|
|
<< முந்தைய பொது நிகழ்ச்சிப் பதிவு | அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >> | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | மே 18, 2016 | 09:00 | மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை | | | மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா! | | |
| மே 18இல் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா! ஒரு காயலர் உட்பட 17 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர்!! இணையதளங்களில் நேரலை!!!
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா இம்மாதம் 30ஆம் நாள் சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு, கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
கல்லூரியின் தலைவர் எஸ்.கே.இசட்.ஆப்தீன் தலைமை தாங்குகிறார். உதவி தலைவர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வரவேற்றுப் பேசுகிறார்.
கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழை (ஸனது) வழங்கி, பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார். கல்லூரியின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா எம்.அப்துல் ஹமீத் பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கல்லூரியின் உதவி செயலாளர் ‘ஜெஸ்மின்’ ஏ.கே.கலீலுர்ரஹ்மான் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுறுகின்றன.
இவ்விழாவில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் உட்பட 17 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறவுள்ளனர்.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, கணக்குத் தணிக்கையாளர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) உள்ளிட்ட நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் www.mahlara.org என்ற இணையதளத்திலும், காயல்பட்டினம் குத்பிய்யா மன்ஸிலின் www.quthbiyamanzil.org என்ற இணையதளத்திலும் நேரலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விழா குறித்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம்:-
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் S.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ
பேராசிரியர் - மஹ்ழரா அரபிக்கல்லூரி
இதுகுறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|