Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:06:50 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9887
#KOTW9887
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 31, 2012
நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான நிலம் தொடர்பாக ஐக்கியப் பேரவை கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான்ங்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4034 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கான நிலம் தொடர்பாக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஐக்கியப் பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

19/12/2012 அன்று (புதன் கிழ்மை)காலை 10:00 மணிக்கு ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் அல்-ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கல் தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டத்தின் பொருள் நகரில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தெரிவு செய்து தரும்படியாக நகர்மன்ற உறுப்பினர்கள் தந்துள்ள மனு சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் 1:
நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், மேற்படி நிலத்தை முஸ்லிம் ஐக்கிய பேரவை தெரிவு செய்து தரும்படியாக, நமது நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட உறுப்பினர்கள் 18 பேர்களும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை நகர்மன்ற உறுப்பினர்கள் 13 பேர்கள் சென்ற 05-12-2012ம் தேதி பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள். மேற்படி மனுவை இக்கூட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, ஐந்து ஏக்கர் நிலத்தை பேரவையின் மூலம் தெரிவு செய்து கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 2:
தேவைப்படுகின்ற நிலத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு இலட்சம் மட்டுமே.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நகராட்சியின் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத்தலைவருமான, பேரவையின் கெளரவ ஆலோசனை குழு உறுப்பினர் மரியாதைக்குரிய அல்-ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள், நமதூர் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பேரவையின் வேண்டுகோளை ஏற்று, தேவைப்படுகின்ற ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசு நிர்ணயித்த விலைக்கே தருவதாக ஒப்புக்கொண்டு அறிவிப்பு செய்ததை இக்கூட்டம் தக்பீர் முழக்கதுடன் வரவேற்று, அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

தீர்மானம் 3:
கொட்டப்படும் குப்பைகளிலிருந்து எந்திரங்கள் மூலம் எரிவாயு தயாரிப்பதற்கு நமது நகராட்சிக்கு தமிழக அரசு ரூபாய் தொன்னூறு இலட்சம் ஒதிக்கீடு செய்துள்ளது, மேற்படி குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எரிவாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுமா? மக்கள் நலம் பாதிக்கப்படுமா? என்பன போன்ற விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி மூலமாகவும், பயோ எரிவாயு தயாரிக்கப்படுகின்ற ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும், பேரவையால் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைப்பதென முடிவ செய்யப்பட்டது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...புதிய நாள் இனிய செய்தி
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24843

கடந்த 2012 நம்மை விட்டு விடைபெற்றுக்கொண்ட நிலையில் இன்று 2013 அதிகாலை கிடைத்துள்ள செய்தி இனிக்கிறது. குப்பை கொட்டும் விஷயம் என்றாலும் நாம் அன்றாடம் குப்பை அகற்றப்படாவிட்டால் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும் பெண்களின் மன சங்கடங்களையும் உணர்கிறோம்.

5 ஏக்கர் நிலம் என்பது முன்னாள் நகர தந்தைக்கு அவ்வளவு பெரிய விஷயம் இல்லை என்றாலும் அரசு நிர்ணயித்த விலைக்கு அதை தருவது என்பது சாதாரண விஷயமல்ல. ஊர் நலன் கருதி அவர்கள் செய்துள்ள இந்த சேவையை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. இதற்காக முயற்சி செய்த ஐக்கிய பேரவை தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. தொடர்ந்து இங்கே ஆலை அமைப்பது சம்பந்தமான ஆய்வுகளும் செய்து அதன் பக்க விளைவுகள் மக்களுக்கு ஏற்படாமல் இருக்க குழு ஒன்றையும் நியமித்து உள்ளதும் பாராட்டுக்குரியது. இந்த நிலை தொடரவேண்டும் என்று ஊர் நலனில் அக்கறை உள்ளவர்கள் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்.

கடந்த வருடம், நம்மிடையே எவ்வளவோ தாக்கங்களை தர்க்கங்களை மன வருத்தங்களை ஏற்படுத்தி நம்மிடையே இருந்து விடைபெற்று சென்று விட்டது. "ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்போம்" என்ற வைர வரிகளுடன் இந்த புத்தாண்டை வரவேற்று நல்லவைகளை முன்னெடுத்து செய்யும் எல்லோருக்கும் நாம் பக்க பலமாக இருப்போம்.

அல்லாஹ் இந்த ஊரை செழிப்பு நிறைந்ததாகவும் உள்ளங்களில் உள்ள மாசும் சுற்று சூழல் மாசும் அகன்ற சுகாதாரமான ஊராக ஆக்கி வைப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Masha allah
posted by Riyath (HongKong) [01 January 2013]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 24844

Thanks everyone who brought this idea and help to keep our city clean and researching to produce energy from daily waste with out side effect.

Happy New Year
**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கடந்த நகராட்சியில் பெரும் முயற்சிகள் செய்தது குறிப்பிடத்தக்கது... !
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [01 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24845

மேற்படி குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எரிவாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுமா? மக்கள் நலம் பாதிக்கப்படுமா? என்பன போன்ற விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி மூலமாகவும், பயோ எரிவாயு தயாரிக்கப்படுகின்ற ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும், பேரவையால் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைப்பதென முடிவ செய்யப்பட்ட செய்திகள் ஏற்றுகொள்ள கூடியது...

1) அளிக்கப்படும் நிலத்தை சுற்றி தொலைவில் உள்ள குடியிருப்பு மக்கள் இதற்க்கு எதிர்ப்பு இல்லாமல் இருக்க அங்குள்ள மக்களிடம் கருத்து அறிவது முக்கியம்...

தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அப்ரூவல் கிடைக்கமா..? இதற்க்கு அப்ரூவல் வேண்டி இதற்க்கு முன் செயல் பட்ட நகராட்சி - (அதன் முன்னால் தலைவர்) பெரும் முயற்சிகள் செய்தது குறிப்பிடத்தக்கது... !

அங்கு குடியிருக்கும் மக்களுக்கு இதனால் எந்த சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இல்லாமல் இருந்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அப்ரூவல் செய்தால் நாம் அனைவர்களும் வரவேற்போம்...

பொது காரியத்திற்காக நிலத்தை மிக குறைந்த விலைக்கு தருவதற்கு முன் வந்த பெருந்தகைக்கு வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:.ஐக்கியப் பேரவை சாதனை மைல்கல்
posted by Palappa Muhiyyadheen Abdul Kader, (mannady) [01 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24850

சேவையின் சிகரங்களாகத் திகழும் அர்ப்பநி ப்பாலர்களாகிய ஐக்கியப் பேரவைத் தலைவர்,செயலர்,பொருளர்,பிரத்யேகமாக கௌரவ ஆலோசனைக் குழு உறுப்பினராகிய முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஜனாப் அல்-ஹாஜ் வாவு சா.ஹ.செய்யது அப்துர்-ரஹ்மான் அவர்களுக்கும்,மற்றும் ஏனைய நிர்வாகிகளுக்கும் எனது இதயங் கனிந்த நற்சலாம்.அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஐக்கியப் பேரவையின் சேவையில் ஒரு மைல் கல்லாக நகரின் கழிவுகளை எரியூட்டல் மைதானத்திற்க்காக தனது சொந்த நிலத்தை தானமாக நகருக்கு சமர்ப்பணம் செய்த மேற்க் கூறிய அர்ப்பநிப்பாலபாளர் பெரும்த்தகையாளருக்கும்,இதற்க்கான பிரத்யேக முயற்ச்சியில் ஈடுபட்ட அறவோர் ஐக்கியப் பேரவையினருக்கும்,நகர் மன்றாளர்களுக்கும்,வல்ல இறைவனின் தனிப் பெருங் கருணையும்,தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் நல்லாசியும்,அன்னவர்த் தோழர்கள்(ரலியல்லாஹு அன்ஹும்),உன்னத இமாம்கள்(ரலியல்லாஹு அன்ஹும்),உயரிய இறை நேசச் செல்வர்களின்(ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோர்களின் துஆ பறக்கத்தையும் பெற்று எல்லா நலமும்,வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துவதுடன் எனது மனமார்ந்த பாராட்டுகளை பதிவு செய்து நிற்கின்றேன். வஸ்ஸலாம்.

இப்படிக்கு
பாலப்பா முஹிய்யதீன் அப்துல் காதர்,
மண்ணடி
சென்னை
தொடர்புக்கு:044-25266705,9751501712


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...பொன் மாலைகள் விழவேண்டும்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [01 January 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24851

அன்புக்குரிய பெரியோர்களே அஸ்ஸலாமு அழைக்கும்.

உங்களைப் புகழ எங்களுக்கு வார்த்தைகள் இல்லை! நாங்கள் உத்தமர்கள் என்று மீண்டும் நிரூபித்து உள்ளீர்கள்! மாஷா அல்லாஹ்!

மாபெரும் சபைதனில் நீங்கள் நடக்காமலேயே
மாலைகள் உங்களுக்கு விழ வேண்டும்!
பொன் மாலைகள் விழ வேண்டும்!
இந்த வாச ரோசாக்களின் மணத்தினால்,
கட்டிப் பிடித்த நாறும் மணக்க வேண்டும்.
கெட்ட நாறும் மணக்க வேண்டும்!.

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களின் ஆயுள்களை நீடித்து சரீர சுகத்துடன் சந்தோசமாக வாழ்ந்து என்றும் வழமான காயலின் நலம் காண வல்லோன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுமாய், என்றும் உங்களின் உண்மையுள்ள பிள்ளைகள் துஆச் செய்த வண்ணம் இருப்போம்! ஆமீன்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. 2013 Sologon-K3
posted by Jahir Hussain VENA (Bahrain) [01 January 2013]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 24852

அஸ்ஸலாமு அலைக்கும்...

அணைத்து காயல் ஐக்கிய பேரவை மற்றும் நகர சபை உறுபினர்களக்கும் ...நன்றிகள். முக்கியமாக மரியாதைக்குரிய செய்து அப்துர் ரஹ்மான் ஹாஜி அவர்களக்கு..

Our Sologan for 2013-K3

K3 -- KEEP KAYAL KLEAN..2013.

Kind Regards,
Jahir Hussain VENA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இறையிடம் பிரார்த்தனைகள் பல
posted by Umar Rizwan Jamali (Singapore) [01 January 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24855

கழிவுகளை நீக்கி நமதூரை பொழிவுரச்செய்ய பாடுபடும்
நல்லுள்ளங்களுக்கு மகிழ்வுடன் வாழ்த்துக்கள் பல.

இது போல் நகராட்சியின் பிளவுகளை நீக்கி உள்ளங்களை
ஒளிவுரச்செய்ய இறையிடம் பிரார்த்தனைகள் பல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...விளக்கம் வேண்டுமே ?
posted by Salai Sheikh Saleem (Dubai) [02 January 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24857

நகரில் குப்பைகளை எரியூட்டுவதர்க்காக தனது சொந்த நிலத்தை தானமாக கொடுத்து உதவிய வள்ளல் வாவு செய்து அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களுக்கு எவ்வளவு நன்றியை காணிக்கையாக்கினாலும் அவர்களின் தியாகத்திற்கு ஈடாகாது. அவர்களுக்கும் மற்றும் இதில் ஈடுபட்ட எல்லா நல் உள்ளங்களுக்கும் ஒட்டுமொத்த காயலர்களின் சார்பில் நன்றியை உரித்தாக்குவோம்.

அதேவேளையில், இந்த பதிவை வாசித்துக்கொண்டிருக்கும் போது என் மனதை நெருடிய சில சந்தேகங்களை நகராட்சி மன்றத்திற்கும் ஐக்கிய பேரவைக்கும் முன்னிலை படுத்துகிறேன்.

மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி நகராட்சி மன்றத்தில் இருக்கும் போது , ஏன் துணைத்தலைவரும் ஏனைய உறுப்பினர்களும் கையெழுத்திட்டு ஐக்கிய பேரவைக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்ப வேண்டும் ?

ஒரு வேளை தலைவி அவர்கள் பணி நிமித்தம் வெளியூரில் இருந்தால், அவர்கள் ஊர் திரும்பும் வரை பொறுத்திருக்க முடியாத அளவிற்கு இந்த விஷயம் ஒன்றும் அவ்வளவு அவசரமும் இல்லை.

இப்படி இருக்க, இந்த வேண்டுகோளை பரிசீலித்த ஐக்கிய பேரவை கூட ஏன் மன்ற தலைவி உடைய ஒப்புதல் இதில் இல்லை என்று விசாரித்திருக்கலாமே ?

இப்படி கேட்பதால் நான் அவர்கள் செய்த தர்மத்தை கொச்சை படுத்துவதாக யாரும் தவறாக என்ன வேண்டாம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் தர்மத்தை அங்கீகரித்து அதற்க்குண்டான பலனை அனைவருக்கும் அள்ளிக்கொடுப்பானாக ஆமீன்.

எனக்கென்னவோ முதலில் நாம் நம் மனதில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் போல்தான் இருக்கு.

இதற்க்கு யாரிடம் இருந்தாவது விளக்கம் கிடைக்குமா?

அன்புடன்
சாளை ஷேக் ஸலீம்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [02 January 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24862

அஸ்ஸலாமு அலைக்கும்...

அணைத்து காயல் ஐக்கிய பேரவை மற்றும் நகர சபை உறுபினர்களக்கும் ...நன்றிகள்.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...மனமார வாழ்த்துகிறோம்
posted by M.E.L.NUSKI (Riyadh -KSA) [02 January 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24863

ஆர்பாட்டமில்லாமல் அற்புதமானதொரு பணியினை ஐக்கிய பேரவை செய்து இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ். கிட்ட தட்ட 60லட்சதிற்கு மேல் விலை போகும் நிலத்தை மக்களுக்காக அரசு நிர்ணய விலை 5 லட்சத்திற்கு மனமார வழங்கி உள்ள மனித நேயர்களில் ஒருவர் ஹாஜி வாவு செய்து அப்துல்ரஹ்மான் அவர்களையும் மனமார வாழ்த்துகிறோம்.

மக்கள் பணி இறைவனின் பணி என போடுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று நல்ல சேவை ஆற்றும் ஐக்கிய பேரவை நின் பணி தொடரட்டும்.

M .E .L .நுஸ்கி
காயல் சகோதரர்கள்
ரியாத்
சவுதி அரேபியா

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. குப்பை கொட்டுவதற்கு uriya idam
posted by vilack Noor Mohamed (Dubai) [03 January 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24868

அருமை தம்பி சாலை ஷேய்க் சலீம் இன் கருத்துதான் என்னுடைய கருத்து ena Padiyu Seihiren.

vilack Noor Mohamed.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Thanks a lot
posted by Abdul Wahid S. (Kayalpatnam.) [04 January 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 24876

அன்பு நண்பர் சாளை சலீம் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ)

தங்களுடைய நியாயமான சந்தேகத்திற்கு ஒரு வேலை நான் புரிந்துகொண்ட விதம் விளக்கமாகலாம்.

(Waiting for the clarification from the concerned people is a waste of time)

Scene - 1

KWT (Kayal Welfare Trust) விடுத்த வேண்டுகோளின் பெயரில் குப்பை கொட்டுவதற்காக சுமார் 2 ஏக்கர் நிலம் தருவதற்கு நமது முன்னாள் பஞ்சாயத் தலைவர் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன் உறுதிமொழி அளித்திருக்கிறார்.

(ஏதோ ஒரு காரணத்தினால் அது கைகூடாமல் போய்விட்டது)

Scene - 2

கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு முன் நம் நகராட்சித் தலைவி நகராட்சிக்கு இடம் (குப்பை கொட்டுவதற்கும் Bio-Gas Plant அமைப்பதற்கும் ) தேவைப்படுகிறது என்று ஊரிலுள்ள அனைத்து ஜமா-அத்திற்க்கும், தனவந்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று இந்த இணையதளத்தில் செய்தி வெளியாகிய ஞாபகம்.

Scene - 3

(இடம் தேவை சம்பந்தமாக நமது நகராட்சியில் போடப்பட்ட தீர்மானம்)

முதலில் அரசாங்கத்திடம் இடம் கேட்போம். அரசு தர முடியாத / இயலாத பட்சத்தில் ஐக்கிய பேரவையில் இடம் கேட்போம்.

அரசிடமிருந்து பதில் வருவதற்கு முன்பே ஐக்கிய பேரவையில் தலைவி இல்லாமல் (தலைவிக்கு கால அவகாசம் கொடுக்கப்படாமல்) துணைத்தலைவர் தலைமையில் அவசர அவசரமாக சென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Scene - 4

தலைவி விடுத்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்காத பேரவை துணைத்தலைவர் தலைமையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவி சாய்த்தது.

இதிலிருந்து யாம் புரிந்து கொண்டது:-

கேட்கப்பட்ட நோக்கம் பொதுநலமாக இருந்தாலும் கேட்பவர்கள் கேட்டால்தான் கொடுப்பவர்கள் கொடுப்பார்கள்.

Anyway நம்ம ஊர் மக்கள் அந்த கொடையாளிக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளார்கள். Thanks a lot

------------------

But one thing we all should realize is that we are setting a bad example for our future generation by giving our land at giveaway rate, if not free instead of extracting from the government the right amount. We are doing this again and again. We pay tax and we should make our government pay for our welfare.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by M.A.K.JAINUL ABDEEN,,Kaakkum Karangal Narpani Manram. (kayalpatnam) [04 January 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 24888

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் சாளை சலீம் அவர்களின் கேள்வி நியாமானதே. ஆனால் அதை கேட்கவேண்டிய இடம் தான் மாறிவிட்டது. என்றுமே எந்த ஒரு சுய நலமும் இல்லாமல் ஊரின் நன்மைக்காக மட்டுமே செயல்பட்டுவரும் ஐக்கிய பேரவையை குறைசொல்ல யாருக்கும் தகுதி இல்லை. மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பதுபோல, ஐக்கிய பேரவையை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதால், அவர்கள் எதை செய்தாலும், அதை குறைகாணக் கூடிய, கீழ்த்தரமான குணத்தை கடைபிடிக்காதீர்கள். ஊருக்கு நன்மை நடக்கிறதென்றால் பாராட்டக்கூடிய மனம் வரவேண்டும். பல அமைப்புகளின் பொறுப்புகளில் இருக்கும் நீங்கள் ஊரின் ஒற்றுமைக்குதான் குரல் கொடுக்க வேண்டுமே ஒழிய, எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுகின்ற வேலையை செய்யக் கூடாது. நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும். எல்லாம் அறியக்கூடியவன் அல்லாஹ் ஒருவனே, அவனே "சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன்". வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [05 January 2013]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24917

நண்பர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் என்னுடைய தரத்தை விமரிசிக்கும் முன்பு நியாயமான கேள்வி என்று அவராலேயே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கேள்வியை நான் கேட்டதற்கு பதில் தராமல் அவசரகதியில் நான் என்னவோ ஐக்கிய பேரவையை குறை கூறியதை போல் பாசாங்கு செய்வதே அவருடைய தரத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும்படியாய் இருக்கிறது.

என்னுடைய கருத்தையே பிரதிபலிக்கும் என் அன்பு நண்பன் அப்துல் வாஹித் அவர்களுக்கு பதில் சொல்லுங்கள்.

கருத்துக்கள் பதிவு செய்யும் போது கொஞ்சம் அவை அடக்கம் தேவை, இல்லாவிட்டால் என்னாலும் தனி நபர் விமரிசனம் செய்ய ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் தொடர்மழை!  (31/12/2012) [Views - 2403; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved