Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:15:06 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9434
#KOTW9434
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 22, 2012
எல்.கே.மேனிலைப்பள்ளி காவலர் சுடலை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4482 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் காவலர் சுடலை என்ற எம்.சுடலை முத்து இன்று அதிகாலை 04.00 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 62.

காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இவர், சுமார் 40 ஆண்டு காலம் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் காவலராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். அதன் பிறகும், தான் பணி செய்த பள்ளியை விட்டும் பிரிய மனமின்றி, நேற்றிரவு வரை பள்ளிக்கு தொடர்ந்து சேவையாற்றி வந்துள்ளார்.

இவர், மந்திரம் என்பவரின் மகனும்,
பலவேசம் என்பவரின் கணவரும்,
சின்னத்துரை, முத்துக்குமார் என்ற மொகுதூம், மந்திரமூர்த்தி, செந்தில், சரவணன் (காயல்பட்டினம் அஞ்சல் அலுவலக அலுவலர்), ராசாத்தி, செல்வி, மணிமாலா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அவரது உடல், விசாலாட்சியம்மன் கோயில் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் துளிர் பள்ளி அருகிலுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் உதவி:
M.சதக் & மாஸ்டர் கம்ப்யூட்டர் மாலிக்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by H.M. Shafiullah (Chennai) [22 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22967

Mr. Sudalai is a humorous and nice gentleman. He was not only working for his own welfare but also for the welfare of LK HSS from the initial stage.

He maintained a good rapport and relationship with Kayal community.

Regards
Shafiullah
Chennai


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by L.A.K.Buhary (Hong Kong) [22 October 2012]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 22971

அண்ணன் சுடலை அவர்களது மறைவு குறித்து அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...!

மறைந்த அன்னார் மாணவர்களிடத்தும்,ஆசிரியர்களிடத்தும், பிற மக்களிடத்தும் கலகலப்பாகவும் நகைச்சுவை ததும்ப பழகக்கூடியவர் ஆவார்கள். பணியிலிருந்து சட்ட முறைப்படி ஓய்வு பெற்ற பின்னரும் இறுதி வரை பள்ளிக்கு வந்து தன் கடமையை தொடர்ந்திருக்கிறார் எனும் செய்தி படிக்கும் போது தன் கடமையின் மீதான பற்று - (Dedication) அவரை எந்த அளவுக்கு ஈர்த்திருக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள்...!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [22 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22972

திரு சுடலை அவர்கள் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே எல்கே பள்ளிக்கு பழைய non teaching staff ஆவார். அப்போது எல்கே அப்பாவிற்கு மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களில் இவரும் ஒருவர். சம்பளத்திற்கு மட்டுமே பணியாற்றாமல் உளமார ஒரு கல்வி சேவை நிறுவனத்திற்கு தொண்டாற்றியவர். நாங்கள் அவருக்கு கொடுத்த தொல்லைகள் தான் எத்தனை எத்தனை!!!

அப்போது எல்கே பள்ளியில் தான் ஊரின் சங்கு அமைக்கப்பட்டிருந்தது மேலும் திரு சுடலைதான் பொறுப்பாளர். சங்கு ஒரு நாளைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஊதப்பட வேண்டும். ஆனால் அவர் இல்லாத சமயம் பார்த்து நங்கள் எங்கள் கைங்கரியங்களை பலதடவைகள் காட்டி வழமைக்கு மாறான நேரங்களில் சங்கை இயக்கி ஊரையே கலக்கி இருக்கிறோம். அப்போதெல்லாம் அவர் தனது கனத்த உடலை தூக்கிக்கொண்டு எங்கிருந்தாலும் இளைக்க இழக்க ஓடோடி வந்து சங்கை செயலிழக்க வைப்பதை நாங்கள் ஒளிந்திருந்து பார்த்து சந்தோசப்பட்ட அந்த தருணங்கள் என் மனதில் இப்போதும் திரைப்படமாய் ஓடுகிறது.

நாங்கள் SSLC படிக்கும் போது இரவுப்பாடம் சரியாக படிக்கிறோமா என்று வேவு பார்க்க வருவார். பல சமயங்களில் நாங்கள் செய்த சேஷ்டைகளை மர்ஹூம் எல்கே அப்பாவிடம் சொல்வதாக மிரட்டி சொல்லவும் மாட்டார். காரணம் எல்கே அப்பா தங்களது பிரம்பால் எங்களை சாத்தி விடுவார்கள் என்பதால். இதை அவரே பலதடவை எங்களிடம் சொல்லியும் இருக்கிறார்.

நல்ல மனிதர், நல்ல பல குணங்களுக்கு சொந்தக்காரர். எல்கே பள்ளியின் சொத்துகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்களுக்கு என் குடும்பத்தின் சார்பில் இரங்கல்களை இதன் மூலம் பதிவுசெய்கிறேன்.

அன்னாரின் குடும்பத்திற்கு பள்ளியின் மூலமோ அல்லது தனிப்பட்ட முறையிலோ யாரும் உதவுவதாக இருந்தால் தயவு செய்து என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இரங்கல்
posted by NIZAR AL (kayalpatnam) [22 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22974

மரியாதைக்குரிய சுடலை அண்ணன் அவர்கள் இறந்த செய்தி நிச்சயம் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருக்கும்.அணைத்து மாணவர்களிடம் மிகவும் அன்பாகவும்,அக்கறையோடும் இருந்த அண்ணன் அவர்களை இழந்து வாடும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.

YOURS,
NIZAR AL
DEEVU STREET,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [22 October 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22976

நமது எல்.கே.மேனிலைப்பள்ளியில் சுமார் 40 ஆண்டு காலம் காவலர் பணி செய்த சுடலை என்ற எம்.சுடலை முத்துவின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.K.Shameemul Islam (Chennai) [22 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22977

சுடலை அண்ணா............

உங்களை எங்களால் மறக்க முடியாது.

எல்.கே. அப்பாவிற்கு மட்டுமல்ல. எங்களுக்குமே நீர் மிகவும் பிரியமானவர்.

எல்.கே. உயர் நிலைப்பள்ளியில் படிப்பதற்காகவும் போதிப்பதற்காகவும் எத்தனையோ பேர் வருவார்கள். போவார்கள். ஆனால் நீங்கள் மட்டும் அங்கேயே தங்கி எங்களின் வாழ்விற்கு ஒளி ஏற்றினீர்.

நாங்கள் தவறு செய்தால் மெதுவாக அதை நோட்ட மிட்டு தலைமை ஆசிரியரிடம் (அன்று திரு. ஞானையா) புகார் தருவீர்.

நேரடியாகத் தட்டிக்கேட்பதிலும் நீர் ஒன்றும் சளைத்தவர் அல்லர். ஐயா, நாங்கள் பல நேரம் உங்களை ஏதேதோ பேசிய ஞாபகம் இப்போது நினைவுக்கு வருகிறது. பொறுத்துக் கொள்ளுங்கள் ஐயா. படித்து முடித்த பிறகு எப்போதாவது நாங்கள் பள்ளிக்கு வரும்போது சிரித்துக் கொண்டே எங்களை நலம் விசாரிப்பீர். எதையும் எதிர்பார்த்துப் பேசமாட்டீர்.

ஒரு நல்ல மனிதர் நீர்.

உங்கள் பிரிவால் வாடும் உங்கள் குடும்பத்தவர்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
மற்றும் என்னுடன்
1989 -ம் ஆண்டு வரைப்படித்த
மாணவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. condolence
posted by syedahmed (GZ,China) [22 October 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 22979

I was rudely shocked to know about the sudden demise of Mr.Sudalai . He was such lovable person among all the students in L.K.school and also the kayal community. His death has caused a grievous loss not only to his family but to all of us. May his soul rest in peace.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [22 October 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 22980

நல்ல மனிதர் மாணவர்களிடம் பண்புடன் நடந்து கொள்பவர். இந்த துயர செய்திக்காக அவர்களின் குடும்பதினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Cnash (Makkah ) [22 October 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 22981

அற்புதமான மனிதர் !! மறக்க முடியாத சுடலை அண்ணே!! எத்தனையோ என்போன்ற மாணவர்கள் கொடுத்த தொல்லைகளை எல்லாம் ஒரு பெற்றோரில் நிலையில் இருந்து பொறுத்து கொண்டவர். நைட் ஸ்டடி யில் எங்களுடன் அவரும் தூங்காமல் பப்ளிக் எக்ஸாம் வேலைகளின் தன் குடும்பத்தை விட்டு வந்து எங்களுடன் இருந்து எத்தனை இரவுகளின் வெருந்தேயிலை போட்டு தந்து தூங்க விடாமல் கண்காணித்தவர்!! சபியா கம்மாவிற்கும் சுடலை அண்ணனுக்கும் கொடுத்த தொல்லைகள் தான் எத்தனை!!!

இப்போதெல்லாம் 8 மணிநேரம் கொடுத்த சம்பளத்திற்கே பணியாற்ற மறக்கும் அரசு அலுவலர்கள் மத்தியில் 18 நேரம் பள்ளி கூடமே கதி என்று பணியாற்றி பணி விடை பெற்ற பின்னும் பணியாற்றிய உங்களை போல் சிறந்த மனிதரை காண்பது அரிது!!!

உங்களை இழந்து தவிக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் உங்கள் குடும்பம் என்று நீங்கள் நினைத்த எங்கள் LK பள்ளி ஆசிரியர் முன்னாள் இன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. கண்ணீர் முட்டுகிறது...
posted by S.K.Salih (Kayalpatnam) [22 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22983

அன்பின் சுடலை அண்ணா...!

உங்கள் உயிர் பிரிந்துள்ள இத்தருணத்தில், நாங்கள் பள்ளிப்பருவத்தில் செய்த அத்தனை குறும்புகளும் - தாங்களுட்பட பள்ளியின் அனைத்து அலுவலர்கள் - ஆசிரியர்களுக்கு அளித்த தொந்தரவுகளும் மனக்கண் முன்னே நிழலாடுகிறது...

உங்களுக்கே நாங்கள் எத்தனை தொந்தரவுகள் செய்தோம்...? ஏன் அண்ணா ஒருமுறை கூட எங்களை கை நீட்டி நீங்கள் அடிக்கவில்லை? அன்றிருந்த எங்கள் பெற்றோரும் இன்றிருக்கும் பெற்றோர் போலல்லவே...? “அடேய்! அந்த அமைதியான மனுஷனிடத்திலா அடி வாங்கினாய்?” என்று எங்கள் வீட்டாரும் எங்களைத்தானே தண்டித்திருப்பார்கள்? ஏன் அண்ணா எங்களை அடிக்கவில்லை?

அங்கு தாங்கள் பணிபுரிந்த 40 ஆண்டு காலத்தில், எங்கள் முந்திய தலைமுறைக்கும் தாங்கள் அண்ணன்தான்! எங்களுக்கும் அண்ணன்தான்!! எங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் அண்ணன்தான்!!! ஆனால், உங்களை “சுடலண்ணா” என்று வாயார அழைக்க - தங்கள் இறப்பிற்கு முன் எனக்கு ஆண் மகவை இறைவன் அளிக்காதது - நான் பாக்கியமற்றவன் என்பதையே காட்டுகிறது!

எங்களைக் கண் விழித்து படிக்க வைத்து, எந்த நிர்ப்பந்தமும் இல்லா நிலையிலும் நீங்களும் கண் விழித்தே இருப்பீர்களே...? ஞானையா சார் ஹெட் மாஸ்டர்! அவர் கண் விழிப்பது அவர் பொறுப்பு என்றிருந்திருக்கலாம்... உங்களுக்கு ஏனன்னா அந்த வேண்டாத வேலை? அதனால்தான் இன்று பலர் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், பல்துறை வித்தகர்களாகவும் மாறினரோ...? ஆம், பள்ளியில் தங்களது நடவடிக்கைகள் எங்களைப் பொருத்த வரை வேண்டாத வேலைதான்! (அன்று!) ஆனால், அன்று அதை நீங்கள் செய்யாதிருந்திருந்தால், இன்று நாங்கள் எங்கள் குடும்பத்திற்கும் - சமூகத்திற்கும் வேண்டாதவர்களாகியிருப்போமே...???

அண்ணா, எங்கள் யாவரின் முன்னேற்றத்திலும் உங்கள் மூச்சுக்காற்று உள்ளடங்கியிருக்கிறது...

ஒருநாளும் எங்களிடம் கோபப்பட்டுப் பேசியதில்லையே...?

ஒருநாளும் எங்களைக் கவனிக்கத் தவறியதில்லையே...?

தேவைப்படும்போதெல்லாம் எங்கள் பெற்றோரை அணுகி எங்களைப் பற்றி வத்தி வைக்காமல் இருந்ததில்லையே....?

ஏனண்ணா இவ்வளவு சீக்கிரம்...??? சில தினங்களுக்கு முன்தான் இக்ராஃ வேலையாக வந்து உங்களைப் பார்த்துச் சென்றேன்... என்னிடம் ஏனண்ணா ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை உங்கள் மீளாப் பயணம் குறித்து...? (அது சரி! உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லாமலா சென்றிருப்பீர்கள்...?)

நேற்றிரவு 01.30 மணியளவில் பள்ளியில் தாங்கள் காவலிருக்கையில் தங்கள் நெஞ்சு வலித்திருக்கிறது... உறவினர்கள் உங்களை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதும் கூட, “பள்ளிக்கூடத்தை நல்லா பூட்டிடுங்கப்பா... யாரும் நுழைஞ்சிடப் போறாங்க...” என்று அந்த நெஞ்சு வலியிலும் சொன்னீர்களாமே...? அப்படியாண்ணா???

ஒன்னு மட்டும் உறுதியாகச் சொல்வேன்... யார் எப்படியோ... நான் டென்த் பாஸானதும், ப்ளஸ் டூ பாஸானதும் உங்கள் ஒத்துழைப்பால்தான் அண்ணா! என் வாழ்நாளுள்ள வரை இதை நான் மறக்கவே மாட்டேன்!!!

உங்கள் குடும்பத்திற்கு அனுதாபம் சொல்வோர் எனக்கும் சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கத்துடன்,

கண்ணீர் மல்க
உங்கள் தம்பி எஸ்.கே.ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by nizam (kayalpatnam) [22 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22985

விசுவாசம் என்றால் எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்கும் இந்த கலியுகத்தில் ஒரு பள்ளியையும் பள்ளி மாணவர்களையும் உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய தன் உயிர் மூச்சி உள்ளவரை விசுவாசகமாக பணியாற்றிய மாமனிதர் மறைந்து விட்டார். அவரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Shaik Dawood (MALDIVES) [22 October 2012]
IP: 123.*.*.* Maldives | Comment Reference Number: 22989

நல்ல மனிதர் மாணவர்களிடம் பண்புடன் நடந்து கொள்பவர். இந்த துயர செய்திக்காக அவர்களின் குடும்பதினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 October 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22990

சுடலை அண்ணன்..!!! மறக்க முடியாத ஒரு அற்புத மனிதர்.!!

அவர்களின் மரண செய்தியை அறிந்ததும் உண்மையில் மனதில் ஒரு வெறுமை உண்டானதை அறிய முடிகின்றது.

அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் என்னுடைய அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்.

அண்ணனை நினைத்ததும்.. பழைய நினைவுகள் தூண்டப்பட்டு விட்டன.

கண்டவுடன் " சியா.. நல்ல இருக்கியாப்பா..! " என்று பெயரை நினைவு வைத்து விசாரிப்பார்.

* பல பிரச்சனைகளில் அடியேனை, காட்டிக்கொடுத்து மாட்டிவைக்காத நல்லவர்.

## மிகச்சிறுவனாக இருந்த சமயம், எல்.கே. அப்பாவின் காரில், ஹாரனை பிரஸ் பண்ண, ஹாரன் பட்டன் சனியன். அப்படியே ஸ்ட்ரக் ஆக, ஹாரன் தொடர்ந்து அலற, சுடலை அண்ணன் பார்த்து விட, ஒட்டு மொத்த தெரு பசங்களையும் எல்.கே. அப்பாவின் முன் நிறுத்தப்பட்டு விசாரணை நடக்க, பயத்துடன் அனைவர்களும் நடுக்கத்துடன் நிற்க.. அண்ணன்.. காட்டிக் கொடுக்க வில்லையே...!

## பள்ளியில் இரவுப்பாடம் தங்கி படிக்கும் சமயம், போட்ட கூத்துக்கு, வீட்டிலும் பள்ளியிலும் மண்டகப்படி நடைபெறாமால் காத்த பெருமை இவருக்கு உண்டு.

## நடு இரவில் அனைத்து கட்சி கொடிகளையும் அரைக்கம்பத்தில் கட்டிவிட்டு நாங்க வர, பிரச்சனை பெரியதாக ஆக, கட்சிகாரர்கள் எங்களின் மேல் புகார் தெரிவிக்க, சுடலை அண்ணன்.. ஒரே பிடியாக.. " நான் அனைத்து கேட்களையும் பூட்டி, மாணவர்கள் கூடவே இருந்தேன். ஒருத்தர் கூட வெளியில் செல்லவில்லை.. "என்று ஒத்தைக்காலில் நின்று விட்டார். அப்புறம் என்ன.. அவரிடம் மட்டும் பாட்டு கிடைத்தது.." ஏலே.. இப்படி எல்லாம் செய்யாதங்கலே..!!" என்று கூலாக பாட்டு விடுவார்.

## இப்படி.. பல விசயங்களை பட்டியலிட்டால்.. அப்புறம் சங்கடம் தான், எனக்கும்.. பலருக்கும்.

ஆக, பலருடைய ரகசியங்களை மனதில் பூட்டி வைத்து இருந்த இதயம்.. இன்று ஓய்வு பெற்று புதைந்து விட்டது., கூடவே பல நூறு ரகசியங்களும்.

கவலையுடன்,
சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...குடும்பத்தில் ஒருவர்
posted by ahmed meera thamby (makkah) [22 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22995

திரு சுடலை அவர்களின் ஆத்மா சாந்தி பெற, அவர்களின் குடும்பம் சாந்தி பெற கடவ்ளை வேண்டி கொள்ளுவோம்.

சலீம் காக்கா சொல்வது போல் எனக்கும் ஒரு சம்பவம் SSLC EXAM NIGHT STUDY இன் போது உறவை காத்த கிளி படம் பார்க்க போனோம் திரும்ப ஸ்கூல் வந்த போது சத்தம் போட்டு அவர்(மரியாதைக்கு உரிய அண்ணன்)சொன்ன புத்திமதி இன்றும் நான் மறக்கவில்லை.

ஏலே!!!!

உன் குடும்பத்தை காக்கும் கிளியா இருக்க நல்ல படிளே இப்படி படம் பார்த்து திரியாதே என்றார். இது போல் மனிதர்களை இந்த காலத்தில் நான் கண்டது பாக்கியமே !!!

நாம் எல்லோரும் அவர்களுக்கு பிராத்தனை செய்ய கடமை பட்டுள்ளோம்

நன்றி வணக்கம்

அஹ்மத் மீரா தம்பி
(அபூ முனவ்வரா)
புனித மக்காஹ் அல்ஷுகதா ஹோட்டல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by yoosuf (dubai) [22 October 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22999

அண்ணன் சுடலை அவர்கள் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது . அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்.

யூசுப் (முன்னாள் மாணவர் எல் . கே . மேல்நிலைப்பள்ளி )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ...?
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [23 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23003

தாமரை ஸ்கூலுக்கு ஒரு பகுல்(பவுல்) பெரிய ஸ்கூலுக்கு சுடலை அண்ணன்! மூன்று தலை முறைகளைக் கண்ட புன்னியவான்! சபியா கம்மாவின் வாய் துடுக்கில் சுடலை அண்ணன் சூடாவது சுவரசியமாக இருக்கும்.திரு ஞானய்யாவுக்கு மட்டுமல்ல மூச்சுக்கு முந்நூறு தடவை எல்.கே. அப்பா சுடலையைத் தான் அழைப்பார்கள்.அப்பா அவர்களின் வலக்கரமாக செயல்பட்டவர்.

பள்ளிப் பருவத்தில் மறக்க முடியாத சிலர் அதில் அமரர் சுடலை அண்ணனும் ஒருவர். நெட்டை கொக்கு வாத்தியார் ஒன்னும்... ஒன்னும் ரெண்டு,
இரவுப்பாட சீட்டில் தூங்கிக் கொண்டே கையெழுத்து போடும் கம்சா மெய்தீன் சார்
மிருதங்கம் வாசிக்கும் அப்பன் சார்
ஆர்மோனியப் பெட்டி எஸ்போன் சார்
வேஷ்ட்டியை பின் புறமாக சற்று உயர்த்திகைகட்டி நிற்கும் தங்கராஜ் சார்
இசைப்பிரியர் ஹெட் மாஸ்ட்டர்-தங்க பாண்டி சார்
என்றும் இளமை ஹல்லாஜி சார்
எம்ஜிஆர் அனுதாபி அலாவுத்தீன் சார்
நாக்கை கடித்து நச்சுன்னு போடுற நெய்னா முகம்மது சார்
தேனாய் தீம்பழமாய் எனும் செய்யுளை மூச்சுவிடாமல் படிக்கும் ஜோசப் சார்
ஆங்..ஆங்.. லைனாப் போ... கோல்ட்ராஜ் சார்
டொட்டொடைங்.... நாராயணன் சார்
ஏலெ! இந்தமடமில்லைன்னா சந்தமடம்.. விளங்காப் பயயுள்ளைகளா.. உங்களுக்கு பாடம் நடத்துறதுக்கு நாலு கழுதைக்கு பாடம் நடத்தினால் அது படிச்சு பாசாகும்லெ என கணக்கு வழக்கின்றி எழுதிப் போடும் கண்ணன் சார்
நெற்றியில் சிவப்பு நிறத்தில் மெல்லிய கோடு போட்டு வரும் அறிவியல் ஆசான் ராமன் சார்
தனது கரத்தால் மொத்து மொத்துன்னு மொத்தும் (வரலாறு & புவியியல்) செய்லா சார்
ஒரே எக்ஸர்சைஸ்ன்னு உயிரை எடுக்கும் ஷாஹுல் ஹமீது சார்
சைலண்ட் என அமைதி படுத்துக் கிங்ஸ்லி சார்
கதை கதையா புருடா விடும் கிராஃப்ட் சார்
ஆபீஸ் ரூம்லெயே கிடையா கிடப்பாரே அந்த நெட்டையான மனிதர் (ரைட்டர்) சார்

இன்னும் எங்கள் சீனியர்களுக்கு பாடம் நடத்தி படாதபாடுபட்ட பல ஆசிரிய பெருமக்களின் நினைவுகள் வரும் போதெல்லாம் நமது சுடலை அண்ணாச்சியின் நினைவும் இனி கூட வரும் என்பதில் சந்தேகமில்லை!

இவரின் மறைவு பலரது மலரும் நினைவுக்கு வழி வகுத்திருப்பது வருகின்ற கமெண்ட்ஸ் மூலம் மிகத் துல்லியமாகத் தெளிவாகின்றது.

எல்லா ஆன்மாக்களும் ஒரு நாள் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்! இது கால விதி! ஆனால் அவர் எப்படி வாழ்ந்தார்? என்பது மட்டுமே அவர் காலத்திற்குப் பிறகும் மக்களால் பேசப்படும். வந்திருக்கும் ஒட்டு மொத்த கருத்துப்பதிவுகளையும் பிரிண்ட் எடுத்து சுடலை அண்ணாச்சி வீட்டார்க்கு சமர்பிக்கவும். அதைப் பார்த்தாவது அவர்கள் சற்று ஆறுதல் அடையக்கூடும். கனத்த மனதோடு,

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by koman kaja (kayalpatnam) [23 October 2012]
IP: 123.*.*.* Malaysia | Comment Reference Number: 23006

எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரபிக் காக்கவிற்கு ,ஒரு சட்டி சோறு சாபிட்டாலும் அசராம இருக்கிறான் என்று சொல்லி அடிக்கும் நம்ம அண்ணன் அக்பர் சாரை பற்றி சொல்ல மறந்து விட்டிர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by b.a.buhari (chennai) [23 October 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23007

அண்ணனின் குடுபத்திற்கு என்யுடைய ஆழந்த அனுதாபத்தினை தெரிவித்து கொள்கின்ரேன். .

சுடலை எங்களுக்கு நைட் study டைம் இல் ஸ்கூல் பெல் அடிக்கும் wooden hammer வைத்து இஞ்சி தட்டி பிளான் டி போட்டு கொடுத்து எங்களை தூங்க விடாமல் பாதுகாத்ததை எங்களால் ஒரு பொழுதும் மறக்க முடியாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by A.M. NOOR MOHAMED ZAKARIYA (KAYALPATNAM) [23 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23008

:...இரங்கல் ..........

எல்கே பள்ளியின் ஆணிவேர்களில் ஒருவரான, நல்ல பல குணங்களுக்கு சொந்தக்காரரான மரியாதைக்குரிய அண்ணன் சுடலை அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...!

எங்கு காண்பினும் எத்துனை வருடங்கள் ஆனாலும் அந்தந்த மாணவர்களது பெயரை சரியாக சொல்லி அழைக்கும் அன்பாளர் உங்களை எங்களால் மறக்க முடியாது............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...சுடலை
posted by hylee (colombo) [23 October 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 23009

அண்ணன் சுடலை அவர்களை பிரிந்து தவிக்கும் குடும்பத்தார்க்கும், LK பள்ளி ஆசிரியர் முன்னாள் இன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...இரங்கல்
posted by SHAIK SINAN (BANGKOK) [23 October 2012]
IP: 115.*.*.* Thailand | Comment Reference Number: 23010

சுடலை அண்ணன் எங்களுக்கு நைட் study டைம் இல் ஸ்கூல் பெல் அடிக்கும் wooden hammer வைத்து இஞ்சி தட்டி பிளான் டி போட்டு கொடுத்து எங்களை தூங்க விடாமல் பாதுகாத்ததை எங்களால் ஒரு பொழுதும் மறக்க முடியாது.

இதுபோல் எங்களை உம கண் விழித்து படிக்க வைத்தார் 1993 BATCH..

ஞானையா சார் அவர்களின் வலது கை அண்ணன் சுடலை அவர்களது மறைவு குறித்து அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...!

FAZUL KAREEM
பாங்காக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Muzammil (Dubai) [23 October 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 23013

அண்ணன் சுடலை அவர்கள் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது . அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். நல்ல கடமை தவறாத அண்ணனை இழந்துவிட்டோம். அவர் இழப்பு நமக்கு பெரியது தான்.

Muzammil (முன்னாள் மாணவர் எல் . கே . மேல்நிலைப்பள்ளி )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. சுடலை முத்து அண்ணனின் மறைவு நமக்கும் நமது பள்ளிக்கும் மிக பெரிய இழப்பு...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [23 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23017

எனது சிறு வயது பள்ளி படிப்பு காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி என்னுடன் மிக அன்பாக இன்முகத்துடன் பேசி பழகி வந்தவர்... நல்ல பண்பாளர்... பள்ளி மாணவர்களின் நலனிலும் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தவர்...

சுடலை முத்து அண்ணனின் மறைவு நமக்கும் நமது பள்ளிக்கும் மிக பெரிய இழப்பு...

துயரத்தால் வாடும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு எனது மற்றும் எனது குடும்பத்தினரின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்...

என்றும் உங்கள் சகோதரன்...
M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. என்னை நேர்வழி படுத்தியவர்..
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் - காயல்பட்டினம்... (காயல் - 97152 25227) [23 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23019

பள்ளிபடிப்பு காலத்தில் எனது சேட்டைகளை கண்டித்து என்னை நேர்வழி படுத்தியவர்..

இவரின் மறைவு என்னை மிகவும் வேதனை பட செய்தது...

அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. சுடலை அண்ணன் அவர்களுக்கு 'காலம் கடந்த' நன்றிகள் !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [23 October 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 23027

இங்கே கமெண்டாக நான் பதிய நினைத்தது ஒரு கட்டுரையாக உருவெடுத்து இவ்விணைய தளத்தில் பதியப்பட்டுள்ளது. செய்யாத (அல்லது சிறிய) உபகாரங்களுக்கு கூட கொட்டை எழுத்தில் "நன்றி நன்றி !!" என்று வாழ்த்து வால்போஷ்ட்டர்கள் தூள் பறக்கும் இக்காலத்தில் சுடலை அண்ணன் போன்றவர்களுக்கு 'நன்றி' யுடன் நினைவுகூர்வனவற்றை அவர்கள் மரணத்திற்க்கு பின்னர் தான் நம்மில் பலர் உதிக்கின்றோம்... நினைவு கூறுகின்றோம்.

இவரை போன்று எத்தனையோ சக மனிதர்கள் நம்மை விட்டு பிரிந்த பின்னர் தான் நாம் உணருகின்றோம்... அடடா! ஒரு முறைக்கூட நாம் அவரின் நல்ல செயல்களை அவர் செய்த உதவி உபகாரங்களை அவரிடமே நினைவு கூர்ந்ததில்லையே அல்லது நன்றி என்று கூறியதில்லையே என்று !!

சுடலை அண்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. நினைவு அஞ்சலி..............
posted by isaacmemorialclub saraswathinagar (neelangarai chennai 115) [26 October 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 23097

தந்தையை இழந்துவாடும் எங்கள் முத்துக்குமார் (எ) அபு விற்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை எங்கள் ISAAC MEMORIAL CLUB சார்பாக தெரிவித்து கொள்கிறோம்....

அன்னாரது ஆத்துமா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்து கொள்கிறோம் ...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வழமை போல மீண்டும்... (?!)  (22/10/2012) [Views - 3623; Comments - 7]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved