளலாம்" மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்களும் அதைத்தான் பகிர்ந்திருக்கிறார்கள்,

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
>> Go to First Comment
(Registration not required. Moderated; displayed after approval)
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
Click here to post your comment about this column >>
Advertisement
Wavoo JewellersCathedral Road LKS Gold Paradise
New Prince JewelleryDarbar Designs
Fathima JewellersAKM Jewellers
Dubai GoldABS Constructions
Chendur SpringsThai Nadu Tours and Travels
Google Advertisement


>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Prayer Timings
Hijri Calendar
Sunrise/Sunset
Moonrise/Moonset
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2014. The Kayal First Trust. All Rights Reserved