Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:35:38 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9713
#KOTW9713
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 30, 2012
DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டம்! கடையடைப்பு முழு வெற்றி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3231 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நடைபெற்ற கடையடைப்பு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah ) [30 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24242

அல்ஹம்துலில்லாஹ் !!!

அடிக்க அடிக்க தான் அம்மியும் நகரும்... அது முதல் அடியிலயே நகர வேண்டும் என்று நினைப்பது அகம்பாவம்.. ... கடைசி அடியில் தான் நகரும் என்று இருப்பது அறிவீனம்!! தொடர்ந்து அடித்து கொண்டே இருப்போம்.. இறைவன் நாடும் அந்நாளின் இந்த மனிதனை அழித்து பணம் தின்னும் முதலாளிகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போவார்கள் . .

அந்த நாளை எதிர்பார்த்து !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நன்றிகள் பல ...
posted by Jahir Hussain VENA (Bahrain) [30 November 2012]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 24243

அல்ஹம்து லில்லாஹ் ...

போராட்டம் வெற்றி பெற உழைத்த அணைத்து தரப்பு மக்களுக்கும் ..நன்றிகள் பல....

இது நமது தொடக்கமே ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [30 November 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 24245

போராட்டம் வெற்றி பெற அயராது உழைத்த அணைத்து மக்களுக்கம் எல்லாம் வல்ல இறைவன் நற்கூலி வழங்குவானாக ஆமீன்..

என்றும் ஊரு நலன் நாடும் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வெற்றி நமக்கு,
posted by M.S.ABDULAZEEZ (H k) [30 November 2012]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 24254

களகம் போறிந்தால்தான் நியாயம் பிறக்கும். இதுதான் நமது முதல் வெற்றி இதற்காக போராடிய மற்றும் ஒத்துழைப்பு ஆதரவும் தந்த யாவருக்கும் என் நன்றிகள் இதன் முழு வெற்றியை நாம் யாவரும் விரைவில் கண்டிட அல்லாஹு அருள் புரிய ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...அல்ஹம்துலில்லாஹ்
posted by மஹ்மூது ரஜ்வி (தம்மாம்) [30 November 2012]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24257

அஸ்ஸலாமுஅலைக்கும்,

நமது அறவழி போராட்டத்தினை நல்ல முறையில் நடக்க செய்த வல்ல அல்லாஹ்விற்கே எல்லா புகழும் புகழ்ச்சியும் உரித்தாகுக, இப்போராட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி மேலும் நம் போராட்டத்திற்குரிய நல்ல முடிவினையும்வல்ல அல்லாஹ் தந்தருள்புரிவானாகவும் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

மஹ்மூது ரஜ்வி(முன்னாள் செயலாளர் அல்-அமீன் நற்பணிமன்றம்)

தம்மாம்,சவூதிஅரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by noohu thamby (tanzania) [30 November 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 24259

இந்த போராட்டம் வெற்றிய்கதான் அமையும் என்பது நன்றாக தெரியும், இப்படி பட்ட போராட்டத்தை யார் நடத்துவர் என்பதுதான் எல்லா மனதிலும் இருந்த ஒரு கேள்வி.

ஊர் மக்களுக்காக நடத்த பட்ட இந்த போராட்டம், இது முடிவு இல்லை ஆரம்பம்,

நடத்தி தந்த நண்பர்களுக்கு மணம் உருகிய நன்றியும் பாராட்டுகளும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [30 November 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24264

எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே.

முதல் படி தான் எடுத்து வைத்துள்ளோம், அடுத்த படிகளுக்கும் வல்ல ரஹ்மான் துணை இருப்பான், வெற்றியை தருவான். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Reஉயிர் காக்க புறப்பட்டிருக்கும் உன்னத போராட்டம்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [30 November 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24265

எப்பேர்பட்ட புண்ணிய காரியமும் எளிதில் எவருக்கும் கைகூடுவதில்லை அதற்கென்று ஒரு எதிரியோ ஒரு சக்தியோ இலைமறை காயாக எதிர்த்து கொண்டேதான் இருக்கும் ! அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நம் இலட்சிய பயணத்தில் வீறுநடை போட வேண்டும்!
இது வருமையையோ, வாழ்வின் நெருக்கடிக்கு உதவி கோறியோ போராடும் போராட்டமல்ல.உயிர் காக்க புறப்பட்டிருக்கும் உன்னத போராட்டம்!.

புனிதமும், புண்ணியமும் கலந்த ஒரு வாழ்க்கையின் உயரிய வழிகாட்டியாக விளங்கும் நம் இஸ்லாம் மார்க்கம் இன்று உலகம் முழுவதும் பரவி உன்னத நிலையை அடைந்திருக்ககிறது என்றால், அதற்காக அன்று நம் அரும்பெரும் தூதர்கள் எத்தனை வருடங்கள் பாடுபட்டார்கள்!

சுதந்திர வாழ்க்கை, சிந்தனை ,செயல்,சொல் எழுத்து என்ற அத்தனை உரிமையும் அவ்வளவு எளிதாக நாம் வாழும் இப்பூமிக்கு கிடைத்ததா? அந்நிய ஆதிக்க பிடியில் இருந்து அவ்வளவு எளிதில் வெளி வர முடிந்ததா? எவ்வளவு போராட்டங்கள்,எத்தனை வருடங்கள் போராடினோம்!

இன்று நம் இதயம் குளிரும் இந்தய சுதந்திர மண்ணில் உலா வருகிறோம் என்றால் அது பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் நல்ல ஒற்றுமையுடனும் போராடியதால் கிடித்த உண்மை வெற்றி!

அதே உண்மை வெற்றியை, உன்னத வெற்றியை நாம் பெரும் காலம் வெகு தூரமில்லை!

பெயர் குறிப்பிடாமல் போட்ட மொட்டை நோட்ஸ்சை எல்லாம் காண்டு கொள்ளவே கூடாது. அவர்கள் உண்மையான ஆம்பிளையாக இருந்தால், நம்மை நாடி வந்து, நச்சி தன்மை உள்ளதா? கலர் மாறும் தண்ணீரின் தன்மை என்ன ? உண்மையில் சுத்திகரிக்கப்பட்டதுதானா ?என்கின்ற விபரத்தையும் ,ஆதாரத்தையும் அல்லவா கேட்டிருப்பார்கள்!

அவர்கள் கேட்டு நாம் கொடுக்கவில்லை என்றால், இந்த நோட்டீஸ் போட்டதிற்கு அர்த்தம் உண்டு. அதை விட்டு விட்டு,பொன்னத்தனமாக எந்த பெயரும் போடாமல், நம் புனித மார்க்கத்தையும் மறைமுகமாக சாடியிருக்கும் , இச்சின்னபுத்திக்கு சொந்தக்காரர்கள் சாத்,சாத் அந்த அயோக்கிய நிர்வாகமே!

உலகில் 5 அல்லது 10 சதவீகித மக்கள் மட்டுமே சைவத்தை உண்பவர்களாக இருக்கிறார்கள், இந்த துதிபாடிகளின் கூற்றுப்படி பார்த்தால் உலகில் 90 சதவிகத மக்களுக்கு அசைவம் மட்டும் உண்பதால்தான் கேன்சர் வருகிறது என்று உலக அறிக்கை கூறவேண்டுமே?

ஒரு வேலை அந்த உலக விஞ்சானிகள் இந்த ஓய்வூதியம் பெறும் DCW ஊழியர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறார்களோ, என்னவோ? அவர்கள் கும்பிடும் கடவுள் தான் அவர்களுக்கு அறியுரத்தனும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved