Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:44:43 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9792
#KOTW9792
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 15, 2012
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைப்பயணம்! காயல்பட்டினத்தில் உற்சாக வரவேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6058 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரியும், மதுப்பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குமுகமாகவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி (வைகோ) - 10.12.2012 திங்கட்கிழமையன்று உவரியிலிருந்து நடைப்பயணத்தைத் துவக்கினார். 25.12.2012 அன்று மதுரையில் நடைப்பயணம் நிறைவடைகிறது.

14.12.2012 அன்று வைகோ தலைமையிலான நடைப்பயணக் குழுவினர் சுமார் 1000 பேர் நண்பகல் 11.45 மணிக்கு காயல்பட்டினத்தை வந்தடைந்தனர். நடைப்பயணக் குழுவினரை வரவேற்பதற்காக நகரின் திருச்செந்தூர் சாலை, பிரதான வீதி, எல்.எஃப்.ரோடு ஆகிய வீதிகளில் மதிமுக கொடிகளும், தோரணங்களும் பறக்க விடப்பட்டிருந்தன.

துவக்கமாக, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நுழைவாயில் அருகில் வைகோ தலைமையிலான நடைப்பயணக் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அக்கல்லூரியின் நிறுவன தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் வைகோவுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் வைகோவுக்கு சால்வை அளித்தார். பின்னர், கல்லூரி மாணவியரிடையே வைகோ உரையாற்றினார்.







கல்லூரியின் நுழைவாயில் அருகிலுள்ள சாலைப் பகுதியில் - கல்லூரி செயலர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவியர் வரிசையாக நின்று நடைப்பயணக் குழுவினரை வரவேற்றனர். அவர்களிடம் மதுப்பழக்கத்தின் தீமைகளை விளக்கும் பிரசுரங்களை நடைப்பயணக் குழுவினர் வினியோகித்தனர்.





பின்னர், கே.எம்.டி. மருத்துவமனை அருகிலும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அருகிலும் வைகோ தலைமையிலான நடைப்பயணக் குழுவினருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான் வைகோவுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.









பின்னர். காயல்பட்டினம் பிரதான வீதி - சீதக்காதி திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக பாடகர் நெல்லை அபூபக்கர் கட்சியின் கொள்கை முழக்கப் பாடல்களைப் பாடினார்.





மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பின்னர் வைகோவுக்கு மதிமுக நகரச் செயலாளர் பத்ருத்தீன் சால்வையும், காயல்பட்டினம் நகர்மன்ற 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி மாலையும் அணிவித்து கண்ணிப்படுத்தினர்.





நிறைவில் வைகோ சிறப்புரையாற்றினார். எங்கு கண்டாலும் ‘மாமா’ என தன்னை அன்போடு அழைக்கும் காயல்பட்டினம் மக்களின் நட்பு குறித்து புகழ்ந்து பேசிய அவர், மதுப்பழக்கத்தின் தீமைகள், அதற்கு அடிமையானோர் - அவர்தம் குடும்பத்தினர் நிலை, மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் ஆகியன குறித்து விளக்கிப் பேசினார்.



அறியாமைக் காலத்தில் மதுப்பழக்கத்தில் மூழ்கியிருந்த தம் தோழர்களை இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கனிவாகப் பேசி திருத்திய வரலாற்றுக் குறிப்புகளை தனதுரையில் அவர் நினைவுகூர்ந்து பேசினார்.



இந்நிகழ்ச்சியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவரையும் பார்த்து கையசைத்தவாறு காயல்பட்டினத்திலிருந்து வை.கோபால்சாமி தலைமையிலான நடைப்பயணக் குழுவினர் விடைபெற்றுச் சென்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சிங்கத் தமிழன் வைகோ...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [16 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24510

அவர் திமுக வில் இருக்கிற காலத்துலேயே வைகோவுக்கும் நமதூருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. தன் வீரம் மிகுந்த பேச்சாற்றலால் நம்மைக் கவர்ந்த சிங்கம் அவர். மதுவிலக்கு கோரி இந்த சிங்கம் சீறுவதில் தவறில்லை!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இவன் நடக்கட்டும்!
posted by kavimagan (qatar) [16 December 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 24511

இவன் நடக்கின்றான்
அரை நூற்றாண்டு காலமாக!
நம்தமிழர் நலனைக் காக்க
நரை கூடியும் நடக்கின்றான்!

மதியைக் கெடுக்கும் மதுவை எதிர்க்கும்
மதிமுக தலைவனிவன்!
கோடிகள் துறந்து கொடியைக் காக்கும்
கலிங்கப்பட்டி குமரனிவன்!

சுற்றுச் சூழலில் நஞ்சைக் கலந்த
ஸ்டெர்லைட் ஆலையை மூடியவன்!
சுற்றிச் சுற்றி நமக்காய் வாழும்
சுயநலம் இல்லா மனிதனிவன்!

இவன் நடக்கட்டும் - இன்னும்
அரை நூற்றாண்டு காலமேனும்!
செந்தமிழர் சோகம் தீர்க்க
சாகும்வரையில் நடக்கட்டும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கொக்கரித்த போலி அங்கத்தினர் - அமைப்பினர் - பேரவையினர் என்ன சொல்லுகிறீர்கள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [16 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24514

ஒரு கட்சியை சார்ந்த தலைவர் அக்கட்சியின் அடையாள சின்னத்தோடு கட்சி ஆதரவாளர்கள் 1200 பேருக்கும் மேல் தாரை தப்பட்டையுடன் நடந்து வரும் நடை பயணத்தின் போது அவ்வழியில் வாவு வஜிஹா வனிதயர் கல்லூரியின் நிர்வாகம் வயதுக்கு வந்த மாணவிகளை சாலையோரத்தில் வரிசைபடுத்தி வைத்து வரேவேற்றது தவறு...! மேலும் கண்டிக்க தக்கது..! அரசியல் கட்சிக்கும் மாணவிகளுக்கும் என்ன சம்பந்தம்...? கல்லூரி நிர்வாகத்திற்கு வேண்டுமானால் கட்சி தலைவர்கள் தேவைபடலாம்..!

உங்களையும், உங்கள் கல்லூரியையும் கட்சி தலைவர் வாழ்த்தி பேச வேண்டும் என்பதற்காக - உங்கள் சொந்த விளம்பரத்திற்காக இதில் ஏன் மாணவிகளை வீதிக்கு வரும் படி அழைத்தீர்கள்...?

இது தான் நமது சமுதாய கல்லூரியின் லட்சணமோ...?

கல்லூரி மாணவிகளை சாலையோரத்தில் நிறுத்தி இதில் ஈடுபடுத்த செய்தது சமுதாய என்று சொல்லிகொள்ளும் கல்லூரிக்கு உகந்ததல்ல....! இந்த செயலால் பெற்றோர்களுக்கு கல்லூரி நிர்வாகம் மீது மிகவும் அதிருப்தி அளிக்கிறது... அதிருப்தி அடைந்த பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடமும், தமிழக கல்வி அமைச்சரிடமும் தமிழக முதல்வரிடமும் முறையிடலாம் என யோசிக்கிறார்கள்...!

கல்லூரி நிர்வாகம் இது சம்பந்தமாக எந்த சப்ப காரணங்கள் கூறினாலும்...! கல்லூரி நிர்வாகம் செய்தது தவறு... தவறு..தான்...! நடுநிலை வாதிகளே..! நீங்கள் சொல்லுங்கள்...! கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டது தவறா...? சரியா...?

உங்கள் கல்லூரி விளம்பரத்திற்காக நம் சமுதாய (கோச அணியும்) மாணவிகளையும் மற்றும் மாற்று மத சகோதர சமுதாய மாணவிகளையும் வீடியோ - புகைப்படம் மற்றும் பல ஆண்கள் பார்க்கும் அளவுக்கு வீதிக்கு அழைத்து விளம்பரம் தேடியது சரிதானா...?

சமுதாய உரிமைக்ககாகவும், மார்க்க நிகழ்ச்சிக்காகவும், மார்க்கம் அளித்திருக்கும் உரிமையோடு, மார்க்க நெறியோடு ஒழுக்கத்தோடு சில இஸ்லாமிய இயக்கங்கள் பெண்களை வீதிக்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தும்போது கொக்கரித்த போலி அங்கத்தினர் - அமைப்பினர் - பேரவையினர் என்ன சொல்லுகிறீர்கள்...

இதோடு தாங்கள் செய்தது தவறு என உணர்ந்த கொள்ளுங்கள்...? இல்லையெனில் மாணவிகளின் பெற்றோர்கள் கல்லூரியின் நிர்வக்திர்க்கு தமிழக அரசின் கவனத்தின் மூலம் உணர்த்துவார்கள்...!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எதிர்காலத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளை இக்கல்லூரி பின்பற்றுமா?..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [16 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24518

ஒருநல்ல நோக்கத்திற்காக தனி நபர் செய்யும் முயற்சிக்கு ஆதரவு கொடுப்பதில் தவறு இல்லை.

அதே நேரத்தில், ஒரு அரசியல் கட்சி மூலம் கட்சிக் கொடிகளோடு தாரை தப்பட்டை முழங்க வரும் கூட்டத்தை வயதுக்கு வந்த முஸ்லிம் மாணவிகள் முதல் அனைத்து மாணவிகளும் வீதிக்கு வந்து வரவேற்ப்பது என்பது வெறுக்கக்கூடிய விசியம் மட்டுமல்ல வேதனைக்குறிய விசியமும் கூட?

இனி எதிர்காலத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றும் கல்லூரியாக இக்கல்லூரி இயங்குமா? என்ற கேள்விகுறி பிறந்து விட்டது!

அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!

ஆதங்கத்துடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இஸ்லாமிய சட்டங்களே மனித சமுதாயத்துக்கு ஒரே தீர்வு
posted by NIZAR (KAYALPATNAM) [16 December 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24521

பூரண மது விலக்கை நடை முறை படுத்த சொல்லி வைகோ அல்ல யார் வந்தாலும் அவர்களுக்கு வரவேற்பது கொடுப்பதும் அதற்கு ஆதரவு அளிப்பதும் இஸ்லாமிய ஊரில் யதார்த்தம்தான். திராவிட கட்சிகளின் ஆட்சிகள் மாறி மாறி வந்த போதும் யாரும் மதுவிலக்கை வலியுறுத்தவில்லை .ஆனால் இப்ப என்ன ஆச்சோ தெரியல.

வைகோ நடக்கிறார், மதுவின் தீமைகளை பற்றி பாடம் எடுக்கிறார். ராமதாஸ் டாஸ்மார்க் கடை முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துறார். நிலமைய பார்தீங்கலா?

இஸ்லாமிய சட்டங்களை இவர்கள் தெரு தெருவாய் கூவும் அளவுக்கு ஆயிடுச்சுங்க. இதை இவர்கள் உளமார நடத்துறாங்களா? அல்லது அரசயில் ஆதாயத்துக்கா என்பது தெரியல்ல?

இறைவனின் இறைவசனங்கள் மூலம் ஆயிரத்து ஐநூறு வருசங்களுக்கு முன்னாள் தடைசெய்யப்பட்ட மதுவிலக்கை இன்று இவர்கள் வரிந்துகட்டுகிரார்கள் என்றால் மனித வாழ்க்கைக்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு என்பது தெள்ள தெளிவாகிறது.

எப்படியோ நம் ஊரு வந்த வைகோ அவர்கள் நல்லதொரு வரவேற்பை பெற்றார்கள். கல்லூரியில் கொடுத்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவிகளை தவிர்த்து இருக்கலாம். வரும் காலங்களில் இதை போன்ற நிகழ்சிகளில் மாணவிகளை தவிர்ப்பது கல்லூரிக்குதான் பெருமை சேர்க்கும். தமிழன் முத்து இஸ்மாயிலின் கருத்து பதிவு காரமாக இருந்தாலும் அவர் சொல்லும் கருத்து கல்லூரியின் மாண்பையும், நம் இஸ்லாமிய கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டிய கருத்தையே சொல்லுகிறது.

எனவே வரும் காலங்களில் மாணவிகள் விசயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மதுவிலக்கை தமிழக அரசு அமுல்படுத்தினால் எத்தனையோ குடும்பங்களின் வாழ்கையில் ஒளி ஏற்றியதுபோல் இருக்கும்.சிலகோடி வருமானத்தை அரசு இதன் மூலம் இழந்து கோடி மக்களின் வாழக்கையில் புன்னகையை அளிப்பது பல கோடிக்கு சமம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...DCW தொழிற்சாலை
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [16 December 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24522

திரு. வைகோ அவர்கள் நமதூருக்கு வந்த போது கொடிய அரக்கன் DCW பற்றி நமுடைய ஆதங்கத்தை மனுவாக கொடுத்தார்களா என்று தெரியவில்லை. ஏன் என்றால் STERLITE தொழிற்சாலைக்கு எதிராக உச்ச நீதி மன்றம் வரை சென்று வாதாடி வருகிறார். நமுடைய எழுச்சியை இந்த சமயத்தில் காட்டி இருந்தால் நிச்சயம் நமக்கு உதவி இருப்பார் என்பது என்பது எனது அபிபிரயாயம்.

500 கோடி ரூபாய் பேரம் பேச வந்தவர்களை விரட்டி அடித்தவர். நல்ல ஒரு சந்தர்பத்தை நழுவ விட்டோமோ என்ற அய்யபாடு எழுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நெற்றிக்கண் திறப்பினும்
posted by Salai Sheikh Saleem (Dubai) [16 December 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24524

வாவு கல்லூரி நிர்வாகம் என்னதான் சால்ஜாப்புகள் சொன்னாலும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு நேர் எதிராக நடந்த இந்த நிகழ்வுகள் "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே".

எனவே, கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து ஒரு தன்னிலை விளக்கத்தை அல்லது இப்படியெல்லாம் உற்சாகத்தில் நாங்கள் நடக்க மாட்டோம் என்ற ஒரு உறுதி மொழியை எதிர்பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட பெரிய தவறுகளை சுட்டிக்காட்டிய அன்பு இளவல் நட்புடன் தமிழனிற்கு பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...நீதி கேட்டு நெடிய பயணம்,,,
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24526

1971யென்று நினைக்கிறேன். கலைஞர் இரண்டாவது முறையாக முதலைமைச்சர் ஆன போது" கொழுந்து விட்டு எறியும் நெருப்பு வலயத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாள் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்" என்ற வீர வசனத்துடன் மது விலக்குக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினார். அன்று வைகோ அவருடன் இருந்தார்.

சென்ற தேர்தலின்போது புரட்சி தலைவிக்கு சால்வை அணிவித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தபோதும் மதுக்கடைகள் திறந்து தான் இருந்தன. யாருடனும் கூட்டு சேர்ந்தாலும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமுல் படுத்துபவர்களுடன் தான் கூட்டு என்று வைகோவும் அறிவிக்கவில்லை, மதுக்கடைகளுக்கு பூட்டு போட புறப்பட்டுள்ள மருத்துவரும் அறிவிக்கவில்லை.

சுமார் 40 வருடங்களுக்கு பிறகு இரண்டு தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி விட்ட பிறகு இன்று சிலுவை போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. எனவே குற்றங்களுக்கு ஒருவகையில் வைகோவும் மருத்துவரும் உடந்தைதான். ஏன் காங்கிரஸ் கட்சிகூட அதற்கு விதிவிலக்கு இல்லை. இப்போது எல்லோருக்கும் ஞானோதயம் பிறந்திருக்கிறது. BETTER LATE THAN NEVER என்று மனதை தேற்றிக்கொண்டு மதுவை ஒழிக்க புறப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.

இனி வருகின்ற தேர்தல்களுக்கு இதை ஒரு நிபந்தனையாக எல்லா கட்சிகளும் முன் வைத்து போராடினால் மது விலக்கு என்ற உங்கள் இலக்கை இலகுவில் அடைந்திட முடியும். இஸ்லாமிய சமுதாயத்துக்கும் தாய் குலங்களுக்கும் 100 விழுக்காடு உடன்பாடான இந்த மதுவிலக்கு இந்த நாட்டில் மீண்டும் அமுல்படுத்தப்படும் நல்ல நாள் நிச்சயம் வரும்.இறைவன் அதற்கு துணை நிற்பான். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. யானைக்கும் அடி சருகும்.....!!!
posted by s.s.md meerasahib (riyadh) [16 December 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24528

அஸ்ஸலாமு அலைக்கும். பூரண மது விலக்கு என்பது மாதுக்கு மட்டுமல்ல இலக்கு. நம் அனைவரின் இலக்கும்கூட. இதில் வைக்கோ நடைபயணம் முக்கியமானதல்ல. வாவு வஜீஹா மகளிர் கல்லூரி செய்த வரவேற்பு காயலின் கண்ணியத்தின் ஒரு படி சரிவுகண்டதுதான் முக்கியம். உற்சாக வரவேற்பில் உணர்ச்சி வசப்பட்டதுபோல் தெரிகிறது. நிர்வாகம் இதை கண்டிப்பாக நியாயப்படுத்தாது என்று நினைக்கிறேன்.

"யானைக்கும் அடி சருகும்".....!!!

இனி வரும் காலம்களில் காயலின் கண்ணியத்தை கட்டிக்காக்கும் நிர்வாகமாக இருக்கும் என்று நம்பியவனாக வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [17 December 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 24529

கல்லூரி நிர்வாகம் செய்தது சரியா ? என்று வேறொரு இணையதளத்தில் கருத்து பதிவு செய்தேன் . இதை பார்த்த நண்பர் ஒருவர் இவ்வாறு வாதிட்டார் , " ஏற்கனவே குடித்துகொண்டிருக்கும் மூத்த " குடி " மகனை திருத்த முடியாது . வைகோ அவர்களின் குறிக்கோள் , இளைய தலைமுறையினரை குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பதுதான் . அப்படியானால் இளைய தலைமுறையினர் என்பவர் யார் ? பள்ளி , கல்லூரி மாணவர்கள்தான் இந்த வகையில் வருவர் . அவர்களை சந்தித்து இந்த குறிக்கோளை எட்ட வைப்பதுதான் சரி . ஆக , கல்லூரி நிர்வாகம் மாணவிகளை கொண்டு வரவேற்பு அளித்ததில் தவறே இல்லை " என்று வாதிட்டார் .

இவருடைய வாதம் ஒருவகையில் சரியா தவறா என்று யோசிக்க வைத்தாலும் , ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரமாக இது அமைந்ததால் இது தவறு என்றே தோன்றுகிறது . வைகோ அவர்கள் கட்சி சாயம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தால் வரவேற்பு கொடுப்பதில் தவறில்லை என்பது பலரது கருத்துபதிவில் இருந்தும் தெளிவாகிறது .

மேலும் அந்த நண்பர் சொன்னார் , " ஒருசில சமூக ஆர்வலர்கள் , பெண்களுக்கான நல்ல கருத்துக்கள் , குறிக்கோள்களை சொல்ல முற்படும்போது , வயதுக்கு வந்த நம் சமுதாய பெண்களை முன்னிலை படுத்தி , கூட்டத்தை கூட்டி , புகைப்படங்கள் , வீடியோவெல்லாம் எடுத்து , சில சமயம் அந்த பெண்களையும் கூட பேச வைக்கின்றனர் . இப்படி கூட்டத்தை கூட்டுவதைவிட , தொலைக்காட்சி , இணையதளம் , பத்திரிக்கை , நோட்டீஸ் போன்றவற்றின்மூலம் தங்களின் குறிக்கோள்களை எடுத்து கூறலாமே ! கூட்டத்தில் இவர்கள் எடுக்கும் வீடியோ இணையதளத்தில் வெளிவந்து , இந்த பெண்களை பல கோடி மக்கள் பார்க்கும்படி ஆகிறதே ! ஆக , இதற்கு மறுப்பு தெரிவிக்காத நாம் , இந்த வரவேற்பு நிகழ்ச்சியை மட்டும் ஏன் குறைகூற வேண்டும் " என்கிறார் .

நண்பர் கூறியது சற்று யோசிக்க வைத்தது .கல்லூரி நிர்வாகம் செய்தது சரிதானோ என்று மனத்தில் தோன்றியது . வைகோ அவர்கள் அரசியல்வாதியாக இல்லாமல் , தனிப்பட்ட முறையில் வந்து , இது போன்ற வரவேற்பு கொடுத்திருந்தால் தவறில்லை என்றுதான் எண்ண தோன்றுகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [17 December 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24533

காரசாரமான கருத்துப் பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு நல்ல விஷயத்துக்காக கட்சி வேறுபாடுகள் பாராமல் வரவேற்பது குற்றமல்ல! நம் சமுதாய மாணவியர்களும் கண்ணியமான முறையில் முகம் மறைத்து தான் நிற்கின்றனர். விழிப்புணர்வு இளைய சமுதாயத்தை எட்ட வேண்டும் எனும் நோக்கில் வாவு வஜிஹா வனிதயர்க் கல்லூரி பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளரங்கத்தில் வைத்து நடத்தி வருகின்றனர். இந்த வரவேற்புக்கு கல்லூரி நிவாகம் நம் மாணவியரைக் கட்டாயப்படுத்தியதா? அல்லது விருப்பமுள்ளவர் வரலாம் என அழைத்ததா? எனத் தெரிய வில்லை!

மார்க்கம் காயல்பட்டணத்துக்கு மட்டும் சொந்தமல்ல. நமக்கென ஓர் கலாச்சாரம் உள்ளது என்பதையும் நான் மறுக்கவில்லை! இதுவே பிற மாநிலங்களிலோ அல்லது பிற நாடுகளிலோ நடந்திருந்தால் நாம் ஆஹா..ஓகோ வென பாராட்டியிருப்போம். நடந்தது நடந்து விட்டது. இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கல்லூரி நிவாகம் கவனமாக இருப்பது நல்லது.

ஒரு வேளை அக் கட்சியைச் சார்ந்த உள்ளூர் பிரமுகர் ஒருவர் தன் தலைவனிடம் நற் பெயர் வாங்குவதற்காக கல்லூரியின் நிர்வாகிகளோடு தனக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி அவர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தியிருக்கக் கூடுமோ? எனும் ஐயப்பாடு மனதில் தோன்றுகின்றது. அல்லாஹ் தான் அனைத்தும் அறிந்தவன்!

“தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது...தவறு செய்தவர் வருந்தியாகணும்...தப்பு செய்தவர் திருந்தியாகணும்...”

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:கல்வி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது.
posted by Sabeer (Mumbai) [17 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24535

கல்வி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவிகளை தெருவுக்கு இழுத்து வரவேற்பு கொடுத்தது முற்றிலும் தவறு.

இது போன்று வேறு ஒரு அரசியல் தலைவர் இதே காரணத்திற்காகவோ அல்லது சமுதாய நலனில் அக்கறை கொண்டு வேறு ஏதாவது காரணத்திற்காகவோ நடைபயணம் மேற்கொண்டால் அதற்கும் இந்தக் கல்லூரி நிர்வாகம் வரவேற்பளிக்குமா? இதை கல்லூரி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் எந்தெந்த கட்சியைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வரவேற்பு அளிப்பீர்கள்.

இது ஒரு புறமிருக்க பெண்களின் போட்டோக்களை இணையதளத்தில் பிரசுரிப்பதை தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் இந்த இணையதளத்தில் இடம்பெறும் செய்திகளையும் போட்டோக்களையும் சில நாளிதழ்களில் அப்படியே பிரசுரிப்பதாக அறிகிறேன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Meera Sahib (Kayalpatnam) [17 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24536

நிச்சயமாக கல்லூரி நிர்வாகம் செய்தது தவறுதான் கண்டிக்க கூடியது . தனிப்பட்ட அரசியல் கட்சி பிரசாரத்துக்கு கல்லூரி மாணவர்களை படுத்தலாமா? அதுவும் நமது பெண்களை ரோட்டில் நிற்கவைத்து நமது கலாச்சாரத்தை பாழ்படுதலமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by kabeer (chennai) [17 December 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24538

Mr.Vaiko addressing to kayalpatnam regarding banned of alcohol drinks is really appreciated, and we also welcome, but the fact is why the college management making our sister to stand in the road (out of college campus) until the rally has reached the campus???

Did we send our sister for studying? or for politics? why the college management using our sister for their advertisement? if they need to give address they can make assemble inside the college campus and give respect to them..

it is giving very pain of these improper managment and they should think why we send our sister to minority college and why cant in other??????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. அடடா வடை போச்சே.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [17 December 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24542

DCW பிரச்சினை சம்பந்தமாக இவரிடத்திலும் ஒரு செய்தியை அறிவித்திருக்கலாமே. பல பேருக்கு செய்தியை கொண்டு சேர்க்கும் போது யார் மூலமாவது ஒரு பரிகாரம் கிடைத்து விடாதா என்ற ஒரு ஆசையில் தான் இப்படி ஒரு ஆலோசனை.

சரி நாம் அந்த செய்தியை அறிவிக்க வில்லை எல்லாம் நன்மைக்கே. இன்ஷா அல்லாஹு இனி மேல் இது மாதிரி ஒரு சந்தர்பம் வரும் போது உபயோகிக்க முயற்சிக்கவும். வைக்கோன்னு இல்லை எந்த அரசியல் தலைவர்கள் வந்தாலும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Seyed Ismail (Singapore) [17 December 2012]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 24543

I highly recommend the admin of this website to remove the photos from this blog or it could be plagiarized by anyone into social websites like facebook. Later, We can investigate.

@ரபீக் சாச்சப்பா : நீங்கள் சொன்ன "இதுவே பிற மாநிலங்களிலோ அல்லது பிற நாடுகளிலோ நடந்திருந்தால் நாம் ஆஹா..ஓகோ வென பாராட்டியிருப்போம்" கருத்து சரி தான்... இருந்தாலும் நம்ம ஊருக்கு என்று கலாசாரம் பாரம்பரியம் இருக்கிறது இல்லையா... இப்படி கட்சி காரர்களுக்கு முன் வெளியே வந்து நிற்பது புதிது தானே...

உள் அரங்கில் ஒரு அமைதியான விளக்கவுரை அமைத்து இருக்கலாம்... புகை படம் எடுத்து இருக்க வேண்டாம்... அந்நியர்கள் பார்வை படாமல் வீடு போயி சேர வைத்த நீங்கள் இப்படி செய்தது கொஞ்சம் ஆச்சரியம் கலந்த கவலை...

இறைவன் நம் பெண்மக்களை நவீன கால சீற்றத்தில் இருந்து பாதுகாத்து கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வ சல்லம் கற்று தந்த வழியில் செலுத்துவானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [17 December 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24544

மக்களுக்காக தெருவில் இறங்கி போராடும் தலைவர்களில் ஒருவர் மரியாதைக்குரிய வைகோ அவர்கள். இந்த மது அரக்கனிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு அவர் செய்து வரும் நடைப்பயணம் வெற்றியாகவும், பிரயோசனமாகவும், நன்மையாகவும் அமையட்டும்.

இந்த நடைப்பயணத்தில் நம் கல்லூரி கொடுத்த உற்சாக வரவேற்பு மிகுந்த சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது.

ஆனால், சர்ச்சையை ஏற்படுத்தும் அளவு இந்த நிகழ்வு அமைந்த்ததா என்றால், இல்லவே இல்லை. அப்படி என்ன சீர்கேடு நடந்து விட்டது. அப்படி என்ன கண்ணியம் கெட்டு விட்டது, புரியவில்லை.

இந்த கல்லூரில் நடைபெற்று வரும் எந்த நிகழ்ச்சிக்காவது, அல்லது மாணவிகள் புரிந்து வரும் சாதனைக்காவது யாராவது பாராட்டி கருத்து பதிவு செய்தது உண்டா? ஆனால் இன்றோ கண்ணியமாக கோசாவுடன் நடைபெற்ற நிகழ்வுக்காக இப்படி கூச்சல் போடுவது வியப்புதான். காரணம் அரசியலா.. அல்லது.. பிடிக்காத மருமகள் செய்யும் செயலா...!!

நாளை வரக்கூடிய செய்திகளும் மட்டும் கருத்துக்களும்.

- வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் NSS மாணவிகள் காயல் நகரின் கடற்கரையையும், நகரையும் சுத்தப்படுத்தி, சீர்படுத்தினார்கள்.

** கருத்து:- வன்மையாக கண்டிக்கின்றேன். கோசா பெண்கள் எப்படி கடற்கரையை சுத்தப்படுத்தலாம். கண்ணியம் கெட்டுவிட்டது.
-----------------------------
- வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி, பல்கலைக்கழக ஒட்டு மொத்த ரேங்கையும் தட்டிச்சென்றது. அவர்களை மாநில ஆளுநர், அமைச்சர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

** கருத்து:- அது எப்படி நம் பெண்கள் மேடையில் ஏறி பரிசுகள் வாங்கலாம். அதை எப்படி புகைப்படம் எடுத்து பிரசுரிக்கலாம். பலர் பார்க்கின்றார்களே.
---------------------------------------
- வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி மாணவிகள் பலர் குரூப் தேர்வு எழுதி, IAS ஆக தெரிவாகியுள்ளார்கள். அவர்கள் கூடிய விரைவில் மாவட்ட துணை ஆட்சியாளராக பொறுப்பு எடுக்க உள்ளார்கள்.

கருத்து:- ஒரு கோசா பெண் எப்படி இது மாதிரியான தேர்வுகள் எழுதலாம், எப்படி மற்ற ஆண்களுடன் வேலை செய்யலாம். கலாச்சாரம் கெட்டுவிட்டது. இதற்க்கு பயிற்சி அளித்த கல்லூரியை கண்டிக்கின்றேன்.

இப்படியே கருத்துக்களை ஜல்லி அடிக்க பலர் உள்ளார்கள்.

ஆக, என் கருத்து இதுதான். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. இருந்தால் மன்னிக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Politics and Culture
posted by Riyath (HongKong) [17 December 2012]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 24548

No obection for grand welcome to Mr.Viko and his troop to Kayal for good reason which will benefit only to MDMK in politics. Mr. Viko is a good leader who missed to stop when he had chances while joint with ruling parties.

College management should consider the valuable time and energy of students to grow their knowledge to support their own family will make our country rich. Atleast avoid crossing our beautiful culture if they try to educate students about politics.

As we know in the present politics, leaders are not worrying about people rather than saving their own family and parties(companies).

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by nahvi.s.a.ishak lebbai (abudhabi) [17 December 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24549

நமது ஊரு ஷரிஅத்தின் கோட்டை இதன் கண்ணியம் பேணப்பட வேண்டும் பெண்களை சாலையில் நிறுத்தியது மிக பெரிய தவறு இது இஸ்லாமிய ஷரிஅதில் ஹராம் நமது பெண்களை இது போன்று சாலையில் நிறுத்தாமல் பாதுகாப்போம் இஸ்லாமிக் ஷரியத்தை பேணுவோம் ஊரின் கலா சாராத்தை பாதுகாப்போம்

நஹ்வி sa இஸ்ஹாக் இப்னு நஹ்விஆலிம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [18 December 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 24556

அஸ்ஸலாமு அழைக்கும்

இது சரி என்று வாதிடுவார்கள் சற்று சிந்தித்து பாருங்கள். ஒரு அந்நிய ஆன் நம் பெண்களிடம் அருகாமையில் சென்று நோட்டீஸ் குடுகிறார்கள். அந்த நோட்டீஸ் அவர்களுடைய போன் நோம்பெரையும் எழுதி கொடுத்து இருக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ,

அடுத்து

இதே வைகோ அவர்கள் அன்று ஒரு நாள் கயல்பட்டினதுக்காக , DCW வை எதிர்த்து நான் குரல் குடுக்க போகிறான் என்று சொல்லி விட்டு ஒரு நாள் DCW வை சென்று சந்தித்தார் , அதற்கு பிறகு தண்ணீரில் எழுதிய கதையாக மாறி விட்டது.

அடுத்து

எம் காயல் பெண்களை கல்லூரிக்கு படிக்கதான் அனுபிநோமே தவிர எங்கள் பெண்களை விளம்பர படுத்த அல்ல.

அடுத்து

ஒரு சகோதர் மேடை எரி பரிசுகள் வாங்கு கிறார்கள்/ அவர்களை போட்டோ யடுகிஎரார்கல் அது சரியா தவறா என்று வினா எழுப்புகிறார் ,

அவ்வாறு வினா எழுப்பியவர் அதை தடுக்க முயற்சி எடுக்க வில்லை தவறி விட்டார் ,

இன்று ஏன் போன்ற காயலின் கண்ணியத்தை காக்க முயற்சி செய்கிறோம் , இது போன்று தவறு இனிமேல நடக்க கூடாது , என்று தான் நாங்கள் விவாதம் செய்கின்றோம்.

கல்லூரிஇல் படம் படித்து குடுங்கள் எங்கள் பெண்களை வைத்து நீங்கள் விளம்பர படுத்தி , நாசம் செய்யாதீர்கள்.

இப்படிக்கு
Seyed Mohamed Sayna
Kayal Iikiya Mandram
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Jaffer Sulaiman (Bangalore) [25 December 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 24792

Salaam to all...

This is not a good one in islam as wel as not our culture..... Management of college should take care of our girls and they wont allow these kind of activities in upcoming future..... our aabaakal didnt teach this kind of activities


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved