|
|
<< முந்தைய பொது நிகழ்ச்சிப் பதிவு | அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >> | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | பிப்ரவரி 25, 2016 | 10:00 | முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி (மகளிர் வளாகம்) | | | முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி (பெண்கள் பிரிவு) ஆண்டு விழா! | | |
| காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
பள்ளியின் பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் ஆண்டு விழாவில், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை எம்.ஜெஸீமாவும், ஆண்கள் பிரிவில் நாளை நடைபெறும் ஆண்டு விழாவில், கனரா வங்கி ஆறுமுகநேரி கிளையின் மூத்த மேலாளர் வி.ஞானசேகரனும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
இரு விழாக்களிலும் மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கடந்த கல்வியாண்டில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு இதன்போது பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
விழா ஏற்பாடுகளை, பள்ளி துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான், தலைமையாசிரியர் ஸ்டீஃபன் ஆகியோர் ஒருங்கிணைப்பில், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் - இந்நாள் மாணவ-மாணவியர் இணைந்து செய்து வருகின்றனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
|
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|