|
|
<< முந்தைய பொது நிகழ்ச்சிப் பதிவு | அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >> | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | ஜுன் 6, 2016 | 18:30 | மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை | | | ரமழான் தலைப்பிறை குறித்த - மஹ்ழரா, ஜாவியா, நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டம்! | | |
| ஜூன் 06 அன்று ரமழான் தலைப்பிறை குறித்த மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம்! நகர உலமாக்களுக்கு அழைப்பு!!
ஆண்டுதோறும் ரமழான் தலைப்பிறை, நோன்புப் பெருநாள் உள்ளிட்ட பிறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதற்காக, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி ஆகியவற்றினதும், நகர உலமாக்களினதும் கூட்டுக் கூட்டம், ஓராண்டு மஹ்ழராவிலும், அடுத்த ஆண்டு ஜாவியாவிலும் நடைபெறுவது வழமை.
அதன் படி, நிகழும் ஹிஜ்ரீ 1437ஆம் ஆண்டு ரமழான் தலைப்பிறை குறித்த தகவல்களைப் பெற்று அறிவிப்பை வெளியிடுவதற்காக, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி & காயல்பட்டினம் நகர உலமாக்களின் கூட்டுக் கூட்டம், மஹ்ழரா அரபிக் கல்லூரி வளாகத்தில், நாளை (06.06.2016. திங்கட்கிழமை பின்னேரம் செவ்வாய் இரவு) மஃரிப் தொழுகைக்குப் பின் நடைபெறவுள்ளதாகவும், நகர உலமாக்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|